பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
(என் எளிய வாசிப்பில்)
டாக்டர் அம்பேத்கர் தன்னளவில்
பெரும் ஆளுமை மட்டுமன்று, அவர் ஆளுமைகளின் ஆளுமையாகவும் கொண்டாடப்படுகிறார். அவ்வப்போது
அவரை வாசித்து தெளிந்த அனுபவங்களில் கடந்த 20 ஆண்டுகளில் எழுதிப்பார்த்த சில கட்டுரைகளை
இங்கு சிறு மின் வெளியீடாக்கியுள்ளேன்.
முன்பு இணையத்தில் போடப்பட்ட ’அம்பேத்கரும்
கம்யூனிசமும்’ என்ற சிறு வெளியீட்டையும், ’வட்டமேஜை
மாநாட்டில் அம்பேத்கர்’ என்ற சிறு வெளியீட்டையும் இந்த
சிறு வெளியீட்டுடன் சேர்த்து வாசிக்க வேண்டுகிறேன்.
அம்பேத்கர் குறித்து ஏராள நூல்கள்
வந்துள்ளன. நான் ஏதும் புதிதாக இங்கு எதையும் கொண்டுவந்து சேர்த்துவிடவில்லை என்பதை
புரிந்தே இங்கு காணப்படும் கட்டுரைகளை வாசகர்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.
அம்பேத்கரின் ஆளுமைப் பயணம் , பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள், ஆளுமைகளின் ஆளுமை அம்பேத்கர், அம்பேத்கரின் பகவத்கீதை விமர்சனம், அம்பேத்கரின் முகப்புரை, அம்பேத்கரும் பட்டியல் சாதியினரின் அரசியல் அதிகாரமும், பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் பொருளாதார சிந்தனைகள் எனத் தலைப்பிடப்பட்ட
ஏழு கட்டுரைகள் இந்த வெளியீட்டில் இணைக்கப்பட்டுள்ளன.
அம்பேத்கரின் சாதி குறித்த ஆய்வுகள்,
அம்பேத்கரும் மதமும், அம்பேத்கரும் பிரிட்டிஷ் ஆட்சியும் போன்ற தலைப்புகளில் சில குறிப்புகளை
எழுதிப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது. ஆந்திரா மார்க்சியர் ரங்கநாயகியம்மா
எழுதிய புத்தகத்தை முன்வைத்து ஏறத்தாழ மூன்றுமணிநேர உரை ஒன்றை சென்னை பாட்டாளி படிப்புவட்டத்
தோழர்கள் மத்தியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றியிருந்தேன். அந்த உரையின் குறிப்புகளை
தவறவிட்டதால் அதனை இத்துடன் என்னால் இணைக்கமுடியாமல் போனது. அதில் சாதி குறித்த அம்பேத்கர்
ஆய்வுகளையும், சிபி அய், சிபி எம், சிபி எம் எல் தலைவர்கள் சாதி குறித்த ஆய்வுகளையும்
ஒப்பீடாக முன்வைத்திருந்தேன்.
அடுத்து கிடைக்கும் வாய்ப்பில்
மேற்சொன்ன கடமைகளை நிறைவேற்ற காலம் அனுமதிக்கும் என்று கருதிக்கொள்கிறேன். இளம் வாசகர்களுக்கு
என் எளிய வாசிப்பு அம்பேத்கர் பற்றிய புரிதலுக்கு துணை நின்றால் அது என் பேறு.
8-11-2021 அன்புடன், ஆர்.பட்டாபிராமன்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
1.
அம்பேத்கரின் ஆளுமைப் பயணம்
2.
பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்
3.
ஆளுமைகளின் ஆளுமை அம்பேத்கர்
4.
அம்பேத்கரின் பகவத்கீதை விமர்சனம்
5.
அம்பேத்கரின் முகப்புரை
6.
அம்பேத்கரும் பட்டியல் சாதியினரின் அரசியல் அதிகாரமும்
7. பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் பொருளாதார சிந்தனைகள்
நூலைப் படிக்க இந்த இணைப்பை சொடுக்கவும்https://ia801406.us.archive.org/21/items/1-converted/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D1-converted.pdf
இ
C
Comments
Post a Comment