https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, August 16, 2017

500 pages of A4 Essays

கடந்த 15 மாதங்களில் 500 பக்க (A4) அளவில் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். பெரும்பாலான கட்டுரைகள்www.pattabiwrites.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளில் உள்ள எனது எழுத்துமுறையில் எமொஷனல் கோஷண்ட் - உணர்ச்சிக் குறிப்போ ( emotional quotient,Emotional Intelligence) உணர்வுசார்ந்த நுண்ணறிவோ மிக குறைவாக இருக்கும். எழுத்துநடை சுவாரஸ்யமற்றதாகவும் இருக்கும். இக்குறைகளை பொறுத்துக்கொண்டு மல்லுக்கட்டி உள்நுழைந்து வாசகர் யாராவது படிக்க முயன்றால் ஏராள செய்திகள் கொட்டிக்கிடப்பதை கண்டறிய முடியும். அவர்கள் தங்கள் அனுபவம், எழுத்து திறமை மூலம் இச்செய்திகளை வளப்படுத்தி தமிழ் வாசகர்களுக்கு தர முடியும் என கருதுகிறேன்

Bakunin பகுனின்

பகுனின் போராட்ட வாழ்வும் அனார்க்கிச சிந்தனையும்
                            -ஆர். பட்டாபிராமன்
மிஷேல் அலெக்ஸாண்ட்ரோவிட்ச் பகுனின் மே மதம் 8 ஆம் தேதி 1814ல் ப்ரமுக்கினா Premukhino, tver என்கிற பகுதியில் பிறந்தார். இப்பகுதி மாஸ்கோ- பீட்டர்ஸ்பர்க்  (தற்போது லெனின்கிராடுக்கு) இடையில் இருக்கிறதுசெல்வந்தர் குடும்பமது. அப்போதெல்லாம் எவ்வளவு அதிக எண்ணிக்கையில் அடிமைகள் ஒருவர் வைத்திருக்கிறாரோ அந்த அளவு அவர் பெரும் தனக்காரர் என அறியப்படுவார். அவர்கள் குடும்பத்திற்கு 2000 அடிமைகள் இருந்தனர். அவர்களை விற்க அவர்கள் முழு உரிமை படைத்தவராக இருந்தனர்.
பகுனின் பாட்டனார் மிஷேல் வசிலெவிச் பகுனின் ருஷ்யாவின் அரசியார் இரண்டாம் காத்ரின்  அரசவை கவுன்சிலராக இருந்தவர். அவருக்கு பிறந்த மூன்றாவது மகன் அலெக்சாந்தர் பகுனின். ஒன்பதாவது வயதில் அவரது உடல்நிலை கருதி இத்தாலி பிளாரன்ஸ்க்கு அனுப்பப்படுகிறார். அங்கு ரஷ்ய தூதரக உறவுக்காரர் வீட்டில் தங்கவைக்கப்படுகிறார். மீண்டும் 25 ஆண்டுகள் கழிந்துதான் தனது 35ஆம் வயதில்தான்  அவர் ருஷ்யா திரும்பமுடிகிறது . இத்தாலியில் படித்து அலெக்சாந்தர் பகுனின்  பதுவா பல்கலையில் தத்துவ டாகடர் பட்டம் பெற்றார். அவர்களது குடும்பம் தங்கியிருந்த ரஷ்யாவின் ப்ரெமுகினோ பகுதியில் தன் தந்தை மறைவை ஒட்டி சர்ச் ஒன்றை அக்குடும்பம் கட்டியது.
அரசர் மகாபீட்டர்  மேற்கு அய்ரோப்பிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி உயர்தட்டினருக்கு பழக்குவராக இருந்தார். பெண்கள் பொதுஇடங்களுக்கு வருதல், தாடி மழித்தல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்புதல் என்பதும் சமுகத்தில் நுழைந்த காலமது. மகாராணி இரண்டாம் காத்ரின் இலக்கிய ஆர்வம் நிறைந்தவராக இருந்தார். அவர் வால்டேர் உடன் பரிமாற்றங்களை வைத்திருந்ததாக தெரிகிறது. நாகரீக வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரிடம் பகுனின் தந்தையின் மாமா பணியாற்றிவந்தார். பகுனின் தந்தைக்கு நல்ல இலக்கிய தத்துவ பின்புலம் கிடைக்க இச்சூழல் உதவியது.
ருஷ்யா வந்த தந்தையார் அரசாங்க பணிகளை விட்டு வீட்டு சூழலில் ஆர்வம் காட்டுகிறார். வீட்டிற்கு ஏராள நண்பர்கள் வந்து போயினர். இரகசிய கழகம் ஒன்றிற்கு அவரை தலைவராக்கிட அவர்கள் முயற்சித்தனர். 1815-25 ஆண்டுகளில் தலைமை எடுக்காவிட்டாலும் இரகசிய கழகத்தில் பகுனின் தந்தை பணியாற்றினார். இயற்கையை நேசிப்பது, சிந்தனையில் ஆழ்வது என்கிற இரு செயல்களில் அவர் பெருவிருப்பம் கொண்டவராக இருந்தார். நீங்கள் ஏன் சுதந்திர வேட்கை கொள்ளக்கூடாது என அடிமைகளிடம் திடீரென பேசுவார்.
அண்டை வீட்டில் குடிவந்த பிரபுத்துவ குடும்ப பெண் 18 வயதான வர்வராமுரவீவ் என்பவரிடம் காதல்வயப்பட்டு 40 வயதில் அலெக்சாந்தர் பகுனின் அப்பெண்ணை மணக்கிறார். அவர்களுக்கு முன்றாவது குழந்தையாக பகுனின் பிறக்கிறார்.. பகுனின் சேர்த்து அவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்தன. அவர்களது குழந்தைகள் பொதுவாக தாயிடம் ஒட்டுதலாக இல்லை..ஆரம்பத்தில் வீட்டில் தாராள கருத்துக்கள் நிலவினாலும் சூழல் ஜாரிடம் விசுவாசமாக இருப்பதை அவசியப்படுத்தின. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 14 வயதில் பகுனின் ஆர்ட்டில்லெரிக்கு இராணுவ பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார். ருஷ்ய மொழி தவிர பிரஞ்சு, கொஞ்சம் ஆங்கிலம், ஜெர்மனி மொழிகள் பழக்கமாயின.
வீட்டிற்கு பாதிரிமார்கள் வந்துபோனாலும் மதம் குறித்த எந்த கட்டாயமும் பகுனினுக்கு இல்லாமல் இருந்தது. அவர் நம்பிக்கையற்ற தன்மையில் வளர்வதற்கு வீடு தடையாக இல்லை.  பல நேரங்களில் அவர் உள்ளொளியிலிருந்து பேசத்துவங்கினார். ’பிரின்சிபில்ஸ்’ என்பதெல்லாம் வைத்துக்கொள்ளாமல் இருந்தார். அநீதி எனப் பட்டுவிட்டால் எதிர்த்து வந்தார். அதற்கு காரணகாரியங்களை தேடவில்லை. தந்தை குழந்தைகளிடத்தில் தான் பலநாடுகளுக்கு சுற்றிய கதைகளை சாகசங்களை அவர்கள் வியந்து கேட்கும்படி சொல்வார். புதிய உலகங்களுக்கு பயணிக்கவேண்டும் என்ற ஆர்வம் பகுனினுக்கும் ஏற்பட்டது. வீட்டைவிட்டு வெளியேறவேண்டும் பயணிக்கவேண்டும் என்கிற தாகம் அவரை விரட்டியது.
பகுனின் அதிகாரி ரேங்கில் ஆர்ட்டிலெரி பயிற்சியிலிருந்து வெளியே வந்தாலும், தந்தை மற்றும் உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால் அவர் சிறு கிராமத்திற்கு அனுப்பப்பட்டார். அவருக்கு என  குடிசை ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவரின் ஒத்துழையாமையால்  இராணுவ சேவையிலிருந்து ராஜினாமா செய்திட வற்புறுத்தப்பட்டார். அவர் மாஸ்கோ வந்தார். அங்கு நண்பர்கள் குழாமுடன் ஹெகல் தாக்கத்திற்கு உள்ளானார். இரவு முழுதும் அவரது புத்தகங்களை வரிக்குவரி படித்து விவாதம் நடைபெறும்.
 Straus ஸ்ட்ராஸ், பாயர்பாக் எழுத்துக்கள் பழகின. 1827ல் ஹெர்சன் என்பார் மாஸ்கோ பல்கலைகழகத்தில் இருந்தார். ஜாரின் ஆட்சியில் ஆசிரியர்கள் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டனர். சுயசிந்தனைக்கு தடை சூழல். ஆட்சியாளர்களின் ஆணை எனும் எல்லைக்குள் நின்றுதான் சொற்பொழிவுகள் நடந்தன. வால்டேர், ரூசோ எல்லம் மாஸ்கோ கல்லூரிக்குள் நுழையமுடியவில்லை. ஹெர்சன் மீறி எழுதியதால் கைதானார். பின்னர் விடுதலை செய்யப்பட்டு பகுனின் குழாமில் சேர்ந்தார். ஜெர்மன் தத்துவஞானக்குழாமாக பகுனின், பிரஞ்சு புரட்சிகர சிந்தனை குழாமாக ஹெர்சன் என வேறுபாடுகள் இருந்தன. ருஷ்ய சமூகம் ஜெர்மானிய சிந்தனைகளை கொள்ளவேண்டும், பிரஞ்சு சிந்தனைகளை அல்ல என்பதை பகுனின் வலியுறுத்திய நேரமது.
பகுனின் தீவிர கருத்தாக்கங்கள் ஹெர்சனை கவராமல் இல்லை. கடவுள் மறுப்பில் அவரின் தீவிரம் உணரப்பட்டது. 1841ல் அவர் பெர்லின் சென்றார். அங்கு ’சிவப்பில் அதி சிவப்பு’ என தன்னை வெளிப்படுத்தினார். 1842ல் அவர் ரூகேவின் பத்ரிக்கையில்  The Reaction in Germany   என்ற கட்டுரையை எழுதினார்.  பிரான்சில் புருதான் மீது பகுனினுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. புருதான் சொத்து என்பது திருட்டு என்றார். தீர்க்கதரிசி என்கிற வகையிலும் சமுகத்தை மறுகட்டுமானம் செய்வேன் என நம்பிக்கை வைத்தவர் என்கிற வகையிலும் அவர் ஏசுவிற்கு தனது புகழை தெரிவித்தவர்.
இலக்கியவாதி துர்கனேவ் பகுனின் நண்பரானார். பெர்லினில் அவர் ஹெகல் மறைந்தபின் புகழ்வாய்ந்த உரைகளை தந்துவந்த பேராசிரியர் வெர்டெர், ஷெல்லிங் வகுப்புகளுக்கு சென்றார்.  வெர்டர் உரைகளால் அவர் ஈர்க்கப்பட்டார். 1843ல் கம்யூனிச கருத்துக்களை பேசிவந்த வைட்லிங்குடன் ஏற்பட்ட சந்திப்பு அவரை நடைமுறை புரட்சிகர கருத்துக்களுக்கு கொண்டுசேர்த்தது. வன்முறை மூலம் மாற்றம் என்பதை அவர் ஏற்றார். வைட்லிங் ஏசு குறித்து எழுதியவை பிரச்சனையாகி கைது செய்யப்படுகிறார். அவரின் குறிப்புகளில் பகுனின் பெயர் பல இடங்களில் இருந்தது. இதை அறிந்த ருஷ்ய அரசாங்கம் 1843ல் பகுனின் தந்தைக்கு அவர் பகுனினுக்கு எந்தவித நிதி உதவியையும் செய்யக்கூடாது, மகனை உடன் ருஷ்யாவிற்கு அழைத்துவரவேண்டும் என்றது. தந்தை பணிவுடன் தான் பணம் அனுப்புவது இல்லை என்றும் மகனின் நடவடிக்கைகளை ஏற்கவில்லையென்றும் மரியாதையுடன் பதில் அனுப்பினார்.

1844 துவக்கத்தில் பகுனின் பாரீஸ் சென்றார். அங்கு   ஹெர்வே, ரூகே, மார்க்ஸ் ஆகியவர்களை சந்திக்கிறார். மார்க்ஸ் உடன் சந்திப்பு முதல்முறையாக மார்ச் 1844ல் நடக்கிறது. பாரிசில் அவர் பிரஞ்சு, இங்கிலீஷ் கற்கிறார். 1845ல் அவர் புருதானால் கவரப்படுகிறார். சொத்து என்பது திருட்டு. கடவுள் இல்லையெனில் சொத்துடையோர் இருக்கமுடியாது.  அரசியல் அமைப்பு சட்டத்திற்குள் நிற்கமுடியாது போன்ற கருத்துக்கள் அப்போது புகழ்பெற்றன. பகுனின் புருதானுக்கு ஹெகலை அறிமுகப்படுத்துகிறார். புருதான் பற்றி நல்ல மரியதையை பகுனின் கொண்டிருந்தார். கோட்பாட்டு சோசலிஸ்ட்களைவிட  புருதான் மேலானவர் என்பார் பகுனின்.
ஹெகலின் கட்டுமானம் என்பதில் அழிவு என்பதும் பகுதிதான் என்பதை ஏற்றவர் புருதான். சமுக அமைப்பு அரசியல் அமைப்பின் மோதல் வேறுபாடுகளை தாமஸ் பெயின் சொன்ன வகையில் ஏற்றவர் புருதான். இவைகளை கொண்டு தனது அனார்க்கிச சாரத்தை  வெளிப்படுத்தியவர். ஆரம்பத்தில் பகுனின் முழுமையாக புருதானை புரட்சிகரவாதி என கொண்டாடினாலும் மார்க்சைபோல் பின்னாட்களில் விமர்சன பார்வையுடன் அவரை ஐடியலிஸ்ட், மெடாபிசிசியன் என்கிற வகையில் விளக்கத் துவங்கினார். 1873ல் புருதான் குறித்த மார்க்சின் விமர்சனத்தை ஏற்பதாகவும் தெரிவித்தார்.
பொருள்முதவாத வரலாறு மார்க்சின் உன்னத பங்களிப்பு என பகுனின் இக்காலத்தில் பேசத்துவங்கினார். பாரிசில் மார்க்சை சந்தித்தபின் பாராட்டுக்களை தந்தார். மார்க்ஸ் என்னைவிட பெருமளவு முன்னேற்றகரமான சிந்தனையில் இருந்தார். அதிகம் கற்றவராக இருந்தார். அப்போது எனக்கு அரசியல் பொருளாதாரம் என்னவென்றுகூட தெரியவில்லை. எனது சோசலிசம்  உள்ளுணர்வு வசப்பட்ட ஒன்றாகவே இருந்தது. என்னைவிட இளையவர் என்றாலும் 1847லேயே சில அடிப்படைகளை அவர் நிறுவினார். நாங்கள் அடிக்கடி சந்தித்தோம். அவரின் கற்கும் தீவிரம், உழைப்பு என்பது மரியாதைக்குரியது.  சிலநேரம் தனிப்பட்ட கர்வம்  மார்க்சிடம் தெரிந்தாலும் பாட்டாளிகளுக்காக உழைக்கிறார் என்கிற பதிவை மனம் திறந்து பகுனின் செய்தார்.
பகுனின் போலந்து நண்பர்களுடன் சுவிட்ஜர்லாந்த் சென்றார். அங்கு சோசலிஸ்ட்களின் வழக்கில் சிக்கி தனது ருஷ்யா ராணுவ அதிகாரிக்குரிய அனைத்தையும், நோபிலிட்டி  பிரபுக்குல சிறப்பு சலுகையையும் இழந்தார். சுவிஸ் நாட்டின் பல்வேறு உட்கிராமங்களில் அலைந்து திரிந்தார். நவ 29 1847 போலந்து எழுச்சி வார்சாவில் ஏற்பட்டது. பகுனின் போலந்து ஆதரவு உரை சிறப்பாக வரவேற்கப்பட்டது. ருஷ்யனாக இருந்தாலும் போலந்தின் விடுதலைக்காக கலகக்கார்களுடன் பகுனின் நிற்பதை ருஷ்யா கண்ணுற்றது. ருஷ்யாவும் புரட்சியை காணும் என அவர் பேசினார். பிறகுதான் பாரிசில் மார்க்ஸ் தொடர்பு அவருக்கு கிட்டியது..

பார்சிலிருந்து பகுனின் வெளியேற வேண்டும், அவர் தலையை கொணர்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபிள் என ஜார் அறிவித்தார். வெளியேற்றப்பட்ட பகுனின் மார்க்சைப்போலவே பிரஸ்ஸல்ஸ் சென்றார். 1848 ஜூனில் அவர் ஸ்லோவியர்- போலந்தினர் காங்கிரஸ் அமர்விற்கு சென்று அவர்களின் திட்டம் ஒன்றை எழுதினார். ஆங்கில வியாபாரிபோல தனது தலைமுடியை மாற்றி மாறுவேடத்தில்தான் அவர் செல்லவேண்டியிருந்தது

1847-48களில் அவர் ருஷ்யன் ஏஜண்ட் என்கிற தாக்குதலுக்கு ஒருபுறம் உள்ளானார். மற்றொருபுறம் ஜார் அரசனை கொல்ல ஏஜெண்ட்களை ஏற்பாடு செய்து அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றசாட்டும் எழுந்தது. பகுனின் கைது செய்யப்பட்டு அவர் எழுத்துக்களில் ஜெர்மன், போலந்து புரட்சிகர தொடர்புகள் இருப்பதாக உறுதி செய்தனர். பிரஷ்ய அரசு அவரை செப்டம்பர் 1848ல் வெளியேற்றியது மாறுவேடத்தில் அவர் பயணிக்கவேண்டியதானது.

Bakunin பகுனின் 2

II
பகுனின் பொறுத்தவரை அவர் புரட்சியை பெரும் சிந்தனைக்கு பின்னர் வரும் ஒன்றாக கருதவில்லை. தன்னெழுச்சி என புரிதலுடன் இருந்தார். Revoultion is  instict rather than thought  என்பார். அவர் ஜெர்மன் மொழியில் எழுதுவதைவிட பிரஞ்சில் எழுதுவதை எளிதாக கருதினார். ஆரம்பகால ருஷ்ய சோசலிஸ்ட்கள் பகுனினால் ஈர்க்கப்பட்டார்கள். புருதான் அதிகாரம் என்பது அதுயார் கையில் இருந்தாலும் ஒடுக்குதலையே செய்ய விழையும் என்றார். 1848ல் பிரான்சில் நடந்த எழுச்சியை அவர் விவாதித்தார்.. Power is not radical but a panderer. It lacks initiative, the essential feature of social change என்றார் புருதான்.  மனித மூளையில் புரட்சி முதலில் பற்றவேண்டும். சமுக மாற்றத்திற்கு வன்முறை அவசியமற்று போகலாம் என்றார். ஹெர்சன், பகுனின் இருவரும் புருதானுடன் நெருக்கமாக இருந்தார்கள்.
ஹெர்சன்  ருஷ்யா திரும்பினார். தொடர்ந்து ஜாருக்கு எதிராக எழுதியதால் ருஷ்யாவிலிருந்து முழுமையாக 1848ல் வெளியேறினார். Death to the old world! Long live chaos and destruction! Long live death! out of the chaos , Socialism is to be born  போன்ற முழக்கங்களை ஹெர்சன் வைத்தார். ஹெர்சன் மாஸ்கோவில்தான் புரட்சி உருவாகவேண்டும் என்றார். அய்ரோப்பிய நாகரீகம் வீழவேண்டும் என்றார். கிராஜுவலிசம் என்கிற தன்மையை அவர் ஏற்கவில்லை.. சில நேரங்களில் மார்க்ஸ்- எங்கெல்ஸ் புரட்சிகர தன்மைகளை நீர்த்து போக வைக்கிறார்கள் என்கிற குற்றசாட்டை முன்வைத்தார் ஹெர்சன். Revolutionary negation of parliamentarism  என ஹெர்சன் சிந்தனையை கை ஆல்ட்ரெட் மதிப்பிடுகிறார்.

1848 புரட்சிக்கு பின்னர் பகுனின் எழுதிய ஸ்லாவியர்களுக்கு வேண்டுகோள் என்பது பல ஆய்வாளர்களால் முக்கிய ஆக்கமாக சொல்லப்படுகிறது. அதில் அவர் பூர்ஷ்வாக்கள் எதிர்புரட்சியாளர்கள், புரட்சியின் எதிர்காலம் தொழிலாளிவர்க்கத்தின் கைகளில், ஆஸ்திரியா சாம்ராஜ்யத்தின் தகர்வு மத்திய கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் குடியரசிற்கு முன்நிபந்தனை போன்ற கருத்துக்களை தந்திருந்தார். The whole world should understand that liberty was a lie where the great majority of the population is reduced to a wretched existence, where, deprived of education, of leisure, and of bread, it is condemned to serve as stepping stone for the powerful and the rich .. we must first purify our atmosphere and transform completely the milieu in which we live; for it corrupts our insticnts and our wills, and contracts our heart and our intelligence. The social question takes the form primarily of the overthrow of society.
1849ல் இசைகலைஞர் வாக்னருடன் பகுனின் தங்கினார். ஏப்ரல் 1849ல் பகுனின் ரிச்சர்ட் வாக்னரின் பீதோவன் 9வது சிம்பெனி நிகழ்வில் பங்கேற்கிறார். உலகில் அனைத்து இசைகளும் அழியும்போதுகூட அவை இந்த இசையை காப்பாற்றவேண்டும் என உறுதிமொழியை எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்லி வாக்னரை அவர் பாராட்டுகிறார். நட்பு பலப்பட்டு வாக்னர் இல்ல விருந்தாளியாக அடிக்கடி பகுனின் சென்றார். வாக்னர் துணைவியார்  இந்த விருந்தாளி நண்பர் இப்படி இறைச்சியை அள்ளி சாப்பிடுகிறாரே, ஒயினுக்கு பதில் பிராந்தியுடன் இருக்கிறாரே என வியந்து போனார். வாக்னர் காட்டுமிராண்டிப்போல் இருக்கும் அந்த நண்பர் விவாதங்களில் சாக்ரடிஸ் போல் பளிச்சிடுகிறார். அவர்தான் வலுவான வாதங்களை எப்போதும் வைத்து வெல்கிறார் என பதிவு செய்துள்ளார். நண்பர்கள் உபசரிப்பில் அவர்களிடமிருந்து பெறும் உதவித்தொகை கடன்களில்தான் பகுனின் வாழ்க்கை நடந்துகொண்டிருந்தது.
மே 10 1849ல்  இரவில் அவர் கைது செய்யப்படுகிறார். சிறை வாழ்க்கை  only thinking not a living one  என்ற உணர்வை கொடுத்தது. ஷேக்ஸ்பியர், பிரஞ்சு வரலாறு போன்ற புத்தகங்கள் கொடுக்கப்பட்டாலும் , தினசரி பத்ரிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 1850 ஜூனில் அவர் பிரேக் சிறைக்கு அழைத்துவரப்பட்டார். நீதிமன்றம் விசாரணைக்குப்பின்னர் அவருக்கு 1851ல் மரணதண்டனை என்றது. ஆனால் கடுங்காவல் ஆயுள் தணடனையாக அதை மாற்றினர்.
ஜாரின் அதிகாரி கவுண்ட் ஆர்லவ் என்பார் ஜூலை 1851ல் சிறையில் பகுனினை சந்த்திது மரணதண்டனை நிறைவேறாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் கருணை வேண்டுகோள் மனு ஒன்றை நீதிமானுக்கு வேண்டுதல் போல் அல்லாமல் ஆன்மீக ஆத்மார்த்த தந்தைக்கு எழுதுவதுபோல் ஜார் மன்னருக்கு எழுத அறிவுறுத்தினார். நிகோலஸ் மன்னர் எந்த ஒரு பாவியும் வருந்தி பிராயசித்தம் கேட்டால் மன்னிக்கவேண்டும். காப்பாற்றப்படவேண்டும். ஆனால் உண்மையானதாக இருக்கவேண்டும் என கருணைமனுவில் குறிப்பு எழுதினாலும் அவர் பகுனின் விடுதலை குறித்து எந்த அவசரமும் காட்டவில்லை.
ஆறு வருடங்களாக குடும்பத்தார் பார்க்க முடியாமல் இருந்த பகுனினை சிறையில் பார்ப்பதற்கு அவர் தந்தை சகோதரிக்கு அனுமதியை மன்னர் தந்தார். கண்பார்வை மங்கிய 83 வயது தந்தை 3 நாட்கள் பயணித்து சென்றால்தான் பகுனினை பார்க்க இயலும் என்ற நிலையில் சகோதரர் ஒருவருக்கு அனுமதி அளித்தனர். இருட்டறை கொடும் சிறைவாசத்தால் 1854ல் பகுனின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. சிறைஉணவு மூலவியாதியை அவருக்கு உருவாக்கியது. எலும்புருக்கி நோயும் ஏற்பட்டது. எப்போதும் காதில் சத்தம் கேட்க துவங்கியது. பற்கள் விழத்துவங்கின. அடிக்கடி பார்க்கவந்த சகோதரியிடம் அவர் மனம் உடைந்து எழுதிய பென்சில் குறிப்புகளை தந்தார். உயிருடன் புதைக்கப்படுவது போன்ற நிலை. சாகசங்கள், புரட்சிகர கனவுகள் நான்கு சுவருக்குள் அடைப்பட்டு நான் இற்று வீழ்கிறேன் . புகழ்வாய்ந்த நெப்போலியனாக இருந்தாலும் கருணை வடிவமாக ஏசுவே ஆனாலும் இந்த சிறையிருட்டில் பைத்தியமாகிவிடுவார்கள்  அவர்களே ஆகிப்போவார்கள் என்றால் என்ன புத்தி இருந்தால் என்ன நான் எம்மாத்திரம் என வேதனை விம்மல்கள் அக்குறிப்பில் பட்டு தெறித்தன...
பகுனின் ஆகஸ்ட் 1849 முதல் மே 1850 வரை கொனிஸ்டெயின் எனும் சிறையில் வைக்கப்பட்டார். அவரை விசாரித்து மரணதண்டனை என தீர்ப்பிடப்பட்டது. அவர் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் பிரேகிற்கு அனுப்பபட்டார். மரணதண்டனைக்கு பதிலாக.. அங்கு அவர் சுவர்களுடன் சங்கிலியால் ஆறுமாதம் பிணைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆஸ்திரியா அரசாங்கம் மீண்டும் மரணதண்டனை என்றது. பிறகு அதை ஆயுள் தண்டனை என குறைத்தனர். 1851ல் அவருக்கு பிணைக்கப்பட்டிருந்த முரட்டு சங்கிலியின் அளவு குறைக்கப்பட்டது.
1851ல் அவர் அலெக்சிச் எனும் கோட்டையில் அடைக்கப்பட்டார்.  ஜார் மன்னன் தூதன் ஒருவனின் மூலம் பகுனின் தனது புரட்சிகர நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை ஒன்றை தரவேண்டும் என சொல்லப்பட்டது.  தனது அவமதிப்பை பொறுத்துக்கொண்டு அதை பகுனின் செய்ததாக ஆல்ட்ரெட் தெரிவிக்கிறார். ஜார் நிகோலஸ்க்கு அவர் எழுதிய விண்ணப்பத்தில் “ It is hard for me, CZAR of mine, an erring, estranged, misled son, to tell you he has had the insolence to think of the tendency and the spirit of your rule. It is hard for me because, I stand before you like a condemned criminal. It is painful to my  self love. It is ringing in my ears as if you, my Czar said: The boy baables of things he does not understand.
பகுனின் தாயாரும்  இரண்டாம் நிகோலஸ் அலெக்சாந்தர்க்கு விண்ணப்பித்தார். உங்கள் மகன் உயிருடன் இருக்கும்வரை அவர் சுதந்திரமாக இருக்கமுடியாது என்ற பதிலை அரசாங்கம் அனுப்பியது. பின்னர் பிப்ரவரி 4, 1857ல் பகுனின் மறுபடியும் பெட்டிஷன் வேண்டுகோள் மனு அனுப்பினார். அதில்  My Lord King by what name shall I call my past life? I have done nothing in my life except to commit crimes..if I could rectify my past by an act, I would ask mercy and opportunity to do this. I should be glad to wipe out with blood my crimes against you, my Czar.. I am not ashamed to confess my weakness.. I confess that the thought of dying in loneliness, in the dark prison cell, terrifies me more than death itself and from the depths of my heart and soul I pray your Majesty to be released, if it is possible, from this last punishment, the heaviest that can be என வேண்டியிருந்தார்.
ஆகஸ்ட் 1856ல் அலெக்சாந்தர் ஜார் பலரை விடுவித்தார். ஆனால் பகுனின் விடுவிக்கப்படவில்லை. பகுனின் நாடு திரும்பாமல் பல்வேறு பகுதிகளுக்கு மாறி சென்று சுற்றுவதை அறிந்து கோபம் அடைந்த ஜார்  ex- Ensign Michael Bakaunin- loss his noble rank and to banishment to saiberia for an indefinite period with hard labour; and his property was declared confiscated to the State  என்கிற உத்தரவை பிறப்பித்தார். சைபீரியாவிற்கு கடின உழைப்புமுகாமிற்கு கடத்தப்படுதல், சொத்து பறிப்பு என அவ்வுத்தரவு பேசியது.
 1857ல் அவர் மேற்கு சைபீரியவிற்கு அனுப்பபட்டார்.  அங்கு  உள்ளார்ந்த தோம்ஸ் பகுதி ஒன்றில் அவர் வசிக்க அரசாங்கம் அனுமதி தந்து இடம் கொடுத்தனர். சைபீரியாவில் கடத்தப்பட்டு வாழ்க்கை நடத்துபவர்கள் பெரும் அறிவுஜீவிகளாகவும் போராட்டக்காரர்களாகவும் இருப்பர். அரசியல் காரணமாக அங்கு அனுப்பப்பட்டவர்கள் செலவை தாங்களே பார்த்துக்கொள்ளவேண்டும். கடினமான வாழ்க்கை சூழலை சந்திக்கவேண்டியிருந்தது. இந்நிலையில் அங்கு க்வியாகோவிஸ்கி என்கிற போலந்து வர்த்தகர் குடும்ப நட்பு  ஏற்பட்டது. அவரது பெண் அந்தோனியாவுடன் காதல் மலர்ந்து திருமணம் என முடிவெடுத்தனர். அந்தோனியாவிற்கு வயது 18. மணவாழ்க்கை எனில் குடும்பம் நடத்த பணம் தேவை. அரசாங்கம் அவருக்கு அங்கு குமாஸ்தா வேலை கொடுத்தது. மாபெரும் ருஷ்யா ஜார் குடும்ப உறவினர், ராணுவ அதிகாரியாக இருந்தவர்,  மரண தணடன பிறப்பிக்கப்பட்டவர் சைபிரியாவில் கடத்தப்பட்டு குமாஸ்தாவாக வாழ்ந்துகொள் என சொல்லப்பட்டதை வேண்டாம் என உதறினார் பகுனின். 1858ல் அந்தோனியாவை மணம் முடித்தார். 1859ல் ருஷ்யா கைப்பற்றிய அமுர் எனும் பகுதியில் தங்கிட பகுனின் அனுமதிக்கப்பட்டார்.
பகுனின் உறவுக்காரர் கிழக்கு சைபீரியாவின் கவர்னர் ஆக வந்தார். அவர் வந்தபின் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பகுனினுக்கு வேலை கிடைத்து வர்த்தகம் தொடர்பாக சைபீரியா முழுமையும் சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. பகுனின் தாயார் ஜாரிடம் தொடர்ந்து வின்ணப்பித்து வந்தார். சைபீரியா கவர்னரும் அவரை ரஷ்யா திரும்பிட ஏற்பாடுகள் செய்ததாக சொன்னார். பகுனின் உடல்நிலை தேறியது. மீண்டும் புரட்சிகர எண்ணங்கள் அவரை உந்தி தள்ளின இத்தாலியில் கரிபால்டி சுதந்திர கொடியை உயர்த்தினார்.  பகுனின் தனது புரட்சிகர என்ணங்களை அடக்கி கொள்ள முடியாமல் வெளியேற முயற்சித்தார். ஜாருக்கு எழுதிய கருணை மனுக்களை அவர் மறந்தார்.
கம்பெனியிடமிருந்து இரு வருட ஊதியம் என 5000 ரூபிள்கள் பெற்றுக்கொண்டு மனைவியையும் அழைத்துக்கொள்கிறேன் என உறுதி  தந்துவிட்டு 1861 ஜூனில் வெளியேறுகிறார். 2000 மைல்கள் 4 வாரங்களில் அவர் பயணித்தார் என வரலாற்று அறிஞர் ஈ எச் கார் சொல்கிறார். ஆகஸ்ட் 4 1861ஒல் ஜப்பானிய துறைமுகம் ஒன்றை அடைந்தார். அக்டோபர் 14 அன்று சான்பிரான்சிஸ்கோ வந்தார். பின் நியுயார்க், போஸ்டன் சென்றார். லிவர்பூல் சென்று டிசம்பர் இறுதியில் லண்டனை வந்தடைந்தார்.

பகுனின்  தன் பிரஞ்சு நண்பர் மாதம் தரும் நிதியை கொண்டு லண்டன் வாழ்க்கையை நடத்தினார். போட்கின் என்ற அந்த நண்பர் 23 பவுண்ட்கள் தருவார். பழைய நண்பர் ஹெர்சன் 10 பவுண்ட்கள் தருவார். துர்கானேவ் வருடத்திற்கு 1500 பிராங்கிற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் பகுனின் அதைப்பெற ஆர்வம் காட்டவில்லை என்கிறார் கார். தான் பாரிசிலோ கல்கத்தாவிலோ இருக்கவேண்டும் என ஹெர்சன் விரும்பியதாக குறிப்பு ஒன்றை பகுனின் கடிதம் மூலம் அறியமுடிகிறது. பகுனின் போலந்து, ரஷ்யா, இத்தாலி புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகொண்டு செயல்படத்துவங்கினார். பேசக்கூடிய அளவிற்கு ஆங்கில புலமையை வளர்த்துக்கொண்டார். மாஜினியுடன் சிறிது காலம் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார்.
1862ல் பகுனின் தனது முழுகவனத்தையும் ரஷ்ய ரகசிய குழுக்களுடன்  குவித்தார். அவர் நெறியாளராகவும் ஹெர்சன் வெளியீட்டாளராகவும் செயல்படத்துவங்கினர். அவர்கள் பயன்படுத்திய ரகசிய  சமிக்ஞைகள் போலிசாரால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவையாக இருந்தன. பகுனினுக்கு பிரைக்லாவ் என்கிற ரகசிய பெயரிடப்பட்டிருந்தது. ரஷ்ய பயணிகள் சிலரை நம்பி பகுனின் கரிபால்டி உட்பட பலருக்கு எழுதிய கடிதங்கள் பல ருஷ்யா அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. துர்கனேவ் போன்றவர்கள் பீட்டர்பர்க்கிற்கு 1863ல் விசரணைக்கு அழைக்கப்பட்டனர்.
பகுனினின் ரகசிய குழு இயக்க முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஹெர்சனின் முழக்கமான  Land and Liberty  சிலரை கவ்விப்பிடித்தது. 1862 ஆக்ஸ்டில் அவர் பாரிஸ் செல்லும்போது அவர் தொடர்ந்து ஆதரிக்கும் போலந்து புரட்சியாளர்கள், முந்திய ராணுவ தளபதிகளை சந்தித்தார். போலந்து விடுதலைக்குரிய கட்டுரைகளை ஹெர்சன், பகுனின்  அவர்கள் நடத்திய தி பெல் இதழில் இடம்பெற செய்தனர்

