அறமும் அரசியலும் டாக்டர் . மு . வரதராசன் கட்சி அரசியல் என்பது குறித்து பலர் பேசியுள்ளனர். அப்படி ஒரு எழுத்தை தமிழறிஞர் மு. வ அவர்களும் தந்துள்ளார். அவர் எழுதிய அறமும் அரசியலும் புத்தகத்தில் நான்காம் அத்தியாயமாக கட்சி அரசியல் என்பது (பக்94-115களில்) விவாதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன. இது பொதுவாக கட்சி என்பது குறித்த விவாதம். எந்த தனிப்பட்ட கட்சி குறித்தோ அதன் நடைமுறைகுறித்தோ அதில் மு. வா விவாதிக்கவில்லை. அரசியலில் அறம் வாழப் பாடுபடாமல் தனிவாழ்க்கையில் திணறித் திண்டாடிவிட்டு , “ அறமாவது , நடப்பதாவது , எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் ” என்று ஏங்குவதால் பயன் என்ன ? என முன்னுரையில் மு.வா வினவுகிறார்.. இனி மு .வ ” கட்சி என்பது என்ன ? செல்வாக்கு என்பதன் கூட்டுப்பண்ணை ; தனித்தனியே தம் செல்வாக்கைப் பயன்படுத்துவதில் இடையூறும் தோல்வியும் கண்டபோது , செல்வாக்குக் குன்றாமல் காக்கும் வகையில் அமைத்த கூட்டுப் பண்ணை ,.. ஒரு கட்சியில் நல்லவர்களும் சேர்வார்கள் ; கெட்டவர்களும் சேர்வார்கள் . நல்லவர்கள்...