பேரா . தோழர் அ . மார்க்ஸ் எழுதிய கார்ல் மார்க்ஸ் பேரா . தோழர் அ . மார்க்ஸ் எழுதிய கார்ல் மார்க்ஸ் புத்தகம் ஜனவரி 2023 ல் வெளியானது . நேற்று கையில் கிடைத்தவுடன் ஒரே நாளில் சில மணிகளில் 198 பக்கங்களையும் படிக்க முடிந்தது . ஆர்வமும் நேரமும் உதவின . மார்க்ஸ் மற்றும் மார்க்சிற்கு பிந்திய மார்க்ஸியம் குறித்த அம்சங்களை அறிமுகப்படுத்தி விளக்கும் ஆக்கமிது . இளைஞர்களுக்கு நல்ல கையேடாக இந்த புத்தகம் அமையும் என்றே வாசித்தவுடன் எனக்குத் தோன்றியது . இடதுசாரி இளம் தோழர்கள் கூட்டாக வாசித்து புரிதலை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய புத்தகம் . கடினமாக இருக்காது . தோழர் அ . மார்க்ஸ் அவர்கள் மார்க்ஸின் 200 ஆம் ஆண்டில் ’ மக்கள் களம் ’ ஆசிரியரின் வேண்டுகோளுக்கேற்ப எழுதிய தொடர்கட்டுரைகள் புத்தக வடிவம் பெற்றுள்ளன . 17 கட்டுரைகள் அதைத் தொடர்ந்த பின் இணைப்புகளின் தொகுப்பு இந்த ஆக்கம் . 17 கட்டுரைகளின் சாரமாக பின் இணைப்புகளை கொள்ளமுடியும் . இந்நூல் அட்டையில் சொல்லப்பட்டுள்ளபடி மார்க்ஸ் அவரது ஆ...