சீரான உரிமையியல் சட்டம்
Uniform Civil Code குறித்த விவாதங்கள் பெருமளவில் மீண்டும் நடக்கத் துவங்கியுள்ளன. வழக்கம்போல் எதிரும் புதிருமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியாவில் குடும்பம், திருமணம், வாரிசுரிமை குறித்து ஏராள சமூகவியலாளர்களின் புத்தகங்களும் இருக்கின்றன.
சட்டத்துறை
சார்ந்தவன் அல்லன். சட்ட அறிவும் எனக்கு கிடையாது. UCC
குறித்து கிடைத்தவற்றை வாசிக்கும் போது, என்
வாசக அசட்டுத்தன புரிதலுடனும் கூட பெற்றவற்றை கீழே தந்துள்ளேன்.
உச்சநீதிமன்றத்தின் 10-5-1995 தீர்ப்பு 15 பக்க அளவிலானது தான். ஆர்வம் உள்ளவர், விவரம் அறிய வேண்டுபவர் எவரும் அதை படித்துவிடமுடியும். நீதிமான்கள் குல்திப் சிங்கும், ஆர் எம் சகாய் அவர்களும் இருவேறு கோணத்தில் பார்த்து இருவகை பார்வையை வழங்கியிருப்பதை கவனத்தில் கொள்ள முடியும்.
Reform of Family Law குறித்த Consultation Paper ஒன்றை 185 பக்கங்களுக்கு அன்றைய சட்ட கமிஷன் 31-8-2018ல் வெளியிட்டது. அதையும் ஆர்வம் உள்ளவர் படித்துக்கொள்வது நலம். விவாத புரிதலை மேம்படுத்திக்கொள்ள உதவலாம்.
2
ஆலோசனைக்கான ஆய்வு ஆவணத்தில் 21வது சட்ட கமிஷன் ஆரம்ப பக்கங்களிலேயே கீழ்கண்ட புரிதலை தந்துவிடுகிறது.
"While
the more fundamentalist forces within the society have historically demanded an
absolute right to freedom of religion whereby religious customs cannot be
tested against even constitutional provisions,
on
the other hand are the advocates of the right to equality who suggest that the
law should be blind to cultural difference when it comes to matters of human
rights."
"
..Therefore, women must be guaranteed their freedom of faith without any
compromise on their right to equality.
At this stage these rights can be reconciled by making piecemeal changes to
laws wherever necessary "
"While
diversity of Indian culture can and should be celebrated, specific groups, or
weaker sections of the society must not be dis-privileged in the process.
Resolution
of this conflict does not mean abolition of difference. This Commission has
therefore dealt with laws that are discriminatory rather than providing a
uniform civil code which is neither necessary nor desirable at this stage. Most
countries are now moving towards recognition of difference, and the mere
existence of difference does not imply discrimination, but is indicative of a
robust democracy."
அக்கமிஷன் மேலும் ஒன்றுபட்ட தேசம் என்பது வேறுபாடுகளை இணக்கப்படுத்துவதாகவும் அதன் இருப்பை அங்கீகரிப்பதாகவும் இருக்கவேண்டும். united என்பதை uniformity எனப் புரிந்துகொள்ள வேண்டாம் என்றது.
திருமணம் என்பது குடும்பத்திற்கு அடிப்படையாகவும், குடும்பம் சமூகத்திற்கு அடிப்படையாகவும் பொதுப்புத்தியில் காணப்படுகிறது.
ஒவ்வொரு மதப்பிரிவினர் இடையிலும் திருமண பந்தம்- விலக்கு குறித்த மரபுரீதியான தொடர் பார்வை கற்பிக்கப்பட்டுள்ளது. இதை 21வது கமிஷன் இவ்வாறு சொல்கிறது.
“While
in Hindu law, marriage is a sacrament, in Christian law, divorce continues to
be stigmatised;in Muslim law, marriage is a contract and Parsi law registration
of marriage is central to the ritual of marriage. It is important that these
different attitudes are respected and not placed in hierarchy, pitting one
religious attitude against another. At the same time marriage
cannot
be defined in religious terms alone, and religiously inspired gender roles and
stereotypes cannot be allowed to come in the way of women‘s rights.”
ஏன் தனிப்பட்ட சட்டங்களை மேம்படுத்தி தகவமைக்ககூடாது என்ற கேள்வியை எடுத்துக்கொண்டு அப்படிப்பட்ட முந்திய இந்திய அனுபவங்களின்படி அதையே செய்வது உகந்தது என சட்டக்கமிஷன் ஆலோசனைத் தாள் சொன்னது. அதன் மூலம் அனைத்து சமயம் சார் பெண்களின் நிலைமையில் equity சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கலாமே என்றது 21வது சட்டக் கமிஷன்.
’adultery’ எனப்படும் கூடா ஒழுக்கம் அனைத்து மக்கட் பிரிவினரிடமும் மண விலக்குவரை செல்லும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கிறிஸ்துவ சட்டத்தில் அது விலக்கிற்கான காரணமானால், முஸ்லீம் சட்டத்தில் அப்படி ஆவதில்லை. 1860 IPC யில் ஆண்கள் தண்டனைக்குரியவர். ஜம்மு காஷ்மீர் ஆண் பெண் கூடா ஒழுக்கம் தண்டனைக்குரியது என்றது. பார்சியில் கூடா ஒழுக்கம் என்றால் அது மண விலக்கிற்கு உரிய காரணம். இதில் இருபாலாருக்கும் தண்டனை, குறிப்பாக pro women ஆக இருப்பது குறித்தும் கமிஷன் பேசியது.
இதேபோல் Compulsory Registration of Marriages- Registration of Birth and Death Actல் இதற்கான திருத்தம் என்ற பேச்சையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
திருமண வயது என்பது சீராக இருப்பதை இக்கமிஷன் விழைகிறது.
If a universal age for majority is recognised, and that grants all citizens the right to choose their governments, surely, they must then be also considered capable of choosing their spouses என கமிஷன் குறிப்பிட்டுள்ளது.
18 வயதிற்கு கீழ் உடலுறவு என்பதை the Criminal Law Amendment Act 2013 ’Rape’ எனச் சொல்கிறது. எங்காவது 16-18 வயதில் இது வைக்கப்பட்டிருந்தால் அதை சரி செய்தல் பற்றி இக்கமிஷன் பேசுகிறது.
The end goal of any legislative endeavour for empowerment of women or gender justice should prioritise autonomy of women என்று கமிஷன் பேசியுள்ளது.
தனிப்பட்ட சட்டங்கள் இதை எப்படி வைத்துள்ளன என்பதை கமிஷன் சுட்டிக்காட்டுகிறது.
Hindu law recognises the marriage between a sixteen-year-old girl and eighteen-year-old boy as valid, but voidable. Muslim Law in India recognizes marriage of minor who has attained puberty as valid.
Dowry Prohibition Act 1961, Medical Termination of Pregnancy Act 1972 போன்றவைகளில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை குழந்தை மணத்தையும் கணக்கில் கொண்டு பேசியுள்ளதை கமிஷன் சொல்கிறது.
Community of Property upon Divorce and Maintenance என்கிற ஒன்று பார்க்கப்படவேண்டிய மற்றொரு முக்கிய அம்சம். திருமணத்திற்கு பின்னர் சேர்க்கப்பட்ட அனைத்து சொத்தும் இருவருக்குமானதாக கருதப்பட வேண்டும். இதில் வாரிசுரிமையில் பெறப்பட்ட சொத்து சேருமா என்பது பிரச்சனையாகிறது. ஜீவானாம்சம் என வந்தால் அதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்கிற ஒன்றையும் கமிஷன் சொல்கிறது.
சேர்ந்து வாழும் இணையர்களை திருமண பந்தமாகக் கருதி மனைவியானாலும்- அப்படிக் கருதப்படுகிறவர் ஆனாலும் அவர்கள் Maintenance குறித்து கமிஷன் பேசுகிறது.
3
The Hindu Marriage Act 1955 பல மாற்றங்களைத் தந்தது. திருத்தங்களுக்கும் உள்ளானது. இதைப்பற்றி கமிஷன் பேசும்போது அதன் போதாமையை தெரிவித்தாலும் அதன் நெகிழ்வையும் சொல்கிறது.
Thus, the significance of the Act, 1955 lay in the fact that it made religious customs and practices amendable, and these practices, in order to prevail had to meet the test of constitutionality
நீதிமன்றங்கள் சமய நம்பிக்கை என்பதற்கும் அதன் சடங்காச்சாரங்களுக்குமான வித்தியாசத்தை - religious belief and religious practice சொல்லியுள்ளன. சமய நம்பிக்கையை அரசியல் அமைப்பு சட்டம் உறுதிபடுத்தியுள்ளது. ஆனால் practice is to face the constitutional test.
The significant achievement of codification of family law was that despite the imperfect nature of the legislation, once written in the form of statutes the Hindu law Acts served to open up new public discussions and debates on various aspects of religion and the ways in which these could be contradicted or reconciled with constitutional provisions and in particular with Fundamental Rights.
Bigamy upon Conversion என்கிற பிரச்சனை இன்றைய தீவிர அரசியல் பிரச்சனைகளுள் ஒன்றாகவும் மாறியுள்ளது. மதமாற்றத்திற்கு பின் மறுமணம் என்பது விவாதத்திற்குரியதாகிறது.. 18வது சட்டக் கமிஷன் இவ்வாறு கருதியது.
The
report had clarified that conversion from a monogamous religious to a polygamous
one did not by itself dissolve the marriage.
The
existing law on bigamy, section 494 Indian Penal Code (IPC) provides that a
person shall be punished with the imprisonment, which may be extend to seven
years, if he/she marries during the lifetime of their spouse.
பல நிகழ்வுகளில் இரண்டாவது மனைவியின் குழந்தைகள் illegitimate என்ற பிரச்சனையை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த லேபலை ஒட்டாமல் இருக்கவேண்டிய சமூக பிரக்ஞையும் எழுந்தது.
இந்து திருமணச் சட்டத்தில் பதியாமல் சீக்கிய சட்டத்தில் ஆனந்த கராஜ் சட்டம் என்பதில் சீக்கியர் திருமணம் செய்து கொள்ளமுடியும். எவர் சீக்கியர் என்பது வரையறைக்குள்ளானது. அங்கு dissolution of Marriage council உண்டு. ஆனால் அங்கு மணவிலக்கு எனில் அவர்கள் இந்து சட்டத்திற்கு வரவேண்டியுள்ளது. சீக்கிய சட்டத்தில் மணவிலக்கு codify ஆகவில்லையாம்.
முஸ்லீம் தனிப்பட்ட சட்டம் 1937 ஷரியத் சட்டம், 1939 மணவிலக்கு சட்டம். சொத்துரிமையாளராக பெண்களை முஸ்லீம் சட்டம் பார்த்ததுடன் மணவிலக்கு உரிமையும் தந்துள்ளது.
1960ல் நேரு ஏ ஏ பைஸி உதவியுடன் முஸ்லீம் சட்டக் கமிட்டி ஒன்றை உருவாக்கலாமா என யோசித்துள்ளார். ஆனால் வந்த எதிர்ப்பினால் செய்ய முடியவில்லை. உச்ச நீதிமன்றமும் merciful reading of the provisions of Muslim Law to extend greater protections to women and provide them adequate maintenance upon divorce என பேசியுள்ளது.
1986ல் ஷாபானு வழக்கு freedom of Religion - right of equality என்ற இருமைகள் குறித்த விவாதங்களை முன்னுக்கு வைத்தது. The Muslim Women Protection Rights act on Divorce Act 1986 வந்தது. விமர்சனங்களும் கூடவே வந்தன..
முஸ்லீம் மண விலக்கிற்கு பின்னால் அப்பெண்ணின் பராமரிப்பு எப்படி என்பதை கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது.
the first responsibility of maintenance of a divorced Muslim woman lay
on her husband who would make a provision for maintenance within (rather than
for) three months; failing which the responsibility would lie on the parents
and relatives of the woman in order in which they would inherit her property
and failing that
it would be the responsibility of the Waqf board to maintain her.
However, the provision‘ was enforceable only again the husband which was
interpreted as the responsibility lying with the spouse.
..Maintenance
claims are frequently flouted by husbands,and qazis as well as judicial
magistrates have had limited success in having even the meher amount paid.
முத்தலாக்கு என்பதை பற்றியும் கமிஷன் விளக்கியுள்ளது.. இங்கு கமிஷன் சமயத்திற்கும் அரசமைப்பு சட்டத்திற்கும் ஒத்திசைவை எப்படி ஏற்படுத்துவது என்பதை பரிசீலிக்கச் சொல்கிறது.
..promoting
harmony between religion and constitutionalism, in a way that no citizen is
left disadvantaged on account of their religion and at the same time every
citizens right to freedom of religion is equally protected.
உலக நாடுகளின்
அனுபவங்களில்
’நிகாநாமா’
எனும்
திருமண
விஷயங்களை
விரிவுபடுத்தி
உரிய
திருத்தங்களை
தனிப்பட்ட
1937, 1939 சட்டங்களில் முஸ்லீம் போர்டுகள்
கொணர்வது
குறித்தும்
கமிஷன்
ஆலோசனை
நல்கியுள்ளது.
பலதார மணம்
இஸ்லாமில்
ஏற்கப்பட்டுள்ளது
என்றாலும்
கமிஷன்
இப்பார்வையை
வைக்கிறது.
Although polygamy is permitted within Islam, it is a rare practice
among Indian Muslims, on the other hand it is frequently misused by persons of
other religions who convert as Muslims solely for the purpose of solemnising
another marriage rather than Muslim themselves
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள
மாற்றம்,
தீர்ப்பையும்
அது
சுட்டிக்காட்டுகிறது
In Pakistan law has been successful in preventing bigamous marriages as
tough procedures are in place for its regulation. In 2017 the subordinate Court
of Lahore gave a progressive interpretation to the provision of 2015 family law
enactment on bigamy and held that a second marriage conducted without the
permission of the existing wife amounts to breaking the law‘.
கமிஷன் கீழ்கண்ட
ஆலோசனையையும்
தந்துள்ளது
It is therefore suggested that the Nikahnama itself should make it
clear that polygamy is a criminal offence and section 494 of IPC and it will
apply to all communities
அதேபோல் கிறிஸ்துவ
தனிச்
சட்டம்
பற்றி
கீழ்கண்ட
observation காணப்படுகிறது.
The 15th Law Commission Report Law relating to Marriage and Divorce
Amongst Christians in India‘ (1960) did not culminate in successful legislation
and faced opposition from the Catholic Church.
In early 1960s the amendments to the Indian Christian Marriage
Act,1892, were introduced in Parliament but the Bill lapsed. In 1969 the Indian
Divorce Act, 1869 was amended but this did not accommodate most of the concerns
raised by the Law Commission in its 15th Report.
In 2001 Amendment the clause of two-year separation had been preserved
by Parliament keeping in mind that the Christian community and in particular
the Catholic community had not been historically in favour of divorce.
Showing consideration to such religious sentiments, the government had,
in fact, hesitated even from the use of the term divorce altogether referring
to it instead as dissolution of marriage
பார்சி திருமணம்
மற்றும்
விவாகரத்து
சட்டம்
1936 பற்றியும்
கமிஷன்
தன்
பார்வையை
வெளிப்படுத்தியது.
For Parsis, the procedure of divorce not only needs to be simplified,
but also marrying outside the community should estrange persons from their
religion nor should they have to forfeit their inheritance rights.
சிறப்பு திருமண
சட்டம்
1954ல்
இருக்கின்ற
பிரச்சனைகளையும்
21வது
கமிஷன்
வெளிக்கொணர்ந்தது.
கட்டாய
30 நாள்
அறிவிப்பு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது
என்கிறார்கள்..
இதில்
சமூக
பிரச்சனையாக
உருவெடுத்துவரும்
honour killings, Khap Panchayats விவாதிக்கப்படவேண்டியவையாகவுள்ளன.
மேலும்
30 நாட்கள்
என்பதைக்
குறைக்கலாம்.
The Commission urges a reduction of this period to bring the procedure
in line with all other personal laws, where registration of under Hindu
Marriage Act,1955 can be attained in a day and signing of a Nikahnama also
confers the status of husband and wife on the couple immediately.
4
நீளம் மற்றும்
விரிவு
அஞ்சி
அந்த
ஆய்வுத்தாள்
ஆலோசனைகளாக
முன்வைத்திருப்பதை
நிறுத்த
வேண்டியுள்ளது.
இதேபோல் Custody- Guardianship, Adoption and
Maintenance, Succession and Inheritance போன்ற
முக்கிய
அம்சங்களை
21வது
கமிஷன்
விரிவாக
இந்த
ஆலோசனைத்
தாளில்
முன்
வைத்துள்ளது.
விவரம் அறிய
விரும்புவர்
பொறுமையிருந்தால்-
நேரம்
ஒத்துழைத்தால்
படித்து
தெரிந்து
கொள்ளலாம்.
இப்போது இந்தப்
பிரச்சனை
எழுந்ததற்கு
காரணம்
சட்டக்
கமிஷன்
ஜூன்
14, 2023ல் பொது அறிவிப்பு ஒன்றை
இந்த UCC அம்சத்தில்
தந்துள்ளது.
22வது
கமிஷன்
சட்டத்துறை
அமைச்சகத்தின்
2016 ஜூன்
17ன்
குறிப்பின்படி
UCCயை
பரிசீலிக்க
இருக்கிறது.
கடந்த
கமிஷன்
கொடுத்த
ஆய்வுத்தாள்
வந்து
மூன்று
ஆண்டுகள்
ஆகிவிட்டன.
நீதிமன்றங்களின்
அறிவுறுத்தல்களும்
இருக்கின்றன.
Accordingly, the 22nd Law Commission of India decided again to solicit
views and ideas of the public at large and recognized religious organizations
about the Uniform Civil Code. Those who are interested and willing may present
their views within a period of 30 days from the date of Notice..
If need be, Commission may call upon any individual or organization for
a personal hearing or discussion
எனவே பொது
விவாதம்
எழுந்துள்ளது.
தனிநபர்களும்,
மாதர்
இயக்கங்களும்,
சமய
அமைப்புகளும்
, சட்ட
வல்லுநர்களும்
கருத்துக்களை
எழுதி
அனுப்பலாம்
எனச்
சொல்லியுள்ளனர்.
அரசியல்
கட்சிகளும்
தங்கள்
நிலைப்பாட்டை
எழுத்து
பூர்வமாக
தெரிவிக்க
முடியும்.
பிரதமர் உட்பட
பாஜக
ஆர்வமும்,
ஹிந்துத்துவ
அமைப்புகளின்
கூடுதல்
ஆர்வமும்
இதில்
அரசியல்
சந்தேகங்களை
பலருக்கும்
உருவாக்கியுள்ளன.
இதில்
ஆச்சர்யப்பட
ஏதுமில்லை.
வருகிற
2024 தேர்தல்
உத்தி
தவிர
வேறு
இல்லை
என
இதை
ஒதுக்க
முடியுமா
எனத்
தெரியவில்லை.
பாஜக ஜனசங் காலத்திலிருந்த தனது
முக்கிய
அஜெண்டாக்கலில்
ஒன்றாக
வெளிப்படையாக
இதைப்
பேசி
வருகிறது.
அதே
நேரத்தில்
1950களில் Hindu Codification என்பதை ஹிந்து மகாசபா
எதிர்த்ததையும்
பார்த்துள்ளோம்.
21வது கமிஷனின் நல்லெண்ணத்தை
எதிர்
கட்சிகள்
வரவேற்று
அதை
முன்வைத்து
வருகின்றன.
அது
சாதகமில்லாமல்
இருப்பதை
உணர்ந்து
பாஜக
22வது
கமிஷன்
மூலம்
புதிய
விவாதத்தை
முன்னெடுத்துள்ளது.
சமய
பதட்டங்களை
அது
தொடர்ந்து
விழைகிறது
என்ற
அதன்
மீதான
குற்றச்
சாட்டை
இதன்
மூலம்
அது ருசுப்படுத்திக்கொள்கிறது.
வளர்ந்து வரும்
இந்தியா
பல
மாறுதல்களுக்கும்
தனது
சமூகத்தை
உட்படுத்திக்கொள்ள
வேண்டியிருக்கும்.
அது
வல்லடியாக
இல்லாமல்,
மானுட
நியாய
உணர்வின்
அடிப்படையில்
சமயத்தையும்
அதன்
வழக்கங்களையும்,
நவீன
இந்திய
மனதின்
எதிர்பார்ப்பிற்கேற்ப
சமதை
நிலைச்
சூழல்
உருவாக்கத்துடன்
ஆண்
பெண்
சேர்ந்து
வாழ்தல்-திருமணம்-மணமுறிவு-
குடும்பம்
அதன்
மாற்றங்கள்-
சொத்து
பங்கீட்டு
பந்தங்களை
வளர்த்தெடுக்கவேண்டும்.
22வது சட்டக் கமிஷனோ, அரசாங்கமோ
தரப்போகிற
நகலை
பார்த்தவுடன்தான்
உண்மையான
விவாதம்
தீவிரமாக
துவங்கும். அதுவரை பரஸ்பர தாக்குதல்களும்
சந்தேகப்
பரப்பல்களும்
நிலவலாம்.
3-7-2023 ஆர்.
பட்டாபிராமன்
Comments
Post a Comment