அம்பேத்கரின் முகப்புரை
-ஆர். பட்டாபிராமன்
இந்திய
இளம் தலைமுறையினர் ஆணும் பெண்ணுமாக கூடிநின்று அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை
உரக்க படிப்பதையே போராட்ட வடிவமாக மாற்றினர். திரு மோடி அரசாங்கத்தின் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு
எழுந்த எதிர்ப்பு வடிவமாக இதை நாம் காணமுடிந்தது. இப்படிப்பட்ட முகப்புரை 1949-50 ல்எவ்வாறு உருவானது என்பது குறித்து விரிவான
விவாதங்கள் இளம் தலைமுறையை சென்றடையட்டும் என்றெண்ணி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அப்போராட்டத்தில் முகப்புரை வாசிக்கப்பட்டதும், முகப்புரை குறித்து விரிவாக விவாதித்த
ஆகாஷ் ரதோர் (Aakash Singh Rathore) அவர்களின் ஜனவரி 2020ல் வந்த Ambedkar’s
Preamble புத்தகமும் இக்கட்டுரை எழுத என்னை
தூண்டிய நிகழ்வுகள் என சொல்லலாம். இனி 81 சொற்களை மட்டுமே கொண்ட நம் முகப்புரை வந்த
வரலாறை - அதை எழுதியதற்கு பாத்தியதை யாருக்கு என்பதை பார்க்கலாம்.
இந்திய
அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்பு சட்டத்தின்
preamble எனும் முகப்புரை இவ்வாறு
செல்கிறது.
WE, THE PEOPLE OF INDIA,
having solemnly resolved to constitute India into a SOVEREIGN DEMOCRATIC
REPUBLIC and to secure to all its citizens
JUSTICE, social, economic and political;
LIBERTY of thought, expression, belief, faith
and worship;
EQUALITY of status and of opportunity; and to
promote among them all
FRATERNITY assuring the dignity of the
individual and the unity of the Nation;
IN OUR CONSTITUENT ASSEMBLY this 26th day of
November 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.
இந்த
முகவுரை டிசம்பர் 18 1976ல் திருத்தப்பட்டு கீழ்கண்டவாறு
அமைக்கப்பட்டது.
WE,
THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a
SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its
citizens
JUSTICE, social, economic and political;
LIBERTY of thought, expression, belief, faith
and worship;
EQUALITY of status and of opportunity; and to
promote among them all
FRATERNITY assuring the dignity of the
individual and the unity and integrity of the Nation;
IN OUR CONSTITUENT ASSEMBLY this 26th day of November 1949, do HEREBY ADOPT,
ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.
இதன்
அதிகாரபூர்வ தமிழ் வடிவம்
” முகப்புரை
இந்திய மக்களாகிய நாம், இந்திய
நாட்டினை இறையாண்மையும் சமநலச்சமுதாயமும் சமயச்சார்பின்மையும் மக்களாட்சிமுறையும் அமைந்ததொரு
குடியரசாக நிறுவவும்,
அதன் குடிமக்கள் அனைவரும்
சமுதாய, பொருளியல், அரசியல்
நீதி,
எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு,
சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை,
சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம்
இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும்,
அவர்கள் அனைவரிடையேயும் தனிமனிதனின்
மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பட்டு இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்புரிமையினை
வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய்,
நம்முடைய அரசமைப்புப் பேரவையில்,
1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி,
நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்”
முதலில்
தரப்பட்டதற்கும் 1976க்குப் பின்னரான திருத்தத்திற்கும்
4 கலைச் சொற்களில் வேறுபாடு இருக்கிறது. அதாவது Sovereign Democratic என்பதுடன் socialist,
secular பதங்களும் unity
of the Nation என்பதுடன்
and Integrity வார்த்தைகளும் திருத்தமாக சேர்க்கப்பட்டு இன்றுவரை இதுவே முகவுரையாக இருந்துவருகிறது.
1949ல் இறுதிசெய்யப்பட்ட
அந்த முகப்புரையை எவர் எழுதியிருக்கமுடியும் என்பது விவாதத்திற்குரிய
ஒன்றாகவே இருந்துவருகிறது.
அதை நேரு எழுதினார் என
உரிமை கோருபவர்களும் உண்டு. அவரின் நோக்க
தீர்மான வாசகங்கள் அவை என்பது ஒருவகை
வாதமாக இருந்துவருகிறது. இல்லை பி என்
ராவ் எனும் அரசியல் அமைப்பு
சட்டங்களின் வல்லுனர் எழுதினார் என ஒரு சாரார்.
பலரின் கூட்டுழைப்பால் அமையப்பெற்ற வாசகங்கள் அவை எனச் சிலர்.
இல்லை முழுமையாக அம்பேத்கரின் வாசக அமைவு தான்
முகவுரை.
இந்த
நான்கு வாதங்களையும் மனச்சாய்வின்றி ஆய்ந்து பார்த்தால் அது
அம்பேத்கரின் முகப்புரை என்ற முடிவை எட்டமுடியும்
என்பதே அம்பேத்கர் முகப்புரை என்ற புத்தகத்தின் சாரம்.
ஆகாஷ் சிங் ரதோர் இதற்கான
நூலை 230 பக்கங்களில் தந்துள்ளார். அம்பேத்கரின் இவ்வாசகங்கள் சரியாக பிப்ரவரி 6, 1948ல்
பிறந்ததாக நிறுவுகிறார் ரதோர்.
2
முகப்புரை
81 வார்த்தைகளை கொண்டிருந்தது. 1976 திருத்தத்தால் 85 வார்த்தைகளாக அது மாற்றப்பட்டது.
”We,
The People of India…
In
Our Constituent Assembly this twenty- sixth day of November 1949, do Hereby
Adopt, Enact And Give To Ourselves This Constitution” என்பது
அதன் பிரகடனப்பகுதி -declaratory part.
இதன்
நோக்கப்பகுதி எனும் objective
part “ Having solemnly resolved to
constitute India into a Sovereign Democrartic Republic..” என்பதாகும்.
அரசியல்
நிர்ணய சபையில் ஒவ்வொரு வார்த்தையும்
விவாதத்திற்கு உள்ளாகும் என்பதை நாம் அறிந்தே
இருப்போம். அதேபோல் நோக்கப்பகுதியும் உள்ளானது.
ரிபப்ளிக் எனச்சொல்வதா ஸ்டேட் என அழைப்பதா
என்பது கூட வந்தது. யூனியன்
என்பதா பெடரேஷன் என்பதா விவாதமானது.
முகப்புரையின்
குறிக்கோள் பகுதி descriptive
part விளக்கப்பகுதி
எனச் சொல்லப்படுகிறது.
To secure
to all its Citizens Justice, social, economic and political ; Liberty of
thought, expression, belief, faith and worship ; Equality of Status and of
Opportutnity ; and to promote among them
all Fraternity assuring the dignity of
the individual and the Unity of the Nation
இவைத்தவிர
அரசியல் அமைப்பு சட்ட முகவுரையில்
சில நாடுகள் கடவுள் அல்லது
உயர்ந்தோரை அழைத்து சொல்லும் இழுத்துச் சொல்லும் invocative part என்பதை வைத்திருக்கும்.
நமது விவாதத்திலும் In the name of God Almighty, By the Grace of
Parameshwar, invoking name of Mahatama
Gandhi என்பன வந்தன.
ஆனால் அப்படி இழுத்து கடவுளை
அழைத்தல் என்பது இந்திய அரசியல்
அமைப்பு சட்ட முகவுரையில் இடம்பெறவில்லை.
சீனாவில் மாவோ பெயர் இழுக்கப்பட்டுள்ளது.
அய்ரோப்பா நாடுகள் யேசுவின் பெயரையும், இஸ்லாமிய நாடுகள் அல்லாவின் பெயரையும் அழைத்துள்ளதை நாம் காணமுடியும்.
ரதோரின்
ஆய்வு descriptive part ல் கவனம் செலுத்துகிறது. அப்பகுதி கீழ்கண்ட
வாசகங்களை கொண்டுள்ளது .
To
secure to all its Citizens Justice,
social, economic and political ; Liberty of thought, expression, belief, faith
and worship ; Equality of Status and of Opportutnity ; and to promote among them all Fraternity assuring the
dignity of the individual and the Unity of the Nation
அதாவது
To secure to all its Citizens என்கிற ஆறு வார்த்தைகளுடன் அது பயணிக்கிறது.
பிரிட்டிஷ்
காலத்தின் 1935 இந்திய அரசாங்க சட்டம் நீக்கப்பட்டு விடுதலை இந்தியாவின் அரசியல் அமைப்பு
சட்டம் ஜனவரி 26, 1950ல் அமுலுக்கு வந்தது. அரசியல் சட்ட நிர்ணயசபை இறுதி செய்து ஏற்றுக்கொண்ட
நவம்பர் 26, 1949 தினத்தை போற்றும் வகையில்
நவம்பர் 26 constitutional Day அனுசரிக்கப்படுகிறது.
காங்கிரஸ்
செயற்குழு எதிர்கால அரசியல் அமைப்பு சட்டம் குறித்து பரிந்துரைக்க ஜூலை 1946ல் நேரு தலைமையில் வல்லுனர் குழு ஒன்றை அமைத்தது. ஆசப்
அலி, கே எம் முன்ஷி, என் கோபால்சாமி அய்யங்கார், கே டி ஷா, ஹுமாயுன் கபீர் போன்றோர்
அதில் இடம்பெற்றனர். அக்குழு தந்த வாசகங்களின்
முக்கியப்பகுதி இங்கு தரப்பட்டுள்ளது.
”Wherein
All
power and authority of the Sovereign Independent India, its constituent parts
and organs of government, are derived from the people; and
Wherein
Shall
be guaranteed to all the people of India by law and secured to them by declared
social objectives and purposes, economic organization and administrative
machinery
a
) justice, social, economic and political
b
) equality of status, of opportunity, and before the law;
c
) freedom of thought, belief, vocation, association, and action, subject to law
and public morality; and
wherein
adequate
safeguards shall be provided for minorities, backward areas, and classes; and
whereby
shall
be maintained the integrity of the territory of the Republic and its sovereign
rights on land, sea, and air according to Justice and the law of civilized
nations.
அரசியல்
சட்ட நிர்ணய சபைக்கு டிசம்பர் 13, 1946ல் Resolution Regarding Aims and
Objectives என்கிற நோக்கத்தீர்மானத்தை நேரு
தந்திட்டார்.
a
) This Constitution assembly declares its firm and solemn resolve to proclaim
India as an Independent Sovereign Republic and to draw up for her future
governance a Constitution
தொடர்ந்து
இதில் d , e, f, g பகுதிகளின் வாசகங்கள் மேற்குறிப்பிட்ட
காங்கிரஸ் செயற்குழு வல்லுனர் கமிட்டி வாசகங்களாக அமைந்துள்ளன. ஆனால் நேருவின் வாசகத்தில்
இடம்பெற்ற முக்கிய மாற்றம் freedom of expression, faith and worship எனச் சொல்வதில்
இருந்தது. இந்த இரண்டு தீர்மானங்களிலும் freedom என்பதே இடம்பெற்றது - liberty இடம் பெறவில்லை. அங்குதான் அம்பேத்கரின்
முக்கியத்துவம் வருகிறது என ஆய்ந்தளிக்கிறார் ரதோர்.
நேரு
முன்மொழிந்த நோக்கத்தீர்மானம் முழுமையாக நிர்ணய சபையால் ஜனவரி 22, 1947ல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
முன்பாக டிசம்பர் 17, 1946ல் இதன் மீதான விவாதம் நடைபெற்றது. அம்பேத்கர் அவர்களையும்
கருத்துக்கூற ராஜேந்திர பிரசாத் அழைத்தார். அம்பேத்கர் தனது உரையில் முக்கிய கேள்வி
ஒன்றை முன்வைத்தார்.
“I
do not understand how it could be possible for any future Government which
believes in doing justice socially, economically and politically, unless its
economy is a socialist economy“ எதிர்வரும் அரசாங்கம் சோசலிச பொருளாதாரத்தை அமைத்துக்கொள்ளாவிடில்
சமூக, பொருளாதார, அரசியல் நீதி சாத்தியமா என்கிற மிக முக்கியமான கேள்விதான் அவர் முன்வைத்தது.
3
அம்பேத்கரின்
States and Minorities: What are Their Rights and How to secure Them in the
Constitution of Free India என்கிற நூல்
1947ல் வெளியானது என்பது ரதோரின் பதிவு. அம்பேத்கர் இதை 20000 வார்த்தைகள் கொண்ட ஆவணமாக
வல்லபாய் படேல் தலைமையிலான கமிட்டிக்கு (நிர்ணயசபை அட்வைசரி கமிட்டி) அனுப்பியிருந்தார்.
அதன் துணைக்கமிட்டிகள் கிருபளானி மற்றும் எச் சி முகர்ஜி தலைமையில் இருந்தன. அம்பேத்கரும்
அதில் உறுப்பினராக இருந்தார். ஆனால் அம்பேத்கர் ஆவணத்தை கமிட்டி பெரிதாக பொருட்படுத்தவில்லை.
எனவேதான் அதை அவர் AISCF சார்பில் நூலாக வெளிக்கொணர்ந்தார். அம்பேத்கர் அதில்
United States of India எனக் குறிப்பிட்டிருந்தார்.
Constituent Assembly Debates குறித்த இணையதளத்தில் இப்புத்தகம்
1945ல் வெளியானதாகவும் நிர்ணயசபைக்கு ஆவணமாக 1947ல் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆவணத்தில் அம்பேத்கர் எழுதிய முகவுரை கீழ்கண்டவாறு
மையப்பெற்றுள்ளது
PROPOSED
PREAMBLE
We
the people of the territories of British India distributed into administrative
units called Provinces and Centrally Administered Areas and of the territories
of the Indian States with a view to form a more perfect union of these
territories do-- ordain that the Provinces and the Centrally Administered Areas
(to be hereafter designated as States) and the Indian States shall be joined
together into a Body Politic for Legislative, Executive and Administrative
purposes under the style The United States of India and that the union so
formed shall be indissoluble and that with a view :
(i)
To secure the blessings both of self-government and good government throughout
the United States of India to ourselves and to out posterity,
(ii)
To maintain the right of every subject to life, liberty and pursuit of
happiness and to free speech and free exercise of religion,
(iii)
To remove social, political and economic inequality by providing better
opportunities to the submerged classes,
(iv)
To make it possible for every subject to enjoy freedom from want and freedom
from fear, and
(v)
To provide against internal disorder and external aggression, establish this
Constitution for the United States of India.
இங்கு
அம்பேத்கர் சோசலிசம் என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லை. காரணம் குறித்து அம்பேத்கர்
ஆய்வாளர்களிடம் வேறுபட்ட பதில்களே கிடைக்கின்றன. தனது விருப்பத்திற்கு மாறான பலவற்றையே
நான் செய்யவேண்டிய நிலையில் இருந்தேன் என்கிற அம்பேத்கரின் ஒப்புதல் வாக்குமூலத்தை
சுட்டிக்காட்டுபவரும் உளர். நாட்டின் பிரிவினை
என்கிற எதார்த்தம் நிர்ணய சபையில் கொணர்ந்த மாற்றம் என்பதை ரதோர் காரணமாக காட்டுகிறார்.
பி
என் ராவ் அவர்கள் தந்த முகவுரை நிர்ணயசபையில் மே 30, 1947ல் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
ஜூன் 30 அன்று தற்காலிகமாக அதை ஏற்றனர். அதில் காணப்படும் வார்த்தைகள்
“We,
the people of India, seeking to promote the common good, do hereby, through our
chosen representatives, enact, adopt and give to ourselves this Constitution “
நாட்டின்
பிரிவினையை ஒட்டி நேருவின் நோக்கத்தீர்மானத்தை எவ்வாறு சரி செய்துகொள்வது என்பதற்கு வல்லுனர் குழு ஒன்றை அமைத்தனர். கே எம் முன்ஷி,
கோபால்சாமி அய்யங்கார் ஆகியவர்களுடம் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், அம்பேத்கர் இடம்
பெற்றனர். ஆலோசகராக ராவ் அமர்த்தப்பட்டார். நேருவும் சில மாற்றங்கள் தேவை- அடிப்படை
அம்சங்கள் அப்படியே இருக்கும் என்றார். ஜூலை 18, 1947ல் அரசியல் சட்ட வரைவு கமிட்டி
அமைக்கப்படும் என நேரு அறிவித்தார். அதேபோல் ஆகஸ்ட் 27 1947ல் வரைவுக்குழு அமைக்க நிர்ணயசபை
தீர்மானம் இயற்றியது. கே எம் முன்ஷி, கோபால்சாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், அம்பேத்கர்,
டி பி கைத்தான் , மாதவ ராவ், முகமதுசதுல்லா,
கிருஷ்ணமாச்சாரி இடம் பெற்றனர். முதல் அமர்விலேயே அம்பேத்கர் ஒருமனதாக வரைவுக்குழு சேர்மனாக ஏற்கப்பட்டார்.
4
பிப்ரவரி
6, 1948 வரைவுக்குழு கூட்டத்தில் ராவ் முகப்புரைக்குப்பதில் கீழ்கண்ட முகப்புரை பதிலீடாகிறது
என மினிட்ஸ் பதிவானது. அது என்ன முகப்புரை- வானத்திலிருந்து குதித்த ஒன்றா. அம்பேத்கர்
தனது ’கோட்பாக்கட்டிலிருந்து’ எழுதிவந்த பேப்பர்தான் அது என ரதோர் நிறுவுகிறார். அதில்
காணப்படும் வார்த்தைகள்
We,
the people of India, having solemnly resolved to constitute India into a
sovereign independent state, and to secure to, or promote among, all its
citizens : Justice, social, economic and political ; liberty of thought,
expression, belief, faith, worship, vocation, association and action; Equality
of status, and of opportunity; and, Fraternity assuring the dignity of every
individual without distinction of caste or creed..do hereby adopt enact and
give to ourselves this constitution.
அக்கூட்டம்
3 மணி நேரத்திற்கு மேல் நடந்தும் முகப்புரை குறித்து விவாதம் 10 நிமிடங்கள் கூட நடக்கவில்லை
என்கிறார் ரதோர். இதை அம்பேத்கர் தான் எழுதியிருக்கமுடியும் என்பதை அந்த ஒரு வரி
Fraternity assuring the dignity of every individual without distinction of
caste காட்டும் என்பதை எவரும் மறுக்க இயலாது. நேரு, ராவ் என அனைவரின் வார்த்தைகளையும்
இடம்பெற செய்து அம்பேத்கர் எது இந்தியத்தன்மைக்கு சரியாக இருக்குமோ அவ்வார்த்தைகளையும்
இடம் பெற வைத்தார். நேரு ‘to secure’ என நோக்கத்தீர்மானத்தில் பேசியபோது அம்பேத்கர் ‘to
remove inequalities’ என state and Minorities ஆக்கத்தில் பேசியிருந்தார். அதுதான் affirmative actionக்கு வழிவகுக்கும் என
அம்பேத்கர் கருதினார்.
பிப்ரவரி
9, 1948ல் அம்பேத்கரின் முகவுரை குறித்த விவாதம் வந்தது. அதனடிப்படையில் திருத்தப்பட்ட
நகலில் காணப்பட்ட வார்த்தைகள்
Fraternity,
without distinction of caste, class or creed so as to assure the dignity of
every individual and the unity of the nation என மாற்றம் பெற்றன.
பிப்ரவரி
21, 1948ல் அரசியல் சட்ட நிர்ணயசபையின் தலைவருக்கு அம்பேத்கர் அரசியல் சட்ட நகலை அனுப்பினார். அதில் இறுதி செய்யப்பட்டிருந்த
முகவுரையின் வாசகங்கள் கீழ்கண்டவாறு அமைந்திருந்தன. அதில் without distinction of
caste, class or creed என்பது இடம்பெறவில்லை.
” WE,
THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a
SOVEREIGN DEMOCRATIC REPUBLIC and to
secure to all its citizens : JUSTICE,
social, economic and political; LIBERTY
of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to
promote among them all FRATERNITY
assuring the dignity of the individual and the unity of the Nation..”
மேற்கண்ட
வார்த்தைகள்தான் இறுதிவடிவமாக 1949லும், 1950லும் ஏற்கப்பட்ட வடிவமானது. அரசியல் சட்ட
நகல் அம்பேத்கரின் மூன்று வாசிப்புகளை நிர்ணய சபையில் கண்டு முகவுரையில் எந்த மாற்றமும்
செய்யப்படாமல் ஏற்கப்பட்டது.
5
Justice,
social, economic and political என்கிற பதங்கள் விவாதமானபோது அல்லாடி கிருஷ்ணசாமி தனது
வியத்தகு அறிவாற்றலால் அதன் அவசியத்தை வலியுறுத்தி நிலைபெறச் செய்தார் என்கிற பதிவையும்
ரதோர் செய்கிறார். 1976ல் 42வது சட்டத்திருத்தத்தின்போது கூட இந்த clauseல் மாற்றம்
கோரப்பட்டும் செய்யப்படவில்லை. அதில் Religious என்கிற வார்த்தை சேர்க்கப்பட வேண்டும்
என்பது ஏற்கப்படவில்லை.
அம்பேத்கர்
தனது எழுத்துக்களில் ‘Justice, social,
economic and political’ குறித்து ஏராள விளக்கங்களை தந்துள்ளார். சவுத்பாரோ கமிட்டி
1919, வட்டமேஜை மாநாடுகள் 1930, சாதியை ஒழிப்பது 1936, அரசும் சிறுபான்மையினரும்
1947, மொழிவாரி மாநில சிந்தனைகள் 1955, புத்தர் கார்ல் மார்க்ஸ் 1956 ஆகிய அவரது ஆக்கங்களில்
அரசியல் நியாயம் குறித்து ஏராளம் பேசப்பட்டுள்ளதாக ரதோர் பட்டியலிடுகிறார்.
அதேபோல்
இந்தியாவில் சாதிகள், சாதியை ஒழிப்பது, இந்துயிசத்தின் தத்துவம் போன்றவற்றில் சமூக,
பொருளாதர நியாயங்களை அவர் பேசுவதாக ரதோர் குறிப்பிடுகிறார். ஜான் துவே, ஜேம்ஸ் சாட்வெல்,
எட்வின் செலிகன், ஜேம்ஸ் ஹார்வே ராபின்சன் போன்ற கொலம்பியா பல்கலை பேராசிரியர்கள் அவருக்கு
வாய்த்தனர். அவர் 1920லேயே லண்டனில் MSc, DSc Economics மற்றும் law degree பெற்றவராக இருந்தார்.
காந்தியுடன்
அவருக்கு கடுமையான கருத்துவேறுபாடு இருந்தது. காந்தி cunning politician என்கிற மதிப்பீடு
அவரிடம் இருந்தது. தீண்டாமை என்பதை ’அசமத்துவ நீக்கம்’ எனும் பிரச்சினையாக பார்க்காமல்
அதிலும் அரசியல் செய்தார் காந்தி என்கிற கருத்தும் அவரிடம் இருந்தது. கிராமம் என்பது
குறித்த பார்வையிலும் அடிப்படை வேறுபாடு இருந்தது. காந்தியும் அம்பேத்காரிடம் நிலவும்
எண்ணத்தை உணர்ந்தவராக இருந்ததை அவரின் 6 ஆகஸ்ட் 1944 தேதியிட்ட கடிதம் உணர்த்தும்.
”தீண்டாமை
விஷயத்தில் நம் இருவருக்கும் மாறுபட்ட பார்வைகள் இருக்கின்றன. பரந்த அரசியல் விஷயத்திலும்
வேறுபட்ட கோணங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களிலும் நாம் சந்திக்கும் புள்ளிகள்
இருந்தால் மகிழ்ச்சி அடைவேன். தங்களின் திறமையை நான் அறிவேன். இணைந்து வேலை செய்தால்
மகிழ்ச்சியாக இருக்கும். அதே நேரத்தில் தங்களிடம் நெருங்கிவரமுடியாத தோல்வியை நான்
ஏற்றுக்கொள்கிறேன். சந்திக்கும் பொதுப்புள்ளியை தாங்கள் காட்டினால் அதைக் காண விழைகிறேன்.
இந்த துரதிருஷ்டமான வேறுபாட்டை நான் புரிந்துகொண்டு என்னை சமரசப்படுத்திக்கொள்கிறேன்.”
திலகர்
சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என முழங்கினார். எவருக்கான பிறப்புரிமை என்ற கேள்வி அம்பேத்கரிடம்
எழுவது இயல்பே. அம்பேத்கரிடம் பிரஞ்சு புரட்சியின் முழக்கங்கள் Liberty, Equality,
Fraternity தாக்கத்தை உருவாக்கியிருந்தன. Freedom என்பது பொருத்தமில்லை- Liberty என்பதை
எடுத்தாண்டார் அம்பேத்கர். இதை அற்புதமாகப்
பாராட்டி கிருபளானி அக்டோபர் 17, 1949ல் அரசியல் நிர்ணய சபையில் பேசினார். சமூகத்தில்
வன்முறை இருந்தால் அனைத்து லிபர்ட்டியும் பாதிக்கப்பட்டுவிடும் என காந்திய கொள்கையை
சுட்டிக்காட்டி அவர் லிபர்ட்டியின் அவசியத்தை உணர்த்தினார்.
அம்பேத்கர்
வட்டமேஜை மாநாட்டில் ’நிலவும் சமூகத் தன்மைகளை’ மாற்றுவதற்கு அஞ்சாத அரசாங்கம் தேவை-
அது பிரிட்டிஷ் சர்க்காராக இருக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.
..we
must have a Govt in which men in power will not be afraid to amend the social
and economic code of life which the dictates of justice and expediency so
urgently call for. This role the British Govt will never be able to play. It is
only a Govt which is of the people, for the people and by the people that will
make this possible.
எங்களிடம்
அரசியல் அதிகாரம் தரப்படாமல், நாங்கள் எங்களை விடுவித்துக்கொள்ள வழிவகையில்லாமல் விடுதலை
எங்களுக்கு சாத்தியமில்லை என்பதையும் அவர் தன் வாதமாக முன்வைத்தார். ’ஸ்வராஜ்’ என்று
சொல்லும்போது எங்கள் மீதான காலம் காலமான ஒடுக்குமுறைகள் தொடருமோ என்கிற எண்ணம் வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
காந்தி
அம்பேத்கருக்கு இந்துயிசத்திலேயே தீர்வைக்
காணுதல் என்பதை பரிந்துரைத்தார். அந்நிய ஆட்சியிடம் போய் தீர்வை எதிர்பார்ப்பது சட்டியிலிருந்து
நெருப்பிலே விழுவதாகிவிடும். முழுமையாக இந்துமதம் விடுத்து மதம் மாறுதல் என்பது வழியாகாது.
தேசிய இயக்கத்தில் இதயபூர்வமாக பங்கேற்று அடிமைப்படுத்தும் அரசை தூக்கி எறிவது உகந்த
வழி என்பது காந்தி தெரிவித்த கருத்துக்கள். சுயராஜ்யத்தில் தலித்களின் இடமென்ன என்பது
அம்பேத்கரின் தலையாய கேள்வியாக இருந்தது. சுயராஜயத்தில் தரமான வாழ்க்கை, படிக்க வாய்ப்பு,
தீண்டாமை கொடுமைக்கு உள்ளாகாமல் இருத்தல் இருக்குமா என அவர் வினவினார். சாதியை ஒழிப்பது
என்கிற ஆக்கத்தில் swaraj for Hindus may turn out to be only a step toward our
slavery என அவர் தன் அய்யத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அம்பேத்கர்
5 வகைப்பட்ட இந்துக்கள் என்கிற பட்டியலை சூத்திரர்கள் யார் என்பதில் தருகிறார்.
இந்து
சமூக முறையில் குறையில்லை என அப்படியே ஏற்பவர்கள்- மாற்றம் புனிதம் கெட்டுவிடும் என
நினக்கும் இந்துக்கள்
ஆர்யசமாஜிகள்
போன்று வேத அடிப்படையில் எல்லாம் என்பவர்கள்
இந்து
முறையில் குறையிருக்கிறது என்பது உண்மைதான். சட்டம் அதை ஆதரிப்பதில்லை. எனவே மெதுவாக
தவறான முறைகள் செத்து மடிந்துவிடும் என நினைக்கும் இந்துக்கள்
அரசியலை
முன்நிறுத்தும் இந்துக்கள். சமூக சீர்திருத்தம் என்பதெல்லாம் அரசியல் விடுதலைக்கு பின்னர்தான்
எனநினைப்பவர்கள்
அய்ந்தாவது
வகையினர் சமூக சீர்திருத்தம் தலையாயது என கருதுபவர்கள்- சுயராஜ்யத்தைவிட முக்கியமானது
என நினைப்பவர்கள்
எனவே
சுயராஜ்யம் என பேசுபவர்கள் 6 கோடி தீண்டாமை கொடுமைக்குள்ளானவர்க்கும் சேர்த்துதான்
என்பதை புரிந்து கொண்டுள்ளனரா என்பது அவர் விடை தேடிய மிக முக்கிய கேள்வி
6
சமன்மை
எனும் Equality என்பதை நேரு தீர்மானம் பேசினால் அம்பேத்கர் அசமத்துவம் நீக்கல் removal
of inequality என்பதை பேசினார். அவரின் ’புரட்சி எதிர்புரட்சி’ ஆக்கத்திலும், மார்க்சியம்
குறித்த பார்வையிலும் caste antagonism என்பதை அம்பேத்கர் முன்வைத்தார். The
history of India is nothing but a history of moral conflict between Buddhism
and Brahminism என அவர் விளக்கினார். புத்த இயக்கம் என்பதை பிரஞ்சு புரட்சி போன்ற ஒன்றாக
அவர் சித்தரித்தார். பிராமணியம்தான் graded inequality க்கு காரணம் என எடுத்துரைத்தார்.
மார்க்சியம் பேசுகின்ற முதலாளி- தொழிலாளி என்கிற இருமை போன்றதல்ல இந்த graded
inequality என்றார். மிகவும் சிக்கலானது என அவர் கருதினார். சமூகத்தின் அனைத்து படிநிலைகளிலும்
அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கிறது. அகமணமுறை எனும் சகோதரியையும் அது கொண்டிருக்கிறது
புத்தமத
வீழ்ச்சிக்கு உள்ள காரணங்களில் ஒன்றாக இஸ்லாமியர் படையெடுப்பும் காரணமாக இருந்தது என
அம்பேத்கர் கருதியதாக ரதோர் சொல்கிறார். சில புத்தமதத்தினர் ரஜ்புட் மன்னர்கள் கொடுமையிலிருந்து
தற்காத்துக்கொள்ள இஸ்லாமை தழுவியதாகவும் ரதோர் ஆய்வு செல்கிறது.
Fraternity
என்கிற கலைச்சொல் முகப்புரையில் இடம் பெற்றதை கிருபளானி பாராட்டிப்பேசினார். கடவுளின்
குழந்தைகள் நாம் அனைவரும் என்ற எண்ணம் ஜனநாயகத்திற்கு நெருக்கமாக துணைபுரியட்டும் என்றார்
கிருபளானி. We are one of another என்கிற பைபிளின் வரியையும் அவர் சுட்டிக்காட்டினார்.
’சகோதரத்துவம்’
என்கிற சொல்லாக்கம் முன்பு சொல்லப்பட்ட எந்த ஆவணத்திலும் இடம்பெறவில்லை. அம்பேத்கரின்
ஆக்கமாக அது இடம்பெற்றது. காங்கிரசின் வல்லுனர் குழு அறிக்கை, நேருவின் நோக்கத்தீர்மானம்,
பி என் ராவின் முகப்புரை, ஸ்ரீமன் நாராயண் அவர்களால் தயாரிக்கப்பட்ட காந்திய அரசியல்
சட்டம், எம் என் ராயின் அரசியல் சட்டம், சோசலிஸ்ட்கள் தயாரித்த அரசியல் சட்டம் என எதிலும்
அச்சொல்லாக்கம் இடம்பெறவில்லை. பிப்ரவரி 6, 1948ல் அம்பேத்கர் ’கோட்பாக்கட்டிலிருந்து’
எடுக்கப்ப்ட்டு வாசிக்கப்பட்ட பிரதியில்தான் அச்சொல் முதலில் இடம்பெறுகிறது என்பதை
ரதோர் நிறுவுகிறார்.
அம்பேத்கர்
பிப்ரவரி 6 1948ல் எழுதியது “ Fraternity, without distinction of caste, class or
creed, so as to assure the dignity of every individual and the unity of the
Nation”. விடுதலை இந்தியாவில் 1949-50ல் இவ்வாக்கியம் Fraternity,
assuring the dignity of the individual and the unity of the Nation என மாற்றப்பட்டு ஏற்கப்பட்டது. 1976ல் இதில்
and integrity என்பது சேர்க்கப்பட்டு
Fraternity, assuring the dignity of the individual and the unity and
integrity of the Nation என தற்போது இருக்கிறது.
’The need for fraternal concord and goodwill in India’ என்பதை அம்பேத்கர் தன் சொந்த
வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உணர்ந்து அறிந்து இருந்ததால் அதில் அவரால் அழுத்தம் தந்து
நிற்க, நிலைநாட்ட முடிந்தது.
ஆரம்பகாலங்களில்
Liberty, Equality, Fraternity ஆகியவற்றை அவர் பிரஞ்சுபுரட்சியின் தாக்கங்களிலிருந்து
சொல்லிவந்தாலும், 1954ல் வானொலி பேட்டி ஒன்றில்
தனது மாஸ்டர் புத்தரிடமிருந்து அவற்றை எடுத்துக்கொண்டதாக கூறினார். “ My philosophy has roots in religion and not
in political science. I have derived them from the teachings of my master, the
Buddha”
Annihilation
of Caste ஆக்கத்தில் அவர் சகோதரத்துவம் குறித்து விளக்கியிருந்தார். அற்புதமான சில
வரையறுப்புகளை அவ்வாக்கத்தில் அவர் செய்திருந்தார்.
“ Democracy is not merely a form of Govt. It is
primarily a mode of associated living, of conjoint communicated experience. It
is essentially an attitude of respect and reverence towars fellow men”
மனிதன்
சகமனிதன் மீது கொள்ளும் மதிப்பிடுகளின்படியே ஜனநாயகம் தழைக்கமுடியும். அது அரசியல்
அரசாங்க ஏற்பாடு மட்டுமல்ல- வாழ்வியல் முறையாகவேண்டும் என அவர் விழைந்தார். நல்ல சமூகம்
என்பது சாதி எனும் தேக்கத்தில் நிற்காமல் மொபைல் ஆக இருக்கவேண்டும். அதில் சேர்மானத்
தடைகள் இருக்கக்கூடாது. அப்போதுதான் சகோதரத்துவம் அதன் மெய்மையை சந்திக்கும் என சொல்லித்தந்தார்
அம்பேத்கர்.
அம்பேத்கர்
சகோதரத்துவம் என்பதற்கு தந்த முக்கியத்துவத்தை கீழ்கண்ட வரிகள் புலப்படுத்துவதை உணரமுடியும்.
”
without fraternity, liberty would destroy equality and equality would destroy
liberty. If in Democracy liberty does not destroy equality and equality does
not destroy liberty, it is because at the basis of both there is fraternity.
