Skip to main content

Posts

Showing posts from June, 2021

கடலூர் NFTE நடத்திய அம்பேத்கரின் 125 வது பிறந்ததினம் சொற்பொழிவு ஏப்ரல் 15 , 2016

  அம்பேத்கரின் ஆளுமைப் பயணம்   ( கடலூர் NFTE நடத்திய அம்பேத்கரின் 125 வது   பிறந்ததினம் சொற்பொழிவு -   ஏப்ரல் 15 , 2016     உரையின் சுருக்கப்பட்ட கட்டுரை வடிவம் )   அம்பேத்கர் மகத்தான சமூகப்போராளியாக எப்படி உருவானார் , எவற்றை உருவாக்க விரும்பினார் என்பதை இன்றைய நாளில் விவாதித்துக்கொண்டிருக்கிறோம் . அவரின் எழுத்துக்களின் தொகுப்பில் பத்தாயிரம் பக்கங்களாவது நமது தொடர்தேடலுக்காக காத்து நிற்கின்றன . பிரித்தானியர் வருகைக்கு முன்பான இந்திய சமூகம் தொடர்ச்சியான ஒரேநாடாக இருந்ததா - தொடர்பறா சமூகமாக விளங்கியதா என்பதைப் பற்றி புராதன இந்தியா குறித்து ரொமிலா தாப்பர் உள்ளிட்டவர் தங்கள்ஆய்வுகளை தந்துள்ளனர் . பிரிட்டிஷாருக்கு இந்திய நாடு பெரும் சுரண்டல்காடாக இருந்ததுடன் பல ஆய்வுக்களனாகவும் ஆச்சரியப்படத்தக்கதாகவும் இருந்தது . வாழ்க்கைமுறையில் உணவு , உடை , மொழி , கலாச்சார வித்தியாசங்களை அவர்கள் கண்டனர் .   தங்கள் அய்ரோப்பிய கலாச்சாரத்தின் பெருமைதனை உணரத்தக்க   சமூகத்தட்டு ஒன்றை அவர்கள் ஏற்படுத்த முனைந்தனர் . நமது மொழிகளைக்கூட அவர்களில் ச