https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, February 9, 2019

A Study on Loss Making PSUs


FROM Pattabi’s NOTEBOOK

                            A Study on Loss making PSUs

The DPE has been publishing annual survey of PSUs .  One can infer from that how many units are in  profit mode and how many are in the loss making mode. The Survey is listing details of every PSU on the basis of their cognate group like telecom, power, chemicals etc. NITI Aayog is giving its recommendations whenever warranted. Parliamentary committee is also interested to study about the PSUs and even special sittings are there for loss making units. This note is a compilation of some prime findings of above said agencies..
As per the  16-17 survey  the loss making units are more in numbers (82 ) comparing 71 units of 17-18. More detailed study about 16-17 is found involving NITi Aaayog, CII etc.
Analyzing  the 'Loss Making PSUs  of 2016-17'  of the 82 units  ,below 20 cr loss making units are 41 in number, between 20 cr to 50 cr 9 psus , between 50-100 cr 8 Psus, above 100 cr 24 Units and in that above 1000 cr is  only 5 PSUs that are big tickets. In most of the PSUs the loss is very meager.
 BSNL, AirIndia Ltd, MTNL are the 3 top most loss making units in the year 16-17 as well as in 17-18. Out of total losses these 3 are sharing 55.66 % in 16-17 and 52.15 % in 17-18. The loss making percentage  of  BSNL  is 25.57 %, Air India 17.01 % and MTNL 9.51 % in the year 17-18.
Taking the top 10 loss making units their loss share is 84.71 % and the remaining 61 Psus share is 15.29 %. When we analyze this sharing aspect for 16-17 the top 10 loss making units cover 83.82 % of the total losses and the remaining 72 PSUs cover16.18 %
2
As BRPSE is no more there, Govt has given instruction to the concerned ministry to monitor and plan for revival of Sick/Loss making units as per the relevant DPE guidelines issued since 2015 , after the formation of BJP Modi Govt. Ministries may report back to parliament about the reasons for sickness/ loss making of the concerned PSUs. Reasons may vary.  But certainly there are some common reasons like the following broadly found by various agencies
Old and obsolete plant and machinery
Outdated technology
Low capacity utilization
 Low productivity
Poor debt-equity structure
Excess manpower
Weak marketing \ strategies
Stiff competition
Lack of business plans
Dependence on Government Orders
Heavy interest burden
High input cost
Resource crunch
Committee of Secretaries chaired by cabinet Secretary during July 2015 identified 48 Sick/loss making units and adding this  DPE referred another 26 sick/Loss making Units. NITI Aayog on its part is reporting that it is giving recommendations only for all these 74 Units and final decision rests on the respective ministry only.
The BSNL is running into losses since Financial Year 2009-10. The reasons to incur losses in BSNL are as follows :(as stated by BSNL )
BSNL is providing telecom services in remote and hilly areas in various states e.g. Himachal Pradesh, Uttarakhand, J&K, North East, Chattisgarh, A&N Islands and Lakshadweep Islands through satellite and Point to Point Radio Links. Point to Point Radio links were also provided in backbone network in other part of the Country. For using point to point links huge spectrum charges are to be paid to WPC. Similarly, satellite transponders charges are payable to ISRO for satellite links, which are very huge. Due to this, BSNL is incurring huge losses for providing services in the remote areas where optical fibre cable connectivity is either not reliable or not feasible.
 The optical fibre cable (OFC) Network of BSNL is being damaged severely during road  expansion and it has become very difficult for BSNL to maintain the OFC network, which is a backbone for all services. To overcome this problem, BSNL is compelled to hire bandwidth from other Operators like PGCIL, Oil India Limited and RailTel. PGCIL’s network is working on electric lines (OPGW) and RailTel Network is along Railway lines. Therefore, OFC Network of these operators is not affected by road widening/expansion work. BSNL is spending about 125 Cr. Per annum towards hiring of bandwidth from other operators.
To overcome the present condition and make it a profit unit, BSNL has an ambitious plan for monetization of its land and building assets to earn revenue. The other needs are
All Government funded projects may be given to the BSNL.
All government Department and Government Owned PSU may be asked to take their telecom requirement from BSNL as first choice.
BSNL needs to firm up its space in whole sale business of leasing out its core network. Also it may be more remunerative to deal in ICT products rather than vanilla Telecom services for which company needs to create its forte in IT segment by upgrading in-house skills
.
3
DPE is reporting that many of these CPSUs are in control of valuable resources (e.g. land, buildings, etc) that are, in many cases, not being put to good use. Action needs to be taken to ensure efficient usage of resources by the enterprises
 The three strategies regarding loss making units are revival, sale, or closure of PSus. There are multiple ways of implementing each of these strategies. The following are the key ways in which each of these strategies can be implemented:
i.             Revival: a CPSU's revival could be pursued on a standalone basis, it could be merged with another CPSU, or it could be revived through a strategic partnership or management contract with a suitable firm.
ii.            ii. Sale: a CPSU could be sold to another firm, or it could be listed in the stock markets and converted into a board-managed private sector company.
iii.          iii. Closure: Closure could be outright closure of the entire CPSU, or partial closure of certain businesses of a CPSU. It is important to state the principles to be applied to choose between these strategies for any sick or loss making CPSU. Such principles should be uniformly applied to all CPSUs to recommend suitable strategies for each CPSU
The 14th Finance Commission was tasked with recommending a strategy for “relinquishing non-priority enterprises”. The Commission provided a list of illustrative criteria that could be used for priority classification of CPSUs. These criteria are:
i.             activity assessed as strategic in terms of public interest;
ii.           ii. the enterprises having earmarked or assigned natural resources with sovereign or quasi-sovereign functions;
iii.           iii. the enterprises required to cater to market imperfections;
iv.           iv. enterprises where returns on investments are higher than any alternative investment by the government; and public utilities, where some presence of public enterprises may be desirable as a reference point for getting more reliable information for the regulators.
NIPFP’s (National Institute of Public Finance Policy) view, the criteria should include: ▪ Strategic importance:
Does the enterprise serve such a strategic purpose that the government would like to retain direct control over it?
: Is the enterprise a public utility, where such presence of public enterprises may be desirable as a reference point for getting more reliable information for the regulators?
 It is understood that for regulation of public utilities, regulators need reliable information from regulated entities to ensure they are able to make sound regulations and effectively enforce them
All low priority CPSUs with significant enterprise value may be considered for sale..There is a strong case to prioritise sale of sick and incipient sick low priority CPSUs, if they have significant enterprise value, beyond the value of their land and buildings. Further, any low priority CPSU that is sick or incipient sick, and does not have any significant enterprise value beyond the land and buildings it controls, should be recommended for closure
On a query regarding whether the telecommunication is a strategic sector, the Department of Telecommunications in a written reply to the DPE submitted as under:
'As per the information furnished by Ministry of Communications, Department of Telecommunications, the PSUs have played a pre-eminent role in provision of telecom services in the country, particularly in rural, remote, backward and hilly areas. Contribution of BSNL and MTNL to broadband penetration in the country is significant. The importance of PSU in meeting the strategic and security needs of the nation can also not be understated. The PSUs also play a key role in balancing market forces in the interest of consumer..Presence of PSUs like BSNL and MTNL enhances the Government capabilities to facilitate in matters of national security/natural calamity or international importance, including execution of bilateral projects funded by Government of India. It serves security needs in areas of strife and conflict and is also the principal vehicles for fulfilling the socio-economic obligations of Government by implementing projects of national importance for Government. Government cal also provide vital support for domestic manufacturing of Indian Telecom Products through/within Telecom PSUs for deployment of indigenously developed Telecom products with Indian IPR. PSUs serves security needs in areas of conflict and is also the principal vehicles for fulfilling the socio-economic obligations of Government by implementing projects of national importance for Government like BharatNet.
On the issue of merger of BSNL and MTNL:
Regarding chalking out a future plan for BSNL and MTNL, when asked whether they agreed to a suggestion regarding merger of BSNL and MTNL to bring them out of losses, MTNL submitted as under:
 'The possibility of revival after merger of BSNL and MTNL is expected due to the fact that the same would pave the way for (i) Pan-India Presence of combined entity (ii) Leveraging combined capacities, (iii) Reduction in fixed costs, (iv) Avoidance of duplication of facilities, (v) Optimization in utilization of infrastructure; and (vi) Enhancing the competence of combined entity to meet the competition
 DPE submitted the following information :  
'BSNL and MTNL have been incurring losses for a number of years. Therefore, as per Department of Public Enterprises (DPE) guidelines, both BSNL and MTNL have been declared as "Incipient Sick". On the issue of merger of BSNL and MTNL, it has been decided that keeping in view the various challenges involved in the merger, it is not advisable to pursue the merger of MTNL and BSNL at this juncture, till a resolution on MTNL employees, debt of MTNL and MTNL properties is reached'
On the  Issue of Disinvestment, NITI Aayog submitted as follows :-
 "All CPSUs except under those in the strategic areas are eligible to be considered for strategic disinvestment The strategic areas are: CPSUs serving National security purposes; CPSUs serving a sovereign or quasi-sovereign function that would otherwise have been performed by the Government directly; and CPSUs that are performing developmental functions that the Government may consider important, where the private sectors are not present or failing to perform
Regarding VRS :
On the issue of VRS to its employees, CMD-BSNL during the course of oral evidence submitted to the parliamentary committee as under: ‘There was a question regarding VRS. The VRS proposal at the moment is with the DoT. It has not yet been communicated to us. One lakh employees were supposed to have been given VRS, but the matters is still under consideration of the Government. The need for VRS was established when the company was going in for losses for consecutive years and there was a presentation made to the BRPSE. At that point of time, the question of VRS had come into being and  the DoT also has not taken a decision in this regard. One lakh people were supposed to have been given VRS, as per the Sam Pitroda Committee also. This is the genesis of the whole issue.’
MTNL CMD Reported:
It is only on 2013-14 that the Government has taken over the pension liability; otherwise MTNL was making the pension payment for all its employees from 2000 onward till March 2013. The total pension liability which was accumulated was to the tune of 10,900 crore which MTNL has to provide in its books of accounts. We have already submitted a proposal for VRS to the Government in which they have agreed for 20 per cent VRS employees who are retiring in next 10 years, for 5300 employees at a cost of 1000 crore. The proposal has already been approved by the Telecom Commission which is a multi-departmental body. It is under inter-Ministerial consultation. We look forward; this is only the first phase of VRS. It is because, even with the 5300 employees, it is not a great number by which we can get it. But, one positive part is this. My 25,000 employees are retiring in next 10 years. Every year, 3000 plus employees are retiring.’
NITI Aayog Stated:
On a specific query whether NITI Aayog has made any estimate on thel full implications on VRS and any budgetary provision proposed in the event of closure of the 26 CPSUs recommended for closure by NITI Aayog, the Aayog clarified as under: 'No estimate has been made by NITI Aayog. Administrative ministries draw up the VRS plan. No provision is made. It is possible from the sale of assets of closing CPSUs to offset VRS.
LAND MANAGEMENT AGENCY
The Government has designated NBCC (National Bldg Construction corp Ltd) as the Land management Agency (LMA) and entrusted NBCC to monetize the assets of loss making CPSUS. NBCC stated that NBCC sent an Expression of Interest (EOI) to 74 CPSUs requesting them to appoint NBCC as their Land Management Agency (LMA). Thus far, 10 CPSUs have appointed NBCC as their LMA and 28 CPSUS have declined.
▪ MTNL shared a list of properties with NBCC, where redevelopment could be taken up. ▪ NBCC and MTNL have discussed issues such as land use permission, leasehold status of land, etc. with the DDA. ▪ Most of the properties at Mumbai are freehold; however, they were allotted for specific use. Hence, change of land use is required for monetization. ▪ MOU is yet to be signed with MTNL for the proposed monetization of their assets. ▪ NBCC has presented to the CMD and other senior officials of MTNL and clarifications on the proposed draft MoU have been provided to MTNL. Draft MoU is still under consideration with MTNL. ▪ Further action will be initiated after signing of MoU for joint development/monetization.
On the issue of monetisation of assets of Air India, C&AG in their Report No. 40 of 2016 had stated that Air India ltd. failed to achieve the target of monetisation of their assets due to improper selection of properties not based on actual feasibility of monetisation and in their recommendation hinted on the absence of proper title deeds as well as limiting provisions/ conditions in the lease agreements of assets of the CPSU thereby impacting their monetization
4
Observations of Parliamentary committee
1.MTNL and BSNL that are operating in the telecommunication sector also consider themselves of ‘strategic’ importance. The Committee thus feel that, in the event of the Government itself not having a uniform parameter for categorising CPSUs as ‘strategic’ it would be difficult for them to arrive at any conclusion 138 whether a particular CPSU is to be retained by the Government, closed or divested. In such a scenario, the Committee recommend the Government to work out uniform definition/parameters of ‘strategic’ for classification of CPSUs
2. The merger of two loss-making PSUs i.e. Air India and Indian Airlines did not work well and the proposed merger of IL with BHEL failed to materialise, the takeover of Hindustan Steelworks Construction Ltd. (HSCL), a loss-making PSU by a profit making PSU like NBCC seems showing positive results. With regard to the merger of AIL & IAL into NACIL, the Committee would like to recall that in their Report No.18 of 2011, the C&AG termed the merger of AIL & IAL into NACIL as ‘ill-timed, without proper justification and synergized operation, without HR integration, delayed and having serious uncertainties’. The NITI Aayog also mentioned that the losses of Air India can also be attributable to the decision of merger taken in 2007 wherein two very different organizations with dissimilar equipment and Human Resources practices were intended to be merged.
3. The Committee caution the Government to analyze all the factors before taking any decision on the merger of two CPSUs, particularly in the context of merger of two biggest loss making CPSUs, MTNL & BSNL whose combined financial liabilities during 2016-17 was a whopping 2403873 lakh, the combined manpower of both PSUs is a staggering figure of 224367 persons and also various procedural lapses have been pointed out in the case of MTNL and BSNL by C&AG of India
4. Surprisingly, NITI Aayog has also not made any estimate on the full implications of VRS nor they proposed any budgetary provision for utilization in the event of closure of these CPSUs. The Committee further observe that there are large number of employees in loss making PSUs who are in the younger age bracket and being a highly skilled workforce and qualified professionals, are eager to work towards turnaround of their company’s fortune but are unable to do so due to acute shortage of working capital. The Committee feel that the Government must give serious considerations on all such issues in a specified time frame with a view to not only utilize the skilled work force of loss making PSUs but also save their dependents from a life of misery and despair. In a nutshell, the Committee would emphasize that it is a humanitarian issue for the Government as dependents of such employees suffer the most when a PSU becomes incapable of disbursing their salaries/completing VRS packages/or when the employees lose their employment due to closure of the PSU.
5. The Committee find that the process of monetization of assets of loss making CPSUs is hardly progressing fast as these properties have not generated requisite interest among potential buyers.. The Committee hence desire the Government to pay attention to these aspects, while reviewing their policy on sale/monetization of surplus land and assets of the loss making PSUs, as well as to ensure that such decisions are in tandem with the prevailing land acquisition laws. Besides the Committee would like to emphasize for making the process of monetization of assets including land of loss making PSUs transparent. With regard to sale of land of loss making PSUs, the Committee would like to be apprised whether the Government has explored any future requirement of the land & assets, currently identified for sale, by such loss-making PSUs, which are slated to be revived, and not closed, because acquiring the assets of such scale and at prime locations again may not be possible in future.
DPE in this regard has emphatically justified the present policy of the Government stating that CPSUs have been set up with public funds and Government is the majority shareholders in these CPSUs and therefore, it may not be appropriate to empower the Boards of CPSUs to monetize their assets. Keeping in view the present scenario of ever-evolving technology and tough competition in the market that a CPSU has to work and the present scenario of more and more CPSUs falling sick, the Committee feel that the aforesaid policy need to be relooked by the Government

8-2-19

Sunday, February 3, 2019

அம்பேத்கரின் அரசியல் பொருளாதார சிந்தனைகள்




பாபாசாகேப் அம்பேத்கரின்
அரசியல் பொருளாதார சிந்தனைகள்
( 20 ஆண்டுகளுக்கு முன்னர் மே 1998 மேடை இதழில் வெளிவந்தது)
-    ஆர். பட்டாபிராமன்
மனிதர்கள் அடையாளமற்று வாழ முடியுமா? கற்பனை செய்வது கூட கடினமாக உள்ளது. பெயர், ஊர், சாதி, மதம், இனம், தேசம், இசம் என ஏதோ ஓர் அடையாளம் உறவாடிக்கொண்டே வருகிறது. அடையாளமற்று போவதல்ல பிரச்சனை. ஒற்றை அடையாளம்- அதுவே அடையாளம் என ஒன்றை மட்டும் புனிதப்படுத்தி மற்றவற்றை ஒதுக்கிவிடுவது- கண்டுகொள்ளாமல் புறந்தள்ளுவது- ஒன்றை அதிகாரத்திற்கு உயர்த்திவிடுவது- மற்றவற்றை அதற்கு கீழிறக்கிவிடுவது என்பதே பிரச்சனையாகிறது. மனிதர்களுக்கிடையிலும், ஒரே மனிதருக்குள்ளும் பல அடையாளங்கள் நிலவுகின்றன. நிகழ்ச்சிநிரலில் ஒவ்வோர் காலத்திலும் ஏதேனும் ஒன்றை பிரதானப்படுத்தவேண்டிய தேவை எழலாம். இதற்கு பொருள் அந்த நேரத்தில் வேறு அடையாளங்கள் ஏதுமே இல்லை என்பதாகாது.

அம்பேத்கருக்கும் பொதுவாக ஏற்கப்பட்ட பிரதான அடையாளம் என ஒன்று உள்ளது. அந்த  அடையாளம் பரவலாக வெளிக்கொணரப்பட்டு அறியப்பட்டுள்ளது. அது சில நேரங்களில்  புனைவாகக்கூட  உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு நேர் எதிராக, அம்பேதகரின் தீவிர ஆளுமை கொண்ட மேதைமை- நிகரற்ற அறிவாற்றலின் நீள்பாதை- தன் வழியில் சந்தித்த அனைத்தையும் விசாரித்தது- ஆய்வு செய்தது என்பது போதுமான அளவிற்கு வெளிக்கொணரப்படவில்லை. சாதி, தீண்டாமை கொடுமை, இந்துமதம், சாதி ஒழிப்பு பற்றிய அவரது சிந்தனைகள் இந்திய சமூகத்தின் செவ்வியல்களாக ஏற்கப்படவேண்டியவை. அவரது அரசியல் பொருளாதார சிந்தனைகள் குறித்த விவாதங்கள் தொடரப்படவேண்டும் என்கிற நோக்கில் சில அம்சங்கள் இங்கே முன்வைக்கப்படுகிறது.
மேற்கித்திய சிந்தனை மரபின் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் அம்பேத்கரும் ஒருவர்.மார்க்சிய சிந்தனைகளை உள்வாங்கி விமர்சனரீதியான அணுகுமுறைகளையும் மேற்கொண்டவர். இந்தியாவிற்கு உகந்தது நாடாளுமன்ற அரசாங்கமா- சர்வாதிகாரமா என்பதை தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாக்கியவர். தனது இலட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவ அடிப்படையில் அமையும்- தேக்கமற்று முன்னேறும் எனக் கருதினார்.
