பகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி? - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச சமூகம் குறித்த வேட்கை பரவலாக அறியப்பட்டவைதான். அவரின் தியாக மரணம் இன்றும் ஆதர்சனமாக இளைஞர்களை கவ்விப்பிடிக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. லாகூர் சதிவழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மரணதண்டனை என்பது முடிவான பின்னர் அவர்களை காப்பது காந்தியின் பெரும் பொறுப்பு என்கிற எதிர்பார்ப்பு அதிகமானது. தூக்குத்தண்டனை மாற்றப்படாமல் நிறைவேற்றப்பட்டப்பின்னர் இப்பிரச்சனையில் காந்தி குறித்த விவாதங்கள் நடக்கத்துவங்கின. அவை இன்றும் ஓய்ந்தபாடில்லை. பகத்சிங் போன்ற போராளிகளின் நடவடிக்கைகள், காந்தியின் பங்குபாத்திரம், பிற தலைவர்களின் நிலைப்பாடுகள் இக்கட்டுரையில் சுருக்கமாக விவாதிக்கப்பட்டுள்ளன . ஒத்துழையாமை-பகிஷ்கரிப்பு போராட்டத்தை காந்தி அறிவிக்கிறார். ரெளலட் சட்டம் ஜாலியன்வாலாபாக் காலத்தில் பஞ்சாப் நுழைய காந்திக்கு அரசாங்கத்தடை இருந்தது. அக்டோபர் 1919ல்தான் தடை நீக்கப்படுகிறது. காந்தி கூட்டம் லாகூரில் என அறிந்து தனது நண்பர்களுடன் பகத்சிங் செல்கிறார். காந்