https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, September 27, 2023

More About PB CAT Judgment

 

                                                        More About PB CAT Judgment

 

I understand always my limitation on issues concerned and dealt for the last few years. One such issue is pension revision for the BSNL absorbed retirees.

 

My writeups may convince or may not convince the comrades concerned, but I never fail to go deep and give serious thought over that. I always aim how to bring the bonds to all the stakeholders .

I tried to maintain the spirit of Nagara SC Judgment, that pensioners placed in similar positions are a class. My understanding is, may not be a convincing one to many, CG pensioners retired fully from the Govt service, getting CDA is a class of themselves , whereas we the 4 lakh BSNL absorbed forming ourselves a class of different nature on IDA.

 

In order to join that CG class for the sake of pre 2017 pensioners , we cannot leave our bonds with our post 2017, who were all in 2nd prc scales on 1-1-2017 as employees. I don't say solution is impossible. But without breaking heads, it is not an easy or casual one. I agree that my knowledge on that is limited one.

 

Healthy criticism about my views is good to find solution. But bad and filthy language is no use to anyone. Naming and bracketing are very old organisational methods failed in its experiments.

So finding answer to the relevant questions are the sure road to solving the issues cropping up because of this latest PB CAT Judgment.

 

Though the Judgment is helping to bring parity with the pre 2016 pensioners in clear terms, it created disparity ,not in open terms, amongst the United bsnl absorbed since 1-10-2000.

I have been telling that the demand of simultaneous settlement of pension revision with pay revision would carryforward the existing bonding.

 

After oct 17 th 2022, I felt DOT is ready to bring pension revision , ofcourse with nil fitment, in the absence of pay revision, finding solution to post 2017 also w.e.f 1-1-2017. It seemed to me that Spirit of DOT was good, and I thought it would help to find solution to both pre and post 2017 on 3rd PRC scales. Some associations tried to bring some improvement on fitment. But they could not till this date. That solution presented by DOT maintained the parity amongst the BSNL absorbed as a single class.

 

Unfortunately or fortunately to many pre 2016 pensioners some Associations gone to PBCAT and won the case of CPC parity fitment. This new situation brought the dislocation of post 2017 from the single class position of the BSNL absorbed as per this judgment.

 

This Judgment on the face of it favours pre 2016 to tie them with CG pensioners and CPC. In central govt their single class position was safeguarded by simultaneous implementation of both pay revision and pension revision as per CPC.

 

Here in our case , our demand is only pension revision , after knowing as somebody is telling 'wage revision is mirage in bsnl '.

 

Unless pay is changed in some form to the employees on 1-1-2017 that is post 2017 , their pension calculation would continue only on 2nd prc scales. The question that we need to find answer is, how to make them fit in CG parity as per CPC and as per this Judgment.

The associations and their experienced leaders may have confidence to find an answer. I wish them every success.

 

0800 hrs 27 -9 2023 R.PATTABIRAMAN

 

Monday, September 25, 2023

PB CAT Judgment

 

PB CAT Judgment



Congratulations to all those leaders and Pensioners’ Associations of BSNL and MTNL who labored a lot for bringing a favorable CAT judgment for their applications and prayers. The copy of Judgment was first sent to me by Com Mathi of Vellore and later by many comrades.

I am one amongst the serious contestants against the associations demanding 7th CPC fitment and scales for the sake of those retiring on or after 1-1-2017 that is post 2017 pensioners ( the employees on 1-1-2017). All my ‘learned’ articles and write-ups were thrown into dust bin by this PB CAT judgment pronounced on sep 20, 2023. All the criticism leveled against me is getting its justification as on date by this judgment. The future criticism about ‘poverty’ of my understanding on this issue will also find its justification.

 But my heart does not feel guilty as I wrote only the found truth, and mind says ‘nothing that placed is wrong’. I did not get that legal stamp for my views, and the similar views of mine were not considered by the PBCAT.

I wish the Associations every success to carry forward the judgment to the logical conclusion, the realization of Pension Revision   on parity with CPC recommendations. DOT and the other Respondents should understand the sentiments of lakhs of Pensioners waiting patiently for the last 6 years and help them to find a solution without dragging the case further legally and causing delay in preparing cabinet note and other procedures.

I have given below my study about the case and relevant connecting points.  I have dealt both pre 2016 OM and post 2016 OM of DOPPW and their difference. Those interested may go through and others can ignore. Those interested, kindly read carefully.

 

II   PB CAT Judgment in nut shell

The allowed OAs are 1272/2020, 1271/2020, 1329/2020 filed by various Associations and members of that Associations. The respondents are DOT, DOPPW, DPE, BSNL and MTNL  , but the OA 1329 filed by AIBSNLPWA is not including BSNL, of course correctly, as one of its respondents like the other two OAs .

As per the ORDER of Hon' Mr Tarun Shridhar, Member A

 Accordingly, with the request and consent of learned counsel for the parties, all the O.A(s) have been taken up together for disposal and these are being decided by a common order. However, facts of only OA No. 1272/2020 are being discussed.

 Arguments on behalf of the applicants have been collectively put forth, led by Mr. Sanjay Ghosh, learned Senior Advocate ( of 1329 AIBSNLPWA) assisted by other advocates.

The following relief was sought by the way of OA.

"(a) Pass an Order directing the Department of Telecommunications to revise the pension/family pension/minimum pension w.e.f. 01.01.2017 for the BSNL combined service Pensioners, who were absorbed from DOT/DTS/DTO we.f. 01.10.2000 and retired prior to 01.01.2017 by applying the fitment formula on IDA pension as on 01.01.2017;

(b) Pass an Order directing the Department of Telecommunications to revise the pension/family pension/minimum pension w.e.f. 01.01.2017 for the BSNL combined service Pensioners, who were absorbed from DOT/DTS/DTO w.e.f. 01.10.2000 analogous to the revision of pension/family pension/minimum pension for the Central Government Pensioners based on the recommendations of the 7th Central Pay Commission;

(c) Pass an Order directing the Department of Telecommunications to revise the pension for BSNL combined service pensioners parallel to the revision of pension of the Central government servants without linking with Pay revision in BSNL:

(d) Pass such other further order (s) as this Hon'ble Tribunal may deem fit and proper in the facts and circumstances of the present case and in the interest of justice."

The following are the observations of PBCAT

Para 22

There is no ambiguity that at the time of their placement and absorption in BSNL and MTNL, it was categorically stated that the erstwhile employees of the Department of Telecommunication shall continue to be governed by their existing terms and conditions of the service which means that they shall continue to be treated as government servants for all intents and purposes. It is also not in dispute that from time to time, the recommendations of the Central Pay Commission, as accepted and notified by the government, were made applicable in their case too. There is no ambiguity with respect to the general terms and conditions governing absorption, as circulated and quoted in para 5 of this order, stating categorically that provisions of Rule 37 (A) of the CCS (Pension) Rules, shall guide payment of pension to these employees.

in para 26

We reiterate that even on their absorption in the corporate undertaking, the terms and conditions of services governing them were to remain the same as they existed when they are employees of the Department of Telecommunications. Further, these terms and conditions include pension and family pension and this has been expressly stated in the rules and several subsequent communications which have been elaborately quoted in some of the preceding paragraphs of this order.

in para 27

 We have no hesitation in concluding that the present application deserves positive consideration. The government had given a promise and stated it in black and white. How could it now retract from the promise, that too not by any law or rules but by simply a refusal to honour it?

The main operative portion of judgment in para 28

In view of the elaborate discussion above, the OA stands allowed. The competent authority amongst the respondents is directed to forthwith revise the pension and family pension wherever applicable, strictly in accordance with the relevant rules and the entitlement governing pension to various sets of employees of the Central Government, maintaining strict parity. It is clarified that the benefits of revision of pension and family pension as notified by the Central Government on the recommendations of the Pay Commission, shall stand extended in favour of the applicants, analogous to the revision of such pension in case of Central Government pensioners

 

III My observations on judgment

The prayer is directing the DOT to implement the pension revision and the judgment is direction to the  Competent authority amongst the Respondents – DOT or DOPPW , DPE may not be I think, but DOE In the case of post 2017 as post 2016 employees got their benefit vide DOE OMs.

The direction is

".. to forthwith revise the pension and family pension wherever applicable, strictly in accordance with the relevant rules and the entitlement governing pension to various sets of employees of the Central Government, maintaining strict parity."

 That is revise pension and FP 'wherever applicable' and this in accordance 'with rules and entitlement governing various sets of employees of the CG', maintaining 'strict parity'.

The clarification given is

" It is clarified that the benefits of revision of pension and family pension as notified by the Central Government on the recommendations of the Pay Commission, shall stand extended in favour of the applicants, analogous to the revision of such pension in case of Central Government pensioners."

That is recommendations of Pay commission shall stand extended, and is analogous (that is similar to) the revision of such pension in case of CG pensioners .

Ok good

1.       CG pensioners got their pension revision in Jan 2016 simultaneously with the Pay revision of CG employees on Jan 2016. There is a link between pre 2016 CG pensioners and CG employees on 1-1-2016, the post 2016 pensioners. Is it the same/ similar situation regarding absorbed BSNL/ MTNL pensioners? can it be construed  the analogus one in this regard? The CAT judgment is silent on this question

2.      The Judgment speaks about rules and recommendations of CPC. So if rules meant the relevant OMs then we have to see both the OMs and also recommendations of 7th CPC

3.      The 37 A is the main rules and the OM that suits 37 A is the OM dt 4-8-2016 suited to post 2016  but not OM of pre 2016. But now the judgment, if I presume or understand correctly asks to suit the OM dated 4-8-2016 for pre 2016. The judgment is not directly quoting the OMS. My understanding cannot be above the legal judgment.

 

4.      7th CPC recommendations as per ch 10.1

 

 The minimum pension based on the recommendations of this Commission will increase by 2.57 times over the existing level (3500 to 9000). ( this need to be implemented )

 

The Commission recommends enhancement of ceiling of gratuity from the existing 10 lakh to 20 lakh from 01.01.2016. The Commission further recommends, as has been done in the case of allowances that are partially indexed to Dearness Allowance, the ceiling on gratuity may increase by 25 percent whenever DA rises by 50 percent. ( it was partially implemented for BSNL employees retiring from 1-1-2016 but linkage with DA need to be done)

 

The Commission, after examination of the matter, recommends the following revised rates for payment of death gratuity: ( For BSNL employees retiring after this order implemented)

 

pension revision -

The Commission recommends the following pension formulation for civil employees including CAPF personnel, who have retired before 01.01.2016:

i) All the civilian personnel including CAPF who retired prior to 01.01.2016 (expected date of implementation of the Seventh CPC recommendations) shall first be fixed in the Pay Matrix being recommended by this Commission, on the basis of the Pay Band and Grade Pay at which they retired, at the minimum of the corresponding level in the matrix. This amount shall be raised, to arrive at the notional pay of the retiree, by adding the number of increments he/she had earned in that level while in service, at the rate of three percent. Fifty percent of the total amount so arrived at shall be the revised pension.

 

ii) The second calculation to be carried out is as follows. The pension, as had been fixed at the time of implementation of the VI CPC recommendations, shall be multiplied by 2.57 to arrive at an alternate value for the revised pension.

iii) Pensioners may be given the option of choosing whichever formulation is beneficial to them.

 

DOPPW OM 4th Aug 2016 is the OM for pre 2016 ( F No. 38/ 37/ 2016- P & PW (A) (ii) and the subject matter for this is implementation of Govt's decisions on the recommendations of the 7th CPC- revision of pension of pre 2016.

In that

4.1

For existing pensioners,who have retired before 01.01.2016, the revised pension/family pension with effect from 01.01.2016 shall be determined by multiplying 6th the pension/family pension, as had been fixed at the time of implementation of Central Pay Commission (CPC)recommendations, by 2.57.

The amount of revised pension/family pension so arrived at shall be rounded off to next higher rupee.

 

4.4 The minimum pension with effect from 01.01.2016 will be Rs. 9000/- per month (excluding the element of additional pension to old pensioners). The upper ceiling on pension/family pension will be 50% and 30% respectively of the highest pay in the Government

(The highest pay in the Government is Rs. 2,50,000 with effect from 01.01.2016).

4.5

The quantum of pension/family pension available to the old pensioners/ family pensioners shall continue to be as follows:-.... (from 80 years)

10. The pension/family pension as worked out in accordance with provisions of Para 4.1. and 5 above shall be treated as 'Basic Pension' with effect from 01.01.2016. The revised pension/family pension includes dearness relief sanctioned from 1.1.2016 and shall qualify for grant of Dearness Relief sanctioned thereafter.

Let us not forget there is another OM of DOPPW dated 4-8-2016 but file is different viz F. No. 38/37/2016- P&pW (A) (i). the subject matter of this OM is Revision of Provisions regulating pension/ gratuity/ commutaion of pension/ FP etc. This is for post 2016 pensioners, that is employees on 1-1-2016. As per 37 A , this was extended to us BSNL retirees from 1-1-2016 where ever relevance felt. This OM is not for pension revision fitment. This only speaks about Grautity enhancement with 20 lacs and  DA linkage, death gratuity, also minimum and maximum pension. 

POST 2017 issue

The next issue is about post 2017. For them the recommendations  are part of post 2016 OM, which was partially implemented and DA linked aspect and minimum, maximum pension only remaining to be implemented. OM of pre 2016 pensioners not applicable to them. Only Pay change recommendations implemented for them( post 2016) as per DOE CCS Revised Pay rules. Fortunately in AIBSNLPWA 1329 OA DOE is made as one of the Respondents.

There is no specific Order for this kind of post 2017 pensioners, the employees on 1-1-2017 in this judgment as per my study. They were not pensioners on 1-1-2017. Suppose without finding any remedial measures to address this issue, this judgment is implemented, then there would two  different type of pensioners, one getting pension parity with CG pensioners and other post 2017 pensioners on 2nd PRC scales. I hope this issue arised out of this judgment need to be addressed.

10.30 PM  25-9-2023    -  R. Pattabiraman

 

 

 

 

 

Wednesday, September 13, 2023

‘ ரிக் வேதகால ஆரியர்கள்

 ராகுல் சாங்கிருத்தியாயனின் ‘ ரிக் வேதகால ஆரியர்கள் ‘ என்கிற அவரது ஆய்வு நூல் தமிழில் இருக்கிறது. அலைகள் திரு எத்திராஜூலு மொழிபெயர்ப்பில் கொணர்ந்த நூல். தோழர் சாங்கிருத்தியாயன் விசால வாசிப்பில் சில முக்கிய வரலாற்று செய்திகளை ரிக் வேத 10 மண்டலங்களையும் சார்ந்த பாடல்கள் வழி சேகரித்து தன் perceptionயை இந்த புத்தகத்தில் தந்துள்ளார்.

இன்று நாம்  பொது புத்தியில் புரிந்தது மாதிரி வைத்திருக்கும் அம்சங்கள் ஆரியர்- திராவிடர் வரலாற்று வெளிச்சத்தில் சரியானவையா என்ற கேள்வி இந்த ஆக்கத்தை படிக்கும்போது வரலாம். சில பொது ஏற்புகளையும் பார்க்கலாம். இனி ராகுல் ஆய்வில் கிடைக்கும் சில வரலாற்று துணிபுகள்..

ஆரியர் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதை ஏற்காவிட்டால் வரலாற்று குழப்பம் ஏற்படும்.

சிந்து வெளி மக்கள் ஆரியருக்கு முன்பே நகர நாகரிகங்களில் வியாபார உலகில் சிறந்து வாழ்ந்தவர். அவர்களுடன் ஏற்பட்ட மோதலில் இம்மக்களை தஸ்யூக்கள் கறுப்பர்கள் என அடிமைப்படுத்தினர் ஆரியர். தாசன் என்கிற பதம் இதிலிருந்து தான் வந்தது. இவர்கள் திராவிடர்கள் எனவும் வரலாற்றில் அறியப்பட்டுள்ளனர். இந்த தஸ்யூக்கள்  ‘கிருஷ்ணர்கள்’ என்கிற கறுப்பு அடையாளத்தாலும் பார்க்கப்பட்டனர். 

(சிவன் தான் திராவிட ஆதி கடவுள் என்கிற பேச்சுடன், கிருஷ்ணன் என்பதும் தஸ்யூக்கள் என்கிற உரையாடலை சாங்கிருத்தியாயன் இங்கு தந்துள்ளார்)

ஆரியர் பல இனக்குழுக்களாக தங்களுக்குள் போரிட்டுள்ளனர். எங்க ஏரியா உள்ளே வராதே என்கிற போராட்டம் ரிக் வேத மண்டலங்களில் புகழ் வாய்ந்த 10 மன்னர் யுத்தம் என போற்றப்படுகிறது.

ஆரிய முக்கிய பெரும் இன குழுக்கள் 5. 

புரு- இதன் புகழ் வாய்ந்தவர்களாக வத்ர யஷ்வன், திவோதாஸ், சுதாஷ் போன்றவர். இவர்கள்தான் பரதர்கள் என புகழ் அடைந்தனராம். (இதிலிருந்துதான் பரத் பாரத் என்கிற name game அலகிலாவிளையாட்டு). இவர்கள் பிருஷ்ணி ராவி நதிக்கரையில் வாழ்ந்தனராம். இந்த புருக்களிடமிருந்து உருவான ஒன்று பின்னர் குரு வம்சம். பரதர்களுக்கு முக்கியமானவர் பரத்வாஜர்.

யதுக்கள் இனக்குழு- இவர்கள் இன்று அறியப்படும் யாதவர்களின் முன்னோர்கள். (தமிழகத்தில் முன்பு கோனார்கள்.) . சப்த சிந்து பகுதியில் இவர்கள் புரு குழுவினரோடு மோதி தோற்றனராம். புரு திவோதாஸ்- சுதாஷ் யாதவர் மற்றும் துர்வசுக்களுடன் அடிக்கடி போரிட்ட காட்சிகள் ரிக் பாடல்களில் வருகின்றனவாம். எல்லா வெற்றிகளும் இந்திரனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளன. யதுக்கள் கிருஷ்ணன் மதுராவுடன் இணைத்து பேசப்படுகின்றனர். (யதுகுல கிருஷ்ணா) 

துர்வசுக்கள் குழு- கண்வர் வத்சர் வழியினராம். இவர்கள் யதுக்களுடன் துணை நின்றாலும் புருக்களிடம் தோற்றனர். இவர்கள் பரதர்களின் பகைவர்களாக இருந்துள்ளனர். ஆரிய சண்டை அவர்களுக்குள் முற்றுகிறது.

திருஹ்யுக்கள் குழு- பிருகு இவர்களின் வழிகாட்டியாம். இவர்களுடன் அணு என்ற குழுவும் இருந்ததாம்.  10 மன்னர் போரிலே வசிஸ்ட்டர் வழியில் சுதாஸ் புருக்கள் இவர்களை வீழ்த்தினராம். இவர்களும் இந்திரன் அக்னியைத்தான் கொண்டாடினர். பசு கவர்தல், செல்வ சண்டை என ரிக் பாடல் சொல்கிறதாம்.  புரு சுதாஷ் இந்திரனின் உற்ற நண்பனாம்.  யுத்தம் முடிவில் ஆயிரக்கானவர் நதிகளில் மூழ்கடிக்கப்பட்டனராம். திருஹ்யக்கள் ராவி நதிக்கு மேற்கே இருந்தவர்களாம்.

அணு என்கிற 5 வது குழு- இவர்களை வசிஸ்ட்டர் பொய்யர்கள் என அழைத்தாராம். இந்திரன் ரதம் அமைக்கும் அளவு skilled ஆன அணு குழுவினரை புருக்கள் தோற்கடித்தனராம்.

இதைத்தவிர பக்தூண் ( பட்டாணியரா) , பலான், சிவி ( சிவ) , விஷாணி, ஷிம்யு, க்ரிவி, கவஷ், உசத், மன்யு,  போன்ற 24 கிளைகள் கூட ரிக் வேதகால பாடல்களில் வருகின்றனவாம்.

சுதாஷ் 10 மன்னர்களை வென்ற கதைதான் ( தாஸராக்ஞ யுத்த) புகழ்வாய்ந்த 10 மன்னர் யுத்தமாம். புருவில் திரிஸீக்கள் என்ற பிரிவினரான திரிவோதாசும் சுதாசும் பரதர் கிளைகளை உயர்த்தினராம்.

ரிக் வேதகாலம்  என சாங்கிருத்தியான் ஏற்பது கிமு 1200- 1000. அப்போது மொகஞ்சதாரா ஹரப்பா திராவிடர், காஷ்மீர்- அசாம் பகுதியில் கிர் என்கிறகிராத் மக்களுடன் ஆரிய இனக்குழுக்கள் மோதியுள்ளன. திராவிடர் கறுப்பர் எனில் கிராதர் மஞ்சள் நிறத்து மங்கோலியர் - இப்போதான திபேத்தியர்..

மிக முக்கிய செய்தி ஒன்றை சாங்கிருத்தியாயன் தருகிறார். ரிக் முதல் 9 மண்டலங்களில் நான்கு வர்ணங்கள் பற்றி இல்லை. பத்தாவதில் 10-10-12 பாடலில் முகம், கை, தொடை , கால்  வழி பிறப்பு சொல்லப்பட்டுள்ளதாக ராகுல் தெரிவிக்கிறார்.

ஆரியர் தம் வேற்றுமைகளை மறந்து ஒன்றாக, ஒரு மனத்துடன், மந்திரத்திலும் ஒன்றாக , சம பணி கொண்டதாக இருங்கள் என அறிவுரையை 10வது மண்டலம் 191வது ஷூக்தம் சொல்கிறதாம்.

பணி என்ற பிரிவுடன் ஆரியர் உறவுடன் இருந்தனராம். இவர்கள் பன்யா வியாபாரி  வைஸ்யர் என அழைக்கப்பட்டனர்.

ஆரியர் குழுக்களுக்கான முக்கிய ரிஷிகளாக வாமதேவர், பரத்வாஜர், வசிஷ்டர், விசுவாமித்திரர், அஷ்டகர், கஸ்யபர்,வாமகர், அங்கிரா, ஜமதக்னி, பிரிகு என 10 பேர்களை சொல்கின்றனர். ( இன்றும் இவர்கள் கோத்திரங்களாக நிலவுகின்றனர்) . ரிக் ஷூக்தங்களை அதிகம் படைத்தவர் பரத்வாஜராம். விசுவாமித்திரர் காலம் என்பதே 15 தலைமுறைக்கு பிந்திய காலமாம். கிரத்ஸமத், கஷூவான், அகஸ்தியர் ( வசிஷ்டர் சகோதரர்) , கோதமர், மேதாத்தி, சியாவாஷ்வ, குத்ஸா, மதுச்சந்தா, பிரஸ்கண்வர், அஜிகர்த என சில பாடல்களை தந்த ரிஷிகளும் உள்ளனராம்.

சிந்து இனத்தவரை கிருஷ்ணர்கள், தஸ்யூக்கள்,தபிஸ்கள் என ஆரிய குழுவினர் அழைத்துள்ளனர். பரத்வாஜர் அக்னி மற்றும் பணி குழுக்களின் செல்வத்தை எடுத்துச் சென்றாராம். மலைவாசிகள் தஸ்யு சம்ரன் தலைமையில் கிராதர்களுடன் சேர்ந்து ஆரியரை எதிர்த்து பெரும் போர்களை 40 ஆண்டுகள் நடத்தியதாக சாங்கிருத்தியாயன் சொல்கிறார். கிழக்கு நேபாளம் கிராத தேசமாம். ( கிருஷ்ணன் திராவிடரா) 

ரிக் வேதகாலத்திற்கு முந்திய மன்னர்களாக மனு, புருரவா, நஹிஷ், யயாதி, மந்தாத என் 5 பேர் புகழுடன் இருந்தனராம். மனு பற்றி ரிக் 31 இடங்களில் சொல்கிறதாம். மனு தஸ்யூக்களை வென்றுதான் புகழ் பெற்றதாகவும் சாங்கிருத்தியாயன் சொல்கிறார். அக்னி மனுவிற்காகவே த்யெள என்கிற சுவர்க்கம் உருவாக்கினாராம். புரூரவா ஊர்வசி காதல் பாடல்கள் ரிக்கில் வருகிறதாம்.

வாமதேவர் பாடல்படி 50 ஆயிரம் - கிருஷ்ணர் என்கிற கறுப்பு அசுரர்கள் கொல்லப்பட்ட தகவலையும் ராகுல் தருகிறார்.

பருச்சேப் மலைப்பகுதி தஸ்யூக்களின் வீரமன்னன் சம்பரனாம். திவோதாசின் மகன் இவனை வெற்றிகொண்டான்.  சம்ப்ரான் தஸ்யூக்கள் ‘சிஷ்னதேவர் ‘ ( ஆண்குறி பூஜை செய்பவர்)  என வசிஷ்டர் சொன்னாராம். (லிங்க வழிபாட்டை சொல்கிறார்களா) . இவர்கள் மனுவின் புத்திரர்கள் என ஏற்கப்படாமல் அமானுஷ்யர்கள் என குறிக்கப்பட்டனராம். தஸ்யூக்களில் பெண்கள் வீரமாக போராடியது சொல்லப்பட்டுள்ளதாம். 

வசிஷ்டர் பேரன் கவுரவீதி மனுவை மன்னர் என்றும் ரிஷியென்றும் புகழ்கிறார். சம்பரனுக்கு முந்திய மலையரசன் நமுசியை இந்திரன் மனுவின் பொருட்டு கொன்றாராம். தலையை தூளாக்கியதாக பாடல் சொல்கிறதாம்.

பரத்வாஜர் எதிர்கொண்ட தஸ்யு வீரர்கள் சுமரி, துனி, சம்பர், சுஷ்ண

வசிஸ்ட்டர்- தாசன் விருஷஷிப்ரன்

குத்ஸ- சுஷ்ண, பிப்ரு, விருத்ர, சம்யம்

இன்னும் ஆரிய குழுக்கள் உணவு, சோமபானம் என ஏராள செய்திகள் இதில் தரப்பட்டுள்ளன. தஸ்யுக்கள், ஆரிய இனக்குழுக்கள் எப்படி கலந்தன - pure blood theory செல்லுபடியாகுமா என்கிற பல கேள்விகளையும் இந்த புத்தகம் எழுப்புகிறது.. ஆர்வம் உள்ளவர் படித்து பார்க்கலாம்


புறநானூற்றிலிருந்து 34 பாடல்களை

 சாமி. சிதம்பரனார் மதிக்கப்பட்ட தமிழறிஞர். பெரியார் வரலாறு தந்தவரும் கூட. அவரிடம் வேறுபட்டவரும் கூட.

சாமி. சிதம்பரனார் 1958ல் புறநானூற்றிலிருந்து 34 பாடல்களை தேர்ந்து, மிக அழகான கதைச்சொல்லி வகைப்பட்டு விளக்கங்களை தந்த புத்தகம்  ‘புறநானூறு தமிழர் நாகரீகம்’. பழந்தமிழர் சமுதாயத்தின் பண்பாட்டை -அதன் நேர்த்தி மற்றும் இன்றுள்ள நாகரீகப் பார்வையில் குறைகளை எடுத்து இயம்பும் ஆக்கமிது.

தமிழரின் தலை சிறந்த கொள்கையை கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் வைத்து சிதம்பரனார் விளக்கியிருப்பார். குறிப்பிட்ட ஊரை எமது எனச் சொல்லாமல் மக்கள் வாழும் எல்லா ஊர்களையும், எல்லா மக்களையும் சுற்றத்தார் எனப்பேசுதல் ..சிறியவர் என இகழ்தல் இல்லாமல், பெரியோர் என வியந்து போற்றாமல் இருக்கும் மாண்பு பேசுதல்..

நன்றி மறப்பது நன்றன்று எனச் சொல்லித்தரும் ஆலத்தூர் கிழார் பாடல் ( புற 34),  ஒன்று அறங்கருதி விட்டுவிடு இல்லையேல் மறங்கருதி போராட துணிவு கொள் என நம்பிக்கையூட்டும் கோவூர் கிழார் ( நலங்கிள்ளி- நெடுங்கிள்ளி மோதல்)  புற 44 பாடல், தமிழ்ப் புலவர் என்றால் தன்மானம் வேண்டும் எனக்காட்டும் மதுரைக் குமரனார்  “ அரசே நாம் யாருக்கும் அஞ்ச மாட்டோம்- யாரையும் பொய்யாகப் பாராட்டமாட்டோம்- எவ்வளவு துன்பம் அடைந்தாலும் மானமிழக்க மாட்டோம் “ எனப் பேசும் புற 197 பாடல் என பல அருங்குணங்களை புறநானூறு வழிநின்று சாமி. சிதம்பரனார் விவாதித்திருப்பார்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பதை வறியோர் வார்த்தை எடுபடாது என்பதாக புரிந்து கொண்டிருப்போம். ஆனால் புலவர்கள் அறிவற்றனை ஏழை எனச் சொன்னராம். அறிவுடையவர் சபையில் அவர் சொல் நிலையாது என்ற பொருளுண்டாம்

கண்ணகி என்றால் கோவலன் சிலம்பு  தமிழ் பொது புத்திக்கு வரலாம்.   வள்ளல் பேகன் துணைவியார் பெயரும் கண்ணகி. மயிலுக்கு போர்வைத் தரும் அளவிற்கு இரக்கமும் கொடை மனதும் கொண்ட தமிழன் தான் பேகன். ஆனாலும்  கண்ணகி விடுத்து வேறொரு மாதின்மேல் வயப்பட்டான். திருத்த முடியா கண்ணகி தனது தாயகம் திரும்பினாள்.  கண்ணகி தாயகம்  என சாமி இதில்  ஏதும் சொல்லவில்லை.

தன்னை அவலட்சமணாமாக்கிக்கொண்டாள் கண்ணகி. இவள் குறைதீர்க்க, பேகனுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்த கபிலர், பரணர், அரிசில் கிழார் முயன்றனராம். பேகன் ஊர் வையாவியாம். அது இன்றைய பழநியம்பதியாம்.

தலையாலங்கானத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் முக்கொள்கை கொண்டவனாம்.

நாட்டில் வளம் சிறக்க இருக்கவேண்டும்- அதை புலவர் பாடவேண்டும்

நாட்டுக்குடி மக்கள் நல்லவராயிருக்கவேண்டும்.

மன்னன் என்றவகையில் வறியோர் துன்பந்தீரசெல்வங்களை வாரி வழங்கவேண்டும்- இரப்பவர்க்கு இல்லை என்பதில்லா நல்லறம்.

புறநானூற்றில் போர்செய்து வீரனாக இருத்தல் என்கிற மறம் பெரும்பாலும் பேசப்பட்டிருந்தாலும், போர் கொடிது தவறு- மக்கள் ஒற்றுமை உடையும்- செல்வம் பாழ்படும் என்பதும் பேசப்பட்டுள்ளதாம்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பதில் பாண்டியன் குடிப்பெயராம்- பல்யாகசாலை பெருமையாம்- பெருவழுதி பட்டமாம். குடுமி தான் பெயராம். குடுமிகளில் முற்பட்டான் என்பதால் முது சேர்ந்ததாம்.

கோப்பெருஞ்சோழன் என்றால் பிசிராந்தையார் என நினைவு கிளம்பிவிடும். உண்மை நட்பிற்கு உதாரணமாக இருவரையும் சொல்வர். பார்த்துக்கொள்ளமலேயே  நட்பு பாராட்டியவர்கள். மன்னர்  தோல்வியுற , வடக்கிருத்தல் செய்யவேண்டியதானது. அது அவரின் அறம். அறிந்த பிசிராந்தை நட்பு தானும் வடக்கிருந்து மாய்ந்தது. சரி பொத்தியார் நட்பு - இதே அளவில் குறைபடாததாம். அவர் ஏன் தமிழ் வெளிச்சத்தில் இல்லை. பொத்தியார் அன்றாட உயிர்த்தோழன். சோழன் வடக்கிருந்தபோது, பொத்தியார் துணைவி கருவுற்றிருந்தாராம். குழந்தை பிறந்து உலகம் அதன் தந்தை நீ என தெளிந்தபின் வடக்கிருக்கலாம் என்றாராம்சோழன். அதேபோல் பொத்தியார் காத்திருந்து வடக்கிருந்து நட்புக்காக தன்னை மாய்த்துக்கொண்டாராம்.

இப்படி தமிழரின் புறநானூறு காட்டும் நாகரிகத்தை சாமி. சிதம்பரம் மிகச் சுவையாக இந்நூலில் விரித்து தருகிறார். இன்றுள்ள நமது வாழ்க்கை முறை வேறு என்பதை ஒத்துப் பார்த்துக்கொள்ள உதவும் நூல்..

தமிழர் நல்லவேளை புறநானூற்று மற வாழ்க்கைதான் சாசுவதம் என அன்றாடம் அனுசரிக்கவில்லை.    கேட்ட பொழுது பெருமிதம் கொள்கிறான். கால மாற்றத்தில் வாழ்வின் போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்

திராவிட அரசியலின் எதிர்காலம் சுகுணா திவாகரின்

 திராவிட அரசியலின் எதிர்காலம் என்கிற ஆக்கம் 2020ல் எதிர் வெளியீடாக வந்தது. சுகுணா திவாகரின் 10 கட்டுரைகள் அடங்கிய 80 பக்கங்கள் கொண்ட சிறு வெளியீடு.  இதில் இவ்வாசிரியர் வந்தடைந்த சில முக்கிய கருத்தாக்க புள்ளிகளாவன..

பெரியார்  அதிகார மய்யங்களிலிருந்து விலகியிருக்கக் காரணம் அதிகார மய்யங்கள் கறைபடிந்ததாக இருந்ததால் மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் அதிகாரமே அதிகார மய்யங்களில் நிலவுவதால், அதிகார மய்யங்களை நோக்கி நகர்வதால்- வலுவான சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியாது என்று நம்பியதாலும்..

பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில் ஆதிக்கச்சக்தியாய் முக்குலத்தோர் சாதி வளர்ந்து வருகிறது.

எம்ஜிஆர் காலம்வரை கருத்தியல் அடிப்படைகளற்ற ஜனரஞ்சக இயக்கமாக இருந்த அதிமுக , ஜெயலலிதா என்கிற பார்ப்பனப் பெண்மணி தலைமை தாங்கிய காலத்திற்குப்பின் படிப்படியான வலதுசாரி இயக்கமாக மாறிப்போனது. பார்ப்பன - தேவர் ஆதிக்கசாதிக்கூட்டே அக்கட்சியின் அரசியல் நிகழ்ச்சிநிரலை கருத்தியல் கட்டுமானங்களை தீர்மானிப்பதாக மாறிப்போனது

தமிழுக்காக பாடாற்றியதிலும், மார்க்சியம் உட்பட முற்போக்கு கருத்துகளை இம்மண்ணில் விதைத்ததிலும் முன்னோடிகளாகத் திகழ்ந்த பிராமண சமூகத்தைச் சார்ந்த பலரை குறிப்பிட முடியும். அந்த மரபை மீட்டெடுக்க பிராமண சமூக படிப்பாளிகள் முன்வரவேண்டும்.

இப்போது பிராமணர் அல்லாதார் அரசியல் மங்கிப்போய் வெவ்வேறு இடைநிலை சாதிகளின் அரசியல்தான் இருக்கிறது…அய்ம்பதாண்டு காலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பார்ப்பனர் ஆதிக்கம் குறைந்திருக்கிறது. அச்சமூட்டும் அளவிற்கு இடைநிலை சாதிகளின் ஆதிக்கம் வளர்ந்திருக்கிறது. அவர்களே நடைமுறையில் தலித் எதிர்ப்பு சக்திகளாகவும் ஆணவக்கொலைகளை நிகழ்த்துபவராகவும் இருக்கிறார்கள்

ஒருவர் ‘பார்ப்பனரல்லாதவர்’ என்பதாலேயே அவர் எவ்வளவு நேர்மையற்றவராக இருந்தாலும், அதிகாரமய்யமாக இருந்தாலும் , பிற்போக்கு சக்தியாக இருந்தாலும், அவரை ஆதரிப்பது என்பது பகுத்தறிவு ஆகாது

சமகாலச் சூழலுக்கேற்ப பெரியாரியத்தை வளர்த்தெடுப்பதுதான் பெரியாரிஸ்ட்களின் பணியாக இருக்கவேண்டும். பெரியாரியத்தை மதமாக்குவது கூடாது.

கடவுள் இடத்தில் எதை வைப்பது என்ற கேள்வி காலந்தோறும் தொடரக்கூடிய ஒன்று. புத்தரும் பெரியாரும் அறவுணர்வை சமத்துவத்தை கடவுளின் இடத்தில் வைத்தனர். அண்ணாவும் கலைஞரும் கடவுளின் இடத்தில் தமிழை வைத்தனர். தமிழுணர்வு என்பதை கிட்டத்தட்ட மதவுணர்வாக மாற்றினர்.

அண்ணாவும் கலைஞரும் பெரியாரிடமிருந்து மாறுபட்டு கற்பின் அடையாளமாக கண்ணகியை உயர்த்திப்பிடித்தனர். ..திமுக வினர் மேடைபேச்சுகள் ஆணாதிக்கத்துக்கான அவல உதாரணங்கள்

அண்ணாவும் கலைஞரும் முன்வைத்த இந்தி எதிர்ப்பு மாநில சுயாட்சி கருத்தாக்கங்களை இன்று மமதா முதல் பினராயி வரை உயர்த்திப்பிடிக்கின்றனர்…பன்மைத்துவ இந்தியாவைக் காப்பாற்றவும் உள்ளடக்கும் தேசியத்தை வளர்த்தெடுக்கவும் இந்தியாவுக்கு காந்தியும் நேருவும் மட்டுமல்ல, கலைஞரும் அண்ணாவும் தேவை. 

பெரியார் உருவாக்கியது ‘திராவிடர் இயக்கம். திமுக வந்தபோது  ‘ர்’ போய் திராவிட வந்தது. பெரியார் கூறுகள் கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, பெண்ணியம். திமுக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றது.ஆணாதிக்க கட்சியாகவும் ஆனது. தேர்தல் பாதை ஏற்று இந்திய தேச அமைப்பை ஏற்று ஆட்சிக்கு வந்தது. பார்ப்பனல்லாதார் உரிமைகளை உறுதி செய்தல், இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு, தமிழ் பற்றை முன்வைத்தல், சிறுபான்மையினர் பக்கம் நிற்றல், வடவர் ஆதிக்க எதிர்ப்பு போன்றவற்றை திமுக  உறுதியாக செய்தது

திராவிட அரசியல் ஊழல், வாரிசு அரசியல், குடும்ப அரசியல், தனிநபர் வழிபாடு போன்ற தீங்குகளை செய்திருந்தாலும், பார்ப்பன எதிர்ப்பு- சிறுபான்மை ஆதரவு, இந்துத்துவா எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி போன்றவை அதன் கொடைகள்

சமகாலச் சூழலில் சமூகநீதி கருத்தாக்கம் மறுவரையறை செய்யப்படவேண்டும்..தலித்துகளுக்கான அதிகாரத்தை உறுதி செய்வது, இடைநிலை சாதி ஆதிக்க எதிர்ப்பு என்று நகரவேண்டும்…மாநில சுயாட்சி என்பது மாநிலத்தில் ஒற்றைக் கட்சி ஆட்சி என்பதாகச் சுருங்கிவிடக்கூடாது.

pension Revision issue

 தோழர் DG  உரை குறித்து..

பென்சனர் சங்க அனைத்திந்தியத் தலைவர்  மரியாதைக்குரிய தோழர் DG அவர்களின் 45 நிமிட , நீதிமன்ற பெட்டிஷன் குறித்த உரையை ஆகஸ்ட் 25 இரவு தோழர்  SSG அவர்களும், ஆக 26 அன்று செல்வம் அவர்களும் நான் கேட்டு தெரிந்துகொள்வதற்காக அனுப்பியிருந்தனர். சென்னையில் இல்லாத சூழலில் , உரையைக் கேட்டும் என்னால் எனது புரிதலை உடன் வெளிப்படுத்தமுடியாமல் போனது. சென்னை வந்த நிலையில் எனது பார்வையை முன்வைத்துள்ளேன்.

PWA இயக்கத்தில் தோழர்கள் DG, ராமன்குட்டி, முத்தியாலு, நடராஜன், கங்காதராவ், மூர்த்தி, சுகுமார் உள்ளிட்ட பல leading lights இருந்து பென்சனர் நலனுக்காக செயல்பட்டு வருவதை நான் உணர்கிறேன். தற்போது வரபிரசாத் பொதுச்செயலராக தன் பணியை ஆற்றிவருகிறார்.  தோழர் DG  உரையை செவிமடுக்க பலர் ஆர்வமாக இருப்பதையும் நான் உணராமல் இல்லை. 

தமிழ்நாட்டிலும் மாநிலச் செயலர்களாக வழிகாட்டுபவர்களாக இருந்த ஆர்வி , ராமராவ் உள்ளிட்ட, தற்போது இருக்கும் சுந்தரகிருஷ்ணன் என பலரும்  பென்சனர் நலனுக்காக பணியாற்றி வருகிறார்கள். மாவட்டங்களிலும் அற்புதமாக பலர் தொண்டாற்றி வருவதை அறிகிறேன்.

பிற பென்சன் சங்கத்தார்களும் தங்கள் பொறுப்பாளர்கள் குறித்த பெருமிதங்களை சொல்லிக்கொள்ளமுடியும். எனவே பென்சன் ரிவிஷன் குறித்த புரிதலை  எந்த தனிப்பட்ட தலைவர்க்கும் எதிரான ஒன்றாக  நான் வைக்கவில்லை. 

37 A குறித்து தோழர் குப்தாவுடன் பெருமளவு விவாதித்த சில முன்னணி தோழர்களில் எனக்குமான வாய்ப்பு இருந்தது. எனது போதாமையை வெளிக்காட்டிய போதெல்லாம் don’t talk like a prof என்கிற திட்டும் பெற்றதுண்டு. அவரிடம் விவாதித்து கற்ற அடிப்படையில் 37 A குறித்த எனது புரிதலை பல பக்கங்களில் நான் வெளிப்படுத்தியுள்ளேன்.  

தோழர் DG புரிதலில் நான் மாறுபடுவதால் ( பென்சன் ரிவிஷனில்) எனது பார்வையை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறேன். 

பொதுத்துறையில் absorb ஆனவுடம் நாம் மத்திய அரசு ஊழியர் அந்தஸ்தை இழக்கிறோம் என்பதை 2021 வரையிலான 37 ஏ 37 பி பேசிவருகிறது. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பிற்கு எதிராக  அது இருந்தால் அந்த ஷரத்து இடம் பெற்றிருக்காது என்கிற common sense யை பென்சனராகிய நாம் அந்த உரை மூலம் இழந்துவிடக்கூடாது எனக் கருதுகிறேன்.

தோழர் டிஜியின் அந்தவுரை அரசியல் அமைப்பு விதி 14 என்கிற சமத்துவ உயர் விதியை சொல்கிறது. 1-10-2000ல் புதிய ஊதியத்தில் IDA வில் நாம் சென்று அதன் மூலம் கூடுதல் பென்சன் பெற்றோமே, அப்போது அதற்கு முன்னர் 30-9-2000வரை ஓய்வுபெற்ற நமது மூத்த சகோதரர்களுக்கு அது விதி 14  படியோ, நாகராப் படியோ ஏன் நீட்டிக்கப்படவில்லை என்ற கேள்வியை bsnl absorbed pensioners கேட்டுக்கொண்டிருக்கிறோமா..அதை கவலையின்றி கடந்து சென்றோமே..நாம் பேசிக்கொண்டிருக்கும் நியாயம் எல்லாம் அவர்களுக்காக ஒருமுறையாவது பேசியிருப்போமா… பேசவில்லை. ஏனெனில் அவர்கள் DOT Govt pensioner..நாம் bsnl absorbed pensioner getting pension from DOT / Govt. அப்போது ஒப்பீட்டை நாம் நினைத்துகூட பார்க்கவில்லை.

அடுத்த தவறான புரிதலாக எனக்குப் படுவது விதி 8யை சொல்வது. அது முழுக்க முழுக்க இனி ஓய்வு பெறும் ஊழியர்க்கான ஒப்பீடு. ஒரே நாளில் ஓய்வு பெறும் bsnl absorbed employee மற்றும்Govt employee க்கான பார்முலா  பென்சன் நிர்ணய last pay drawn கணக்கீடு, கிராஜுடி, கம்முயுடேஷன், குவாலிபையிங் சர்வீஸ், குறைந்தபட்ச அதிக பட்ச பென்சன் போன்றவற்றை அது வியாக்கியானப்படுத்துகிறது.  இனி  ஓய்வு பெறப்போகிறவரின் பென்சன் நிர்ணயம், ஓய்வூதிய பலன்களுக்கான விதியது. முன்பே ஓய்வு பெற்றவர்கள் அவ்விதிப்படிதான்  ஊழியராகவிருந்து பலனையும் பெற்றார்கள். 

ஊழியர் ஓய்வின் போது என பேசும் விதியது. பென்சன் ரிவிஷனுக்கு  அதில் நேரிடையாக ஒன்றுமில்லை. அது எப்போது பயனளிக்கும் எனில் , எப்போது ஊதிய மாற்றம் வருகிறதோ அப்போது பென்சன் மாற்றம் தர வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தின் போது தான் என்கிற புரிதல் அந்த உரையில் சுத்தமாக இல்லை.

அடுத்த தவறான புரிதல் 2017 க்குப் பின்னர் ஓய்வு பெற்றவர் குறித்த understanding. அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் பென்சனை மாற்ற அவர்களுக்கு ஊதியம் மாறவேண்டும். அதற்குரிய ஸ்கேல் வேண்டும் என புரிந்து கொள்ள மறுப்பது. அவர்களுக்கும் மாற்றம் 1-1-2017 முதல் , ஏதோவொருவகை ஸ்கேல் மாற்றம் மூலம்தான் சாத்தியமாகும் என்கிற புரிதலை கண்டுகொள்ளாமல் செல்வது.

டெல்லி principal CAT ல் ஊதிய மாற்றமின்றி ஓய்வூதிய மாற்றம் இல்லை என dot வழக்காடும்போது, அக்டோபர் 17 ல் அசோசியேஷனிடம் ஏற்றுக்கொண்டதை, இரு தரப்பாலும் பேசுபொருளாக்காமை ஏன் என்கிற விவாதம் இல்லை.

அந்த உரை பென்சன் ரிவிஷன் 7 வது ஊதிய பெருக்கு மடங்கில் வரவேண்டும்..இல்லாவிடில் எவ்வளவு காலமானாலும் வராமல் இருக்கட்டும் ( அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி) என எனக்கு உணர்த்துகிறது. இது சரியான அணுகுமுறையாக எனக்கு தோன்றவில்லை. 

6 வது 7 வது சம்பளக் கமிஷன் நீட்டிப்புகள் எல்லாம் , நமக்கு அப்போது ஓய்வு பெறவிருந்த பி எஸ் என் எல் absorbed ஊழியர்களுக்கான பலன் என்கிற வழியில்தான் பென்ஷனர்களுக்கு வந்து சேர்ந்ததே தவிர, பென்ஷனர் வழி ஊழியர்களுக்கு போய் சேரவில்லை என்ற புரிதல் அவ்வுரையில் இல்லை.

1-1-2017 க்கான  மாறும் ஊதியம் என்ன என்கிற கேள்விக்கு பதிலை நிர்ணயிக்காமல், even delinking pension revision from pay revision சாத்தியமாகாது என்கிற புரிதல் இல்லை. அதற்கு இருக்கிற ஸ்கேலிருந்து வேறு ஒரு ஸ்கேல் வேண்டும். அது அதிகாரிகளுக்கு 3rd PRC scale ஆகவே இருக்கமுடியும் என்கிற புரிதல் தேவைப்படுகிறது.

Holding empty cup and doing many sips என்பதால் பயனில்லை. ஆயிரக்கணக்கான பென்சனர்கள் நம்பும் உரை என்பதால், அது குறித்த எனது புரிதலை சொல்லவேண்டியுள்ளது.  வேறு  organisational position desires என்பதெல்லாம் இல்லை.

30-8-2023   7.40 am   - R Pattabiraman


Two BSNL retired comrades contacted me over phone and asked me about my position on pension revision. It is unfortunate, my ‘write ups’ pages after pages are not known to them. 

I asked them when they retired. They told me they are post 2017 Retirees. Then in that case, there is no pension revision for you, I clarified them. It seems to me , my answer gave a shock to them and they got disappointed  .They said they have gone to court and a representative of them is in that case. I said good. Nothing wrong on their part, they were taught so in the meetings they attended. 

‘Pension revision’ is the demand of pensioners retired before 1-1-2017. They are demanding from that date that their pension should be revised. It is  a correct demand , also nothing wrong in their expectations that their pension fixed in 2007 should be revised from 1-1-2017. Their  retired friends in CG got that from 1-1-2016 as per 7 th CPC. So and natural that expectations  can be  high only on their part.

But  pensioners of pre 2017  cannot get their ‘revision’ of their existing pension on 1-1-2017, unless solution to post 2017 is found. This is a great bonding because, all came together to BSNL  through 37 A on 1-10-2000. There is a link , connectivity between them. This link is not there with the CG pensioners as we came out from their folk, but wisdom of com OPG made a good link  for absorbed bsnl employees with the employees of  CG thro 37 A sub rule 8. 

This wisdom of OPG only helping the bsnl employees to get the benefits of 6 th and 7 th CPC as per the said formula of 37 A when they were retiring . Except minimum and maximum pension, the other benefits of CPC like gratuity, commutation, qualifying services were extended to the absorbed employees also from the same date of CPC. The minimum and maximum is normally incorporated when DOT issues separate pension revision orders for bsnl absorbed pensioners.

But the demand of ‘pension revision’ is not applicable to post 2017 from 1-1-2017, because they were all employees on that date, not getting pension on that date but only getting pay on that 1-1-2017. If at all any solution to them is to be found, that can be possible only through change of their pay from the existing scales to new one on 1-1-2017.

As employees on 1-1-2017, they can go only to PSU scales (for the Executives from 2nd PRC to 3 PRC and for Non Executives they can go to any  agreed new scales with the unions). But BSNL and DOT are not working seriously to find an amicable solution by seeking exemption or any other suitable way, and the Unions are struggling to reach an agreement even with 5 % fitment without discrimination in the methodology of scales as that of Executives.

During Oct 2022, DOT gave some good gestures to the associations of pensioners, came out from their position ( because of the active roles of associations) and proposed pension revision , even if no pay revision. They found a solution to post 2017 also, from the same date 1-1-2017 , suggesting pension fixation on notional Pay, instead of the actual last pay drawn. Though DOT came down to this position of accepting  pension revision on 3 rd PRC, they stood with nil fitment.

Unfortunately everything was  found stuck there itself, no move beyond is visible in the writings of DOT. In the Principle CAT, DOT took its old position  that is ‘pension revision only possible if pay revision is done’. It is unfortunate both the parties concerned for their obvious reasons not cited Oct 2022 position of DOT to the Court.

Now everybody is expecting eagerly the judgment of CAT. 

Thanks to  the comrades , though they were not in a position to understand my views, they helped me again  to write this clarification,of course nothing new on my part to say.

2-9-2023  8.30 am    - R . Pattabiraman

பகுதி 1 திராவிட மாயை சுப்பு

 அறிஞர் அண்ணாவின் ஆரியமாயை, வர்ணாஸ்ரமம், பணத்தோட்டம், இன்பத் திராவிடம் போன்ற புத்தகங்களை அடுத்தடுத்து முன்னர் படித்த நினைவுண்டு.

பணத்தோட்டத்தை  எடுத்துக்கொண்டு தோழர் பி ராமமூர்த்தி அவர்கள் தனது ஆரிய மாயையா திராவிட மாயையாவில் விரிவாக விமர்சனத்துடன் விவாதித்திருந்தார். 

அண்ணாவின் ஆரிய மாயையை மீண்டும் கிண்டில் வழி சென்ற வாரம் வாசித்தேன். ஏனெனில் சுப்புவின் மூன்று வால்யூம் ‘திராவிட மாயை ஒரு பார்வை’யை படிப்பதற்கு முன்னால் அண்ணாவின் பார்வையை நினைவூட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்காக. அண்ணா அதில் மேற்கு - குறிப்பாக ஆங்கில பிரஞ்சு ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி  வந்தேறி ஆரியர்களின் சூது நயவஞ்சகம் அவர்களை வெளியேற்றி திராவிடம் கொணரவேண்டிய அவசியத்தின் கருத்துப் போராட்டத்தை அதில் முன்னெடுத்திருப்பார். 

சுப்புவின் திராவிட மாயை புத்தகத்தை நான்காவது பதிப்பாக கடந்த 2022ல் மூன்று பகுதிகளாக rare books என்கிற பதிப்பகத்தார் கொணர்ந்துள்ளனர். ஆர் எஸ் எஸ்  சங்க் குடும்பம் சார்ந்த தமிழக அறிவுஜீவிகள் அரவிந்தன் நீலகண்டன், வெங்கடேசன் போன்றவர்கள் ஒத்துழைப்பில் எழுதியதை சுப்பு ஏற்றுள்ளார். தான் எழுதும் விவரங்களுக்கு முதல் பாகத்தில் 51 துணை நூல்களை தந்து ஆதாரங்களை சொல்லியுள்ளார். அண்ணா நூலில் ஆங்காங்கே எந்த ஆய்வாளர் என்ன எழுதினார் என்பது தரப்பட்டிருக்கும். சுப்புவும் இந்த முறையை கையாண்டுள்ளார். ஆர் எஸ் எஸ் நண்பர்களின் உதவி என்றாலே அதில் அவர்களுக்கான அரசியல் தேவை அமராமல் இருக்காது. வரலாறு என்பது அவரவர் தேவைக்கான கட்டுமானமாகவே இருப்பதைத்தான் நான் படித்த இந்த புத்தகங்கள் எனக்கு உணர்த்தின. எவர் எழுதியதையும் அதுவே முற்றானது என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிற பாலபாடம் மீண்டும் என்னுள்.. இனி சுப்புவின் எழுத்தை பார்க்கலாம்…

அண்ணாவின் ஆரிய மாயை பற்றி சுப்பு எழுதியது ..

“ திராவிட நாடு இதழில் சி என் அண்ணாதுரை எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 1943ல் ‘ஆரிய மாயை’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. கிறித்துவ பாதிரிமார்கள் ஹிந்து மதம் குறித்து வெளியிட்ட கருத்துக்களை அண்ணாதுரையின் அடுக்கு மொழியால் ஜோடித்ததுதான் இந்நூல். பிராமணர்கள் ஆரியர்கள் என்று அண்ணாதுரை எழுதியிருந்தார். 1949ல் பி எஸ் குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்தார். காங்கிரஸ் ஆட்சி பீடத்தில் இருந்தது. ஆரிய மாயை தடை செய்யப்பட்டது. பின்னர் 1967ல் அண்ணாதுரை தமிழக முதல்வரானார். அவருடைய ஆட்சிக் காலத்தில் இந்தத் தடை நீக்கப்படவில்லை…அண்ணாதுரை அரசியல் சட்டத்திற்கு மட்டுமல்ல, அரசியல் நெறிகளுக்கும் உட்பட்டே செயல்பட்டார் என்பதற்கான சான்று இது”

நீதிக்கட்சியின் தலைவர்கள் ராஜாக்களும் ஜமீன்களுமாக இருந்த நீண்ட பட்டியல் ஒன்றை சுப்பு இதில் தந்திருப்பார். 1937 தேர்தல் குறித்த வேறு ஒரு தகவலைத் தருகிறார்.

 இராமநாதபுர தொகுதிக்கு நீதிக்கட்சி சார்பில் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களும், காங்கிரஸ் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களும் போட்டியிட்டனர். பிரிட்டிஷ் அரசாங்கம் தேவருக்கு வாய்ப்பூட்டு போட்டது. தேவர் பேசமுடியாது போய் இருகரம் கூப்பி சென்றதுடன் வெற்றியும் பெற்றார்

மலையாள கவிஞர் கே சச்சிதானந்தன் எழுதினாராம்

“ தென்னிந்தியர்கள் முழுவதும் ஒரே இனத்தவரோ, வம்சத்தவரோ அல்ல. தமிழர்களும் அப்படித்தான். இன்று ஆரியர் குடியேற்றம் என்ற கருதுகோள் கூட மறுவிசாரணை செய்யப்பட்டு வருகிறது..”

திராவிட இயக்கம் ஒரு மார்க்சிய ஆய்வில் தோழர் அருணன் எழுதியதை சுப்பு காட்டுகிறார். அருணன் எழுதியதாவது

“ சொல்லளவில் மட்டுமல்ல, செயலளவிலும் ஏகாதிபத்திய தாசனாகவே இயங்கி வந்தது நீதிக்கட்சி..அதுவும் எந்த அளவிற்கு என்றால் ஜாலியன்வாலாபாக் படுகொலையை ஆதரித்து அறிக்கைவிடும் அளவிற்கு..அதிலும் அறிக்கைவிட்டவர்கள் யார் தெரியுமா? இன்றைக்கும் திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவர்கள் என்று எவரை திராவிட இயக்கத்தவர்கள் புகழ்ந்துரைத்துக் கொண்டிருக்கிறார்களோ அந்த தியாகராசச் செட்டியாரும், டி எம் நாயரும்தான்”

தோழர் பி ஆர் எழுதியதை சுப்பு காட்டுகிறார்

“ நீதிக்கட்சி அது தோன்றிய காலத்திலிருந்து அதன் அந்திம காலம்வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியை ஆதரித்து நின்றது. அது ஜமீந்தார்கள் மற்றும் தரகு வியாபாரிகளின் கட்சியாக இருந்தது”

1918ல் பெரியார் எப்படி பேசினார் என்ற மேற்கோள் ஒன்றையும் சுப்பு தந்துள்ளார்

“ நாம் பிராமணன் மீது எவ்வெக் குற்றங்களைச் சுமத்துகிறோமோ அவ்வக் குற்றங்களைப் பஞ்சமர் முதலியோர் நம்மீது சுமத்துகின்றனர்”

கோவை அய்யாமுத்துவின் ‘எனது நினைவுகள்’ புத்தகத்திலிருந்து சுப்பு காட்டுவது

“ வைக்கத்துப் போர்க் காலத்தில் நாயக்கரும் நானும் மோட்டாரிலும் படகுகளில் திருவாங்கூர் முழுவதும் பிரயாணம் செய்தோம். நாயக்கர் கையில் எப்போதும் பாரதியாரின் பாட்டுப் புத்தகம் இருக்கும். மோட்டாரில் போய்க்கொண்டே வந்தே மாதரம், வாழ்க செந்தமிழ், மறவன் பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவைகளை அவர் உரக்கப்பாடுவார்”

இந்தச் செய்தியை இவர்கள்  ஏன் தரவில்லை என சுப்பு வினவுவார்

“ நெடுஞ்செழியன் திராவிட வரலாறில் பாரதி பாடல்கள் என்கிற செய்தியில்லை

வீரமணியின் புத்தகத்தில் இந்த செய்தியில்லை

சாமி சிதம்பரனார் தமிழர் தலைவரில் இல்லை

கவிஞர் கருணாநந்தம் எழுதிய தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு என்ற நூலிலும் இந்தச் செய்தி இல்லை.

சின்னக் குத்தூசி எழுதிய காந்தியடிகள் கட்டளைப்படி நடந்ததா வைக்கம் என்பதிலும் இந்தச் செய்தி இல்லை

சுப வீரபாண்டியன் எழுதிய பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் என்ற நூலிலும் இந்தச் செய்தி இல்லை

ஞாநி எழுதிய அவர்தாம் பெரியார் என்பதிலும் இல்லை

மங்கள முருகேசன் என்ற ஆய்வாளர்  மட்டும் இந்தச் செய்தியை பதிவு செய்தியைப் பதிவு செய்துள்ளார்

 ⁃ சுப்பு எழுதியவை குறித்து இங்கு தரப்பட்டவை அனைத்தும் முதல் 90 பக்கங்களுக்குள் பகுதி 1 திராவிட மாயை ஒரு பார்வையில் கிடைக்கிறது


Marx’s Das Capital A Biography

 பிரான்சிஸ் வீன் எழுதிய அளவில் சிறிதான புத்தகம் Marx’s Das Capital A Biography. Books that shook the world வரிசையில் பிரான்சிஸ் வீன் இந்த புத்தகத்தையும் டெல்லி மஞ்சுள் என்கிற பதிப்பகத்தார் கொண்டுவந்துள்ளனர். இதில் சுவையான சில செய்திகள் கிடைக்கின்றன.

மார்க்ஸ் மூலதனம் முதல் பாகம் 4 வருடங்களில் ஜெர்மானிய வாசகர்கள் மத்தியில் 1000 காப்பிகள் விற்றதாம். தொழிலாளர்கள் விடுதலைக்காக தன்னை அழித்துக்கொண்டு அவர் படைத்த இந்த நூலை, ஜெர்மன் தொழிலாளர்கள் சற்று கூடுதல் தியாகம் செய்து பெற்றிருக்கவேண்டும் என ஜென்னியிடம் வேதனை இருந்ததாம். மார்க்ஸ்  கூட கிண்டலாக  political economy remains a foreign science in Germany என்றாராம் ( பக் 85)

1872ல் மூலதனத்தின் ரஷ்ய மொழி வடிவம் தயாராகிவிட்டது. ஜார் ஆட்சியில் நமக்கு இடையூறாக ஏதும் இல்லை என்றால் தணிக்கைக்குப் பின்னர் அனுமதிக்கலாம். ஆனால் remove the picture of the author என்றனராம் .  மார்க்சிற்கு பெரும் ஆச்சர்யம். ஒரே ஆண்டில் அங்கு 3000 காப்பிகள் விற்றுப்போனதையறிந்து.. 

எங்கெல்ஸ்க்கு எழுதிய கடிதத்தில் is it an irony of fate? என்று மார்க்ஸ் கேட்டாராம். 25 வருடம் ரஷ்யர்களை சண்டை போட்டென். அவர்கள் இப்படி patrons ஆவார்கள் என நினைக்கவில்லை என்றாராம்.

மார்க்சிற்கு பிரஞ்சு மொழி தெரியும். மூலதனம் பிரஞ்சில் வெளிவருவதில் ஏகப்பட்ட ‘சொதப்பல்களை’ அவர் உணர்ந்தாராம். தானே முன்வந்து அவ்வேலையை செய்யலானார்.

இங்கிலாந்தின் தொழில்களைப்பற்றித்தான் லண்டனில் வாழ்ந்துகொண்டு மார்க்ஸ் மூலதனம் எழுதினார். பிரஞ்சு, ஜெர்மன் தெரிந்த சில ஆங்கிலேயே நண்பர்கள், சீடர்கள்தான் அதைப் படித்திருந்தனர்.  அதை ஆங்கிலத்தில் கொண்டுவரவேண்டுமே என்கிற பேச்சு எழுந்தது. மார்க்சிடம் பழகிவந்த, ஹைண்ட்மேன் மூலதனத்தின் சில அத்தியாயங்களை மார்க்ஸ் பெயரை நூலை சொல்லாமல் 1881ல் England for All நூலில் பயன்படுத்திவிட்டார். மார்க்ஸ் எங்கெல்ஸ் கடுமையாக கோபம் கொண்டனர்.

பெல்பர்ட் பாக்ஸ் மூலதனத்தை, மார்க்சின் மேதாவிலாசத்தை வியந்து சில கட்டுரைகளை ஆங்கில பத்திரிகை Modern Thoughtல் எழுதினார். பெர்னார்ட் ஷா கூட தன்னால் பிரஞ்சு மூலதனத்தையே படிக்க முடிந்தது என்றார். That was a turning point in my career என்றார் அவர்.  பின்னர் பாபியன் சோசலிஸ்ட்டாக அவர் இருந்தார்.

மார்க்ஸ் மறையும்வரை ஆங்கில மொழிபெயர்ப்பு வரவில்லை. எங்கெல்ஸ் சொல்வது படி சாமுவேல் மூர் மொழிபெயர்ப்பு 1887ல் வந்தது.

இந்தப் புத்தகம் பக் 100ல் மார்க்சிற்கும் லெனினுக்குமான வேறுபாடு என்னவென டிராட்ஸ்கி சொல்வதை பிரான்சிஸ் தருகிறார்

The whole of Marx appears in the Communist Manifesto, Critique of political economy, in Das Capital…the whole of Lenin on the other hand appears in revolutionary action. His scientific works are only a preliminary for activity

இங்கு பிரான்சிஸ் எழுதுகிறார்

“Marxism as practised by Marx himself was not so much  an ideology as a critical process, a continuous dialectical argument “

மூலதனம் எழுதும் முயற்சியில் மார்க்ஸ் பட்ட துன்பங்களை பலர் எழுதியுள்ளனர். அவர் முதல் வால்யூம் என எழுதி முடித்தபோது 1200 பக்க கையெழுத்து பிரதியாக இருந்ததாம். 1866 ஜனவரி புத்தாண்டு தினத்தன்று அதை fair செய்யத்துவங்கினார் .அப்போது அவர் தெரிவித்தது licking the infant clean after long birth pangs.  நோயினால் அவர் அவதிப்பட்டுக்கொண்டிருந்த்கார். உடல் முழுதும் கொப்பளங்கள். மார்க்ஸ் எழுதினார்

At all events, I hope the bourgeoisie will remember my carbuncles until their dying day. இதை பிரான்சிஸ் அவரது சாபம் என வர்ணிக்கிறார்.

இவர் மூலதனத்தை எப்போது முடிப்பார் என்ற கவலை எங்கெல்ஸ்க்கு இருந்தது. போதும் அதிலிருந்து முடித்துவிட்டு  வெளியே வாருங்கள் என அவர் சொல்ல நேர்ந்தது.  You would and could never extricate yourself until you had got it off your back என எங்கெல்ஸ் அறிவுறுத்தினார். அவ்வளவு தேடல் தவிப்பு கொண்ட மனமாக மார்க்ஸ் வாழ்ந்தார்


ஈரோட்டுப் பாதை சரியா - ப. ஜீவானந்தம்

 தோழர் ஜீவாவின் முழு திரட்டை என் சி பி எச் 2007 ல் கொணர்ந்தார்கள். இரு பாகங்களாக 1938 பக்கங்களில் கொணரப்பட்ட அத்தொகுப்புகளுக்கு பேரா அரசு பதிப்பாசிரியர்.

2002ல் சந்தியா பதிப்பகம்  ஜீவாவின் கட்டுரையான ‘ஈரோட்டுப் பாதை சரியா’ என்பதை சிறு வெளியீடாக பேரா அரசின் முன்னுரையுடன் கொணர்ந்தனர். சுயமரியாதை இயக்கத்திலிருந்து , காங்கிரஸ் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி என பயணித்த ஜீவா, சுயமரியாதை இயக்கம்- பெரியாரின் கருத்துக்களை முன்வைத்து இதில் எதிர்வினையாற்றிருப்பார். அதில்  உப்பு சத்தியாகிரகத்தை பெரியார் ஏற்காததை ஜீவா சுட்டிக்காட்டியிருப்பார்.

பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையை கண்டித்து தீர்மானம் போடவேண்டும் என சில சுய மரியாதை இயக்க இளைஞர்கள் கோரியபோது, ஆர்.கே சண்முகம் அவர்கள் தலைவராக தனது தீர்ப்பைச் சொன்னார். சுயமரியாதை இயக்கம் ‘அரசியலில் கலக்கலாமா’ என்ற முடிவு இருந்தால்தான் தீர்மானத்தையே எடுத்துக்கொள்ள முடியும் என்றார்.  பெரியார் உடனே சு.ம.இ ‘அரசியலில் கலக்ககூடாது’ எனச் சொன்னதால் , தீர்மானத்திற்கு இடமில்லாமல் போனதை ஜீவா இதில் சுட்டிக்காட்டியிருப்பார். 

அரசியலில் பங்கேற்பதில்லையானால்,  நீதிக்கட்சி வெற்றிக்கு ( காங்கிரஸ் தேர்தலில் பங்கேற்கும் முன்னர்) பெரியார் காரணம் எனச் சொல்வது சரியாகுமா என்கிற தொனியிலான கேள்வியை ஜீவா இதில் எழுப்பியிருப்பார்.

1932 தஞ்சை  மாநாட்டில் வருத்தமுற்ற முனுசாமி நாயுடு விலக நேர்ந்தது. பொப்பிலி அரசரை நீதிக்கட்சி தலைவராக்கியதுடன், முதலமைச்சரும் ஆக்கினர். இவருக்கு சுயமரியாதைக்காரர்கள் தஞ்சையில் ஆதரவு தந்ததை கேள்விக்குள்ளாக்குவார் ஜீவா.

குடியரசுப் பதிப்பகம் சோசலிசம், உழைப்பாளிகளுக்கு ஏன் உலகமில்லை என்ற சிறு நூல்களை நரசிம்மன், சிவசாமி  ஆகியோர் எழுதி வெளியிட்டது.  இருவரும் ஆரியர்கள் . இது ஆரிய சூழ்ச்சி எனப் பெரியார் அப்போது நல்லவேளை சொல்லவில்லை என்கிறார் ஜீவா.

பொப்பிலி  நீதிக் கட்சி ஆட்சியில்தான் பெரியார் எழுதிய ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும்’ என்பதற்கு பெரியார் தண்டிக்கப்பட்டார் என்கிற செய்தியையும் ஜீவா இதில் சொல்கிறார்.

ஈரோட்டில் பெரியாரை சந்தித்த ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம், சுயமரியாதை இயக்கத்தை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைக்க ஒப்புக்கொண்டார் என்ற செய்தியை ( என்றைய தேதி  எழுத்து பூர்வ ஆதாரம் என ஜீவா இதில் தரவில்லை) ஜீவா இந்த நூலின் 23 ஆம் பக்கத்தில் தந்துள்ளார். ஜெயப்பிரகாஷ் அவர்களை சந்திக்கும்படி ஜோலார்பேட்டையில் இருந்த ஜீவாவிற்கு தந்தியும் அனுப்பினாராம் பெரியார்.

பெரியார் ஏற்ற இணைப்பு நடை பெறவில்லை. இரண்டே நாட்களில் பெரியார் மாற்றிக்கொண்டுவிட்டார். ‘காங்கிரஸ் மேனியா’ வில் சில வாலிபவர்கள்  இருக்கிறார்கள் என விமர்சிக்கலானார். இவ்விடத்தில் ஜீவா “ஷனச்சித்தம் ஷனப் பித்தம்”  ‘பெரியார்’களிடம் உண்டு என எழுதியுள்ளார். 

காங்கிரஸ் எதிர்ப்பில்  நின்று சோசலிசம் எதிர்த்த ஆர் கே ஷண்முகத்தையும், சுயமரியாதை இயக்கத்தை கேலி பேசிய நாயுடுவையும் பெரியார் ஆதரித்தார்.  இதை ஜீவா விமர்சித்தார்.

பகத்சிங்  ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ எழுத்தை ஜீவா மொழிபெயர்க்க, ஈ வெ கிருஷ்ணசாமி வெளியிட இருவரும் கைது செய்யப்பட்டனர். பொப்பிலி ஆட்சிதான். 

இங்கு ஜீவா எழுதுவது

“ சர்க்கார் ( பிரிட்டிஷ்) அழிவு நடவடிக்கையைக் கண்டு ஈவெரா மிரண்டார். ஆர் கே சண்முகம்  போன்றவர் தருணத்தைத் தவறவிடாமல் செயல்பட்டனர். உள்நாட்டு மந்திரி பன்னீர்செல்வம், சி டி நாயுடு மூலம் நாஸ்திக பொதுவுடைமை பிரச்சாரத்தை நிறுத்திவிட வேண்டும், இல்லாவிட்டால் கட்சியை சர்க்கார் அழித்துவிட முடிவு கட்டிவிட்டதென்றும் ஈவெராவை மிரட்டிய கதையும் நமக்குத் தெரியும்”

“ என்னை ( ஜீவாவை) மானங்கெட்டத்தனமாக மன்னிப்பு கொடுத்துவிட்டு வெளியே வரும்படி ஈவெரா , கே எம் பாலசுப்பிரமணியம் மூலம் கடிதத்தை சிறைச்சாலைக்கு அனுப்பி கட்டாயப்படுத்தினார் ( அக்கடித ஆவணம் இந்த நூலில்  ஜீவாவால் இணைக்கப்படவில்லை) . ‘பெரிய நாயக்கர்’ வேண்டுமானால் மன்னிப்புக் கொடுத்துவிட்டு போகட்டும், தான் முடியாதென்றும் பிடிவாதமாக கூறினேன். நான் மன்னிப்பு கொடுக்காவிட்டால் இயக்கம் அழிக்கப்பட்டுவிடும் என்றும், இது சர்க்கார் சட்டத்தை நன்கு அறிந்த ஆர் கே ஷண்முகம்கருத்து என்றும், தானே மன்னிப்பும் பொறுப்பும் என்றும் குடியரசில் எழுதிவிடுவதாக ஈவெரா பாலசுப்பிரமணியம் மூலம் கட்டாயப்படுத்தினார்”

“ இந்த நிலையில் சு.ம.இயக்கம் ‘நாட்டில் குழப்பத்தை உண்டாக்கும் கொள்கையுடைய பொது உடைமை இயக்கமல்ல’ என்று அரசாங்கம் 

நம்பும்படி ஏதாவது செய்ய வேண்டியதாயிற்று “ என ஜீவா இதை முடித்திருப்பார். இந்த செய்தி பக் 26ல்  இந்த சிறு நூலில் இருக்கிறது. இங்கு ஜீவா - நேரிடையாக மன்னிப்பு  எழுதிக் கொடுத்தாரா, என்ன எழுதிக்கொடுத்தார் என்பதை சொல்லவில்லை . ‘ஏதாவது செய்யவேண்டியிருந்தது ‘ என்கிற பதிவை அவர் செய்திருப்பார்.

பெரியார் ‘மத்திய சர்க்கார் தலையில் பழியைப்போட்டு’, 

மாகாண ஜஸ்டிஸ் கட்சியின் குற்றவாளித்தனத்தை மறைத்ததாக ஜீவா எழுதியிருப்பார். இங்கு கடுமையான விமர்சனங்களை ஜீவா வைப்பதைக் காணலாம்

1935 மார்ச் 10 ல் பெரியார் விட்ட  அறிக்கைப்பற்றியும்  ஜீவா கடுஞ்சொற்களால் பேசியிருப்பார்.  காங்கிரஸ் ஆட்சியைவிட  பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்பிராயம் என இதில் பெரியார் தெரிவித்திருந்தார்.

பக் 28ல் ஜீவா  எழுதுகிறார் “ ஈவெரா மன்னிப்புக் கொடுத்த பிறகு , உண்மையான சுயமரியாதை தர்மிகள் ஈவெரா தலைமையை வெறுத்தனர்…” 

திருத்துறைப்பூண்டி மாநாட்டில்  ஜீவா பெரியாரை விமர்சித்து வெளியேறினார். சுயமரியாதை சமதர்ம கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் திருச்சி மாநாட்டிற்கு 1936 நவம்பரில் டாங்கே வந்து உரையாற்றியுள்ளார். பின் அது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்தது. இங்கு ஜீவா ‘பெரியார் மன்னிப்பு கொடுத்த பிறகு’ என எழுதுவதைப் பார்க்கிறோம். ( பெரியாரிய தோழர்கள் பெரியார் மன்னிப்புக் கேட்டதற்கு ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்டு வருகின்றனர்)

இந்த கையேட்டில் பெரியார் தமிழ் நாட்டின் ஜின்னா ஆனார் என்ற விமர்சனத்தையும், அம்பேத்கர் ஜின்னா தயவை நாடி காங்கிரசை எதிர்க்க வட நாட்டிற்கு காவடி எடுத்தார் எனவும் ஜீவா விமர்சிக்கிறார். ‘துரோகி எம் என் ராயுடன் ‘ ஈவெரா ஆருயிர்த் தோழனானதைச் சொல்கிறார். ஈவெரா ‘தமிழ் நாட்டின் எம் என் ராய்’ ஆகிவிட்டார். ஏகாதிபத்திய பரம்பரை பக்தர்களின் ஜஸ்டிஸ் கட்சி தலைவரான பின் அதைத்தான் செய்யமுடியும் என கடுமையாக விமர்சனம் செல்கிறது.

மேலும் சென்னை கவர்னர் சர் ஆர்தர்ஹோப்பின் அந்தரங்க நண்பரும் ஊழியரும் ஆனார் ஈவெரா. கவர்னரை தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆடினார்கள் என ஜீவா எழுதியுள்ளார்

இறுதியாக ஜீவா இக்கட்டுரையை இப்படி முடித்திருப்பார்

“ ஈரோட்டுப் பாதையின் இருபது வருட சரித்திரத்தை எனது கட்டுரையில் குறிப்பிட்டு வந்துள்ளேன். அந்தச் சரித்திரம் எடுத்துக் காட்டுவதென்பது ஈவெரா என்றும் சமூகப் புரட்சிக்கு விஞ்ஞானியாக பாதை காட்டியதில்லை..புரட்சி கட்சிகளின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்திருக்கிறார். ஜனநாயக ஸ்தாபனங்களைத் திருத்துவதற்குப் பதில் அழிக்க முற்பட்டிருக்கிறார்..இந்நாட்டில் பிற்போக்கு சக்திகளான ஜமீந்தாரி நிலச்சுவான்தார்- முதலாளி வர்க்கங்களின் கையாளாக கடனாற்றி வந்துள்ளார்..பிற்போக்கு பணமூட்டைகளின் பாதை ஈரோட்டுப்பாதை..”

ஆதாரம்  ஈரோட்டுப் பாதை சரியா  - ப. ஜீவானந்தம்

periyar Political Bio

 Periyar A political Biography of E V Ramasamy by BalaJeyaraman கிண்டில் வழி படித்துக்கொண்டிருந்தேன். 

பெரியார் வாழ்க்கை வரலாறு குறித்து நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் முழுமையாக நிகழ்வுகளை (கிடைத்தவற்றை முடிந்தவரை) ஆவணப்படுத்தும் அவரது political bio வரவில்லையோ எனத்தோன்றுகிறது.   சாமி சிதம்பரம், நெதுசு, கருணாநந்தம், நீலமணி, சுப்பு ரெட்டியார் என பல இருக்கின்றன. ஆங்கிலத்திலும் Anita Diehl, Dr  E sa Viswanathan போன்றவைகள் உள்ளன.

பால ஜெயராமன் புத்தகத்திலிருந்து சில செய்திகள்..

 பெரியார் 1933 டிசம்பரில் “ இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்” என எழுதிய தலையங்கத்திற்காக  இந்தியன் பீனல் கோடு செக்‌ஷன் 124  படி கைது செய்யப்பட்டார். கோவையில் 6 மாதம் சிறைவாசம். ராஜாஜி உப்பு சத்தியாகிரகத்திற்காக கைதாகி அங்கிருந்தார். 

அடுத்த அடுத்த “செல்” என்பதால்  வேறுபாடுகொண்ட நண்பர்கள் பேசிக்கொண்டனர். மீண்டும் காங்கிரசில் ஈ வெ ரா வரவேண்டும் என்கிற முயற்சியை ராஜாஜி எடுத்தார்.  வகுப்புவாரி பிரச்சனை வேறுபாடு இருந்தபடியால் பலனளிக்கவில்லை. பெரியாரை கைது செய்து அடைத்தது நீதிக் கட்சி ஆட்சி. பொப்பிலி ராஜா முதல்வர்.

1934ல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை வந்தது. சுயமரியாதை இயக்கமும் கண்காணிப்பிற்குள்ளானது. 

“ Periyar was arrested again in 1934 for publishing a translation of Bhagat Singh’s translation  ‘why I an atheist’. He had to tender an apology to the government to secure his release…

To ensure political survival, Periyar decided to move the Self respect movement away from communism” என்று பால ஜெயராமன் எழுதியிருப்பார். ஜீவாவை அவர் விரும்பாவிட்டாலும் அரசாங்கத்திடம் apology கொடுக்கச் சொன்னதாக பெரியார் சொல்லியிருப்பார். பெரியார் apology கொடுக்கவில்லை என பெரியாரிய நண்பர்கள் சொல்லிவருகின்றனர். அந்த வழக்கின் முழு ஆவணமும் எவராவது வைத்திருந்து வெளியிட்டால் , facts குறித்த நம் புரிதலை சரியாக்க உதவும்

வேறு ஒரு தகவலும் கிடைக்கிறது. அப்போது தொடங்கப்பட்டிருந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கு வருமாறு பெரியாரை ஜெயப்பிரகாஷ் நாராயணன் அழைத்தார். சுயமரியாதை இயக்கத்தை இணைத்துவிட வேண்டினாராம் ஜேபி. அது நடக்கவில்லை. ஆனால் பெரியாரிடம் திருத்துறைப்பூண்டி மாநாட்டின்போது கருத்துவேறுபாடு கொண்டு வெளியேறிய ஜீவா போன்றவர்கள் self respect socialist party எனத்துவங்கி, பின்னர் ஜேபியின் அறிவுரைப்படி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

பெரியார் மணியம்மை திருமணம் ஜூலை 9 1949ல் நடந்தது. இது குறித்து அறிந்த அண்ணா மற்றும் தோழர்கள் கடுமையாக எதிர்வினை ஆற்றினர்.  ராஜாஜியை சந்தித்த பின்னர் தான், இந்த முடிவை பெரியார் எடுத்தார் என அறிந்து, இரகசிய சந்திப்பு ஏன் என்ற கேள்வியை அண்ணா எழுப்பினார். அது தனிப்பட்ட சந்திப்பு என பெரியார் அக்கேள்வியை கடந்து போனார். இங்கு பால ஜெயராமன் எழுதியிருப்பது..

“Rajaji in fact counselled him ( Periyar) against marrying Maniammai. When his ( Periyar’s) followers urged him to release his correspondence with Rajaji to silence Anna’s criticism, Periyar refused saying that he could not use private letters for party issues”

தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக பெரியார் தெரிவித்ததில் மனம் உடைந்த அண்ணா தோழர்கள் சதிகாரர்கள் குறித்த அவதூறுக்கு வழக்கு தொடுத்தனர். இங்கு பால ஜெயராமன் எழுதியிருப்பது

“Anna and Sampath promptly sued him ( Periyar) for libel. They withdrew their cases only when Periyar appeared in court and clarified that he had not referred them( Anna and Sampath)”

1944ல் தி க என நீதிக்கட்சி பெற்ற பெயர் மாற்றத்தின் போதே, தலைமைக்கு பெரியார் அல்லாத ஒருவர் என மூத்தவர்கள் போராடி தோற்றனர். 1945-49 களில் பெரியார் அண்ணா முரண்பாடும் முற்றத்துவங்கியது.

பிராமணர் ஹோட்டல் பகிஷ்கரிப்பு ( அன்றைய சூழலில்) சாத்தியமில்லை என அண்ணா கருதினார்

கருஞ்சட்டை அனைவரும் என்பது தேவையில்லை. இரண்டாம் உலகப்போர் கால வில்லன்களில் ஒருவரான பாசிஸ்ட் முசோலினியின் அடையாளம் அது என அண்ணா பேசியது எடுபடவில்லை. கருஞ்சட்டை தடை வந்த கண்டனக் கூட்டத்திற்கு பெரியாரை விட்டுக்கொடுக்காமல், நெடுஞ்செழியன் தொளதொள கருப்பு ஜிப்பாவை அணிந்து  அண்ணா வரவும் செய்தார்.

ஆகஸ்ட் 15யை துக்கநாள் என பெரியார் அறிவித்ததை எதிர்த்து இன்பநாள், கொண்டாட்டத்தில் பங்கேற்க அண்ணா வலியுறுத்தினார். இறுதி முரணாக பெரியார் திருமணம் வந்து, திமுக என்கிற அரசியல் உதயம் , திக விலிருந்து வெளியேறி வந்தது.

பெரியார் குறித்து வரும் வரலாற்று குறிப்புகளில் உரிய ஆவணத்தை இணைத்து  பேசாமல் செல்கிற குறையிருப்பதாகத் தோன்றுகிறது.

(வழக்குகள் எனப் பேசும்போது பின் இணைப்பாகவாவது, சைமன் கமிஷன் என்றால் கொடுத்த குறிப்பு என்ன என்பது போன்று) . முழுமையான திரட்டப்பட்ட முழு ஆவணங்களுடன், (50 ஆண்டுகள் திமுக, அதிமுக ஆட்சிகள் இருந்தும்) அவரது வாழ்க்கை வரலாறு தொகுக்கப்படாதது ஏனோ?