https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, August 16, 2017

Bakunin பகுனின் 3

III
1863 ஜனவரி இறுதியில் போலந்து எழுச்சி ஏற்பட்டது, கொரில்லா போர்முறை கையாளப்பட்டது. பகுனின் எழுச்சி நடைபெறும் இடங்களில் இருக்கவேண்டும் என விழைவுகொண்டவர். ருஷ்ய ராணுவம் போலந்தினரை கடுமையாக தாக்கி அழித்தது. பகுனின் வார்சா புரட்சிகர கமிட்டிக்கு தனது  சேவையைத்தர முன்வந்தார். ருஷ்யர்களை பற்றிய அவநம்பிக்கை அங்கு புரட்சிகாரர்களிடம் இருந்தது.
ஸ்வீடன் சென்ற பகுனினுக்கு அங்குள்ள தீவிர நண்பர்கள் சிலர் வரவேற்பை தந்தனர். ஸ்டாக்ஹோமில் அவர் பெயர் பரவத்துவங்கியது. பகுனின் மற்றும் அவர் துணைவியார் அக்டோபர் 1863வரை ஸ்டாக்ஹோமில் இருந்தனர். பின்னர் அவர்கள் இத்தாலி சென்றனர். கரிபால்டியின் உதவியாளர்கள் அக்குடும்பத்தை வரவேற்று உபசரித்தனர். இத்தாலியில் பகுனின் செல்வாக்கு பெறத்துவங்கினார். கரிபால்டி தங்கியிருந்த இடத்திற்கு சென்று சந்தித்து விடுதலை இயக்க நிலைமைகள் குறித்து உரையாடினர். பின்னர் பிளாரன்சில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கரிபால்டிக்கு கடவுள் நம்பிக்கையும் மனித வரலாற்று கடமை உணர்வும் இருந்தது. பகுனின்  God exists, therfore man is a slave. Man is free, therefore there is no God. Escape this dilemma who can   என்கிற சிந்தனையை வெளிப்படுத்தினார்.
மார்க்ஸ் உடன் அகிலத்திற்கு பகுனின் பயன்படலாம் என்கிற எண்ணத்தில் நவம்பர் 3 1864ல் 16 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் சந்திக்க ஏற்பாடு நடந்தது. மார்க்ஸ் எங்கெல்ஸ்க்கு எழுதிய கடிதத்தில் இந்த 16 ஆண்டுகளில் முன்னேற்றகரமாக அவர் மாறியுள்ளார். அவரை பிடிக்கிறது என எழுதினார். பின்னர் பகுனினுக்கு அடுத்த மாதங்களில் மூன்று கடிதங்களை மார்க்ஸ் எழுதினார். அகிலத்தின் அறிக்கையை கரிபால்டிக்கு தந்து இத்தாலியில் மொழிபெயர்க்க வேண்டினார்.  பகுனினுக்கு இத்தாலியின் மாஜினி, கரிபால்டி தேசியவாதம் புரட்சிகரமாக தோன்றவில்லை. அவர் தனது  Revoultionary Catechism  மூலம் தன்னை தேசியவாத எல்லைக்கு வெளியே நிறுத்திக்கொண்டார்.  The radical destrution of all existing institutions, religious, political, economic and social.. Establishment of a universal society based on liberty, reason, justice and labour  என்றார்.
இத்தாலியில் அவர் இருந்த 1864-67 காலத்தில் அவரிடம் அனார்க்கிச கருத்துக்கள் உயர் வடிவங்களை எய்தின. 1864ல் அவர் ரகசிய புரட்சிகர சர்வதேசம் என்கிற அமைப்பை உருவாக்கினார். அதன் திட்ட அறிக்கை 1865-66 காலங்களில் உருப்பெற்றது. அவரது  Revoultionary Catechism, National catechism போன்றவை spiritual foundation of anarchist movement என மதிப்பிடப்படுகின்றன
1867-72 காலங்களில் தன்னை அரசியல் புரட்சிகர சிந்தனையாளராக தனது பேச்சு எழுத்துக்கள் மூலம் பகுனின் வெளிப்படுத்திகொண்டார். ஜனநாயகவாதிகளே திரளுங்கள் என்கிற அழைப்புடன் 10 ஆயிரம்பேர்கள் கையெழுத்திட்ட 6000 பேர் பங்கேற்ற ஜெனிவா காங்கிரஸ் 1867 செப்டம்பர் 9 அன்று கூடியது, கரிபால்டி பங்கேற்றார். பகுனின் ருஷ்ய பிரதிநிதியாக வந்தார். ஜான் பிரைட், ஸ்டூவர்ட் மில் போன்றவர்கள் கூட ஆதரவாக இருந்தனர். கரிபால்டி ’ரிலிஜன் ஆப் காட்’ என்றார். சிலர் சோசலிசம் என்றனர். பகுனின் பிரஞ்சு மொழியில் பேசினார். ருஷ்யா காப்பற்றப்பட அங்கு பெடரலிசம், சோசலிசம் தேவை என்றார்.  Universal peace will be impossible so long as the present centralised States exist. We must desire their destruction.. there may arise free unions organised from below by the free federation of communes, of provinces into nation and nations into United states of Europe என்றார். மையப்படுத்தப்பட்ட அரசு எனில் அங்கு உலக அமைதி என்பதில்லை எனவே அரசை அழித்தல் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
1869ல் பகுனின் தனது துணைவியாருடன் ஜெனிவாவில் வசித்தார். அங்கு பாட்டாளிவர்க்கம் அரசியல் தொடர்பில் இருந்தார். பாலே வில் 1869 செப்டம்பர் 6ல் அகிலத்தின் 4வது காங்கிரஸ் கூடியது. இதில் பகுனின் பங்கேற்றார். மார்க்சின் நம்பற்குரிய தோழர் எக்காரியஸ் பங்கேற்றார். மோசஸ் ஹெஸ் ’பாலே காங்கிரசில் கம்யூனிஸ்ட்களும் கலெக்டிவிஸ்ட்களும்’ என கட்டுரை எழுதினார். பகுனின்  தன் மீதான விமர்சனத்திற்கு பதில் தந்தார். அனார்க்கிஸ்ட்களாகிய தங்கள் மீது விமர்சன கணைகள் வருவதற்கு மார்க்ஸ்தான் மூல காரணம் என பகுனின் எழுதினார். அவர் என்னைப்பற்றி என்ன சொன்னாலும், அகிலத்திற்கு அளப்பரிய சேவை செய்து வருகிறார். நான் மார்க்ஸ் மீது சண்டை தொடுத்தால் அகிலத்தின் பெரும்பான்மை என்மீது பாயும். எனக்கு வேலை செய்ய கிடைத்துள்ள அந்த இடமும் இல்லாமல் போய்விடும் என எதார்த்த நிலையை எழுதினார் பகுனின். மார்க்ஸ் எங்கெல்சிடம் இந்த ருஷ்யன் அய்ரோப்பிய தொழிலாளிவர்க்கத்தின் எதேச்சதிகாரியாக பார்க்கிறார் என தெரிவித்தார்.
ருஷ்ய பதிப்பாளர் ஜெனிவாவில் பகுனினை சந்தித்து காபிடலை மொழிபெயர்க்க சொன்னார். பகுனின் நிதி கஷ்டத்தைப்பார்த்து அவர் முன்பணமாக 300 ரூபிள் தந்தார். தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் 784 பக்கமுள்ள காபிடலை தினம் மூன்று பக்கம் கூட மொழியாக்கம் செய்யமுடியவில்லை என பகுனின் எழுதினார். விரைவில் 10 பக்கம் என்ற அளவிற்காவது செல்லவேண்டும் என்ற உறுதி அவரிடம் ஏற்பட்டது.  அவரது இளம் நண்பர்  Nechaev நேரிடையாக புரட்சிகு பணியாற்றாமல் இப்படிப்பட்ட செக்கமாட்டு வேலையிலிருந்து பகுனின் விடுபடவேண்டும் என வற்புறுத்தினார்.  பின்னர்தான் அந்நண்பர்  மோசடியானவர் என்பதை பகுனின் உணர்ந்தார்.
கார்லோ காம்புஸ்ஸி என்கிற இத்தாலிய அனார்க்கிஸ்ட் உடன் பகுனின் துணைவியாருக்கு உறவு இருந்து குழந்தை பிறந்தது. 1871 ஜனவரியில் அவர் தன் நிலைப்பற்றி குறிப்பு ஒன்றை விட்டு சென்றுள்ளார். மணிபர்ஸ் காலியாகவுள்ளது. அந்தோனியாவிற்கு 5 பிராங்க் மட்டுமே கொடுக்க முடிந்தது. வாங்கிய கடன்கள் எல்லாம் செலாவாகிவிட்டது. வீட்டில் தேநீர் போடக்கூட வழியில்லை. அந்தோனியா எழுதிய கடிதம் ஒன்றில் எனக்கும் வயதாகிவிட்டது, எனது ரொட்டியக்கூட சம்பாதிக்க முடியாத நிலயில் இருக்கிறேன். நான் ரொம்ப நாள் வாழமுடியாது. பொருளாதார கஷ்டம் பகுனினை வாட்டுகிறது. அவர் தனது சக்தி நெறி அனைத்தையும் இழந்து வருகிறார். தன்னைப்பற்றி நினைக்காமல் ஒவ்வொரு மனிதனின் விடுதலைக்காக தன்னை அற்பணித்து கொண்டவரின் நிலை இப்படியாகவுள்ளது என எழுதியுள்ளார். ஓரிரு மாதங்களுக்கு பின்னர் பகுனினுக்காக இல்லாவிட்டாலும் அந்தோனியா குழந்தைகளுக்காக 1000 பிராங்க்ஸ் பணத்தை அவரது காதலன் காம்புஸ்ஸி அனுப்புகிறார். அந்தோனியா பெற்றோர் குடும்பம் மாதம் 50 ரூபிள் என அனுப்பத்துவங்கியது.

1871 நவம்பரில் குடும்பத்தில் இறைச்சி என்பதே இல்லை என்ற சூழல். விளக்கு ஏற்ற மெழுகுவர்த்திகள் இல்லை. அடுப்பெரிக்க  விறகு இல்லை என்ற நிலை இருந்ததாக கார் பதிவு செல்கிறது. வீட்டில் மிஞ்சி இருந்த 25 பிராங்க்  அந்தோனியா சகோதரன் இறந்ததற்கு இரங்கல் தந்தி கொடுக்க செலவாயிற்று. 1872ல் அந்தோனியா குழந்தைகளுடன் பிராங்க்பர்ட் சென்றார்.  பிரிவு எவ்வளவு மாதங்களுக்கு அல்லது நிரந்தரமா என சோகம் கவ்விய பகுனின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. இக்காலத்தில் இளைஞர் ஆர்மண்ட் ராஸ் என்பவர் பகுனிக்கு ஆறுதலாக இருக்கிரார். 1873ல் அந்தோனியா இல்லாத தனிமை இரவு முழுதும் விழிப்பு, வோட்கா அருந்துதல், நண்பர்களுடன் விவாதம் சச்சரவு என கழிந்தது, ஆஸ்த்மா நோய் அவரைத் தொற்றியது.
1873 செப்டம்பர் அக்டோபரில் கடும் சோர்வை அடைந்தார். மார்க்ஸ் உள்ளிட்டவர்களின் தாக்குதலை சந்தித்தார்.  அவர் மனம் சோர்ந்து ஒதுங்கிவிடுவதாக எழுதினார்.  All this has disgusted me profoundly with public life. I have had enough of it and all having passed all my life in the struggle, I am weary of it. I am  past sixty; and affection of heart which grows worse with age makes life more and more difficult. Let other youngermen takeup the work. For myself, I feel neither the strngth nor perhaps the confidence which are required to go on rolling Sisyphus's stone against the triumpahant forces of reaction. I am therfore retring from the lists, and ask my dear contemporaries only one boon: ovlivion. Henceforth I shall trouble no man's repose: and I ask, in myturn, to ve left in peace.. நான் ஒதுங்கிவிடுகிறேன். ஏச்சு பேச்சுக்கள் கேட்டு சலித்துவிட்டது என்ற நிலைக்குப் போனார்.

அவர் மேலும் எழுதினார். நான் பிறப்பால், வசதியான குடும்பத்திலிருந்து வந்த பூர்ஷ்வா. உங்கள் மத்தியில் சில பரப்புரைகளை செய்தேன். கடந்த 9 வருடங்களாக அகிலத்தில் உலக தேவைகளுக்கு தீர்வு என்பதைவிட அதிகமாக சிந்தனைகளுக்கான சண்டைதான் நடந்துள்ளது.  If the world can be saved by ideas and I defy anyone to invent a new one.. I have the conviction that the time has gone by for grand speeches, printed or spoken on theoretical questions,.. நேரம் செயலுக்கானது. பாட்டாளிவர்க்க அமைப்பு பாட்டாளிக்குரியதாக இருக்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment