https://ia801608.us.archive.org/34/items/kripalani-jb/kripalani%20jb.pdf ஆச்சார்ய கிருபளானி ( சிறு வெளியீடு இணைப்பில்) நவீன இந்தியாவின் அரசியல் விவாத களத்தில் கிருபளானி குறிப்பிடத்தகுந்த பங்காற்றியவர் . ஆழமான அறிவு மற்றும் அனுபவங்களின்பாற்பட்டு கருத்துக்களை ஒளிவு மறைவின்றி எடுத்துவைத்தவர். பல சோசலிஸ்ட் தலைவர்கள் போலவே மார்க்சியம்- காந்தியம் குறித்த உரையாடல்களில் ஆழத்தோய்ந்தவர். விடுதலை இந்தியாவில் எதிர்கட்சி தலைவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் ஆச்சார்யா கிருபளானி . காங்கிரசில் இருந்தபோதும், பிரஜா சோசலிஸ்ட் தலைமையில் ஆனாலும் கட்சியின் கொள்கைகளை அப்படியே பிசகின்றி பின்பற்றும் மனோபாவம் கொண்டவராக கிருபளானி தன் அரசியலை அமைத்துக்கொள்ளவில்லை. தவறு என்று தான் உணரும் ஒன்றுடன் சேர்ந்து உழைப்பதில்லை என்கிற காந்திய மனோபாவம் அவரிடம் இருந்தது. இந்த சிறு வெளியீடு இரு நீள் கட்டுரைகளை தாங்கி வருகிறது. நவீன இந்தியாவின் கட்டுமானத்திற்கு ஏதோவொரு வகையில் பங்களித்த பல பெரியவர்கள் குறித்து மிகச் சுருக்கமாகவாவது தெரிந்துகொண்டு அதை எழுதிப்பார்க்கவேண்டும் என்ற அவஸ்தையில் பலர் குறித்து நவீன இந்தியாவின்