https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, March 18, 2023

மேகநாத் தேசாயின் Marx’s Revenge

 

மேகநாத் தேசாயின் Marx’s Revenge

மேகநாத் தேசாயின் Marx’s Revenge : The Resurgence of Capitalism and the Death of Statist Socialism மிக கவனத்துடன் படிக்கப்படவேண்டிய புத்தகம். முதலாளித்துவம் எப்படி தொடர்ந்து தன்னை காத்துக்கொண்டிருக்கிறது என்பதைப் பேசும் புத்தகம். அது மட்டுமல்லாமல் அரசு சோசலிசம் வீழ்ந்த கதையையும் பேசுகிற புத்தகம்.




மார்க்ஸ் எழுதிய காபிடலின் மய்ய சரடிலிருந்து, எங்கெல்ஸ் தொகுத்த மூலதனம் பாகங்கள், பெர்ன்ஸ்டைன், காட்ஸ்கி புரிந்துகொண்டவை, லெனினின் பொருளாதார குறிப்புகள், ரோஸாவின் மூலதனக்குவியல், ஹெல்பர்டிங் எழுதிய இம்பீரியலிசம், லெனின் வரையறுத்த இம்பீரியலிசம் என்ற பல்வேறு ஆக்கங்களின் அடைப்படையில் மிக நுணுக்கமான விவரங்களை மிக கச்சிதமாக முன்வைத்து எழுதப்பட்டுள்ள புத்தகம்.

ஸ்கும்பீட்டர், கீன்ஸ், ஹாயக் குறித்த சில குறிப்புகளும் சுருக்கமாக இடம்பெற்றுள்ள புத்தகம்.

ஆடம்ஸ்மித் குறித்தும் ஹெகலின் அரசு குறித்தும் தனித்தனியான சாப்டர்கள் பேசப்பட்டுள்ளன. இலாபம் பற்றி ஸ்மித், ரிகார்டோவிற்கு இல்லாத பார்வை மார்க்சிடம் இருந்ததை profits என்ற சாப்டரில் தேசாய் விரிவாக விளக்குகிறார்.

அதேநேரத்தில் one reason for the controversy is the language of Marx used, the labour content of the wage he called ‘necessary labour’

Surplus labour= total hours worked- necessary labour

Rate of profit= surplus value /  variable capital+ constant capital. இந்த உபரி மதிப்பின் பொருத்தப்பாடு குறித்தும் பல்வேறு பொருளாதார அறிஞர்களின் வாதங்களை இந்த புத்தகம் முன்வைக்கிறது.

மார்க்ஸின் மூன்றாம் வால்யூம் 1894ல் வெளிவந்த பின்னர் அதுவும் பல அறிஞர்களுக்கு திருப்தியை தரவில்லை என்கிறார் தேசாய். அது முன்வைத்த transformation problem akin to destruction of capitalism என்பது விவாதமானது. அது அப்படியாகத்தான் இருக்க வேண்டுமா என்பது விவாதமானது.

இலாபம் வராமல் எவரையும் எந்த முதலாளியும் வேலைக்கு வைத்துக்கொள்வதில்லை. மார்க்ஸின் வகைப்பாட்டில் the falling tendency of profitability became entwined with the probability of survival of capitalism itself. மார்க்ஸ் தான் முதலில் cycle சுழற்சி குறித்தும் ஆழமாக யோசித்த முதல் அறிஞர். ஒருவரை ஒருவர் சார்ந்த ஆனால் முரண்பாடுகள் கொண்ட முதலாளி தொழிலாளி உறவு வழி அதை அவர் விளக்கினார்.

இதையும் மேக்நாத் தேசாய் தெரிவிக்கிறார். மார்க்ஸ் தனது பெரும் படைப்பில் சோசலிசத்தின் தன்மை இப்படித்தான் என்கிற ஊகங்களை வெளிப்படுத்தவில்லை.

மார்க்ஸின் rate of profit had a tendency to fall என்பது அப்படித்தான் வீழும் தன்மையிலாக தொடர்ந்ததா..என்ற கேள்வியும் தேசாயிடம் இருக்கிறது. இங்கு தேசாய் சொல்வது the seeds of recovery are within the crisis itself. The value of capital falls; hence a given amount of profit is now higher rate of profit .

பல நேரங்களில் கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோவை பைபிளாக கொண்டாடுகிறோமே தவிர காபிடல் நூலை அல்ல என்ற வருத்தத்தையும் தேசாய் வைக்கிறார். இதற்கு காரணம் வெகு சிலர் மட்டுமே காபிடலின் மூன்று வால்யூம்களையும் வாசித்து புரிந்துகொண்டதுதான் என்கிறார். மேலும் அப்படி படித்தவர்களில் சிலரும் அவர்கள் சொல்வதைக் கேட்பவர்களில் பலரும் that in Capital Marx provided an analytical argument for the breakdown of capitalism என்று புரிந்துகொண்டுள்ளனர். ஆனால் தேசாய் தன் வாசிப்பாக கீழ்கண்ட வரிகளையே வந்தடைகிறார். இது தேசாய் வந்தடைந்த முக்கிய புள்ளி.

What we discover is that on reading capital, one could conclude that capitalism will live thorough cycles, and a slow as well as cyclical tendency of the rate of profit to decline.

சோவியத் அனுபவத்தில் டிராட்ஸ்கி போலவே தேசாயும் கேள்வியை வைக்கிறார். If capitalism is a global phenomenon, how can it be successfully challenged by socialists in a single country?

ரோசா லக்சமபர்க்கின் accumulation of capital ஆக்கம் குறித்து பேசும் தேசாய் ரோசா பேசிய அந்தடிபார்ட்மெண்ட் 3 குறித்த ஆயுத தளவாட உற்பத்தி பற்றிக் கூறுகிறார். லக்சம்பர்க்ஓரநாடுகளின் இருப்பால்மய்ய நாடுகளின் மூலதன வேட்டை பற்றி பேசினார்.

ஹில்பெர்டிங் வளப்படுத்திய finance capitalism பற்றி சற்று தேசாய் விளக்குகிறார். ருஷ்ய மார்க்சியர்கள் வெரா ஜசுலிச், நரோத்னிக்குகள், லெனின் , புகாரின் போன்றவர்களின் பொருளாதார புரிதல்களைச் சொல்லிச் செல்கிறார். Russian Revolution Miscarriage எனக்கேட்டு விவாதிக்கிறார். இரண்டாம் அகிலத்தில் காட்ஸ்கியின் புரிதலும் ஓரளவிற்கு தேசாயால் விவாதிக்கப்படுகிறது.

Socialism one or many என்கிற விவாதத்தில் socialism within capitalism, socialism outside capitalism , socialism beyond capitalism என்கிற சோதனைகளைச் சொல்கிறார். நமது நேருவை முன்னதற்கு உதாரணமாக சொல்லலாம் என்றால் (தேசாய் சொல்லவில்லை) சோவியத் முயற்சியை இரண்டாவதற்கும், மார்க்சிய perception யை மூன்றாவதிற்கும் சொல்லலாம் .

இரண்டாவது அகிலத்தின் திருத்தல்வாதம் குறித்த விமர்சனத்துடன் மூன்றாம் அகிலம் பிறந்தாலும் சோவியத் ரஷ்யாவின் தேசிய நலன்களை ஒட்டியே அதன் பார்வை இருந்ததை தேசாய் உணர்த்துகிறார். என் பி மூலம் சில சமரசங்களை லெனின் செய்யவேண்டிய எதார்த்தம் உணரப்பட்டது. லெனின் மறைவிற்குப் பின்னர் மார்க்சிசம் என்பதே ஸ்டாலின் சொல்வது என்றானதை தேசாய் விவரிக்கிறார்.

முசோலினி அரசில் இருந்த அறிஞர் ஜியோவன்னி ஜென்டில் என்பார்தான் totalitarian என்கிற பார்வையை முன்வைத்தவராம். ஜூலை 1932ல் நாசி கட்சி எனப்படும் National socialists அங்கு செயல்பட்ட ஜெர்மானிய கம்யூனிஸ்ட்களின் SPDயை விஞ்சி ஆட்சிக்கு வருகிறது. அந்த நேரத்தில் ஸ்டாலினும் எஸ் பி டி தலைமை எதிர்த்து அங்குள்ள கம்யூனிஸ்ட்கள் போராட வழிகாட்டினாராம். SPD social fascist என ஸ்டாலின் விமர்சித்தார். இன்னொரு தகவலையும் தேசாய் தருகிறார்.

ஹிட்லர் சுதந்திர சந்தை எதிர்த்தும் நின்றாராம். He abandoned the liberal tenets of free trade, free mobility of capital and labour and laissez faire , but without challenging Capitalism and profits என தேசாய் எழுதியுள்ளார். ஸ்டாலினுக்கு, ஹிட்லருக்கும் என்ன இதில் வித்தியாசம் என்பதையும் சுருக்கமாக தேசாய் தருகிறார்.

Statin’s challenge to the liberal order was that of economic development and industrialisation without resort to private property and profit making. Hitler’s challenge was to declare the free market wasteful, unnecessary for economic growth under capitalism .

பாவர்க், லுத்விக் மைசஸ் , ஹாயக் போன்ற ஆஸ்திரிய பொருளாதார மேதைகள் பற்றிய சிறு அறிமுகத்தையும் தேசாய் தருகிறார். ஸ்கும்பீட்டர் முதலாளித்துவத்தின் நல்லதும் மோசமானதுமான இரட்டை குணங்களை விவரித்ததாக தேசாய் சொல்கிறார். ஹாயக் bank credit- real cycle என்பது குறித்து பேசியதையும் , பால் ஸ்வீசி போன்றவர்களே தங்கள் இளமையில் Hayak had the key to capitalism சொன்னதாக அறிகிறோம்.

கீன்ஸ் தனது The General Theory of Employment, Interest and Money மூலம் உலக நாடுகளிடம் அரசாங்கங்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கினார். பொருளாதாரத்தின் மொழியையே அவரால் மாற்றமுடிந்தது என தேசாய் எழுதுகிறார். பெர்னார்ட் ஷாவிடம் பேசிய கீன்ஸ்தான் பொருளாதார அயின்ஸ்டின் என சொல்லிக்கொண்டதை தேசாய் குறிப்பிடுகிறார்.

கீன்ஸ் பேசிய வேறு ஒரு முக்கிய உரையாடலை தேசாய் தந்துள்ளார். மார்க்சின் உபரி மதிப்பு சரி ,ஆனால் if goods are not sold, the surplus value is just notional, unrealised என்கிற முக்கிய பார்வையை கீன்ஸ் வெளிப்படுத்தினார். கீன்ஸின் புரட்சி என்று அவர் கொண்டாடப்பட்டதைக் காண்கிறோம். பொருள் விற்கப்படவில்லை என்றால் உபரி மதிப்பை உணரமுடியாது என்ற விவாதம் வந்ததைக் காண்கிறோம்.

சோசலிசம் வேலைக்கு ஆகுமா என்ற ஒரு அத்தியாயமும் இந்த புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. நியுரத் எனும் அறிஞர் இவ்வாறு எழுதினார் “ The theory of Socialist Economy acknowledges only one manager or producer, the society, without calculation of losses or profits and without taking the circulation of money as a basis- no market..”

Mises இதை in societies based on the division of labour, the distribution of property rights effects a kind of mental division of labour, without which neither economy nor systematic production is possible என எழுதியதைப் பார்க்கிறோம். சோசலிசம் வேலையாகுமா என்பதற்கு எதிர்மறையாக அது irrational and impracticable என்றும் அவர் சொல்வதைக் காண்கிறோம். இந்த விவாதங்கள் முன்பே வந்தவைதான். மைசஸ் வாதத்தை மார்க்சிய பொருளாதார அறிஞர்கள் ஏற்கவில்லை.

கார்ல் போலயானியின் கருத்துக்களையும் தேசாய் தொட்டுச்செல்கிறார். இங்கும் உபரி மதிப்பு என்று சொல்வதால் இல்லை, விற்கப்பட்டால்தான் இலாபம் என்ற பிரச்னை சொல்லப்படுகிறது . Markets in labour power arise from the private property rights என தேசாய் இப்பகுதியில் விளக்குகிறார்.

Golden age of capitalism என்கிற பகுதியில் பூர்ஷ்வாமயமாக்கப்பட்டு வரும் தொழிலாளி மார்க்ஸ்க்கு உதவுவானா என்ற விவாதத்தை தேசாய் முன்வைக்கிறார். வால்ட் ரோஸ்டோ தனது Non Communist Manifesto வை எழுதுகிறார். அவர் கென்னடியின் ஆலோசகராகிறார்.

The High Noon of Socialism என்கிற அத்தியாயத்தில் மார்க்சியர்களான பால் பாரன், ஸ்வீசி விவாதிக்கப்படுகின்றனர். மூன்றாம் உலக நாடுகளில் இவர்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். மேற்கு மார்க்சியம், மாவோயிசம், புதிய இடதுகளின் சிந்தனைப் போக்குகளை அறிமுகப்படுத்திச் செல்கிறார் தேசாய். Can a socialist society base its investment and wage policy on the criterion of productivity, which is only hidden signal for profitability? என்ற கேள்வி எழும்புகிறது.

சீனாவில் பல்கலையில் கம்யூனிஸ்ட் அறிக்கை, டூரிங்கிற்கு மறுப்பு, லெனினின் ஏகாதிபத்திய புத்தகங்கள் பாடங்களாக்கப்பட்டதையும் தேசாய் சொல்கிறார். சியாங்காய் ஷேக் தனது கட்டுப்பாட்டு பகுதியில் தனது புத்தகத்தை பாடமாக்கியபோது, மாவோ தனது கட்டுப்பாட்டு பகுதியில் தனது புத்தகத்தை பாடமாக்கிய அனுபவம் அங்கு முன்பே நடந்தேறியது.

டோனி கிராஸ்லாண்ட் தனதுசோசலித்தின் எதிர்காலம் என்ற ஆக்கத்தில் party is over என விவாதித்தாராம்..

பொதுத்துறை உழைப்பிற்கு தனியார் துறை உழைப்பிற்குமான வேறுபாட்டை அழகாக தேசாய் விளக்கியுள்ளார். பொதுத்துறையில் உபரி மதிப்பு இலாபம் என்பதை காணமுடியாது. அங்கு அரசு வருவாயிலிருந்து செலவு செய்யப்படுகிறது. ஆனால் தனியார் துறையில் productive workers accumulation profit என்பது அவசியமாகும். இங்கு தேசாய் இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிறார்.

Were Marxist writers, revolutionary though they saw themselves to be, unproductive labour?

பால் சாமுவேல்சன் என்கிற அறிஞர் மார்க்ஸின் சுரண்டல் கோட்பாடு குறித்த விமர்சனத்தை வைத்தார். விலை என்பதை மதிப்பு , உபரி மதிப்பு கொண்டுதான் தீர்மானிக்கவேண்டும் என்பதல்ல என்றார். அவர் டெக்னாலஜியின் பங்களிப்பை விதந்து பேசினார்.

சிரபா எனும் அறிஞர் one can calculate a rate of profit for an economy independently of prices, purely as a consequence of the technology of the system. Labour power or surplus value were not required என்கிற முடிவிற்கு வந்தார். இந்த Staffa இத்தாலியின் மார்க்சியர் கிராம்சியின் நண்பர். கிராம்ஸி சிறையில் இருந்த தருணம் புத்தகங்களை அனுப்பி உதவியவர் என்ற செய்தியை தேசாய் தந்துள்ளார்.

ஜான் வெண் நியுமான் என்கிற அறிஞர் திராட்சை அறுவடைக்கான உழைப்பையும், திராட்சை ஜூஸ் ஒயின் உருவாக்க தேவைப்படும் செயல்முறையும் சொல்லி, இரண்டாவதில் உழைப்பு என்பதற்கு பங்களிப்பு இல்லை என்கிறார். The value of wine exceeds that of the grape juice by a large factor, yet labour contributes nothing to the extra value. Thus, value and surplus value could arise from factors other than labour. உழைப்பின் வழி தான் உபரி மதிப்பு என்பதில்லை என இந்த அறிஞர்கள் பேசுகின்றனர்.

சோவியத்தில் கோர்பசாவ் ஆட்சி ,அவரது நடவடிக்கைகள், சோவியத் வீழ்ச்சியை சற்று குறிப்பிட்டுவிட்டு சோவியத் பொருளாதார அம்சம் ஒன்றையும் தேசாய் எழுதுகிறார். அது நடுத்தர வருவாய் நாடு. அதன் GDP misleading one. அதன் உற்பத்தி பொருட்கள் உலக விலை அடிப்படையில் பார்த்தால், இராணுவ தளவாடங்கள் தவிர மற்றவை சோவியத்தை மூன்றாம் உலக நாடுகளின் வரிசையில்தான் காட்டியது என்பதையும் தேசாய் எழுதுகிறார்.

ஸ்டாலிசம் குறித்த மதிப்பீடாக தேசாய் முன்வைப்பது

Stalinism had promised plenty for the price of unfreedom, but all it had delivered was poverty and unfreedom.

Leninism became a doctrine of oppression, scarcity, unfreedom என்ற விமர்சனத்தை up from the abyss அத்தியாயத்தில் தேசாய் வைத்துள்ளார்.

சில கேள்விகளை உரத்த சிந்தனைக்காக தேசாய் விட்டுச்செல்கிறார். Was there a proletariat?, How we’re the classes defined?, was there any mobility between classes?

இவை குறித்து ஜான் ரோமெர் ஆய்வு செய்ததான செய்தியை தேசாய் தருகிறார்.

சோவியத்தின் வீழ்ச்சி இடதுசாரிகளிடம் பெரும் தாக்கத்தை சோர்வை உண்டாக்காமல் இல்லை. அது எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் பால் கட்டப்பட்ட ஒன்று. It is a doctrine of hope and its eclipse is the End of Hope. முதலாளித்துவம் இன்னும் இருப்பேன் என்கிறது. Capitalism says that I survived. Not just survived but rejuvenated என தேசாய் தன் ஆய்வில் வந்தடைகிறார்.

தேசாயின் இந்த புத்தகத்தின் சாரத்தை இப்படி சொல்லலாம்.

Capitalism still survived not only survived but become a dynamic worldwide phenomenon yet again- still having a potential. Neither underconsumption and lack of markets, nor workers’ organisation and their rising share in total income, nor the loss of empire or the shortage of oil, or the threat of proletariat , all of these and more rehearsed as possible causes of its downfall could stop capitalism

அடுத்து தேசாய் சொல்ல வருவது

There is a need for a longer term complementarity between capital and labour. Conflict is endemic to capitalism, but if it is seen that capitalism is not about to die, then the beliefs, as well as behaviour of the workers undergo a modification.

தேசாய் முன் வைத்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரின் இந்த முன்வைப்புகளை எவரும் செவிமடுத்தது போல் தெரியவில்லை.குறைந்தது மனம் திறந்த வாசிப்பிற்காவது இந்த புத்தகம் உள்ளாக வேண்டும்.

 

17-3-2023

No comments:

Post a Comment