Skip to main content

Posts

Showing posts from July, 2023

இந்திய கம்யூனிச இயக்க முன்னோடிகள்

 2017ல் வந்த மின் புத்தகத்தின் முன்னுரை இணைப்பில் புத்தகத்தை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்                      கம்யூனிச இயக்க முன்னோடிகள் விடுதலை இயக்க காலத்தில் சோவியத்   புரட்சியின் தாக்கத்தில் வெளிநாடுகளில் சென்ற புரட்சிகரவாதிகள், இந்திய இளைஞர்கள் இங்கும் விடுதலைக்கு பின்னர் சோவியத்வகைப்பட்ட சோசலிச ஆட்சி என்கிற கனவை வைத்திருந்தனர். அதற்கு காங்கிரஸ் பேரியக்கமும், காந்தியும் வாகனமா என்பதில் அவர்கள் கொள்கை, நடைமுறை தெளிவுகளை போதுமான அளவு பெறமுடியாமல் போனது. சோவியத், பிரிட்டிஷ் வகைப்பட்ட சொல்லிக்கொடுப்புகளுக்கும், இந்தியாவில் யதார்த்த வெளியில் அவர்கள் உணர்ந்ததற்கும் ஏராள இடைவெளிகளை அவர்கள்   கண்டனர். காங்கிரஸ், காந்தி என்பதுடன் சோசலிஸ்ட்கள் - இடதுசாரிகள் என பல்வேறு போக்குகளுடன் ராய், போஸ், ஜேபி-லோகியா முரண்பாடுகளை அவர்கள் பார்த்தனர். கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் பணியாற்றிய இளைஞர்கள் தங்கள் மத்தியிலும்   கருத்து போரிட்டுக்கொண்டனர். ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்களுடன் அரசியல் பயணம் நடத்திவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பற்றிய சில குறிப்புகள் இங்கு கட்டுரைகளாக தரப்

மறைமலை அடிகள் நாட்குறிப்பிலிருந்து

  மறைமலையடிகளார் நாட்குறிப்புகளிலிருந்து.. மறைமலையடிகளார் நாட்குறிப்புகள் அவரது மகன் வித்துவான் மறை . திருநாவுக்கரசு அவர்களால் தொகுக்கப்பட்ட ஒன்று . சிறு நூலாக கொணர்ந்துள்ளனர் . ஆ . இரா . வேங்கடாசலபதி பதிப்பித்த இந்நூல் 1988 ல் வந்தது . 1898-1950 காலத்திற்கான   சில குறிப்புகளை வெளியிட்டுள்ளனர் . அடிகளார் அவர்கள் தனது குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதியிருந்தாராம். காரணம்  ஏன் எனத்தெரியவில்லை. இளம் வயது முதலே ஏராள ஆங்கில நூல்களை வாசித்தவராகவும், தனது கருத்துக்களை ஆங்கிலம் வழியாகவும் தந்தவராகவும் அடிகளை நாம் பார்க்கமுடியும். ஏறத்தாழ 50 ஆண்டுகள் கால இடைவெளியுடன் கூடிய  இக்குறிப்புகள் 1000 பக்கங்கள் அளவிலானவையாம். அதில் சிலவற்றை தேர்ந்து இங்கு தொகுத்து பதிப்பித்துள்ளனர். இக்குறிப்புகள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல, அன்றைய காலத்து தவிப்புகொண்ட மனதின் தேடல்களுக்கான வரலாறும் கூட. அவர்கள் தமிழ் புலமையில், ஆங்கில மற்றும் வடமொழி அறிவில் மட்டுமல்லாது, நாட்டுப்பற்று, நிகழும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து தம்மளவில் வினையாற்றுதலாகவும் இருந்துள்ளனர். தம் காலத்தில் பல துறைகளில் புகழ் வாய்ந்தவர்க

CAD Document vol 7 Debate on UCC சீரான உரிமையியல் சட்டம்

 CAD Document vol 7     Debate on UCC  அரசியல் அமைப்பு சட்ட அசெம்பிளியில் சீரான உரிமையியல் சட்டம் குறித்து நவம்பர் 23, 1948ல் நடந்த விவாதம் இங்கு தரப்பட்டுள்ளது. அப்போது அந்த ஷரத்து 1948 நகலில் 35 ஆக இருந்தது. அரசியல் அமைப்பு சட்டம் ஏற்பிற்கு பின்னர் அது இன்றுவரை ஷரத்து 44 ஆக இருந்து வருகிறது.  அவையை துணைத்தலைவர் டாக்டர் எச் சி முகர்ஜி வழிநடத்தினார். இந்த விவாதத்தில் அவையில் இருந்த முஸ்லீம் உறுப்பினர்கள் பங்கேற்று திருத்தங்களை கொடுத்து தங்கள் அய்யப்பாடுகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். தனிச்சட்டத்திற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்கிற சந்தேகம் அவர்களிடம் இருந்தது. முகம்மது இஸ்மாயில் கான், நசிருதின்  அகமது, மகபூப் அலி பைக், தெல்லிச்சேரி போக்கர், ஹீசைன் இமாம் போன்றவர்கள் திருத்தங்களை கொடுத்து விவாதித்தனர்.  ஆர்ட்டிகல் 35 ஏற்கப்படவேண்டும் என அனந்தசயனம் அய்யங்கார், எல் கிருஷ்ணசாமி பாரதி, கே எம் முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ஆகியோர் விவாதித்தனர். கிருஷ்ணசாமி பாரதி நாவலர் சோசசுந்தரபாரதியின் மகள் லட்சுமி பாரதியை மணந்தவர். திருத்தங்களை ஏற்கவியலாது என விளக்கமளித்து அம்பேத்கர் விவாதத்திற்க

UNIFORM CIVIL CODE சீரான உரிமையியல் சட்டம்

                         சீரான உரிமையியல் சட்டம் Uniform Civil Code குறித்த விவாதங்கள் பெருமளவில் மீண்டும் நடக்கத் துவங்கியுள்ளன . வழக்கம்போல் எதிரும் புதிருமான விவாதங்கள் நடந்து வருகின்றன . இந்தியாவில் குடும்பம் , திருமணம் , வாரிசுரிமை குறித்து ஏராள சமூகவியலாளர்களின் புத்தகங்களும் இருக்கின்றன . சட்டத்துறை சார்ந்தவன் அல்லன். சட்ட அறிவும் எனக்கு கிடையாது. UCC குறித்து கிடைத்தவற்றை வாசிக்கும் போது,   என் வாசக அசட்டுத்தன புரிதலுடனும் கூட பெற்றவற்றை கீழே தந்துள்ளேன். உச்சநீதிமன்றத்தின் 10-5-1995 தீர்ப்பு 15 பக்க அளவிலானது தான் . ஆர்வம் உள்ளவர் , விவரம் அறிய வேண்டுபவர் எவரும் அதை படித்துவிடமுடியும் . நீதிமான்கள் குல்திப் சிங்கும் , ஆர் எம் சகாய் அவர்களும் இருவேறு கோணத்தில் பார்த்து இருவகை பார்வையை வழங்கியிருப்பதை கவனத்தில் கொள்ள முடியும் . Reform of Family Law குறித்த Consultation Paper   ஒன்றை 185 பக்கங்களுக்கு அன்றைய சட்ட கமிஷன் 31-8-2018 ல் வெளியிட்டது . அதையும் ஆர்வம் உள்ளவர் படித்துக்கொள்வது நலம் . விவாத புரிதலை மேம்படுத்தி