முன்னுரை பகவத்கீதை நம் நாட்டின் விடுதலை இயக்கத் தலைவர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்த மிக முக்கியமான நூல். கடந்த ஒரு நூற்றாண்டு கால வெளியில் சமுகத்தில், அரசியலில், இயக்கங்களில் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் செயல்பட்ட, அதிகாரத்தில் உயர்பொறுப்புகளை வகித்தவர்கள், முக்கிய ஆய்வாளர் சிலராலும் பகவத்கீதை குறித்து ஏராளம் எழுதப்பட்டுள்ளது. அவர்களது எழுத்துக்களில் காணப்படும் கீதை குறித்த விளக்கங்கள் ஒப்பீட்டு முறையில் சில ஆய்வாளர்களால் பேசப்பட்டுள்ளன. தமிழில் அம்முயற்சி பெரிதாக இல்லை. அவரவர் எழுதும்போது மேற்குறித்த தலைவர்கள், சீர்திருத்தவாதிகள், ஆய்வாளர்கள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளனர். இங்கு தரப்படும் 21 கட்டுரைகள் தனித்தனியாக ஒவ்வொருவர் கருத்துக்களையும் சிறிய அளவாவது பேசும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளன. முடிந்தவரை மூலநூல்களின் கருத்துக்கள் சிதையா வண்ணம் அவர்களின் கீதை குறித்த பார்வை இக்கட்டுரைகளில் பதிவிடப்பட்டுள்ளன. இருபது நிமிடம் ஒதுக்கும் எந்த வாசகரும் ஒரு கட்டுரையை படித்துவிடக்கூடும். அனைத்து கட்டுரைகளையும் படிக்க முடிந்த வாசகர்கள் கீதை பன்முககுரல்களுக்கு இடமளிக்கிறது- பல்வேறு முரண்களை க