https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, March 23, 2023

அம்பேத்கர் அறிவுசார் சரிதை

 

அம்பேத்கர் அறிவுசார் சரிதை

Dr Ambedkar an Intellectual Biography of Ideas, enlightenment, life and liberation work என்ற நீளமான தலைப்பில் அம்பேத்கரின் வாழ்க்கைப்போராட்டம், சிந்தனை செயல் ஓட்டங்களை சித்தரிக்கும் புத்தகம் 2016 ல் வந்தது. Vijay Mankar ஆசிரியர்.



இப்படி intellectual biography  மார்க்ஸ், லெனின் போன்றவர்களுக்கும் வந்துள்ளன. அவர்கள் தங்கள் சூழலில் வந்தடைந்த சிந்தனைப்புள்ளிகளையும் அதற்கு முன்வைக்கும் செயல்பூர்வ திட்டங்களையும் பொதுவாக இந்த intellectual biography பேசுவதைக் காணமுடியும்.

விஜய் மாங்கர் இந்த நூலில் அம்பேத்கரை குறிப்பிடும் இடங்களில் எல்லாம் capital  ‘H’ He His எனப்பயன்படுத்தியிருப்பார்.   காரணமாக the relevance and regard for this great man எனச் சொல்கிறார். அதேபோல பிராமணர் குறிக்க எல்லா இடங்களிலும் small  b பயன்படுத்தியிருப்பார். காரணம் அவர்களின் anti social, anti human ideologies and institution எனச் சொல்கிறார்.

விஜய் மாங்கர் ஏறத்தாழ ஒரு லட்சம் பக்கங்களின் வாசிப்பு வழியாக 360 வால்யூம் புத்தகங்கள், 650 notes மூலம் தனது ஆய்வை செய்து இந்த புத்தகத்தை தந்ததாகச் சொல்கிறார். விஜய் மாங்கர் group A அதிகாரிப் பணியைத்துறந்து அம்பேத்கர் ஆய்வில் தன்னை முழுநேரமும் ஈடுபடுத்திக்கொண்டுள்ள அறிஞர் மற்றும் அமைப்பாளர்.  50 வயதான விஜய் மாங்கர் தனது 20 ஆம் வயதிலிருந்து அம்பேத்கரின் தீவிர வாசிப்பாளர். 150 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளதாகச் சொல்கிறார்.

நூலில் நுழைவாயிலில் விஜய் இவ்வாறு சொல்கிறார்.

Dr. B R Ambedkar : An Intellectual Biography, is an exposition for human enlightenment and the reconstruction of the world. A brief biographic account of this greatest among great men- Dr Babasaheb Ambedkar therefore needs a special mention. In twenty four chapters we shall take a voyage to His life and work..

இந்த விஜய் மாங்கர் அவர்களின் ’வாயேஜ்’ எப்படி செல்கிறது எனப் பார்க்கலாம்.

                                      2

விஜய் மாங்கரின்அம்பேத்கர் அறிவு சரிதைஅவர் குறித்த பெரும் hagiography வகைப்பட்ட புத்தகம். 490 பக்கங்களைக்கொண்ட இதன் முதல்பாகமான 145 பக்கங்களிலிருந்து அதில் உள்ளவாறு சில செய்திகளை தந்துள்ளேன். இரண்டாவது பகுதி அவரது சிந்தனை முன்வைப்புகளை அவரது ஆக்கங்களிலிருந்து பேசும் பகுதி.

அம்பேத்கர் பெற்றோர் ராம்ஜி சக்பால்- பீமாபாய்க்கு 14 குழந்தைகள். மிஞ்சி உயிர் தரித்த குழந்தைகளாக பலராம், ஆனந்தராவ், பீம்ராவ், மஞ்சுளா, துளசி இருந்தனர்.

அம்பேத்கருக்கு 18/19 வயதில் துணைவியாராக ரமாபாய் 13/14 வயதுக்காரர் அமைகிறார். 1912ல் முதல் மகன் யஷ்வந்த் பிறக்கிறார். 1917-1920க்குள் கங்காதர், இந்து, ரமேஷ் பிறக்கின்றனர். யஷ்வந்த் மட்டுமே தறிக்கிறார்.

லண்டனில் அம்பேத்கர் பெர்ட்ரண்ட் ரசலை சந்தித்து உரையாடுகிறார். அம்பேத்கரின் நலன் விரும்பியாக இருந்த நண்பர் நவல் படேனா. பேரா செலிங்மேன், ஜாகோபி போன்றவர் அவருக்கு ஆலோசகர்களாக இருந்தனர்.

லண்டனில் அவர் தங்கியிருந்த புரூக் கிரீன், ஹாம்மர் ஸ்மித் பகுதியில் தோழியானவர் Fanny Fitzerlands.

திலகரின் மகன் சித்தார்த்பந்த் திலகர் அம்பேத்கர் மீதான மிகுந்த மரியாதை கொண்டவராக இருந்தார்.

அம்பேத்கரின் பம்பாய் சட்டமன்ற நுழைவு, மகத் சத்தியாகிரகம் பற்றி குறிப்புகள் உள்ளன. சைமன் கமிஷன் , காலராம் கோயில் சத்தியாகிரகம் பேசப்பட்டுள்ளது.

வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கர் பங்களிப்பு, காந்தியுடனான மோதல் சொல்லப்படுகிறது. முதல் முறையாக அம்பேத்கர் காந்தி சந்திப்பு மணிபவனில் 14.8.1931 மதியம் 2 மணிக்கு நடந்தது. Gandhi was discourteous என்ற குற்றச்சாட்டு இங்கும் வைக்கப்பட்டுள்ளது. affront conversation left Gandhi starred என்றும் சேர்த்தே சொல்லப்பட்டுள்ளது. அம்பேத்கர் இப்படிச் சொன்னாராம்

We believe in self help and self respect. We are not prepared to have faith in great leaders and Mahatmas…

கம்யூனல் அவார்ட் ஆகஸ்ட் 17, 1932 ல் அறிவிக்கப்பட்டதை அறிவோம். ஆனால் மே மாதம் அம்பேத்கர் confidentially proceed to London and met PM Ramsay…The day when PM signed the Award, Ambedkar was in London on 4th Aug என்ற தகவல் தரப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரத்தை ஏதும் ஆசிரியர் தரவில்லை.

அடுத்து காந்தியின் உண்ணா நோன்பு பேச்சு வார்த்தைகள் புனே உடன்பாடு சொல்லப்படுகிறது. காந்தி குறித்த விமர்சனங்கள் சொல்லப்பட்டுள்ளன. காந்தியின் மகன் தேவதாஸ் கண்ணீர் மல்க தனது தந்தையின் உயிரை காக்க வேண்டி அம்பேத்கரை சந்தித்த செய்தியும் உள்ளது. இது எந்த தேதியில் எங்கு நடந்தது என்பது பற்றி குறிப்பேதும் ஆசிரியரால் தரப்படவில்லை.

அக் 13, 1935ல் conversion call- I shall die as a Hindu என்ற அறிவிப்பை அம்பேத்கர் தந்தார். ஜட் பஸ் தோடக் மண்டல் Annihilation of caste issue, Independent Labour Party நடவடிக்கைகள் சொல்லப்பட்டுள்ளன.

1936 நவம்பர் மற்றும் ஜனவரி 13, 1937 வரை அய்ரோப்பாவில் அம்பேத்கர் இருக்கிறார். வதந்தி ஒன்று பரவியது. The Daily Star evening newspaper of London had reported “ Dr Ambedkar secretly married an English Widow, left Venice with wife, Jan 3”. Vividharvretta பம்பாய் இந்த செய்தியை வெளியிட்டதாம். இதற்கு டாக்டர் அம்பேத்கர் ஏதாவது மறுப்போ கருத்தோ தெரிவித்தாரா என்ற செய்தி இந்த நூலில் இல்லை.

சித்ரா எனும் பத்திரிகையில் அம்பேத்கர் described ’Gandhi age’ as dark age in an article ‘Gandhi A Mahatma?’ . Ambedkar asked people to read RTC speeches to judge who is anti national.

 

அம்பேத்கர் நேருவை முதல்முறையாக அக் 1939ல் சந்திக்கிறார். இருவரும் ஒடுக்கப்பட்டவர் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கின்றனர். நேரு விடைபெற்றவுடன் தனது சக தோழர்களிடம் அம்பேத்கர் இப்படி பதிவொன்றை தந்தாராம். Dr Ambedkar thought ( Nehru) no better than a fourth standard student. இப்படி கருத்து மதிப்பீடுகளை அம்பேத்கர் தருவது நியாயமாகுமா என ஏற்கமுடியவில்லை.

இந்துத்துவம் பாசிச கொள்கை என்ற கருத்தை அம்பேத்கர் பிரதிபலித்ததை இந்த புத்தகம் இப்படி சொல்கிறது.

Hinduism is a political ideology of the same character as the Fascist or Nazi ideology and thoroughly anti democratic.

Viceroy Executive council Labour Minister ஆக அவரது பணிகள் சிறக்க சொல்லப்படுகின்றன. அப்படி அந்த அமைச்சர் கவுன்சிலில் நுழைய அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் காண்கிறோம்.

ஜூலை 1942ல் அம்பேத்கர் All India Depressed class Meetல் கொடுத்த விளக்கம் அவரது சிந்தனை செயலின் மய்யத்தன்மையை புலப்படுத்தும். இதிலும் காந்தி மீதான தாக்குதல் இருப்பதைக் காண்கிறோம்.

The key note of my politics lies in the proposition that the untouchables are not a sub head or sub section of the Hindus, and they are separate and distinct element in the national life of India…one malignant factor which has been working to weaken our position is Gandhi and Gandhism. By signing Poona pact I helped to save the life of Mr Gandhi. Mr Gandhi not withstanding the Poona pact which saved him from death never gave his true and honest consent to the principle underlying the Poona pact.

இங்கு புனே உடன்பாடு பற்றி குறிப்பிடுகையில் தனது தாராள மனதின் பெருமிதங்களை மட்டுமே அம்பேத்கர் உணர்ந்து பேசுவது போல் இருக்கிறது. வேறு யார்க்கும் எந்த பங்கோ, அல்லது அவர் கோரிக்கையில் உறுதியாக காந்திக்கு எதுநேர்ந்தாலும் அது குறித்து பொருட்படுத்தாமல் அவரால் ஏன் நிற்கமுடியாமல் போனது என்பது பற்றியோ அவரிடம் விளக்கம் ஏதுமில்லை. அப்படி அவர் மனம் கசிந்து உதவியிருந்தால் அதை சொல்லிக்காட்டி அரசியல் செய்வது அவரின் மேதைமைக்கு அழகாக என்னால் உணரமுடியவில்லை.

 

அம்பேத்கர் ஜூலை 18 , 1942ல் பேசியதாக நூலாசிரியர் விஜய் சொல்வது if I fail myself I will shoot myself . இதன் அதீத உளவியல் அவரின் சாதிக்க வேண்டிய வைராக்கியத்தையும், இல்லையேல் மாய்த்துக்கொள்ளவேண்டும் என்ற விரக்தியையும் புலப்படுத்துகின்றனவா?

1946ல் (கவுன்சில் அமைச்சர் குழாமில் நுழைய) ஜெகஜீவன்ராம் முக்கியத்துவம் பெறத்தக்க வகையில் காய்கள் நகர்த்தப்பட்டதாம். இங்கும் காந்தி மீதான விமர்சனம் வைக்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மாணவர்க்கு தனிக்கல்லூரி என அம்பேத்கர் சொன்னதை மாளவியா விமர்சித்தார். பதில் விமர்சனத்தை பனாரஸ் முழுமையாக பார்ப்பனர்களுக்கு ஆகிவிட்டதே என அம்பேத்கர் வைத்தார்.

மார்ச் 26, 1946 ல் அம்பேத்கர்  தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தினார். அவரின் உறுதிப்பாட்டை நமக்கு அவ்வரிகள் காட்டுகின்றன.

I want to tell my Hindu friends that I shall not live on their charity. I do not want their charity. I am a citizen of this country. I am entitled to claim from the Government Treasury whatever rights and benefits every other community is claiming itself. I do not want charity.

காபினத் தூதுக்குழுவிடம் அம்பேத்கர் ஏப்ரல் 5 1946ல் SCs do not want Cabinet Assembly - a commission to solve constitutional questions என்றார். வேண்டாம் எனச் சொன்ன அரசியல் அசெம்பிளி வருவது உறுதியான நிலையில் அதற்குள் செல்வதற்கான முயற்சிகளை ஜோகேந்திரநாத் மண்டல் உதவியுடன் மேற்கொண்டார். வங்கத்திலிருந்து ஜூலை 19, 1946ல் அவர் தேர்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் பிரிந்த பின் மராட்டியத்திலிருந்து காங்கிரஸ் தலைவர் கட்டளைப்படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வர்ணாஸ்ரமத்தை ஒழிக்க முடிந்தால் அது சூத்திரர்களால்தான் முடியும். அதற்கு அவர்கள் பயிற்சிக்கப்படவேண்டும். அது இருப்பதற்கு அவர்களும் காரணம் என அவர் 1946 ல் எழுதிய who were Shudrasல் தெரிவித்தார்.

It is the shudras, who have been largely been the instrumental in sustaining the infamous system of Chaturvarnya, though it has been the primary cause of their degradation and that only the Shudras can destroy the Chaturvarnya,  it would be easy to realize why I allowed the necessity of educating and thereby preparing the Shudra fully for such a sacred task to outweigh all other considerations.."

காபினட் தூதுக்குழுவில் திருப்தி அடையாத அம்பேத்கர் 1946 அக்டோபரில் லண்டன் சென்றாராம். நவம்பரில் அவர் அட்லி, சர்ச்சில் போன்றவர்களை சந்தித்து உரையாடுகிறார். Abrogating Poona Act என்ற கோரிக்கையை வைக்கிறார். அட்லி SCs needed to be looked after என்றும், சர்ச்சில் keen and desirous of seeing SCs were protected in any constitution என்று அம்பேத்கர் வெளிப்படுத்தினார்.

எட்வினா மவுண்ட்பாட்டன் வந்தவுடன் சந்தித்த ஒரு சிலரில் அம்பேத்கரும் ஒருவர். நாட்டின் பிரிவினைக்குப் பின்னர் இந்தியா பற்றி கருத்துச் சொல்ல ஜின்னாவிற்கு உரிமையில்லை என்பதை அம்பேத்கர் தெரிவித்தார்.

Mr Jinnah asked for his Pakistan State and he has got it. After that he has no more right to speak on the affairs of the Indian Union that has any other foreign ruler…His party’s unwillingness to stay in the Union has won it separation. It cannot now start sowing seeds of trouble in rest of India.

தேசியக்கொடியில் தம்ம சக்கரம் இருப்பதும் அதன் saffron வர்ணத்தையும் புத்தரின் குறியீடுகளாக அவர் பார்த்து வரவேற்றார்.

அரசியல் அசெம்பிளியில் அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு தலைவராக, பல்வேறு கமிட்டிகளில் அவர் ஆற்றிய பணி சொல்லப்பட்டுள்ளது.

அம்பேத்கர் விடுதலை இந்தியாவின் சட்ட அமைச்சராக இருந்த காலத்தில் தன்னைக் கவனித்து உடல் நலம் காத்திட டாக்டர் சாரதா கபிர் அவர்களை ஏப்ரல் 15, 1948ல் மணம் முடிக்கிறார். இந்த திருமண எண்ணத்தை வெளிப்படுத்தி இரகசியம் காக்குமாறு மார்ச் 6 அன்றே கெயிக்வாடிற்கு அம்பேத்கர் கடிதம் எழுதுகிறார்.

…medical advisers have been urging me to keep a nurse or housekeeper if I did not wish to marry..

I have no doubt that keeping a nurse or housekeeper would give rise to scandal. The better course is to marry. After Yeshwant’s mother’s death I had decided not to marry. But under situation have forced my resolution. The doctor says that for me the choice is between marriage and early death.

 

A women to be my wife must be educated, must be a medical practitioner and must be good at cooking. It would be impossible in our community to find a women who would combined the three qualifications and also suit my age. Fortunately I have been able to find one. She comes from the Saraswat Brahmin community. The marriage at present will take place in Delhi on the 15 th April. Keep this confidential.

என்று திருமணம் குறித்து முன்னரே தெரிவித்து இரகசியம் காக்குமாறு சொன்னதைக் காண்கிறோம்.

ஒருமுறை சிவராஜ் அவர்களிடம் வாசிக்கும் முறை பற்றி அம்பேத்கர் கருத்து தெரிவித்தார். சிலவற்றை புரட்டினால் போதும். சில புத்தகங்கள்தான் ஆழமான வாசிப்பைக்கோரும். Casual browsing, cursory reading, through reading என அவர் வகைப்படுத்துவர். அம்பேத்கர் பெரும் புத்தகக்காதலர் . ஒருமுறை இப்படி தெரிவித்தார்

Is there a man in Asia who has climbed the Everest of Knowledge? Remember he is Ambedkar.

பல்லாயிரக்கணக்கான நூல்களை அவரது நூலகம் கொண்டிருந்தது. எந்த நூல் எங்கு என்ன அட்டையில் என்பது கூட அவருக்கு தெரியும். தெலாங் என்பாரின் நூலகத்தின் லாரி நிறைய புத்தகங்களை ஒரு புத்தகம் ரூ 2 flat priceல் அம்பேத்கர் வாங்கினார். மதன்மோகன் மாளவியா ரூ 2 லட்சம் கொடுத்து நூலகத்தை கேட்டபோது புத்தகங்கள் போனால் என் உயிர்போவது போல் என அம்பேத்கர் மறுத்தார். பிர்லா கேட்டபோது மறுத்தார். நேரு என்னிடம் உள்ள titles- subjects விட மிக அதிகமாக அம்பேத்கரிடம் இருந்ததாக வியந்துள்ளார். வாழ்நாள் முழுதும் பெரும் அறிவுக்காதலராக அம்பேத்கர் வாழ்ந்தார்.

புத்தரும் தம்மமும் மார்ச் 1956ல் அவர் எழுதி முடித்தார். அக்டோபர் 14, 1956 புத்தமதத்திற்கு மாறும் நாளும் வந்தது. Purification of land where conversion at the hands of a Brahmin Bhavanishankar என்ற செய்தி அவரிடம் எட்டியபோது, அப்படி என்றால் நான் வரமாட்டேன் என்ற உறுதியை அவர் காட்டினார். I will not keep my feet that land purified by that Brahmin.

எனது மதமாற்றம் முற்றிலும் பாரத வயப்பட்டதே..அதன் பெருமைமிகு இந்திய கலாச்சாரமே. உலகிற்கே இந்த நாடு கொடுத்த அருங்கொடை புத்தம் என்பது. இங்கு இந்துக்கள் அவர்களின் முட்டாள்தனத்தால் இந்த பெருமையைஇழந்து விட்டனர். அதை நான் மீட்டுள்ளேன் என்றார். அம்பேத்கர்.

டிசம்பர் 6, 1956ல் மரணம் அவரைத் தழுவியது. The cause of death mysterious என்றும் சாக்சேனா அறிக்கை ஏன் பொதுவெளியில் வரவில்லை எனவும் விஜய் மாங்கர் வினவுகிறார்.

இந்த புத்தகத்தின் இரண்டாவது பகுதி ideas enlightenment and reconstruction of world என்ற தலைப்பில் 8 அத்தியாயங்களில் அவரது சிந்தனை முன்வைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அம்பேத்கரை தெய்வீக ஆராதனைக்குரியவராக உயர்த்துவதோ, போற்றிப்புகழ் பாடுவதோ ஆசிரியர் நிலைப்பாடாக இருக்கலாம். அம்பேத்கர் போற்றல் என்பது கண்டிப்பாக அதன் நாணயத்தின் மறுபக்கமாக காந்தி தூற்றல் என்பதாக இருக்க வேண்டுமா?

இலட்சக்கணக்கான பக்கங்களை படித்து விட்டு எழுதியிருப்பதாகசொல்லும் ஆசிரியர் ஆங்காங்கே உரிய ஆவண குறிப்புகளை பல இடங்களில் காட்டாமல் செல்கிறாரே எனத் தோன்றுகிறது.

23-3-2023

 

 

 

 

 


No comments:

Post a Comment