Skip to main content

ஆண்ட் ருஸ்-காந்தி

 

ஆண்ட் ருஸ்-காந்தி

மதிப்பிற்குரிய C F ஆண்ட் ருஸ் முதல்முறையாக காந்தியை சந்திக்கும் காட்சி ரசிக்கத்தக்க  ஒன்று. சுசிலா தனது மகாத்மா வால்யூம் 4 ல் அதைக்கொண்டு வந்திருப்பார்.

தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகம் மிக உச்சம் போய்க்கொண்டிருந்த நேரமது. கஸ்தூர் உட்பட பல பெண்களும் கைதாகி, தண்டனை முடிந்து வெளிவந்துகொண்டிருந்தனர். காந்தி, கல்லன்பாக் சிறை வாயில் சென்று வரவேற்று வருகின்றனர். காந்தி மனத்துயரில் இருந்தார். தன்னை நம்பி போராட்டத்தில் ஈடுபட்ட ஹர்பத் சிங் 75 வயது சிறையிலேயே மரித்துப்போனார்.

அந்தோணி முத்துவிற்கு குண்டு காயம், அவரது தந்தையோ சிறைக்கு வெளியே நடந்த துப்பாக்கி சூட்டில் சாய்ந்தார். சூர்ஜ்ஹய் பீனிக்சிலிருந்து அழைத்துப்போகும் போதே துப்பாக்கி குண்டால் துளைக்கப்பட்டதை  அவரது துணைவியார் கண்ணீரும் கம்பலையுமாக காந்தியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.  இளம் வள்ளியம்மா வெளிவந்து, சுகவீனமுற்று இறக்கப்போகும் தருவாயிலும், தன்னால் தியாகம் செய்யமுடிந்தால் பேறு எனச் சொல்கிறார்.

காந்திக்கு என்ன செய்வது - ஏதாவது தன்னுள் கிளர்த்தும் மாற்றத்தை தான் மேற்கொண்டாக வேண்டும் என்கிற தவிப்பு எழுகிறது.  மக்கன்லால், இனி இந்த வக்கீல்  மேற்கு அடையாள உடை வேண்டாம்- தமிழ் உழைப்பாளர் கட்டுகிற வேட்டி சட்டை போதும்- அதை எடுத்துவா என உடன் அந்த உடை முறைக்கு மாறுகிறார். அவர்களின் துக்கத்தை பகிர்ந்துகொள்ள என்னால் செய்யமுடிந்தது அதுதான் என்கிறார். ஜோல்னா பை ஒன்று தோள் ஏறுகிறது. அநேகமாக இந்த நாள் டிசம்பர் 19, 1913 ஆக இருக்கலாம்.

இந்த சூழலில்தான் , கோகலே நிதி வசூல் செய்து தென்னாப்பிரிக்க போராளிகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்.  வெஸ்ட், போலக், கல்லன்பாக் என அனைவரும் சிறை என்றால் காந்திக்கு துணையாக நிற்க ஆங்கிலேயர் ஒருவர் இருக்கவேண்டும் என்கிற அவசியத்தை கோகலே உணர்கிறார். அப்போது பழக்கமாகியிருந்த ஆண்ட் ருஸ் பொருத்தமானவர் என அவரை தென்னாப்பிரிக்கா அனுப்புகிறார். அவரது கப்பலும் குறிப்பிட்ட நாளில் அல்லாது தாமதமாக வருகிறது. ஆண்ட் ருஸ் தன்னிடம் இருந்த சேமிப்பான 300 பவுண்டையும் கோகலேவிடம் நிதியாக கொடுக்கப்போனார். ஆனால் கோகலே அன்று இந்திய மதிப்பில் ரூ 1000க்கான 75 பவுண்டை மட்டும் எடுத்துக்கொண்டார்.

ஜனவரி 2 , 1914 அன்று ஆண்ட் ருஸ் வந்தடைந்தார். டர்பனில் போலக், காந்தி ( தனது மாறிய உடையுடன்) மற்றும் கூட்டமாக பலர் வரவேற்றனர். காந்தி முதலில் சென்று கைகுலுக்கி வரவேற்கிறார். போலக்கை பார்த்து( முன்பே இந்தியாவில் போலக்கை பார்த்து பேசியிருந்ததால்) கையசைத்த ஆண்ட் ருஸ் காந்தி எந்த சிறையில் இருக்கிறார், முதல் வேலை அவரை சிறையில் போய் சந்திப்பதுதான் என்கிறார். போலக் சிரித்துக்கொண்டே, நீங்கள் காந்தியை பார்த்தீர்களே, பார்க்கவில்லையா எனக் கேட்கிறார்.

ஆண்ட் ருஸ்க்கு, இந்திய மரபில் முதலில் சந்நியாசி எவரையாவது நிற்கச் சொல்லி வரவேற்பார்கள் போலும், அப்படி தன்னை  முதலில் வரவேற்றவர் ஏதோ ஒரு சந்நியாசி எனக் கருதிவிட்டார். இதை சுசீலாவின் வரிகளில் காண்போம்.

Polak laughed and said, “ you have already met Mr Gandhi. He has been released. There he is”

Andrews was agreeably surprised. He looked at a man who appeared to be renunciation incarnate. His eyes, full of wonder and reverence , glanced at the man in front of him from head to foot. Then moving two steps back, he fell on his knees and touched his feet…it seemed as if long lost friends had come together. They were full of joy and felt as if they were already close friends”

மறுநாள் தென்னாப்பிரிக்க பத்திரிகைகள் தங்கள் விமர்சனத்தை வைத்தன. காந்தி முனிவராக இருக்கலாம் ஆனால் இந்தியர். அவர் காலில் புனித ஆண்ட் ருஸ் விழுந்து, தென்னாப்பிரிக்க வெள்ளையர் புகழை பங்கப்படுத்திவிட்டார் என்றனர். ஆண்ட் ருஸ் ஒரே வரியில் அந்த விமர்சனங்களை எதிர்கொண்டார். அவ்வரி  I saw Christ in Gandhi.

இப்படி அவர்களின் முதல் சந்திப்பும் பெரு நட்பும் தொடங்கியது..வாழ்நாள் முழுவதும் நீடித்தது

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு