Skip to main content

காகா கலேல்கர் கமிஷன் பற்றி மண்டல் கமிஷன்

 

காகா கலேல்கர் கமிஷன் பற்றி மண்டல் கமிஷன்



நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு விவாதம் தேர்தலில் தீவிரமாக எதிரொலிக்கும் நிலையில் மண்டல் கமிஷன் அறிக்கையை மீண்டும் படித்துப்பார்க்கலாம் எனத் தோன்றியது. அதன் முதல் சாப்டரே  First Backward Classes Commission  பற்றிய மண்டல் கமிஷன் பார்வைதான். அந்தக் கமிஷன் என்ன பேசியது - பரிந்துரைத்தது என்பதை மிகச் சுருக்கமாக மண்டல் பேசியிருப்பார். அதிலிருந்து சில வரிகளை இங்கு தந்துள்ளேன்.

 காகா கலேல்கர் கமிஷன் ஜன 19, 1953ல் அமைக்கப்பட்டது. தனது அறிக்கையை மார்ச் 30, 1955ல் வழங்கியது. சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர் என்பதைக் கண்டறிய அது 4 அளவுகோல்களை வைத்தது. அவை

-Low social position in the traditional caste hierarchy of Hindu society

-Lack of educational advancement among major section of a caste or community

-Inadequate or no representation in govt service

-Inadequate representation in the field of trade, commerce and industry

அவ்வறிக்கை 2399 சாதி வகுப்பார் லிஸ்ட்டை தயாரித்தது. 837 பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் எனச் சொன்னது. அக்கமிஷனின் சில முக்கிய பரிந்துரைகள்

-undertake caste wise enumeration in the census of 1961

-Relating Social backwardness of a class to its low position in the traditional caste hierarchy of Hindu society

-treating all women as a class as backward

-Reservation of 70 % seats in all technical and professional institutions for qualified students of backward classes

-Reservation of vacancies in all govt services and local bodies for OBC

class 1 25 %

class II 33 1/3 %

classs III and iV  40 %

கமிட்டியில் 5 உறுப்பினர் முடிவில் மாறுபட்டனர். ஒன்றுபட்ட முடிவை கமிட்டி தரமுடியாமல் போனது. சாதியை பிற்பட்டத்தன்மைக்காண இணைக்கலாமா என்று சிலர் கேட்டனர். சேர்மனாக இருந்த கலேல்கரும் தனது தயக்கத்தை வெளிப்படுத்தாமல் இல்லை. அவர் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில வரிகளும் இங்கு தரப்பட்டுள்ளன.

1951 சென்சஸ் படி எஸ்சி எஸ்டி பிரிவில் 7 கோடி இருந்தனர். இந்த 2399ல் 930 பிரிவினர் 11.5 கோடியாக இருந்தனர்.

அறிக்கையைப் பெற்ற அரசாங்க நடவடிக்கை என்ன என்பதை மண்டல் தருகிறார். நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை விவாதிக்கப்படவில்லை. அரசாங்கம் வேறு வழியிருக்குமா என பார்க்கச் சொல்லியது.

To discover some criteria other than caste which could be the practical application in determining the backward classes.

இதற்கான சர்வே ஒன்றை எடுக்க சொல்லினர்- linking to occupational communities instead of caste. அம்முயற்சி வெற்றிபெறவில்லை. இந்நிலையில் அகில இந்திய அளவில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் எனவும் எஸ்சி எஸ்டிக்கு மட்டும் இருக்கட்டும் எனவும் அரசாங்கம் முடிவெடுத்தது. ஆக 14, 1961ல் உள்துறை அமைச்சக செய்தியாக நமக்கு கிடைப்பது- மாநில அரசுகள் பட்டியல் வைத்து அதன்படி தங்களின் அளவுகோல்களை கடைபிடிக்கலாம்.

While the State Govts have the discretion to choose their own criteria for defining backwardness, in the view of GOI it would be better to apply economic tests than to go by caste...

the State Govts may adhere to their own lists, any AI list drawn up by the CG would have no practical utility"

காகா கலேல்கர் கமிஷன் முதல் முறையாக அனைத்திந்திய ஆய்வை மேற்கொண்ட ஒன்று எனப் பாரட்டப்பட்டாலும், அதன் முறையியல் குறைகளுடன், உள்முரண்பாடுகளைக் கொண்டதாகவும் இருந்தது. 2399 பிரிவினர் என்கிற பட்டியலை கல்வி இலாகாவும், மாநில சர்க்கார்களும் கொடுத்த விவரப்படி எடுத்துக்கொண்டனர். சரி பார்ப்பதற்கான கள ஆய்வு எதையும் காகா கலேல்கர் கமிஷன் செய்யவில்லை. அதுபோல அது பரிந்துரைத்த இட ஒதுக்கீடு சதவீதங்களும் எந்த அடிப்படையில் எனச் சொல்லப்படவில்லை.

கலேல்கர் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்கண்ட வரிகளும் இருந்தன

“ ...I was prepared to recommend to Govt that all special help should be given only to the backward classes and even the poor and the deserving upper classes may be safely kept out from the benefit of this special help.

My eyes were however opened to the dangers of suggesting remedies on the caste basis when I discovered that it is going to have a most unhealthy effect of the Muslim and Christian sections of the nation.."

"..it drove me to the conclusion that the remedies we suggested were worse than the evil we were out to combat"

"..it is only when the report was being finalised that I started thinking anew and found that backwardness could be tackled on a basis or a number of basies other than that of caste. I only succeeded in raising the suspicion of the majority colleagues that I was trying to torpedo the recommendations of the commission. This was another reason why I signed the Report without even a minute of dissent."

வேறு ஒரு இடத்தில் முள்ளை முள்ளால் எடுப்பது போன்று சாதியால் ஏற்பட்ட துன்பங்களை சாதியைக் கொண்டே தீர்ப்பது என்றும் சொல்லியுள்ளார் கலேல்கர். பாவம் காந்தியவாதி காகா என மண்டல் இங்கு தெரிவிக்கிறார்.

2-5-2024

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு