சகோதரிக்கு லெனின் லெனின் உறவினர்களுக்கு எழுதிய கடிதங்கள் அவரின் நூல்தொகைகளில் ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளது . வால்யூம் 37. ஆர்வமுள்ளவர்கள் 750 பக்கங்களுக்கு மேலாக உள்ளவற்றை பார்க்க படிக்க முடியும் . அவர் அக்டோபர் புரட்சியின் ஆண்டுகளில் 1917 ல் எத்தகைய மனநிலையில் இருந்தார் என்பதை இக்கடிதங்கள் வழி அறிய இயலுமா என்பதற்காகவே அதை பார்க்க எண்ணினேன் . 1. நவம்பர் 26 1916 ல் அவர் ஜூரிச் சுவிட்ஜர்லாந்திலிருந்து சகோதரி மரியா உலியானாவிற்கு எழுதிய கடிதத்தில்: நாவல்கள் அனுப்பியமைக்கு நன்றி . இங்கு மாறுதல் ஏதும் இல்லை . விலைவாசி மிக அதிகமாக இருக்கிறது . 869 பிராங்க்ஸ் ( 500 ரூபிள்ஸ் ) வந்தது . நன்றி . இங்கு ருஷ்யா தினசரிகள் கிடைப்பதில்லை . மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பேப்பர்களை நீ படித்துவிட்டு இறுக்கமாக கட்டி எனக்கு பார்சல் போடு . மூன்று புத்தகங்கள் மொழிபெயர்ப்பிற்குரிய பதிப்பாளர் பதில்தரவில்லை . எனது அன்பு முத்தங்கள் . 2. பிப்ரவரி 15, 1917 ல் சகோதரிக்கு கடிதம் எழுதுக