Communism in Indian Politics பவானி சென் குப்தா அவர்களால் எழுதப்பட்டு 1972 ல் வெளிவந்த நூல் . 500 பக்கங்களை நெருங்கும் பெரிய நூல் தான் . தெற்கு ஆசியா கழகம் என்பதில் விவாதிக்கப்பட்டு வெளிவந்த நூல் . சென் குப்தா அவர்கள் அப்போது ஜே என் யு பல்கலையில் பணிபுரிந்து கொண்டிருந்தவர் . இந்தியாவில் ‘a force of international communism’ எனப் பிறந்த கம்யூனிச இயக்கம் , இந்திய விடுதலைக்கால அனுபவம் , இந்திய அரசமைப்பு , நாடாளுமன்ற அரசியல் ஆட்சிமுறை அனுபவம் ஆகியவற்றின் நீண்ட பயணத்தில் எவ்வாறு தன்னை Indian Political force ஆக நிறுவிக்கொள்ளவேண்டிய போராட்டத்தை நடத்தி வந்தது என்பதை விரிவாகப் பேசுகிற நூல் இது . இந்தியாவில் பிறந்த கம்யூனிச இயக்கம் உடைவுகளை 1964, பின்னர் அதில் 1969 உடைவு - அதிலும் கூட பல உடைவுகள் என சந்தித்தாலும் இரண்டு மெயின்ஸ்ட்ரீம் இயக்கமாக CPI, CPM இரண்டும் National and Regional ( linguistic state ) polity ல் தங்களை நிற்க வைத்துக்கொள்ளும் போராட்டங்களை , மேற்கொண்ட உத்திக...