பல நூற்றாண்டுக் கால வாழ்வெளியில் அரசியல் அதிகாரம் ஒரு சிலரின் கைகளிலேயே குவிந்து கிடந்து பெரும்பான்மை மக்கள் சமூக வாழ்விலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நாட்டில் அரசாங்க அதிகாரம் அரசியல் அதிகாரம் பெறும் முறைகள் பற்றி அவர் ஆய்ந்து நடைமுறைப்படுத்த விழைந்தார். அப்படி பரவலாக அரசியல் அதிகாரம் நகர்ந்து நீடித்து பலன்களை உருவாக்கும் அரசியல் முறைப்பற்றியும் அவர் யோசித்தார். சர்வாதிகாரம் அது பாட்டாளிவகைப்பட்டதாக இருந்தாலும் முதலாளிவகைப்பட்டதாக இருந்தாலும் கொடுங்கோன்மைக்கே வழிவகுக்கும்- எனவே நாடாளுமன்ற ஜனநாயகமே தேவை என்றார்.  அரசு சோசலிசம், நாடாளுமன்ற ஜனநாயகம், சர்வாதிகாரமின்மை என்ற அம்சங்களின் இணைப்பையே அவர் பரிந்துரைத்தார்.
அரசே எல்லாம் என்கிற முழுமுதல் கொள்கையை அவர் ஏற்கவில்லை. மாக்கியவெலி, ஹாம்சன் கோட்பாடுகளை அவர் விமர்சிக்காமல் இல்லை. அரசை புனித புதிராக்கி கடவுளின் கட்டளையாக்கும் கூத்தை அவர் கேலி செய்தார். சட்டங்களுக்காக மக்கள் இல்லை- மக்களுக்காகவே சட்டங்கள்- மக்களுக்காகவே அரசு என்றார். மக்களின் விருப்பார்வங்களுக்கு பணிந்து நடக்கும் அரசையே அவர் விழைந்தார். சட்ட மறுப்பு என்பதை அராஜகம் என வர்ணித்தார். நாகரீகமான சமுதாயம் சட்டரீதியாகவே அமையமுடியும் என்றார். பலதரப்பட்ட மக்களின் சமூக  அமைதிக்கு நீதி செய்வதே சட்டம் என்றார். தனிநபர் உரிமையை தொடர்ந்து வலியுறுத்திய அம்பேத்கர் அரசு நிறுவனத்தின் மீதான நம்பிக்கையியும் அத்துடன் இணைப்பதற்கு முயன்றார்.
விடுதலை, குடிமக்கள் ஒவ்வொருவரின் வாழ்வு, அவர்தம் மகிழ்ச்சி, மத உரிமை, ஓடுக்கப்பட்ட மக்களின் அரசியல் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் சிறப்பு கவனம், பயமற்ற சூழல் ஆகியவற்றை உத்தரவாதம் செய்யவேண்டியது அரசின்  அடிப்படை கடமைகள் என்றார் அம்பேத்கர். அரசு என்பது எஜமான மனப்பாங்குடன் நடந்துவிடக்கூடாது- சேவகத்தனமை கொண்டதாக இருக்கவேண்டும் என்றார்.  அரசியல் விடுதலையுடன் நிற்பதல்ல மானுடவிடுதலை. சமூக, பொருளாதார ஆன்மீக அறிவாற்றல் என விடுதலையின் பாதை நீண்டது என்றார் அம்பேத்கர்.
 ஜனநாயகம் என்பது ஓர் அரசாங்க வடிவம் அல்ல. அது சமூக அமைப்பின் வடிவம். ஜனநாயகம் வெற்றி பெற சாதகமான சமூக ஏற்பாடு தேவையாகிறது. ஒருவர் மற்றவர்க்கு மரியாதையையும் உரிய மதிப்பினையும் கொடுத்து இணைந்து வாழும் முறை ஜனநாயகம். மனிதர்கள் தங்களிடம் அமைந்துள்ள பொதுமை குணங்களையும், பொதுமை உணர்வுகளையும், தேவைகளையும் முன்னிட்டு சமூகமாக அமைகிறார்கள். மொழி, தகவல்  இதர தொடர்புகளால் சமூகம் தொடர்ந்து நிலைபெறுகிறது- வாழ்கிறது.
 இந்தியாவில் சாதிய ஏற்பாடுகளால் பொது ஏற்பாடு தடுக்கப்பட்டுவிட்டது. மக்களிடம் மலரவேண்டிய ஒத்துழைப்பை சாதி தடை செய்துவிடுகிறது. மிக உன்னதமான இலட்சியம் என்கிற ஒன்றை நிறைவேற்றிடக்கூட அவர்களை ஒன்றுபட முடியாமல் செய்துவிடுகிறது. மனித உரிமைகள் அடிப்படையானது. ஜனநாயக சமூகம் அவற்றை உத்தரவாதப்படுத்தவேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் ஜனநாயகத்தில் ஆக முக்கியமானவர். அவர்களுக்கான வாழ்வை ஓய்வை ஜன்நாயகம் உறுதிசெய்திடவேண்டும் என்கிற வரையறைகளை அவர் முன்வைத்தார்.
கட்டுப்பாடற்ற சுந்தந்திரம் என்பதை அவர் ஏற்கவில்லை. ஏன் எல்லாவற்றிலும் அரசாங்கம் தலையிடுகிறது என வரும் குரல்களை அவர் கூர்ந்து கவனித்தவராகவும் இருந்தார். அதேநேரத்தில் அரசாங்கம் தன் தலையிடாக் கொள்கை மூலம்தான் விடுதலையை உணரவைக்கமுடியும் என்பதை அவர் ஏற்கவில்லை. அந்த விடுதலை யாருக்கானது- எதற்கான விடுதலை என்பதை அவர் அம்பலப்படுத்தினார். நிலப்பிரபுக்களின் முதலாளிகளின் சுரண்டலுக்கு அவர்கள் உயர்வாழ்விற்கான விடுதலை என அவர் சாடினார்.