Bakunin பகுனின் 3

III
1863 ஜனவரி இறுதியில் போலந்து எழுச்சி ஏற்பட்டது, கொரில்லா போர்முறை கையாளப்பட்டது. பகுனின் எழுச்சி நடைபெறும் இடங்களில் இருக்கவேண்டும் என விழைவுகொண்டவர். ருஷ்ய ராணுவம் போலந்தினரை கடுமையாக தாக்கி அழித்தது. பகுனின் வார்சா புரட்சிகர கமிட்டிக்கு தனது  சேவையைத்தர முன்வந்தார். ருஷ்யர்களை பற்றிய அவநம்பிக்கை அங்கு புரட்சிகாரர்களிடம் இருந்தது.
ஸ்வீடன் சென்ற பகுனினுக்கு அங்குள்ள தீவிர நண்பர்கள் சிலர் வரவேற்பை தந்தனர். ஸ்டாக்ஹோமில் அவர் பெயர் பரவத்துவங்கியது. பகுனின் மற்றும் அவர் துணைவியார் அக்டோபர் 1863வரை ஸ்டாக்ஹோமில் இருந்தனர். பின்னர் அவர்கள் இத்தாலி சென்றனர். கரிபால்டியின் உதவியாளர்கள் அக்குடும்பத்தை வரவேற்று உபசரித்தனர். இத்தாலியில் பகுனின் செல்வாக்கு பெறத்துவங்கினார். கரிபால்டி தங்கியிருந்த இடத்திற்கு சென்று சந்தித்து விடுதலை இயக்க நிலைமைகள் குறித்து உரையாடினர். பின்னர் பிளாரன்சில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கரிபால்டிக்கு கடவுள் நம்பிக்கையும் மனித வரலாற்று கடமை உணர்வும் இருந்தது. பகுனின்  God exists, therfore man is a slave. Man is free, therefore there is no God. Escape this dilemma who can   என்கிற சிந்தனையை வெளிப்படுத்தினார்.
மார்க்ஸ் உடன் அகிலத்திற்கு பகுனின் பயன்படலாம் என்கிற எண்ணத்தில் நவம்பர் 3 1864ல் 16 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் சந்திக்க ஏற்பாடு நடந்தது. மார்க்ஸ் எங்கெல்ஸ்க்கு எழுதிய கடிதத்தில் இந்த 16 ஆண்டுகளில் முன்னேற்றகரமாக அவர் மாறியுள்ளார். அவரை பிடிக்கிறது என எழுதினார். பின்னர் பகுனினுக்கு அடுத்த மாதங்களில் மூன்று கடிதங்களை மார்க்ஸ் எழுதினார். அகிலத்தின் அறிக்கையை கரிபால்டிக்கு தந்து இத்தாலியில் மொழிபெயர்க்க வேண்டினார்.  பகுனினுக்கு இத்தாலியின் மாஜினி, கரிபால்டி தேசியவாதம் புரட்சிகரமாக தோன்றவில்லை. அவர் தனது  Revoultionary Catechism  மூலம் தன்னை தேசியவாத எல்லைக்கு வெளியே நிறுத்திக்கொண்டார்.  The radical destrution of all existing institutions, religious, political, economic and social.. Establishment of a universal society based on liberty, reason, justice and labour  என்றார்.
இத்தாலியில் அவர் இருந்த 1864-67 காலத்தில் அவரிடம் அனார்க்கிச கருத்துக்கள் உயர் வடிவங்களை எய்தின. 1864ல் அவர் ரகசிய புரட்சிகர சர்வதேசம் என்கிற அமைப்பை உருவாக்கினார். அதன் திட்ட அறிக்கை 1865-66 காலங்களில் உருப்பெற்றது. அவரது  Revoultionary Catechism, National catechism போன்றவை spiritual foundation of anarchist movement என மதிப்பிடப்படுகின்றன
1867-72 காலங்களில் தன்னை அரசியல் புரட்சிகர சிந்தனையாளராக தனது பேச்சு எழுத்துக்கள் மூலம் பகுனின் வெளிப்படுத்திகொண்டார். ஜனநாயகவாதிகளே திரளுங்கள் என்கிற அழைப்புடன் 10 ஆயிரம்பேர்கள் கையெழுத்திட்ட 6000 பேர் பங்கேற்ற ஜெனிவா காங்கிரஸ் 1867 செப்டம்பர் 9 அன்று கூடியது, கரிபால்டி பங்கேற்றார். பகுனின் ருஷ்ய பிரதிநிதியாக வந்தார். ஜான் பிரைட், ஸ்டூவர்ட் மில் போன்றவர்கள் கூட ஆதரவாக இருந்தனர். கரிபால்டி ’ரிலிஜன் ஆப் காட்’ என்றார். சிலர் சோசலிசம் என்றனர். பகுனின் பிரஞ்சு மொழியில் பேசினார். ருஷ்யா காப்பற்றப்பட அங்கு பெடரலிசம், சோசலிசம் தேவை என்றார்.  Universal peace will be impossible so long as the present centralised States exist. We must desire their destruction.. there may arise free unions organised from below by the free federation of communes, of provinces into nation and nations into United states of Europe என்றார். மையப்படுத்தப்பட்ட அரசு எனில் அங்கு உலக அமைதி என்பதில்லை எனவே அரசை அழித்தல் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
1869ல் பகுனின் தனது துணைவியாருடன் ஜெனிவாவில் வசித்தார். அங்கு பாட்டாளிவர்க்கம் அரசியல் தொடர்பில் இருந்தார். பாலே வில் 1869 செப்டம்பர் 6ல் அகிலத்தின் 4வது காங்கிரஸ் கூடியது. இதில் பகுனின் பங்கேற்றார். மார்க்சின் நம்பற்குரிய தோழர் எக்காரியஸ் பங்கேற்றார். மோசஸ் ஹெஸ் ’பாலே காங்கிரசில் கம்யூனிஸ்ட்களும் கலெக்டிவிஸ்ட்களும்’ என கட்டுரை எழுதினார். பகுனின்  தன் மீதான விமர்சனத்திற்கு பதில் தந்தார். அனார்க்கிஸ்ட்களாகிய தங்கள் மீது விமர்சன கணைகள் வருவதற்கு மார்க்ஸ்தான் மூல காரணம் என பகுனின் எழுதினார். அவர் என்னைப்பற்றி என்ன சொன்னாலும், அகிலத்திற்கு அளப்பரிய சேவை செய்து வருகிறார். நான் மார்க்ஸ் மீது சண்டை தொடுத்தால் அகிலத்தின் பெரும்பான்மை என்மீது பாயும். எனக்கு வேலை செய்ய கிடைத்துள்ள அந்த இடமும் இல்லாமல் போய்விடும் என எதார்த்த நிலையை எழுதினார் பகுனின். மார்க்ஸ் எங்கெல்சிடம் இந்த ருஷ்யன் அய்ரோப்பிய தொழிலாளிவர்க்கத்தின் எதேச்சதிகாரியாக பார்க்கிறார் என தெரிவித்தார்.
ருஷ்ய பதிப்பாளர் ஜெனிவாவில் பகுனினை சந்தித்து காபிடலை மொழிபெயர்க்க சொன்னார். பகுனின் நிதி கஷ்டத்தைப்பார்த்து அவர் முன்பணமாக 300 ரூபிள் தந்தார். தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் 784 பக்கமுள்ள காபிடலை தினம் மூன்று பக்கம் கூட மொழியாக்கம் செய்யமுடியவில்லை என பகுனின் எழுதினார். விரைவில் 10 பக்கம் என்ற அளவிற்காவது செல்லவேண்டும் என்ற உறுதி அவரிடம் ஏற்பட்டது.  அவரது இளம் நண்பர்  Nechaev நேரிடையாக புரட்சிகு பணியாற்றாமல் இப்படிப்பட்ட செக்கமாட்டு வேலையிலிருந்து பகுனின் விடுபடவேண்டும் என வற்புறுத்தினார்.  பின்னர்தான் அந்நண்பர்  மோசடியானவர் என்பதை பகுனின் உணர்ந்தார்.
கார்லோ காம்புஸ்ஸி என்கிற இத்தாலிய அனார்க்கிஸ்ட் உடன் பகுனின் துணைவியாருக்கு உறவு இருந்து குழந்தை பிறந்தது. 1871 ஜனவரியில் அவர் தன் நிலைப்பற்றி குறிப்பு ஒன்றை விட்டு சென்றுள்ளார். மணிபர்ஸ் காலியாகவுள்ளது. அந்தோனியாவிற்கு 5 பிராங்க் மட்டுமே கொடுக்க முடிந்தது. வாங்கிய கடன்கள் எல்லாம் செலாவாகிவிட்டது. வீட்டில் தேநீர் போடக்கூட வழியில்லை. அந்தோனியா எழுதிய கடிதம் ஒன்றில் எனக்கும் வயதாகிவிட்டது, எனது ரொட்டியக்கூட சம்பாதிக்க முடியாத நிலயில் இருக்கிறேன். நான் ரொம்ப நாள் வாழமுடியாது. பொருளாதார கஷ்டம் பகுனினை வாட்டுகிறது. அவர் தனது சக்தி நெறி அனைத்தையும் இழந்து வருகிறார். தன்னைப்பற்றி நினைக்காமல் ஒவ்வொரு மனிதனின் விடுதலைக்காக தன்னை அற்பணித்து கொண்டவரின் நிலை இப்படியாகவுள்ளது என எழுதியுள்ளார். ஓரிரு மாதங்களுக்கு பின்னர் பகுனினுக்காக இல்லாவிட்டாலும் அந்தோனியா குழந்தைகளுக்காக 1000 பிராங்க்ஸ் பணத்தை அவரது காதலன் காம்புஸ்ஸி அனுப்புகிறார். அந்தோனியா பெற்றோர் குடும்பம் மாதம் 50 ரூபிள் என அனுப்பத்துவங்கியது.

1871 நவம்பரில் குடும்பத்தில் இறைச்சி என்பதே இல்லை என்ற சூழல். விளக்கு ஏற்ற மெழுகுவர்த்திகள் இல்லை. அடுப்பெரிக்க  விறகு இல்லை என்ற நிலை இருந்ததாக கார் பதிவு செல்கிறது. வீட்டில் மிஞ்சி இருந்த 25 பிராங்க்  அந்தோனியா சகோதரன் இறந்ததற்கு இரங்கல் தந்தி கொடுக்க செலவாயிற்று. 1872ல் அந்தோனியா குழந்தைகளுடன் பிராங்க்பர்ட் சென்றார்.  பிரிவு எவ்வளவு மாதங்களுக்கு அல்லது நிரந்தரமா என சோகம் கவ்விய பகுனின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. இக்காலத்தில் இளைஞர் ஆர்மண்ட் ராஸ் என்பவர் பகுனிக்கு ஆறுதலாக இருக்கிரார். 1873ல் அந்தோனியா இல்லாத தனிமை இரவு முழுதும் விழிப்பு, வோட்கா அருந்துதல், நண்பர்களுடன் விவாதம் சச்சரவு என கழிந்தது, ஆஸ்த்மா நோய் அவரைத் தொற்றியது.
1873 செப்டம்பர் அக்டோபரில் கடும் சோர்வை அடைந்தார். மார்க்ஸ் உள்ளிட்டவர்களின் தாக்குதலை சந்தித்தார்.  அவர் மனம் சோர்ந்து ஒதுங்கிவிடுவதாக எழுதினார்.  All this has disgusted me profoundly with public life. I have had enough of it and all having passed all my life in the struggle, I am weary of it. I am  past sixty; and affection of heart which grows worse with age makes life more and more difficult. Let other youngermen takeup the work. For myself, I feel neither the strngth nor perhaps the confidence which are required to go on rolling Sisyphus's stone against the triumpahant forces of reaction. I am therfore retring from the lists, and ask my dear contemporaries only one boon: ovlivion. Henceforth I shall trouble no man's repose: and I ask, in myturn, to ve left in peace.. நான் ஒதுங்கிவிடுகிறேன். ஏச்சு பேச்சுக்கள் கேட்டு சலித்துவிட்டது என்ற நிலைக்குப் போனார்.

அவர் மேலும் எழுதினார். நான் பிறப்பால், வசதியான குடும்பத்திலிருந்து வந்த பூர்ஷ்வா. உங்கள் மத்தியில் சில பரப்புரைகளை செய்தேன். கடந்த 9 வருடங்களாக அகிலத்தில் உலக தேவைகளுக்கு தீர்வு என்பதைவிட அதிகமாக சிந்தனைகளுக்கான சண்டைதான் நடந்துள்ளது.  If the world can be saved by ideas and I defy anyone to invent a new one.. I have the conviction that the time has gone by for grand speeches, printed or spoken on theoretical questions,.. நேரம் செயலுக்கானது. பாட்டாளிவர்க்க அமைப்பு பாட்டாளிக்குரியதாக இருக்கவேண்டும் என்றார்.

Bakunin பகுனின் 4

IV
பகுனின் dictum என The passion for destruction is also a creative passion வாசகம் புகழ் பெறத்துவங்கியது  ஹெகலிடமிருந்தே மார்க்ஸ், பகுனின் துவங்கினாலும் ’ரீஆக்‌ஷன் இன் ஜெர்மனி’ என்கிற கட்டுரையில் பகுனின் பாயர்பாக் தனது நல்லாசிரியர் என்கிறார். மார்க்சின் விடுதலை குறித்த பார்வை ஒடுக்கப்படும் வர்க்கத்தின் விடுதலை என்பதாக இருந்தது. பகுனின் அதீத அளவில் தனிமனித விடுதலை என வற்புறுத்தினார். Individualism remains the essence of Bakunin's social and political system and his opposition to Marx  என்கிற மதிப்பீட்டை வரலாற்றாய்வாளர் கார் தருகிறார்.
1873ல் வினோத முரண்பாட்டில் அவர் சிக்கினார். சிவிஸ் நாட்டு தேச உரிமை பெற அங்கு வீடு சொத்து இருந்தால் பெறலாம் என் நண்பர்கள் சொல்ல அவர் அதற்கு முயற்சி எடுத்து வீடும் வாங்குகிறார். தனிச்சொத்து பற்றி பெரிதாக பேசிய அவருக்கு இது சோதனைதான் என கார் எழுதுகிறார். சில நேரம் அடுத்தவேளை சோற்றுக்கே வழியில்லை என்ற நிலையில் இருந்த பகுனின் சில மாதங்களில் நண்பர்கள் உதவிட சொத்து பெறமுடிந்தது. Carlo Cafiero  என்கிற தெற்கு இத்தாலி சார்ந்த அனார்க்கிஸ்ட் தலைவர் தனது சொத்துக்களை விற்று பகுனின் வாழந்திட சுவிட்சர்லாந்தில் வீடு வாங்கிக் கொடுத்தார். அவ்வீடு புரட்சியாளர்களின் புகலிடமாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டது. முதலில் 50 ஆயிரம் ப்ராங்க் கார்லோ அனுப்பிய குறிப்பு கிடைக்கிறது. அதே போல் மற்றொருமுறையும் அனுப்பியதற்கான செய்தியை கார் தருகிறார்.
1874ல் அந்தோனியா தnaது மூன்று குழந்தைகளுடனும், தாயாருடனும் அங்கு வந்து சேர்கிறார். ஆனால் பகுனினுக்கு ராஸ் மற்றும் கபியெரோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் வீட்டை கபியோரேவிற்கே இருந்த பசுமாடுகள், குதிரைகளுடன் எழுதிக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தோனியாவிற்கு இந்த விஷயங்கள் எதுவும் தெரியாத நிலையில் பகுனின் மிகவும் அவதிக்குள்ளானார். அந்தோனியா வந்த சில நாட்களில் பகுனின் ராஸ் உடன் இத்தாலி சென்றார். அங்கிருந்து அந்தோனொயாவிற்கு அவ்வீடு குறித்த விவரங்களை  A justificatory Memoir to my poor Antonia  என்று எழுதினார்.

Bolgona  பகுதியில் கலகக்காரர்களுடன் தபுருனி என்கிற பெயரில் பகுனின் மறைந்து வாழ்ந்தார். அங்கு கலகம் தோற்றவுடன் தற்கொலை செய்து கொண்டுவிடலாம் என கருதினார். பின்னர் அவர் முழுமையாக முக சவரம் செய்துகொண்டு மாறுவேடத்தில் நாட்டுப்புற பாதிரியார் போல பல இடங்களுக்கு சென்றார். பிறகு அவர் வீடு வாங்கிய சுவிட்ஜர்லாந்தின் லோகார்னோவிற்கு திரும்ப நினைத்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அந்தோனியா ராஸ் மூலம் அவ்வீடு புரட்சிக்கார்களுக்கு சொந்தமானது அவரது கணவருக்கல்ல என்பதை தெரிந்துகொண்டார்.
பகுனின் தாஸ்தவஸ்கி சூதாட்டம் ஆடிய காசினோவில் சென்று வந்ததாக கார் குறிப்பிடுகிறார். அந்தோனியா தன்னை ஏற்றுக்கொள்ளாமல் காதலன் காம்புஸியிடம் போக முடிவானால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வழியில்லை என்ற மனநிலை அவருக்கு உருவானது. ஆனால் செப்டம்பர் 1874ல் தன்னுடன் லுகானோ எனும் பகுதிக்கு வந்து சேரும்படி அந்தோனியா கடிதம் எழுதினார். பகுனின் அக்டோபர் 7, 1874ல் அந்தோனியா இருப்பிடத்திற்கு சென்று சேர்ந்தார். சில நாட்களில் அப்பகுதியில் மாஜினி ஆதரவு பேராசிரியர்களுடன் நட்பு பூண்டார். காம்புஸி அவ்வப்போது அங்கு வந்து சென்றார். லுகோனாவில் காலையில் காபி பத்ரிக்கைகள் படிப்பது, நண்பர்களுடன் விவாதம்,  மாலை 4 மணியிலிருந்து 8 மணிவரை உறக்கம், சிறிது நேரம் அந்தோனியாவுடன், பின்னர் இரவு வெகுநேரம் கண்விழித்து படித்தல், எழுதுதல் என்கிற முறையை கையாண்டு வந்தார். ஆங்காங்கே கடன்  இல்லாமல் இல்லை.
தொழிலாளர்களுக்கு அனார்க்கிசம் பற்றி எடுத்துரைத்து வந்தார். அவருக்கு நாம் நிறைய பேசிவிட்டோம். இனி வயதான காலத்தில் கற்றுக் கொள்வதுதான் உகந்தது என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர் ஜான் ஸ்டூவர்ட் மில், ஷோபன்ஹேர் புத்தகங்களை தினமும் படிப்பவரானார். திரும்ப காபிடல் புத்த்கம் வேண்டி நண்பர் ஆடால்ப் வோக்ட்க்கு எழுதினார். சொந்த ஊரான பிரேமுகினோவில்  சொந்தமாக இருந்த காடுகளை விற்றால் பகுனின் பங்காக லட்சம் பிராங்க் கிடைக்கும் என சகோதரர் மத்தியில் பேச்சு எழுந்தது. பிப்ரவரி 1875ல் 28000 பிராங்க் கொடுத்து லுகனான் நகருக்கு அருகில் வில்லா ஒன்றை அவர் வாங்கியதாக குறிப்பு கிடைக்கிறது. தான் இடுகாட்டிற்கு போவதற்கு முன்னர் சொந்த ஊர் வந்து உறவினர் அனைவரையும் பார்க்க விரும்புவதாக பகுனின் எழுதினார். விவசாயம் என்பதில் ஆர்வம் கொண்டு உரங்கள் குறித்து தெரிந்து கொள்ள கெமிஸ்ட்ரி படித்தார் பகுனின். பலவகை விதைகளை தருவித்தார்.
பகுனின் உடல்நிலை தளரத்துவங்கியது. ஆஸ்த்மா, இதயநோய், கால் வீக்கம், காதுகேளமையால் அவதிப்பட்டார். இத்தாலி தொழிலாளர் இருவர் காலை மாலை வந்து அவருக்கு ஆடை அணிவித்திட உதவினர். ராஸ், கபியெரோ போன்றவர்கள் அந்தோனியா அறியாமல் பகுனினை பார்த்து சென்றனர். 1876ல் அலெக்சாந்திர வெபர் எனும்  இளம் ருஷ்ய பெண் தினம் பகுனினை பார்க்க வரத்துவங்கினார். அவருக்கான தனி சிறுஅறையில் பல்வேறு மொழி புத்தகங்கள் , தினசரிகள் எழுதுகோல் மருந்துகள் ஆங்காங்கே முறையற்று காணப்பட்டன. வெபரிடம் அடிக்கடி ருஷ்யா தற்போது எப்படி இருக்கிறது எனக்கேட்டு அறிந்து வந்தார். அவரது சகோதரி தத்யானா அடிக்கடி சொல்லும் சாவது எப்படி அருமையாக இருக்கிறது என்பது அவருக்கு அடிக்கடி கேட்கத்துவங்கியது.
அந்தோனியா இத்தாலி போய்விட்லாம் என வற்புறுத்த துவங்கினார். அங்கி அரசியலில் ஈடுபடவில்ல்லை என ஆட்சியாளர்களுக்கு தெரிவித்து தங்கிவிடலாம் என்றார். வெபர் கடுமையாக இதை ஆட்சேபித்தார். பகுனின் தன் வரலாற்றை, பெருமிதத்தை இழந்துவிடுவார் என்றார் அந்த இளம் பெண் வெபர். ஆனால் அந்தோனியா பேச்சை பகுனினால் தட்ட முடியவில்லைல். தனது நம்பிக்கைகுரிய செருப்பு தொழிலாளியுடன் அவர் ஜூன் 1876ல் லுகானோ விட்டு புறப்பட்டார். வழியில் பெர்னேவில் அடால்ப் வோக்ட் அவரை ரயில் நிலயத்தில் வந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பழம் நண்பர்கள் பலர் மருத்துவமனை வந்து பார்த்தனர். அவர்களிடம் நான் என் நினவுகளை எழுதினால் யார் படிக்கப்போகிறார்கள் என வினவினார். ஷோபன்ஹார் புத்தகங்களை படிக்க வேண்டினார்.

அவரது உடல்நில ஒத்துழைக்க மறுத்து அவர் ஜூன் 28 1878ல் கோமா விற்கு சென்றார். முன்னதாக அவரை தினமும் பார்த்து இசை குறித்து ரெய்ச்சேல் குடும்பத்தினர் பேசிவந்தனர்.  ஜூலை 1, 1876ல்  சனிக்கிழமை மதியம் அவர்கள் வந்தபோது அவர் மறைந்த செய்திதான் கிடைத்தது. உடல் நிறமாறியது.  ஜூலை 3 அன்று அவரின் இறுதி சடங்குகள் நடைபெற்றன. நாற்பதுபேர்களுக்கு குறைவாக பங்கேற்றனர். எவ்வளவு பெரிய சவப்பெட்டி என அவ்வேலை செய்யும் தொழிலாளர்கள் சிரித்துக்கொண்டே பேசியதை கார் குறிப்பிடுகிறார். மிக எளிய முறையில் இறுதி சடங்குகள் முடிந்தன. வாழ்நாள் போராளி, அதிகாரத்திற்கு எதிரான குரல் எழுப்பிய போரளி எந்த பகட்டும் இல்லாமல் சவப்பெட்டிக்குள் அடங்கிப்போனார் என்கிறார் கார். அப்போது நேப்பிள்ஸ் நகரில் இருந்த அந்தோனியா பின் பெர்ன் வருகிறார். அங்கிருந்த நண்பர்களுடன் நடந்தது குறித்து கேட்டறிகிறார்.

BAKUNIN பகுனின் 5

V
 அகிலத்தில் மார்க்ஸ் உடன் பணியாற்றியபோதும் வேறுபாடுகள் எழுந்தன.  மார்க்ஸ் பகுனை ஜாரின் ஏஜெண்ட் என சொன்னார். ஆனால் பகுனின் சிறைவதைகளை அறிந்த ஹெர்சன், மாஜினி இருவரும் மார்க்ஸ் தனது வார்த்தைகளை திரும்ப பெறவேண்டும் என வற்புறுத்தினர். ஆனால் மார்க்ஸ் திரும்பபெறவில்லை. லண்டனில் பகுனின் தியாகத்தை மட்டுமே அங்கிருப்பவர் அறிந்திருந்தனர். அவர் குறித்த ருஷ்ய ஆவணங்கள் 60 ஆண்டுகளுக்கு பின்னர்தான் வெளியாயின.
1847-48 ல் பிரஸ்ஸல்சில் மார்க்சை பகுனின் சந்தித்தார். அவரது நண்பர் ஹெர்வேவிற்கு மார்க்ஸ் குறித்த தனது எண்ண ஓட்டத்தை பகுனின் எழுதியிருந்தார்.. The German workers espaecially Marx poison the atmosphere. Vanity, malevolence, gossip, pretentious and boasting in theory and cowardice in practice. Dissertations about life, action.. and complete absence of life  என்ற கடும் விமர்சனத்தை அதில் அவர் வைத்தார்.
 1862-72 காலங்களில் பகுனின் அவர்களின் மிக உயர்ந்த கருத்துக்கள் வெளியாயின. Mentally and physically, he attained his prime  என்று தெரிவிக்கிறார் ஆல்ட்ரெட். பிளாங்கி சொல்வதுபோல ஒருவரை அவரது நேரடி ரிசல்ட் என்பதிலிருந்து அல்லாமல் அவர் ஏற்படுத்தும் மறைமுக விளைவுகளிலிருந்தும் எடைபோடவேண்டும். It may be said that his works have done more for the revoultionary education of the proletariat than all the heavy scholastic treatises of the doctrinaire socialists put together.  பகுனிடம் எந்த ரெடிமேட் பார்முலாவும் இல்லை. ஒருவர் தனது சொந்த மூளையை கசக்கி கொள்ளாமல் அவரது புத்தகங்களில் விடைதேடிக்கொண்டிருந்தால் கிடைக்காது என்கிறார் அல்ட்ரெட்.
1869ல் பகுனின் சமாதானம் மற்றும் விடுதலை காங்கிரஸ் லீகில் உரையாற்றினார். சிலர் மட்டும் மதிப்புமிகு மனித வாழ்க்கை வாழ்ந்திட பெரும்பான்மை உழைப்பாளர் மிருகத்தனமாக நடத்தப்படும் நாகரீகத்தை அவர் சாடினார். அவர்  economical and social equalisation of classes and of individuals என்றார்.  I did not oppose the idea of  Communism but only the authoritarian concept of Communism that Marxists stood  என்கிற விளக்கத்தை  பகுனின் தந்தார். தான் கலெக்டிவிசம் என கம்யூனிசத்தை விளக்குவதாக குறிப்பிட்டார்.   My principle is abolition of state itself... I want the orgnisation of society and the distribution of property to proceed from below not downwards from above, by the dictate of the authority. I desire the abolition of personal hereditary property, which is merely an institution of the State, and a consequence of state principles. In this sense I am a collectivist not a communist  என்றார் பகுனின்
 1848ன் பிரஞ்சு எழுச்சி ஒடுக்கப்பட்டதில் மனம் ஒடிந்தார் ஹெர்சன். ருஷ்யா ஏன் முதலாளித்துவத்தை அடையாமல் சோசலிச குடியரசாக மலரக்கூடாது என்ற கேள்வியை அவர் எழுப்பினார். அது தொழிலாளர் விவசாயிகள் குடியரசாக எழட்டும் என்றார். லண்டனில் இருந்த பகுனின் உடன் தொடர்புகளை தொடர்ந்தார். கான்ஸ்டிட்யூஷன் என்பதெல்லாம் மாஸ்டருக்கும் அடிமைக்கும் இடையேயான ஒப்ப்ந்தம் என்றார். குரோப்ட்கின் பகுனின் செல்வாக்கை அவரது எழுத்துக்களை மட்டும் வைத்து மார்க்சை எடைபோடுவதுபோல் போடவேண்டாம் என்றார். அது legendary and oral  என்றார்.
தொழிலாளர்வர்க்கம் தங்களின் உயிர்ப்பான வர்க்கப்போராட்டத்தை மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரவர்க்கத்திடம் சர்வாதிகாரம் என்கிற பெயரில் சரண்டர் செய்து கொண்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையை பகுனின் விடுத்தார். அவரின் சிறந்த படைப்பாக  God and State  விளங்குகிறது. The State is the negation of Mankind.. To strive for an International justice and freedom and lasting peace, and therewith seek the maintenance of the State, is a ridiculous naivete  என்பதை அழுத்தமாக தெரிவித்தவர் பகுனின்.
மார்க்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் தன்னைப்பற்றி ஜார் ஏற்பாட்டில் ஷாம்பெயின் பார்ட்டி, பெண்களுடன் கொண்டாட்டமாக இருப்பதாக எழுதுகின்றனர். சிறைக்கொட்டடியில் வதைப்பைட்டிருந்த தன்னைப்பற்றி அவ்வாறு எழுதியதை அவர்  infamous and stupid   என்ற பதங்களை கொண்டு  விமர்சித்தார். 1864ல் 16 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் சந்தித்துகொண்டனர். சந்திப்பு குறித்து இருவரும் பதிவிட்டுள்ள்னர். மார்க்ஸ் பகுனின் சந்திப்பு குறித்து எங்கெல்ஸ்க்கு தெரிவித்தார்.  மார்க்ஸ் அவரை எனது பழைய நண்பன் என குறிப்பிடுகிறார். மார்க்சின் அரசியல் குழாம் நண்பர்கள் வட்டம் பற்றி பகுனின் தனது விமர்சன மதிப்பீட்டை கொண்டிருந்தார்.  Marx loved his own person much more than he loved his friends and apostles, and no friendship could hold water against the slightest wound to his vanity.. Marx will never forgive a slight to his person. You must worship him, make him an idol of him , if he is to love you in return; you must at least fear him, if he is to tolerate you. He likes to surround himself with pygmies, with lackeys and flatterers  என்கிற கடும் விமர்சனத்தை பகுனின் வைத்தார்.
மார்க்சின் மேதாவிலாசம் மீது பகுனினுக்கு  மரியாதையும் இருந்தது. கம்யூனிஸ்ட் அறிக்கையை பகுனின் 1862ல் ருஷ்யனில் மொழிபெயர்த்தார். காபிடல் படித்துவிட்டு பிரமிப்பை வெளிப்படுத்தினார். ஹெர்சனுக்கு எழுதிய கடிதத்தில் தன்னைப்பற்றிய சுயவிமர்சனத்துடன் மார்க்சை அங்கீகரித்து அவர் எழுதினார்.  For  20 years Marx has served the cause of Socialism ably, energetically, taking the lead of every one in this matter. I should never forgive myself if, out of personal motives, I were to destroy or diminish Marxs beneficial influence. Still, I may be involved in a struggle against him, not because he has wounded me personally, but because of the State Socialism he advocates என தான் வேறுபடும் இடத்தை தெளிவுபடுத்தினார்.
ஜெனிவாவில் பிலிப் பெக்கர் எனும் கம்யூனிஸ்ட் மார்க்சின் காபிடலை பகுனினுக்கு கொடுக்கிறார்.  மிக முக்கிய, ஆழமான, கற்றறிந்த விஷயங்கள் கொண்ட ஆனால்  abstract  ஆன புத்தகம் என்று சொன்ன பகுனின்  தான் மார்க்சிற்கு நன்றி தெரிவித்தோ பாராட்டியோ எழுத மறந்ததாக சொல்கிறார். தனது மறதி மார்க்ஸிற்கு இழைக்கப்பட்ட மரியாதை குறைவாக பார்க்கப்பட்டுவிட்டது என்பதையும் பகுனின் உணர்கிறார். ஜென்னியும் பகுனின் ஒருவார்த்தைக்கூட எழுதாதை பற்றி குறிப்பிட்டு ருஷ்யர்களை நம்பவே முடியாது என பெக்கருக்கு கடிதம் எழுதுகிறார்
லீப்னெக்ட், பெபல் போன்றவர்கள் தங்கள் பத்ரிக்கை எழுத்துக்கள் மூலம் பகுனினை விமர்சித்து ஜாரின் கைகூலி என எழுதினர். அகிலத்தில் கருத்துவேறுபாடுகள் அதிகமான நிலையில் கூட நண்பர் ஒருவருக்கு பகுனின் ஜனவரி 28 1872 கடிதத்தில் ஜெர்மன் குழுவின் தலைவர் மார்க்ஸ் போன்றவர்கள் லண்டனில் அகிலத்தில் கடுமையாக உழைத்துவருகிறார்கள் என்றே எழுதினார். ஆனால் இந்த மதிப்பிற்குரிய மனிதர்கள் என்னை பகைவனாக சித்தரிக்கிறார்கள். அவர்களுக்கு நான் பகைவன் இல்லை என உணராமல் தவறிழைக்கின்றனர். அவர்களது அறிவுத்திறன், பாட்டாளிகள் பக்கம் நிற்கும் உறுதிப்பாடு ஆகியவற்றை நான் மதிக்கிறேன். Marx is the supreme economic and socialist geneius of our day  என குறிப்பிட்டார் பகுனின். மார்க்சின் நண்பர் எங்கல்ஸ்கூட பெரும் புத்திமான் என்றார் பகுனின். அவர்களது சேவையை முக்கியத்துவத்தை அங்கீகரிக்காமல் இருப்பது நன்றிகொன்றமைக்கு சமம் என்றார் அவர்.