Fraternity is therefore the root of Democracy”
சகோதரத்துவம்
இருந்தால்தான் உரிமையும் சமன்மையும் கூட நிலைப்பெறும் என்பதை அவர் உணர்த்தினார். அரசமைப்பு
சட்ட நெறி என்பது கூட சமூகம் வளர்த்துக்கொள்ளவேண்டிய நெறிதான் என்றார். ஜனநாயகம் தழைத்திட
பொது ஊழியர்களிடம் அது வளரவேண்டும். அநியாயம் எதிர்த்து அதை நீக்கிட நிற்கும் குரலாக
அவர்கள் இருக்கவேண்டும். இந்த பொது உணர்வை சாதி
உணர்வு கொன்றுவிடாமல் காக்கவேண்டும் என்ற கவலையை அவர் வெளிப்படுத்திவந்தார்.
இந்தக்
கவலையை அவர் தன் உரையில் நவம்பர் 25, 1949ல் வெளிப்படுத்தினார். “ On 26th
Jan 1950, we are going to enter into a life of contradictions. In politics we
will have equality and in social and economic life we will have inequality”
7
Dignity என்கிற தனிமனித மாண்பு என்பதும் சிறப்பான கலைச்சொல்லாக்கம்.
காந்தியின்
அரசியல் சட்டம் என்கிற ஆக்கத்தில்
dignified and peaceful existence என்கிற பதம் இருக்கிறது. நேருவின் நோக்க தீர்மானத்தில்,
ராவின் முகப்புரை, எம் என் ராய் அரசியல் சட்டம், சோசலிஸ்ட்களின் அரசியல் சட்டம் ஆகியவற்றில்
’டிக்னிட்டி’ என்கிற வார்த்தையில்லை என்கிறார் ரதோர்.
We
the people என்பதை ராவ் அய்ரிஷ் அரசியல் சட்டத்திலிருந்து எடுத்துக்கொண்டாலும் அதில்
இருந்த ’invocation clause’ Divine Lord, Jesus போன்ற இறை குறிக்கும் சொற்களை எடுத்துக்கொள்ளவில்லை.
ஐ நா வின் மனித உரிமை பிரகடனம் All human beings are born free and equal in dignity
and rights என்பதை பேசுகிறது.
நிர்ணய
சபையில் சீதாராமையா முதலில் unity of Nation
பின்னர் dignity of the individual வைக்கலாம் என்பது ஏற்கப்படவில்லை. கே எம்
முன்ஷி மற்றும் பி என் ராவ் அவர்கள் இதில் அம்பேத்கருடன் உடன்பட்டு நின்றனர். கே எம்
முன்ஷி இதை அழகாக விளக்கியிருந்தார். தனிமனித கண்ணியம் காப்பதில் அரசாங்கத்தின் கடமையை
முன்ஷி வலியுறுத்தியிருந்தார்.
“
Dignity was a word of moral and spiritual import; it implied an obligation on
the part of the Union to respect the personality of the citizen and to create
conditions in which every citizen would be left free to find individual self
fulfillment” மேலும் ஹெகலின் ’அரசின் முழுமைத்துவம்’
என்பதை மட்டுப்படுத்துவதாகவும் இந்த ’தனிமனிதன் மாண்பு’ என்கிற அம்சம் இருக்கும் என்ற
விளக்கத்தையும் முன்ஷியிடம் பெறமுடிகிறது. Dignity of High Office என்பதுடன் மாண்பு நிறுத்தப்படாமல் Dignity of
common man என்பதற்கான நீட்சியை- சிந்தனையை முகப்புரையில் அம்பேத்கர் வெளிப்படுத்தினார்.
பேராசிரியர் ழாக் மரிடைன் அவர்களின் மேற்கோளை அம்பேத்கர்
காட்டுகிறார். நபர் என்பதற்கான எளிய பொருத்தமான விளக்கமது. நபர் என்று மனிதன் ஒருவரை
நாம் குறிக்கிறோம் என்றால் அவர் முழுமையானவர்- பகுதியல்ல. அடிமையல்ல- சுதந்திரமானவர்
என்கிற புரிதல் வேண்டும். The value of the person, his dignity and rights,
belong to the order of things naturally sacred
என அப்பேராசிரியர் பேசும் தனிமனித மாண்பை அம்பேத்கர் எடுத்து விளக்கினார்.
அரசும்
சிறுபன்மையினரும் என்கிற ஆக்கத்தில் அரசியல் ஜனநாயகம் நான்கு அம்சங்களில் நிலைகொண்டுள்ளது
என்பதை அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். தனிநபர் அவரளவில் இறுதியானவர், தனிநபருக்கு
அரசியல் சட்ட உரிமைகள், அரசியல் அமைப்பு தரும் சட்ட உரிமைகளை எந்த சலுகையையும் பெறுவதற்காக
தனிநபர் இழக்கவேண்டியதில்லை. அரசாங்கம் ஆள்வது என்கிற உரிமையை எந்த தனியாரிடமும் ஒப்படைக்க கூடாது. ‘Not bread but honour is what they want’ என சுருக்கமாக அம்பேத்கர் மாண்பு குறித்து இலக்கணம்
தந்தார்.
8
அரசியல்
சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கர் மூன்று உரைகளை டிசம்பர் 17, 1946 - நவம்பர் 4,
1948- நவம்பர் 25 1949 ஆகிய நாட்களில் தந்தார். முதல் உரை பல்வேறு பொருதும் குழுக்களாக
உள்ள இந்தியர்கள் மத்தியில் சில சலுகைகள், சில சமரசங்கள் மூலம் ஒன்றுபடுத்துதல் தேவை
என்பதை வலியுறுத்தியது.
Let
us leave aside slogans, let us even make a concession to the prejudices of our
opponents, bring them in, so that they may willingly join with us on marching
upon the road…that is the only way by which we can carry with us all sections
of the country..
இரண்டாவது
உரை நவம்பர் 1948ல் அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏதேனும் தவறு ஏற்படும் எனில், அதன்
பொருள் நம்மிடம் மோசமான சட்டம் இருக்கிறது என்பதல்ல. மனிதன் இழிவாக நடந்துகொள்கிறான்
என்பதாகவே இருக்கும் என்ற கருத்தை பிரதிபலித்தது. Constitutional morality என்பதை அவர்
வரையறுத்துப் பேசினார். அது வளர்த்தெடுக்கப்படவேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார்.
மூன்றாவது
உரை நவம்பர் 25, 1949ல் சகோதரத்துவம் பற்றி குறிப்பிடுகிறார். சாதிகளாக பிளவுண்டு நிற்பவர்கள்
எப்படி தேசமாகமுடியும் என வினவுகிறார். The castes are anti national என்றார்.
Fraternity means a sense of common brotherhood of all Indians- of Indians being
one people” அதேபோல் தேசம் குறித்து அருமையான வரி ஒன்றை அவரின் எழுத்துக்களில் பார்க்கமுடியும்.
Nation on the contrary is a spiritual reality binding people into a deep
comradeship.
அம்பேத்கர்
அவ்வுரையில் மூன்று அம்சங்களை முன்வைக்கிறார். சட்டவழிகளை பின்பற்றுதல்- இரத்தபுரட்சிகளை-
சத்தியாக்கிரக போராட்டமுறைகளை கைவிடுதல்
CAD
Debates 11.165.323
B.R.
Ambedkar
If we wish to maintain democracy not merely
in form, but also in fact, what must we do? The first thing in my judgment we
must do is to hold fast to constitutional methods of achieving our social and
economic objectives. It means we must abandon the bloody methods of revolution.
It means that we must abandon the method of civil disobedience, non-cooperation
and satyagraha. When there was no way left for constitutional methods for
achieving economic and social objectives, there was a great deal of
justification for unconstitutional methods. But where constitutional methods
are open, there can be no justification for these unconstitutional methods.
These methods are nothing but the Grammar of Anarchy and the sooner they are
abandoned, the better for us.
அம்பேத்கர்
குறிப்பிட்ட இரண்டாவது அம்சம்
CAD
Debates 11.165.324
B.R.
Ambedkar
The second thing we must do is to observe
the caution which John Stuart Mill has given to all who are interested in the
maintenance of democracy, namely, not "to lay their liberties at the feet
of even a great man, or to trust him with powers which enable him to subvert
their institutions". There is nothing wrong in being grateful to great men
who have rendered life-long services to the country. But there are limits to
gratefulness. As has been well said by the Irish Patriot Daniel O'Connel, no
man can be grateful at the cost of his honour, no woman can be grateful at the
cost of her chastity and no nation can be grateful at the cost of its liberty.
This caution is far more necessary in the case of India than in the case of any
other country. For in India, Bhakti or what may be called the path of devotion
or hero-worship, plays a part in its politics unequalled in magnitude by the
part it plays in the politics of any other country in the world. Bhakti in
religion may be a road to the salvation of the soul. But in politics, Bhakti or
hero-worship is a sure road to degradation and to eventual dictatorship.
அரசியலில்
தனிநபர் வழிபாட்டை- பக்தியை ஒழித்தல். மனிதர்கள் தங்கள் உரிமைகளை பெரிய மனிதர்களின்
காலடியில் வைத்துவிடாமல் இருத்தல்- அவரின் அதீத அதிகாரம் மீது நம்பிக்கை கொள்ளாமல்
இருத்தல்.
அம்பேதகர்
தன் உரையில் குறிப்பிட்ட மூன்றாவது அம்சம்
CAD
Debates 11.165.325
B.R.
Ambedkar
The third thing we must do is not to be
content with mere political democracy. We must make our political democracy a
social democracy as well. Political democracy cannot last unless there lies at
the base of it social democracy. What does social democracy mean? It means a
way of life which recognizes liberty, equality and fraternity as the principles
of life…... On the social plane, we have in India a society based on the
principle of graded inequality which elevation for some and degradation for
others. On the economic plane, we have a society in which there are some who
have immense wealth as against many who live in abject poverty. On the 26th of
January 1950, we are going to enter into a life of contradictions. In politics
we will have equality and in social and economic life we will have inequality.
In politics we will be recognizing the principle of one man one vote and one
vote one value. In our social and economic life, we shall, by reason of our
social and economic structure, continue to deny the principle of one man one
value. How long shall we continue to live this life of contradictions? How long
shall we continue to deny equality in our social and economic life? If we
continue to deny it for long, we will do so only by putting our political
democracy in peril. We must remove this contradiction at the earliest possible
moment or else those who suffer from inequality will blow up the structure of
political democracy which is Assembly has to laboriously built up.
அரசியல் ஜனநாயகம் என்பது சமூக ஜனநாயகமாக மலரவேண்டும்.
அரசியலில் சமத்துவம்- சமூக பொருளாதாரத்தில் அசமத்துவத்துடன் குடியரசாக மலர்ந்துள்ளோம்.
இந்த முரண்பாடு நீக்கப்படவேண்டும். இல்லையெனில் பெரும் ஆபத்தை சந்திப்போம். கடின உழைப்பால்
கட்டப்பட்ட ஜனநாயகம் முறை தூக்கி எறியப்படும்.
இந்திய
மக்கள் தங்களுக்கு தாங்களே உறுதி ஏற்றுக்கொண்ட நீதி, உரிமை, சமன்மை, சகோதரத்துவம் என்கிற
முகப்புரை சிலருக்கான ஏகபோகமாக மாறிவிடக்கூடாது என்பதில் நமது முன்னோடிகள் கவனமாக இருந்தனர்.
அம்பேத்கர் அதற்கான சரியான தேர்ந்தெடுத்த கலைச்சொற்களை வழங்கி நமது இலக்கிற்கான திசைகாட்டியாக
நிற்கிறார்.
10-4-2020
ஆதார
நூல்:
Ambedkar’s
Preamble Aakash Singh Rathore
CAD
Debates Vol 11 dated Nov 25, 1949
Comments
Post a Comment