சமத்துவம் எனப் பேசும்போது சம அளவு வருவாய்- சம அளவு சொத்து என புரிந்து கொள்ளக்கூடாது என அவர் எச்சரித்தார். சிலருக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் இல்லாமல் இருப்பது- அனைவருக்குமான வாய்ப்புகள் என அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றார். இந்தியாவில் சோசலிசத்திற்கான சவால்கள் பொருளாதார தளத்தைவிட சமூக தளத்தில்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்  என அவர் உரத்து சொல்லிவந்தார். இந்தியாவில் பொது உடைமை நனவாக வேண்டும் என நினைக்கும் கம்யூனிஸ்ட்கள் சமூக சீர்திருத்தம் மிக அவசியமானது என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்றார். இதில் தப்பிக்கவே முடியாது எனவும் அழுத்தமாக அம்பேத்கர் வாதிட்டுவந்தார்.
புத்தமா-மார்க்சியமா எவ்வழி என்கிற ஆய்வில் வன்முறை, சர்வாதிகாரம், பொதுவுடைமை சித்தாந்தத்தின் பலம்- பலவீனம் பற்றி அவர் விவாதித்தார். கம்யூனிச வாழ்க்கை முறையைவிட புத்த வாழ்க்கைமுறை சிறந்தது என பரிந்துரைக்கிறார். புத்தருக்கும் மார்க்சிற்கும் குறிக்கோள் பொதுவானதாக இருந்தாலும் மார்க்கம் வேறுபடுகிறது. எவ்வழி மேலானது? எது நீண்டகாலம் நிலைத்து பயன்தரப்போவது என்கிற வினாக்களை அவர் எழுப்பி விடைகாண முயன்றார்.
பொதுவுடைமைவாதிகள் வன்முறையை ஒரு முற்றான தத்துவமாக முன்வைக்கிறார்கள். உழைப்பாளர் சர்வாதிகாரம் எனப் பிரகடனப்படுத்துகிறார்கள். புத்தர் சர்வாதிகாரத்தை ஒருபோதும் ஏற்றதில்லை. குறிக்கோள் போலவே அதை அடையும் மார்க்கமும் மதிப்பிற்குரியதாக இருக்கவேண்டும். கம்யூனிஸ்ட்கள் தங்கள் மதிப்புமிக்க குறிக்கோளை அடைய வேறு மதிப்புமிக்க குறிக்கோள்களை அழிக்கவில்லை என சொல்லமுடியுமா என அம்பேத்கர் கேள்வி எழுப்பினார். மனிதகொலைகளுக்கு மதிப்பு கிடையாதா? உயிர்வதையில்லாமல் உடைமை மீட்பு முடியாதா? அரசு உதிர்ந்துபோகும் என்கிறார்களே அதற்கு பதில் அவ்விடத்திற்கு ஏதேனும் வருமா? அராஜகம் அரங்கேறிவிடுமா என்கிற வினாக்கள்  அவரிடம் இருந்தன.
ருஷ்யாவின் பொதுவுடைமை சர்வாதிகாரம் பல சாதனைகள் புரிந்திருப்பதை மறுக்க முடியாது.எனவேதான் பிற்பட்ட நாடுகளுக்கு அதை நான் பரிந்துரைக்கிறேன் என அவர் கூறினார்.  பலத்தினால் ந்டத்தப்படும் அரசு என்பதைவிட அறநெறி இயல்பின் வழியான அரசு உயர்ந்தது என்பதில் ஆழமான நம்பிக்கையை அம்பேத்கர் வெளிப்படுத்தினார். ருஷ்யப்புரட்சியை நாம் வரவேற்கிறோம். அதன் நோக்கம் சமத்துவத்தை உருவாக்குவது என்பதாக இருக்கிறது. சமத்துவத்தை உருவாக்கும்போது சகோதரத்துவத்தை, சுதந்திரத்தை தியாகம் செய்துவிடமுடியாது என்கிற எச்சரிக்கை உணர்வையும் அவர் சேர்த்தே சொல்லிவந்தார். புத்தரின் வழியால்தான் இம்மூன்றையும் தர இயலும். கம்யூனிசத்தால் ஒன்றைத்தான் கொடுக்க முடியும் என்கிற முடிவிற்கு அவர் வந்தடைந்தார்.
சோவியத் விமர்சகராக இருந்தபோதிலும் அமெரிக்க ஆதரவு என்கிற நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை. அமெரிக்கா ஜனநாயகம் பேசினாலும் நடைமுறையில் முதலாளித்துவமாகவே இருக்கிறது என்றார். அமெரிக்காவின் செல்வாக்கு விரிவுபடுவது பேராபத்தின் அறிகுறி என எச்சரித்து வந்தார். நேருவின் வெளிநாட்டு கொள்கையை வாய்ப்பு கிடைத்தபொழுதெல்லாம் தாக்கியவர்களில் அம்பேத்கரும் ஒருவர். கூட்டுசேரா கொள்கை இந்தியாவை நண்பரற்ற நாடாக மாற்றிவிடும் என நாடாளுமன்றத்திலேயே   எச்சரித்தவர் அம்பேத்கர். ருஷ்யா, சீனாவிற்கு இந்தியாவில் கம்யூனிசம் பரவவேண்டும் என்கிற நோக்கம் உள்ளது என்பதையும் அவர் குற்றசாட்டாக பேசினார். நமது வெளிநாட்டுக்கொள்கை நமது பிரச்சனைகளை தீர்க்கிறதோ இல்லையோ மற்ற நாடுகளின் பிரச்சனைகளை தீர்த்துவிடுகிறது என கேலியாக குறிப்பிட்டவர் அம்பேத்கர்.
ஒரு மொழி, ஒரு மதம், ஒரு வாழ்க்கைமுறைதான் நாட்டில் அதன் தேசியத்திற்கான தூண்டலாக அமையும் என்ற கருத்து அம்பேத்கரிடம் இருந்தது. நாடு முழுவதற்கும் ஒரே ஆட்சிமொழியாக இந்தி இருந்திடலாம் என்றும் அவர் தெரிவித்தார். திராவிடப்பகுதியில் எதிர்ப்பு வரலாமே என வினவியபோது தேசத்திற்கு அவசியம் என கருதுவதை நாம் செய்தாகவேண்டும் என்றார். நிர்வாக வசதிக்காகவே நாடு பிரிக்கப்பட்டுள்ளது. மொழிவாரி மாநிலங்கள் ஜனநாயகத்தை விரிவுபடுத்தும் என்றாலும், நாளடைவில் இந்தியா சிதறுண்டு போவதற்கு இது வழிவகுத்துவிடும் என வெளிப்படையாக பேசினார் அம்பேத்கர். மராட்டியன் என்கிற பெருமிதம் காரணமாக மீண்டும் பிறந்தால் அங்கேயே பிறக்கவேண்டும் என விழைந்தார். அதேநேரத்தில் இந்தியன், ஆசியக்காரன், உலக குடிமகன் என பெருமைப்படுதலையே தான் விரும்புவதாக தெரிவித்தார்.
பொருளாதாரக் கோட்பாடுகள் பற்றிய ஆக்கங்களை அம்பேத்கர் தந்துள்ளார். நாணயத்தின் பிரச்சனை, நிதிபற்றிய புத்தகங்கள் உலக அரங்கில் பாராட்டைப்பெற்றன. நிலவரி, வரிக்கொள்கை, தொழில்கொள்கை, விவசாயம், உணவு பாதுகாப்பு, தேசியமயம் போன்ற பல பிரச்சனைகளில் அவர் தலையிட்டு தன் கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். சோவியத் திட்டமிடுதல், ரிகார்டோ துவங்கி கீன்ஸ்வரை மேற்கின் பொருளாதார சிந்தனைகளை அவர் உள்வாங்கியிருந்தார்.
 மூலதனம் என்பது சேமிப்பால், சேமிப்பு என்பது உபரியால்தான் என்பதை தெளிவாக ஏற்றுக்கொண்டார். துண்டு துக்காணி நிலங்களும், துண்டு துண்டாக நில விநியோகங்களும் நிலமற்ற தொழிலாளர்க்கு உதவாது என நினைத்தார். கம்யூனிஸ்ட் தலைவர் டாங்கேவுடன் நடத்திய உரையாடலில் எல்லோருக்கும் பிரித்துக்கொடுக்க எங்கே நிலம் இருக்கிறது. சோவியத் முறையை பின்பற்றுவதே நல்லது. கூட்டுப்பண்ணை முறை சிறந்தது என்றார். விவசாயம் நவீனப்படுத்தப்படவேண்டும். உரிய விஞ்ஞான திட்டங்கள் உடனடி அவசியம் என்றார். நில அடமான வங்கிகள், கூட்டுறவு  மற்றும் மார்கெடிங் சொசைட்டிகள் ஆகியவை ஏற்படுத்தப்படும் என்பதை அவர்தன் கட்சி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார்.
விவசாயமானாலும் தொழிற்சாலையானாலும் மூலதனத்தை அரசே வழங்கிடவேண்டும் என கோரினார். விவசாயத் தொழிலாளர்க்கு குறந்தபட்ச கூலி உத்தரவாதம் செய்யப்படவேண்டும் என்றார். பொருளாதார வாழ்வை அரசாங்கமே திட்டமிடல் நன்று என்றார். அதே நேரத்தில் அரசாங்க சோசலிசம் என்கிற பெயரில் சர்வாதிகாரம் நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வையும் அவரெழுப்பிக்கொண்டே இருந்தார். தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இன்ஷ்யூரன்ஸ், பேருந்துகள் தேசிய மயம் என முன்வைத்தார்
அரசியல் சாசன சட்டங்கள் நாட்டின் அரசியல் அமைப்பை மட்டுமல்ல, பொருளாதார அமைப்பையும் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என அவர் வலியுறுத்திவந்தார். விரைவான தொழிற்மயமாக்கலுக்கு அரசாங்க சோசலிசம் அவசியம் என அவர் நினைத்தார். தர்மகர்த்தாமுறை என்பதை அவர் கடுமையாக சாடினார். சாதியும் பொருளாதார முன்னேற்றமும் பொருந்திபோகாது- கைகோர்க்காது. சாதிய உணர்வு பொருளாதார வளர்ச்சிகளை தடை செய்துவிடும் ஆற்றல் கொண்டது என்றார்..