பகுனின் தான் மார்க்ஸ் இடமிருந்து வேறுபடுவதை சுட்டிக்காட்டுகிறார். மார்க்ஸ் அரசு மூலம் நிர்வாகம் என மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்காக நிற்கிறார். சர்வாதிகாரம் என்று சொல்கிறார். நிலங்கள், அனைத்து மூலதனங்களும் அரசிற்கே சொந்தம். அரசாங்க அதிகாரிகள், வல்லுனர்கள் நிர்வாகம் செய்வர் என அங்கு நம்பப்படுகிறது. நான் சொல்வது அரசியல் சமுக சமத்துவம் ஆனால் அரசு இல்லாமல் என்பதுதான் அதில் முக்கியமானது. நாம் கட்டமைக்க விரும்பும் சமூகம் மேலிருந்த கட்டளைகளால் அமையக்கூடாது- சுதந்திரமாக கூட்டிணைவு கொண்ட தொழிலாளர்களால் சமூகம் கட்டமைக்கப்படவேண்டும் என்றார் பகுனின்.
மார்க்ஸ் குறித்த மற்ற விமர்சனம் அவரது இயல்பு குறித்ததாக இருந்தது. மார்க்ஸ் மற்றவர் புகழ் அடைவதை சகிக்காமல் இருந்தார். பொறாமைக்கூட கொண்டார். புருதானை தேவையில்லாமல் அவர் அடைந்துவந்த புகழுக்காகவே தாக்கினார். மார்க்ஸ் எப்போதும்  my ideas  என பேசுவார்.  ideas என்பது பொதுவானது- அனைத்து மிகச்சிறந்த எண்ணங்களும் பலரின் கூட்டுழைப்பின் வெளிப்பாடு என்பதும் தானே சரியானது என பகுனின் தனது வாதத்தின் மூலம் மார்க்சை விமர்சித்தார். மார்க்ஸ்- எங்கெல்ஸ் சோசலிச ஜனநாயக அலையன்ஸ் மற்றும் அகிலம் எனும் அறிக்கையை பகுனின்மீது கடும் விமர்சனமாக முன்வைத்தனர். மார்க்ஸ் வரலாற்றை எழுதிய ஒட்டோரூல், மெர்ரிங் கூட இதை ஏற்கவில்லை என்கிறார் அல்ட்ரெட். பகுனின் மார்க்சின் விமர்சனத்தை  gendarme denunciation  என சொல்லிவிட்டு அகிலத்திலிருந்து தான் விலகுவதாக  அறிவித்தார்.
பகுனின் மறைந்த ஜூலை 1, 1876ல் அகிலம் தனது செயலையும் முற்றிலுமாக இழந்திருந்தது. ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்காவில்கூட அனார்க்கிஸ்ட்கள் செல்வாக்கும் போராட்டங்களும் தொடர்ந்தன. பகுனினை தோல்வியின் பரிதாபகர ஆளுமையாக பல சித்தரிப்புகள் உள்ளதை அல்ட்ரெட் விமர்சிக்கிறார்..
வன்முறை மூலம்தான் புரட்சி என்பதில் அவர் மார்க்ஸ் உடன் நின்றாலும் மார்க்ஸ் சொல்லும் ஒழுங்கமைந்த வர்க்க திரட்சி மூலம் புரட்சி என்பதற்கு பதிலாக அப்போதைய கோபத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் மனித கூட்டம் கொள்ளும் எழுச்சிதான் புரட்சி என கருதினார் பகுனின். உண்மையில் புரட்சிக்காரர்கள் இரத்தம் சிந்தப்படுவதை விரும்புவதில்லை- என்ன செய்வது முடியாட்சிகளும் அரசாங்கத்தையும் பயமுறுத்த அவ்வாறு சொல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் நண்பர்களுக்கு எழுதுகிறார். All exercise of authority perverts, and all submission to authority humiliates  என்பார் பகுனின்.
The communists imagine that they can achieve it by the development and organisation of the political power of the working classes and particularly town proletariat... The Revoultionary socialists think on the other hand that they can only reach this goal by the development and organsiation of non political social and therefore anti- political power of the working masses in town and country  என பகுனின் எழுதுவதை அவர் நிலைதடுமாறுகிறார் என கார் மதிப்பீடு செய்கிறார்.
அகிலத்தில் ஏற்பட்ட வேறுபடுகள் காரணமாக பகுனின் அவர்து ஆதரவாளர்கள் ஹேக் காங்கிரஸ் செபடம்பர் 1872ல் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து செய்தி வெளியானது. பகுனின் லிபர்டி பத்திரிகை எடிட்டருக்கு எழுதினார். மார்க்ஸ் விஞ்ஞானபூர்வமாக முழுமுதல் உண்மை ஒன்றை கண்டுபிடித்ததுபோல் கற்பனை செய்து கொள்கிறார் என சொல்லி அவரை நான் க‌ஷ்டப்படுத்த விரும்பவில்லை. அரசை அழிப்பது என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். அரசினுள் அரசால் மக்களுக்கு தொழிலாளர்களுக்கு சுதந்திரம், விடுதலை என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை என்றார். மார்க்சிஸ்ட்கள் கவர்மெண்டலிஸ்ட்களாக உள்ளனர். வெற்றியின் களிவெறியில் மார்க்ஸ் இருக்கலாம். இரு அணிகளின் கருத்து முரண்பாட்டில் இம்மி கூட தீரவில்லையே என்றார் பகுனின். சீரானதாக இல்லாவிடினும் மார்க்ஸ் புரட்சிகர தாகம் நிறைந்தவர். ஆனால் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எப்படி பிரச்ச்னையை தீர்க்கும் என்பதை அவர் காணத்தவறினார் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது என்றார் பகுனின்.

அகிலத்தின் பிரச்ச்னைக்கு மார்க்சே காரணம். அவரின் சர்வாதிகாரமே காரணம். அகிலத்தின் துவக்க கர்த்தா மார்க்ஸ் என்றாலும் அதன் தந்தை என அவர் தன்னைக் கருதிக்கொள்கிறார். அவரின் இறுமாப்புதான் பிரச்சனையாகிறது எனவும் பகுனின் மார்க்சை விமர்சித்தார். அவர் மருத்துவச்சியாக இருக்கலாம் அகிலத்தின் பெற்றோர் அல்ல. ஹேக் காங்கிரசிலேயே மார்க்ஸ் அகிலத்தை கொன்றுவிட்டார். அதிகாரபூர்வ கொள்கை என அறிவித்துவிட்டால் அதற்கு பின்னர் என்ன விவாதம் நடைபெறமுடியும்.  As soon as an official truth is pronounced, having been scientifically discovered by this great brainy head labouring all alone- a truth procliamed and imposed on the whole world from the summit of the Marxist Sinai, why dis cuss anything ? All that remains to be done is to learn by heart the commandments of the new dialogue என அவர் கேலியாக கேள்விகளை முனவைத்தார்.
  மாஜினியையும் மார்க்சையும் ஒப்பிட்டு பகுனின் பேசுகிறார். மாஜினி கடவுளை நம்பி அரசு குறித்து பேசினார், மார்க்ஸ் கடவுள் நம்பிக்கையாளர் அல்ல. ஆனால்    மாஜினியின் கடவுளே தேவலைப்போல் உள்ளது என கடுமையாக விமர்சித்தார். அவ்வப்போது அவர் எங்கெல்ஸ் குறித்தும் மார்க்சின் வலக்கரம் என பேசியுள்ளார். எங்கெல்ஸ், லசேல் போன்ற மார்க்சிய சோசலாஜிஸ்ட்கள்  பொருளாதார வளர்ச்சியின் கட்டங்கள், சோசலிச புரட்சி என்று பேசுவது குறித்து தனது கருத்துக்களை பகுனின் முன்வைத்தார்.  The inevitable process of economic facts - the only cause of all of history's moral and intellectual phenomena by exclusion of all other consideration என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது என பகுனின் எழுதினார்
தற்காலத்தில் பிஸ்மார்க் எப்படியோ அப்படி அவரின் வழித்தோன்றலாக எதிர்கால பிஸ்மார்க்காக மார்க்ஸ் படுகிறார் எனவும் பகுனின் எழுதினார். மார்க்சை தான் இழிவுபடுத்துவதாக கருதவேண்டாம் என தெரிவித்துவிட்டு அவ்வாறு எழுதினார் பகுனின்.  Out and Out cult of State  என்பதால் தான் அவ்வாறு முடியாட்சி அரசரையும்   சோசலிச குடியரசுவாதியையும் இணைத்து பேசியதாக விளக்கம் தருகிறார்.

மார்க்சை ஒப்பிடும்போது பகுனின் செல்வாக்கு மிகுந்த ஈர்ப்புகொண்டதாக இருக்க முடியவில்லை. ருஷ்யாவில் டால்ஸ்டாய், குரொபோட்கின் போன்றவர்கள் வன்முறையற்ற அனார்க்க்சிசம் பக்கம் நின்றனர். ஸ்பெயின், இத்தாலியில்தான் பகுனின் செல்வாக்கு நீடித்ததாக இருந்தது.