அம்பேத்கரின் முகப்புரை -ஆர். பட்டாபிராமன் இந்திய இளம் தலைமுறையினர் ஆணும் பெண்ணுமாக கூடிநின்று அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை உரக்க படிப்பதையே போராட்ட வடிவமாக மாற்றினர். திரு மோடி அரசாங்கத்தின் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எழுந்த எதிர்ப்பு வடிவமாக இதை நாம் காணமுடிந்தது. இப்படிப்பட்ட முகப்புரை 1949-50 ல்எவ்வாறு உருவானது என்பது குறித்து விரிவான விவாதங்கள் இளம் தலைமுறையை சென்றடையட்டும் என்றெண்ணி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அப்போராட்டத்தில் முகப்புரை வாசிக்கப்பட்டதும், முகப்புரை குறித்து விரிவாக விவாதித்த ஆகாஷ் ரதோர் (Aakash Singh Rathore) அவர்களின் ஜனவரி 2020ல் வந்த Ambedkar’s Preamble புத்தகமும் இக்கட்டுரை எழுத என்னை தூண்டிய நிகழ்வுகள் என சொல்லலாம். இனி 81 சொற்களை மட்டுமே கொண்ட நம் முகப்புரை வந்த வரலாறை - அதை எழுதியதற்கு பாத்தியதை யாருக்கு என்பதை பார்க்கலாம். இந்திய அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்பு சட்டத்தின் preamble எனும் முகப்புரை இவ்வாறு செல்கிறது . WE, THE PEOPLE