சிந்தனையாளர் கோவை ஞானி ஜூலை 22 2020 அன்று மறைந்தார். அவருடன் சில ஆண்டுகளே ’நீடித்த’ தொடர் பழக்கத்தில் இருந்தேன். அவர் இல்லம் சென்று நடத்திய உரையாடல் கூட மிகக்குறைவே. தொலைபேசி உரையாடல் பல நாட்கள் நடந்தது. அவர் நடத்திய நிகழ், தமிழ்நேயம் இதழ்களுக்கு கட்டுரை எழுத என்ணை தூண்டியவர் தோழர் ஞானி. பின்தொடரும் நிழல் குறித்த என் கட்டுரையை காலச்சுவடு திருப்பி அனுப்பியது அறிந்து அதை வாங்கி பிரசுரித்தார். தோழர் கோவை ஞானிக்கான சிறப்பிதழ் ஒன்றுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் கேட்ட அடிப்படையில் எழுதிக் கொடுத்த கட்டுரை இங்கு இணைப்பில் தரப்பட்டுள்ளது. NCBH வெளியீடான மார்க்சியத் தடங்கள் 2006 பதிப்பில் இக்கட்டுரையும் இடம் பெற்றது. https://drive.google.com/file/d/17qhdCgoQZ9kFusUyEjb9GfXTPr4o48Hg/view?usp=sharing