தோழர் கே . சுப்பிரமணியன் அவர்களின் புபேந்திரநாத் தத்தா புத்தக மதிப்புரை புபேந்திரநாத் தத்தா குறித்த எளிய புத்தகம் ஒன்றை கோவை வழக்கறிஞர் தோழர் கே . சுப்பிரமணியன் கொணர்ந்துள்ளார் . இதுவரை புபேந்தர் பற்றி தமிழில் புத்தகம் ஏதும் வரவில்லை என்ற உணர்வு மேலோங்கிய உந்துதலில் தோழர் கே . எஸ் தனது இந்த 80 பக்க சிறு நூலை தமிழர்களின் பார்வைக்கு தனது உழைப்பால் கொடுத்துள்ளார் . அவரின் இத்தகைய பணிகள் மென்மேலும் சிறந்து தமிழகம் பயனுற என் வாழ்த்துகள் . தோழர் கே எஸ் political Bio என்ற வகைப்பட்டு தனது நூலை உருவாக்கியுள்ளார் . புபேந்தர் தத்தா விவேகானந்தரின் சகோதரர் . இந்திய விடுதலை - சமூகம் குறித்த அவரது விழிப்புணர்வு பயணம் - தனது கனவை மெய்ப்பிக்க அவர் ஆற்றிய அமைப்பு பயணங்களை தோழர் கே எஸ் தொட்டுக்காட்டுகிறார் . அவரது உன்னதமான ஆக்கபூர்வ நூல்கள் குறித்தும் சில செய்திகளை கே எஸ் தனது நூலில் தருகிறார் . வங்கப்புரட்சிகரக் குழுக்கள் - அனுசீலன் சமிதி யுகாந்தர் பத்திரிகைகள் , ஜெர்மானிய தொடர்பு , மாஸ்கோ பயணம் அங்கு லென