II
தாகூரிடம் மீபொருண்மைவாதமும், உள்ளுணர்வு புதிர்வாதங்களும் நிறைந்து காணப்படுவதால் அவரை சிறந்த கவியாக ஏற்பதற்கில்லை என்கிற கருத்தும் நிலவாமல் இல்லை. Art
is the daughter of joy But art is born
of ideleness and not busyness என கலை குறித்து ராதாகிருஷ்ணன் பேசுவார். Art is not didactic- it is to
delight not to instruct. கவி என்பவன் அவநம்பிகையாளனாக இருக்கமுடியாது. அவன் இயற்கையும் படைப்பையும் கொண்டாடுபவன். உலகின் அவலங்களை நேர்த்தியின்மையை காணதவன் அல்ல அவன். ஆனால் அனைத்தையும் மீறி வாழும் உலகம் நல்லதொன்றே என அவன் பறை சாற்றுவான் என ராதாகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.
கவிதை என்பது நகலெடுப்பதல்ல, படைப்பு. அது .இயற்கையின் உள்ளார்ந்த அழகின் மீதான உள் உந்துதல். இயற்கை தானாக அழகானதல்ல.. To
the poet earth is his home and heaven his hope. Art itself is nature என்றார் ஷேக்ஸ்பியர். In Art man reveals hemself
and his objects. கலையில் மனிதன் தன்னைதான் வெளிப்படுத்திக்கொள்கிறான். அவனது பொருட்களை அல்ல என்றார் தாகூர். உரைநடை விவரணைக்குரியது. கவிதை படைப்புக்குணம் கொண்டது. அது தன்னளவில் முடிவானது. ஆனால் உரைநடை வழியாகிறது. தாகூர் கவிதையின் உருவத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற விமர்சனத்திற்கு ஆளானவர். கலையின் தேவை ஆன்ம தரிசனம்தான், வடிவத்தேடல் அல்ல என்பார் ராதாகிருஷ்ணன்.
தன்னைக்கடந்த வாழ்க்கையில்தான் மனிதன் உண்மையில் வாழ்கிறான். அறிந்திராத ஆண்டைக்காக உழைக்கிறான். உலகில் பிறந்திராதவர்களுக்காக சேமித்து வைக்கிறான். ஒருவனுக்கு மட்டுமே வழங்குவதற்காக அளிக்கப்பட்டதில்லை, எனது இதயம். பலருக்கும் வாரி வழங்கிடத்தான் என்றார் தாகூர். நிலமாதா- உன்னிடம் வேற்றாள் போல் வந்தேன். விருந்தாளியாக வாழ்ந்தேன். நண்பனாக வெளியேறுகிறேன். விதை ஒன்றின் நெஞ்சத்தில் காத்திருக்கும் நம்பிக்கை ஓர் அற்புதத்தை வாக்களிக்கிறது. ஆனால் உடனே அந்த வாக்கை அது மெய்ப்பிக்க முடியாது என நம்பிக்கையின் உயர்வை பொறுமையின் தேவையை கவித்துமாக தந்தார் தாகூர்.
கடலில் கலக்கும் ஆறு போல , ஓய்வின் ஆழத்தில் உழைப்பு தனது நிறைவை காண்கிறது. தேடுதல்களைப்போன்று, மரங்கள் விண்ணக மண்ணகத்தை கண்ணோட்டமிட குதிகால்களில் நிற்கின்றன. உலகின் சுமையை எளிதாகமட்டுமல்ல மகிழ்ச்சியுடன் தாங்கிட வேண்டுவதெல்லாம் அன்பே.. அன்பு மொழி எங்கும் பாடலாகட்டும் என்றார். வாழ்க்கை நமக்கு அளிக்கப்படுகிறது. ஆம் மற்றவருக்கு வழங்கித்தான் நாம் அதை அடைகின்றோம். உழைக்கும்போது இறைவன் மதிக்கின்றான். நான் பாடும்போது அவன் என்னை விரும்புகின்றான். அன்பு என்பது ஒன்று சேர்ப்பதுதான்.
உண்மைக்கு அப்பாற்பட்டு எவன் ஒருவனுடைய புகழ் பளிச்சிடாமலிருக்கிறதோ அவனே பெருமைக்குரியவன் என படோபட பெருமித பொய்மைகளை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார் . அடக்கத்தால் உயர்ந்தவர் என்கிற நிலையை நாம் கிட்டத்தட்ட எட்டிவிடுவதாக
அவர் எழுதினார். தோல்வியை தாங்க ’தவறால்’ முடியாது- ஆனால் ’நேர்மையால்’ முடியும்.
இடையூறு எதிர்ப்படும் பணிகளுக்கு என்னை அனுப்பி
திடப்படுத்து என அவர் வேண்டுவார்.
சின்னஞ்சிறு மலர்களை நேசிக்கும் இறைவன், பேரரசுகளின் மீது வெறுப்படைகிறான் என தனது எண்ணத்தை இறைமீது ஏற்றி தாகூர் பாடினார். துன்பமளிப்பது எனக்கு நீ தரும் மரியாதை என்றார். ஆசைப்படாதே என்கிற குரல் எங்கும் கேட்டபோது நான் ஆசைப்படுவதையெல்லாம் பெற இந்த பேரண்டம் உதவிக்கொண்டிருக்கிரது என எழுதி நிறைவுகொள் மனிதா என்றார். என்னால் கடவுளை நேசிக்க முடிகிறது. ஏனெனில் மறுப்பிற்கான உரிமையை அவன் தருகிறான். மாறுபடுதல் வாழ்வின் இயல்பு என்பதை அவர் உணர்த்துகிறார். அதிகாரப் பேரரசில் அடக்கி நொறுக்கியே நாம் முன்னேறுகிறோம். ஆனால் அன்பு பேரரசில் ஆசையை ஒதுக்கியே நாம் முன்னேறுகிறோம் என கவிதை தந்தார்.
தனது வரையறைகளை உண்மை விரும்புகிறது. அங்கே அது அழகினை சந்திக்கும் என்றார் தாகூர். புகழ் என்னை
நாணச்செய்கிறது. ஏனெனில் கமுக்கமாக அதற்கு நான் ஏங்குகிறேன். மற்றவர்களின் நுகத்தடிக்கு எனது நெஞ்சம் வளைந்து கொடுக்காமலிருக்கட்டும். நமக்கு நாமே எல்லாமாயிருக்கும் நிலையில் உலகம் அவ்வளவு சிறப்பாகபடுவதில்லை. அச்சமற்று இரு என்பதை அவர் தொடர்ந்து சொல்கிறார். இடர்களிலிருந்து என்னைக் காக்குமாறு உன்னை வேண்டிக்கொள்ளாமலிருப்பேனாக என்பதே அவரது பாடல். அனைத்தையும் அச்சமின்றி எதிர்கொள்ளும் ஆற்றலைத்தா என்று பாடினார். இறந்தவர்கள் தங்கள் புகழில் வாழட்டும். இருப்பவர்கள் அன்பின் அழியாமையில் வாழட்டும். பல பொருள்களை அடையப் பல வழிகளைக் கையாளாமல் இருப்பேனாக என
எச்சரித்துக் கொள்கிறார்.
நெஞ்சே அமைதியாக இரு- தூசி கிளப்பாதே என் நறுக்குத்தெறித்தாற்போல மனப்பயிற்சியின் அவசியத்தை உணர்த்தினார். தவறுகள் என்கிற வாய்க்கால் வழியாக உண்மை என்கிற நீரோடை பாய்ந்து செல்கிறது என உண்மைக்கான பயிற்சியில் தவறிழைத்து மீள்வது இயல்பான ஒன்றெ என கற்றுத்தருகிறார். கட்டுப்பாடுதான் நல்லவர்களின் நுழைவாயில் என்றார். இகழப்பட்ட மாந்தன் வெற்றிக்காக மனித வரலாறு பொறுமையாகக் காத்திருக்கிறது.
எவற்றையெல்லம் நான் விட்டுச் செல்லவேண்டுமோ, அவற்றையெல்லாம் நான் விட்டுவிடுகிறேன். எவற்றையெல்லாம் ஏற்கவேண்டுமோ, அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். உன்னுடன் சேர்ந்து நடை போட மட்டும் என்னை அனுமதித்திடு.
மதம் உயிரற்று இறுகி முடங்கிப்போய், சுமைபோல அழுத்துகிறது. அன்பு ஒன்றே மாந்தர் அடையும் உயர்பேறு என அன்பு குறித்து ஆயிரக்கணக்கான பக்கம் எழுதியவர் தாகூர். எந்தப்படகு எல்லா உலகங்களுக்கும் புகலிடமோ, அதைத்துண்டு துண்டாக்கிவிட்டுக் கடலைக் கடக்கமுடியுமா என கேள்வி எழுப்பினார். இடர்படும் எளிய மக்களுடந்தான் வாழ்க்கை பின்னிப்பிணைந்துள்ளது என்ற அறிதலை அவர் கொண்டாடினார். உன் வாழ்வைக்கொண்டு அன்பு விளக்கை ஏற்றி செல் என்ற கீதம் இசைத்தார். முழுமை பெறும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. வெளியேற வேண்டியதற்கு கதவை திறந்து வை என்றவர் தாகூர். சமயம் நமது இயல்பை அழிப்பதற்காகவல்ல, வளர்ப்பதற்கான கருவி. நேயத்தில் வாழ்வதே வாழ்க்கை காலத்தில் அல்ல என்றார்
நுண்ணறிவாளனாக மனிதன் ஆகும்போது மறைக்கப்பட்டிருந்ததெல்லாம் பலப்பட்டுவிடும் என்றார். நற்பண்பும் நேயமும் எல்லையற்றவை. எல்லையற்ற பெரும்பரப்பில்தான்
விடுதலை பற்றிய முழு அறிவு கிட்டும் என்றார்.
எல்லாப் பொருள்களும் உயிர். நாம் சார்ந்த கண்ணோட்டத்தில்
தன் போன்றே இருக்கிறது என்பதை உணரும் பொழுதுதான், உலகம் பற்றிய நம் உணர்தல் முழுமை
பெறுகிறது. ஒரே வரலாறு தான் உள்ளது. மாந்தனுடைய வரலாறே அது. தேசிய வரலாறுகள் யாவும்
பெரிய நூலின் பகுதிகளே.
தாகூர் வாழ்வின் ஒற்றுமைத்தன்மையில் நம்பிக்கை கொண்டமை அவரது பெரும்பலம். கலைக்கும் வாழ்விற்கும் இடையே பிளவேதும் காணாதவராக அவர் இருந்தார். அழகையும் வாழ்வின் வெளிப்பாடாகவே அவர் கண்டுணர்ந்தார். அவரின் பன்முகத்தனமை எவருக்கும் வியப்பை தரும். கவிஞர், பாடலாசிரியர், நவீன கால பிரச்சனைகள் குறித்த கட்டுரையாளர், சொற்பொழிவாளர், ஓவியர்- அவர் தனது 70ஆம் வயதில் ஓவிய ஆர்வம் கொண்டு நுழைந்தார். பத்தே ஆண்டுகளில் 3000 ஓவியங்களை அவர் வரைந்துவிட்டார் என அறியும்போது அவரது கலைத்தாகம், ஓயா உழைப்பு பிரமிக்கவைக்கிறது. கல்வி சிந்தனைகளில் அவர் மிக முக்கிய மனிதராக கருதப்படுகிறார். ஆளுமையை வளர்க்கும் கல்வி குறித்து எழுதினார்.
Comments
Post a Comment