Skip to main content

சகோதரிக்கு லெனின்


                          சகோதரிக்கு லெனின்

லெனின்  உறவினர்களுக்கு எழுதிய கடிதங்கள்  அவரின் நூல்தொகைகளில் ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளது. வால்யூம் 37. ஆர்வமுள்ளவர்கள் 750 பக்கங்களுக்கு மேலாக உள்ளவற்றை பார்க்க படிக்க முடியும். அவர் அக்டோபர் புரட்சியின் ஆண்டுகளில் 1917ல் எத்தகைய மனநிலையில் இருந்தார் என்பதை இக்கடிதங்கள் வழி அறிய இயலுமா என்பதற்காகவே அதை பார்க்க எண்ணினேன்.
1.   நவம்பர் 26 1916ல் அவர்  ஜூரிச் சுவிட்ஜர்லாந்திலிருந்து சகோதரி மரியா உலியானாவிற்கு எழுதிய கடிதத்தில்:
நாவல்கள் அனுப்பியமைக்கு நன்றி.  இங்கு மாறுதல் ஏதும் இல்லை. விலைவாசி மிக அதிகமாக இருக்கிறது. 869 பிராங்க்ஸ் ( 500 ரூபிள்ஸ்) வந்தது. நன்றி. இங்கு ருஷ்யா தினசரிகள் கிடைப்பதில்லை. மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பேப்பர்களை நீ படித்துவிட்டு இறுக்கமாக கட்டி எனக்கு பார்சல் போடு. மூன்று புத்தகங்கள் மொழிபெயர்ப்பிற்குரிய பதிப்பாளர் பதில்தரவில்லை. எனது அன்பு முத்தங்கள்.

2.  பிப்ரவரி 15, 1917ல் சகோதரிக்கு கடிதம் எழுதுகிறார். அதில்
எனக்கு இன்று 808 பிராங்க்  அசாவ்- டன் வங்கி வழியாக வந்துள்ளது. ஜனவரி 22ல் 500 பிராங்க் வந்தது. இந்தப்பணம் என்னப் பணம் என்பது குறித்து எழுது. நான் கணக்கு வைத்துக்கொள்ளவேண்டும். நட்யா ( துணைவியார்) உனக்கு ஏதாவது பென்ஷன் வரத்துவங்கி விட்டதோ என கேலி செய்கிறாள். இங்கு கடுமையான விலைவாசி  வாட்டுகிறது. என் உடல்நிலை காரணமாக அதிகமாக பணியாற்ற முடியவில்லை. நான் இப்பணத்தை செலவு செய்ய அஞ்சுகிறேன். நீ அனுப்பிய மூன்று ( ருஷ்ய) புத்தகங்கள் வந்துவிட்டன. நன்றி
இங்கு மாறுதல் ஏதுமில்லை. அமைதியாக காலம் கழிக்கிறோம். நட்யாவிற்குத்தான் தனிமை தெரிகிறது. குளிர் கடுமையாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
அநேக முத்தங்கள்.

3. அடுத்த கடிதம் தன் சகோதரி அன்னாவின் கணவரான மார்க் டிமோபெயவிச் அவர்களுக்கு பிப்ரவரி 18 அல்லது 19 அன்று எழுதப்பட்டிருக்கலாம் என தொகுப்பில் குறிப்பிடுகின்றனர். அக்கடிதத்தில்
நட்யா ருஷ்யா இலக்கியத்தில் காணப்படும் இடைவெளி ஒன்றை சரி செய்திட Pedagogical Dictionary or Encyclopaedia  எடிட் செய்ய விழைகிறார். அது நல்ல செயல் மட்டுமல்ல, வருவாய் நல்கும் பணியாக இருக்கும் ( useful work and will provide income).  என்சைக்ளோ நன்றாக வந்துவிட்டால் பல பதிப்புக்களைக் காணும். கற்பிக்கும் கலை குறித்து நட்யா பல ஆண்டுகளாக உழைத்துவருகிறாள். ஜூரிச்சில் உலகத்தரம் வாய்ந்த இதற்குரிய அருங்காட்சியகமும் இருக்கிறது.
 இதற்காக எந்த முதலாளியையும் தேடாமல் நாமே கொணர முயற்சிப்போம். அது இலாபகரமாக அமையும். அது ஒத்துவராது என நீங்கள் கருதினால் மாற்றுவழி ஒன்றை யோசிக்கலாம். கவனம் தேவை. இத்திட்டம் எவராலும் களவாடப்பட்டுவிடக்கூடாது. பதிப்பகத்தாருடன் நட்யா எடிட்டர் பெயரில் ஒப்பந்தம் செய்யவேண்டும். பல பதிப்பாளர்கள் இலாபம் முழுக்க எடுத்துக்கொண்டு ஆசிரியரை அடிமையாக்கிவிடுகிறார்கள்.
 இத்திட்டம் குறித்து கவனமாக பரிசீலிக்கவேண்டுகிறேன். விரிவாக எழுதுங்கள். வெற்றி எனத்தெரிந்தால் உடன் தந்தி மூலம் தெரிவியுங்கள். நட்யா வேலையை ஆரம்பிப்பார். வாழ்த்துகள்.
4. அடுத்த கடிதம் ஆகஸ்ட் 1917ல் எழுதியிருக்கலாம். தேதி குறிப்பிடப்படவில்லை. சகோதரிகள் மரியா, அன்னாவிற்கு இக்கடிதம் ஹெல்சிங்கியிலிருந்து எழுதப்பட்டுள்ளது. அதில்
எனது வாழ்த்துகள். நான் செளகரியமாக இருக்கிறேன். ’அரசு’ என்பது குறித்து தீவிரமாக ஆர்வம் காட்டிவருகிறேன். எனது அறிவுரையை ஏற்று மருத்துவ சிகிட்சைக்கு செல். கால்களையும் நரம்பு பிரச்சினையும் சரி செய்து கொள். ஏதாவது நாவலை எடுத்துச் செல். இல்லையெனில் மொழிபெயர்ப்பை பார். அப்போது சிகிட்சை காலத்தில்போர் அடிக்காது’. உன்னை அன்புடன் தழுவிக்கொள்கிறேன்.
5.   அடுத்தக்கடிதம் மரியாவிற்கு செப்டம்பர் 1917ல் எழுதப்பட்டுள்ளது.
அதிலும் அவரின் உடல்நலம் குறித்த அக்கறையை லெனின் தெரிவித்தே எழுதுகிறார். உடல்நிலை தேறிவந்தவுடன் உனக்கு வேலை காத்திருக்கிறது.  கட்சி காங்கிரஸ் என்பது கூட நல்ல சப்ஜெக்ட்தான். அதன் தொடர்பான மினிட்ஸ் மட்டுமல்ல பல சிறு வெளியீடுகளும் இருக்கலாம். எனக்கு சரியாக நினைவில் இல்லை.. நீ எழுதிவிட்டால் நகலை அனுப்பு. நாம் விவாதிக்கலாம். உன்னை அன்புடன் தழுவுகிறேன்.
அடுத்து நமக்கு கிடைக்கும் கடிதங்கள் 1919ல் எழுதப்பட்டவையாக இருக்கின்றன. 1918ல் உறவினர்களுக்கானவை என ஏதும் காணப்படவில்லை.
6.  1919 ஜூலையில் அவர் தனது துணைவியார் கிருப்ஸ்காயாவிற்கு எழுதுகிறார்.

அன்புள்ள நட்யா,
மாலடொவ் மூலம் தான் உனக்கு  heart attack  என அறிந்துகொண்டேன். நீ அதிகமான வேலையை தவிர்த்து ஓய்வெடுக்க வேண்டும். டாக்டர்களின் சொல்படி நடக்கவேண்டும். உனது பயணம் விடியற்காலை 3 மணிக்கு என மாலடோவ் தெரிவித்தார். குளிர்காலத்தில் உன்னால் பணியாற்ற முடியாமல் போய்விடும். வேலையை குறைத்துக்கொண்டு ஓய்வெடு. கல்வி அமைச்சகம் குறித்து நான் உனக்கு தந்தி அனுப்பியுள்ளேன்.. கிழக்குப் பகுதி அற்புதமாகிவருகிறது. தென்பகுதியில் மாற்றம் வந்துகொண்டிருக்கிறது. நன்றாக மாறவேண்டும். கார்க்கியை உன்னுடன் அனுப்ப முயற்சித்தேன். முடியவில்லை. கோர்கி பகுதியில் நான்கு நாட்கள் நல்ல ஓய்வுடன் இருந்தேன். உன்னை அன்புடன் தழுவி முத்தம் தருகிறேன். ஓய்வெடு.

7. அடுத்தக்கடிதம் 1919 அல்லது 1920ல் எழுதப்பட்டிருக்கலாம். மாதம், நாள் தெரியவில்லை. சகோதரி , துணைவியாருக்கு எழுதப்பட்டுள்ளது.
விடியற்காலை மணி 4.30 ஆகிறது. தூங்கமுடியவில்லை. இனி படுக்கைக்கு செல்லவேண்டும். ஆனால் நீங்கள் என்னை காலை 10 மணிக்கு பின்னரும் தூங்கவிட்டுவிடாதீர்கள்  எழுப்பவில்லையெனில் நாள் வீணாகிவிடும். அது  ஆட்சிக்கு  உகந்ததாகாது.

( இக்கடிதங்களின் ஆங்கில வாசகங்களை வால்யூம் 37ல் பக்கங்கள் 535-547 களில் பார்க்கலாம்)

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு