The Idea Of India Suni KhilNani Penguin Books இந்தியா என்கிற கருத்தாக்கம்- தமிழில் அக்களூர் இரவி சந்தியா பதிப்பகம் ரூ 315 பக்கங்கள் 335 சுனில் கில்நானியின் உயர்நடை, பார்வை, விவாதத்திறன் பிரமிக்கவைக்கும். இந்தியாவில் அதிகாரத்தின் வெளி எவ்வாறு சமூகம் என்கிற கட்டுக்கோப்பிலிருந்து அரசியல் அதிகாரம் என மாறிப்போனதின் பிரதியாக அவரின் புத்தகம் எனக்கு விளங்குகிறது. இந்தியா எனும் தேசிய பேரடையாளம், அது ஒரேவகைப்பட்டு சுவீகரித்துக்கொள்ளப்படவில்லை என்பது உண்மையாக இருந்த போதிலும் வங்கம், மராட்டிய வட்டார உணர்வில் இந்திய தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டது என்பதை சுனில் பேசுகிறார். விசாலமான கலாச்சார தேசியம் ஒன்றை வளர்த்தெடுத்துக்கொள்ளமுடியும் என அவர் பேசும்போது அதை வெறும் சொல்லாடலாக மட்டும் அவர் விட்டு செல்வது பிரச்ச்னைகளை உருவாக்கலாம். விசாலாமான கலாச்சார தேசியம் என்பதை விளக்க தனித்த புத்தகம் ஒன்று தேவைப்படலாம் விடுதலைக்கு பின்னர் சிறு அறிவுக்குழாம், டெக்னோகிராட் உதவியுடன் நவீன இந்திய உருவாக்கத்தில் நேரு ஈடுபட்ட கதையாகவும் புத்தகம் இருக்கிறது. விடுதலைக்குப் பின்னரான 50 ஆண்டுகளில