 நாட்டு மக்களின் வாங்கும் சக்திதான் நாணயம் தொடர்பான கொள்கையின் சாரமாக இருக்கவேண்டும். மற்ற நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பீடு செய்து நாணய மதிப்பு வீழ்ச்சி என்கிற கணிப்பை தவறு என்றார். இருநாடுகளின் பரிவர்த்தனை மதிப்புகள் மாறாமல் இருக்கும்போது இருநாடுகளின் பொருட்கள் விலையில் வித்தியாசமிருப்பது ஏன் என்கிற முக்கிய கேள்வியை அவர் எழுப்பினார். இந்தியாவிலும் தங்கமே நாணயமாக்கப்படவேண்டும் என்றார்.
 மாநில வருவாயை உய்ர்த்தும் வரிவிதிப்பு குறித்து அம்பேத்கர் பேசினார். விற்பனைவரி முழுமையாக மாநிலபட்டியலில் இருக்கவேண்டும் என்றார்.நிலவரியில் கெடுபிடி கூடாது என்றார். பட்ஜெட்டில் இராணுவ செலவினங்கள் கூடுதலாகி வருவதை அவர் விமர்சனக் கண்கொண்டு பார்த்தார். மது ஒழிப்பு என்பதைவிட பட்டினி ஒழிப்பில் கவனம் குவிப்போம்  என்ற அம்பேத்கர் தனது 1952 தேர்தல் அறிக்கையில் மதுத்தடை நீக்குதல், இராணுவச் செலவைக் குறைத்தல் ஆகியவற்றை எழுப்பினார்.
கிராமப்புறங்களை தொழில்மயமாக்குதல் என்பதை அம்பேத்கர் வலியுறுத்தினார். தனியார் சொத்துரிமையை முற்றிலுமாக ஒழித்தல் என்பதில் அவருக்கு உடன்பாடு இருக்கவில்லை. உயர் உற்பத்தி பெருக்கம் பொதுத்துறைகள் மூலமே சாத்தியம் என்பதையும் அவர் சொல்லிவந்தார். முதலாளிகள் தங்கள் தொழிலின் பட்ஜெட்டை கண்டிப்பாக அறிவிக்கவேண்டும் என்பதற்கான சட்டம் ஒன்று தேவை என்றவர் அம்பேத்கர். வேலை நிறுத்தம் என்பது கிரிமினல் குற்றமல்லவே என்றார். அனைத்து தகராறுகளிலும் அரசாங்கம் முதலாளிகள் பக்கமே நிற்பது ஏன் என்கிற வினாவை அவர் எழுப்பினார். பொதுப்பணத்தில் இயங்கும் போலீஸ்துறையை வேலைநிறுத்தம் செய்திடும் தொழிலாளர் மீது ஏவிவிடும் அரசாங்க செயலை ஏற்கமுடியாது என்றார். அப்படி செய்யும் உரிமை அரசாங்கத்திற்கு இருக்கக்கூடாது எனவும் கருதினார்.
கூடுதலாக சற்று கூலி ஏற்றிக் கேட்டால் அஞ்சுவோர் யுத்தத்திற்கு கண்மூடித்தனமாக செலவு செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்கிற கேள்வியை தொடுத்தவர் அம்பேத்கர். தொழில் அமைதி என்பது சமூக நீதி சார்ந்தது. அதை வெறும் அதிகாரம் சார்ந்து நிலைப்பெற செய்யமுடியாது. சட்டம் சார்ந்து கூட செய்யமுடியும். தொழிலாளர் பிளவுப்பட்டுக் கிடப்பதை, உள்ளீடற்று இருப்பதை, புரிந்துகொள்ளும் ஆற்றலில் மிக மேலெழுந்துவாரியாக இருப்பதை கண்ணுற்று துயருற்றவர் அம்பேத்கர். விடுதலை அடைவது என்பதைவிட எவர் அதை கையகப்படுத்துவது என்பதே மிக முக்கியமானது என்றார்.
 அம்பேத்கரின் அறிவுப்பயணத்தில் அவர் பார்த்திடாத மைல் கற்களே இல்லை எனலாம். தன் கருத்து குறித்து எழும் விமர்சனங்களுக்கு அவர் அஞ்சியதே இல்லை. ஒடுக்கப்பட்டவர் முன்னேற்றம் என்பதற்காக தன் சிந்தையில் தேடிப்பிடித்து பதிந்தவைகளை அவர் நெஞ்சுரத்துடன் முனவைத்தார்.