இந்திய மொழிகளில் கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ மார்க்ஸ் எங்கெல்ஸ்ஸால் 1848 பிப்ரவரியில் ஜெர்மன் மொழியில் வெளியான கம்யூனிஸ் கட்சி அறிக்கை 1850 லேயே அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை பார்த்தது . ரெட் ரிபப்ளிகன் வெளியிட்டனர் . முன்னதாக 1848 லேயே அதன் பிரஞ்சு பதிப்பு வெளியானது . தொடர்ந்து போலீஷ் பதிப்பு , ருஷ்ய பதிப்பு டேனிஷ் பதிப்புகள் வெளியாயின . ருஷ்ய மொழியாக்கத்தை பகுனின் செய்தார் . இவ்வாறு உலக மொழிகளிலெல்லாம் மொழியாக்கம் செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை இந்திய மொழிகளில் எப்படி எவ்வாறு மொழியாக்கம் பெற்றது என பார்த்துக்கொண்டு இருக்கும் போது கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டதுதான் இக்கட்டுரை . விடுதலைக்கு முன்பாகவே கம்யூனிஸ்ட் குழுக்களின் தாக்கம் வரத்துவங்கிய காலத்திலிருந்தே இந்த இந்திய மொழிகளில் அதன் பயணம் துவங்கிவிட்டதைக் காண்கிறோம் . இன்று கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக கருதப்படும் பலர் அன்று இளம் எழுச்சியாளர்களாக இந்தப் பயணத்தில் முன்கை எடுத்துள்ளதையும் காண்கிறோம் . கம்யூனிஸ்ட்கள் அல்லாதவர்