பயணிகள் இரயில் போக்குவரத்தில் தனியார்
-
ஆர்.
பட்டாபிராமன்
இந்திய
இரயில்வே உலகின் பெரும் கட்டமைப்புகளில்
ஒன்று. இந்திய பொருளாதாரத்தின் ஆதாரபூர்வ
சக்தியாகவும் விளங்கிவரும் துறை. தொழில்வளர்ச்சிக்கு அதன்
பங்கு மகத்தானது. குறைந்த கட்டணத்தில் மக்கள்
பயணத்திற்கும் - நீண்டு விரிந்த இந்தியாவின் சரக்கு போக்குவரத்திற்கும் அதன்
பங்களிப்பை எவரும் அறிவர்.
பா
ஜ க மோடி
சர்க்கார் பதவியேற்றவுடன் தனியாக இருந்த ரயில்வே
பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.
அதன் பட்ஜெட் மான்ய கோரிக்கைகளுடன்
சேர்க்கப்பட்டுள்ளது.
இரயில்வேயில்
பென்ஷன் மற்றும் ஓய்வுக்கால பலன்களுக்கு மட்டுமே 57000 கோடி தேவைப்படுகிறது. அதன்
எரிசக்தி- எரிபொருள் கணக்கு 31000 கோடியாக இருக்கிறது. அதன்
மராமத்து செலவிற்கே 50000 கோடி தேவை. சரக்கு
போக்குவரத்தில் 1.22 லட்சம் கோடியும் , பயணிகள் போக்குவரத்தில் 51000 கோடியும் வருவாய்
வருகிறது. இவையெல்லாம் அதன்
பிரம்மாண்டத்தை காட்டுவதற்காகவே இங்கு சொல்லப்படுகிறது. இப்படி
பெரும் வாழ்வாதாரத்தை காக்கும் துறை சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது.
இந்திய
ரயில்வேயில் பயணிகள் வருவாயில் மிக முக்கியப் பகுதி உயர்வகுப்பு பயணிகள் தரும் வருவாய்.
இந்த வருவாய் 35 சதமானது. இரண்டாம் வகுப்பு படுக்கை வருவாய் 50 சதத்திற்குரியது. இதில்
இந்த உயர்தட்டு வருவாய் மீது குறி வைத்து தனியார் நுழைவு திட்டம் எட்டிப்பார்க்கப்
போகிறது
கடந்த
பட்ஜெட்டில் பொது-
தனியார் பங்கேற்பு மூலம் 150 பயணிகள் இரயிலுக்கு தனியார் அனுமதி குறித்து அறிவிப்பு
வெளியிட்டனர். நீதிஅயோக், சேர்மன்
இரயில்வே, நிதித்துறை செயலர் போன்றவர்களைக்கொண்ட கமிட்டி ஒன்று போடப்பட்டு 50 இரயில்
நிலையங்கள் மேம்பாடு எனப் பேசினர். குறித்த காலத்திற்கு இரயில்வேயின் நிலம் குத்தகை
என்றனர்.
அதேபோல் தனியார் பயணிகள் குறித்து பரிந்துரைகள் செய்திட
செயலர் குழு ஒன்றை அமைத்தனர். இக்கமிட்டி
7முறை பேசிவிட்டதாகவும் தெரிவித்தனர். இதற்காக மூன்று முக்கிய ஆவணங்களை நீதி ஆயோக்
உதவியுடன் ஜனவரி 2020ல் வெளியிட்டனர்.
Draft
of Request for Qualification (RFQ) document
- Concession Agreement Guiding
Principles, Project Information Memorandum (PIM) என்பனவே
அவை.
RFQ
document 80 பக்கங்களை கொண்டதாக
இருக்கிறது. Concession Agreement Guiding
Principles 200 பக்கங்களையும்
Project Information Memorandum 9 பக்கங்களையும் கொண்டிருக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள்
படித்து புரிந்துகொள்ளலாம். தமிழ்
மக்களுக்கு விளக்கம் கொடுத்து உதவலாம்.
அரசாங்கம்
எடுத்த முடிவை அமுலாக்குகின்ற வகையில்
ஜூலை 1 2020ல் தனியார்களின் தகுதி
ஆய்வு விண்ணப்பங்களை கோரியுள்ளது. செப்டம்பருக்கு பின்னர் வந்தவைகள் பரீசிலிக்கப்பட்டு
அடுத்தக்கட்ட RFp எனும் முன்மொழிவுகள் டெண்டராக கோரப்படும்.
151 நவீன இரயில்கள்
16 கோச்சுகளுடன் 109 ரூட்டுகளில் பயணிக்க வைக்கும் 30 ஆயிரம்
கோடி திட்டமாக அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மும்பாயில் இரண்டு கிளஸ்டர்கள், டில்லியில்
இரண்டு கிளஸ்டர்கள், சென்னை, ஹெளரா, செகந்திராபாத்,
ஜெய்ப்பூர், பெங்களூர், பாட்னா, பிரயாக்ராஜ், சண்டிகார்
என மிக கேந்திரமான போக்குவரத்துப்பகுதிகளின்
12 கிளஸ்டர்கள் தனியார் நுழைவு திட்டத்திற்கு
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை கிளஸ்டருக்கு மட்டும் Indicative project cost
ஆக 3221 கோடி காட்டியுள்ளனர்.
புதிய
இரயில்களை வாங்குதல், அமைத்தல் மற்றும் அதை பராமரித்தல்
செய்திட தனியார்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது procure,
opearate and maintain Trainsக்கு அனுமதி.
இத்திட்டம் ppp எனும் public private partnership - DBFO Design Build FinanceOperate மாடல்
என சொல்லுகின்றனர்.
இத்திட்டத்திற்கு
35 ஆண்டுகள் அனுமதி தரப்படுகிறது.
தனியார் இரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்னும் பின்னும்
அத்தடத்தில் வேறு இரயில் கிளம்பாது.
இதற்கான ஷரத்து தரும் விளக்கம்:
If
the Path granted to the Concessionaire is from Railway Station A at 1000 hours
to Railway Station B, then no new train shall commence its journey from Railway
Station A between 0930 hours to 1030 hours to Railway Station B on the same
Route for a period of 3 (three) years.. இச்சலுகை
முதலில் 3ஆண்டுகளுக்காம்.
இரயில்
நிலையங்களில் தனியார் இரயில்களுக்கான டிக்கெட்
கவுண்டர்களை அமைத்துக்கொள்ளலாம்.
பயண
கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். The Private Entity shall have the
freedom to decide on the fare to be charged from its passengers என்பது Project Information
Memorandum ஆவணத்தில் தரப்பட்டுள்ளது.
இரயில்வே
நிர்வாகம் மற்றும் வரப்போகும் தனியார்க்கிடையில்
மிகுந்த நியாயத்துடன் அரசாங்கம் நடந்துகொள்ளும் என்பதற்கு
உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.
அதற்கான ஷரத்துக்களின் சில வாசகங்கள்
·
maintain
a level playing field for all concessionaires who undertake train operations on
the Railway Network and implement a transparent and nondiscriminatory system
for dispatch and movement of Trains on the Railway Network;
·
provide
access to the Railway Network for Operations of the Trains in accordance with
the Train Operation Plan;
·
provide
access to the Depot Site and Washing Line for carrying out the Maintenance
Requirements in accordance with the provisions of this Agreement;
·
make
best endeavours to procure that no local Tax, toll or charge is levied or
imposed on the use of whole or any part of the Trains;
·
provide
a safety certificate for the Operation of the Trains, in accordance with the
provisions of this Agreement and Applicable Laws
·
support,
cooperate with and facilitate the Concessionaire in the implementation and
operation of the Project in accordance with the provisions of this Agreement;
மேற்கண்ட
பல வாக்குறுதிகளை அரசாங்கம் Concession Agreement Guiding
Principles ஆவணத்தில் தந்துள்ளது. பயணிகள் இரயில் போக்குவரத்தில்
- தனியார் நுழைவு
திட்டத்தை உற்சாகப்படுத்துவதற்காக
அரசாங்கம் தரும் நம்பிக்கைகளாக இவற்றை பார்க்கலாம்.
தனியார்கள்
Make in India கொள்கைக்கேற்ப நடந்துகொள்ள
அறிவுறுத்தப்படுவர். மணிக்கு 160 கிமீ வேகத்தில் இந்த
ரயில்கள் பறக்கும். நேரமிச்சம், நவீன வசதி, உலகத்தரம்
என பெருங்கதையாடல்களை வழக்கம்போல் செய்துள்ளனர்.
தனியார்கள்
மூன்றுவகை கட்டணங்களை அரசாங்கத்திற்கு தரவேண்டும். Haulage charge , Revenue Sharing,
Energy Consumption charge என்பன அவை.
வருகிற
ஜூலை 21 அன்று தொழில் துவங்க
விருப்பமுள்ள தனியார்கள் பங்கேற்கும் கூட்டத்தில் அவர்களுக்கு திட்டம் பற்றி விளக்கப்படும்.
அதானி,
டாட்டா மக்கன்சி போன்றவை மட்டுமல்லாமல் உலக
பெரும் நிறுவனங்களான அல்ஸ்டம், சீமன்ஸ், பம்பார்டியர் போன்றவைகளும் இதில் ஆர்வமாக இருக்கின்றனவாம்.
கடந்த
பிப்ரவரியில் ஹாலேஜ் எனப்படும் இழுவை
கட்டணம் கி
மீக்கு ரூ
668 என தெரிவித்திருந்ததாகவும், அது ரூ
512 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. பத்திரிகைகள் சொல்லும் தகவல் சரி என்றால்
வருவதற்கு முன்பே கிமீ க்கு
ரூ
156 சலுகை இழுவை கட்டணத்தில் கொடுக்கப்பட்டாகிவிட்டது
இந்திய
ரயில்வே போர்டின் சேர்மன் அளித்த
பேட்டியில் எப்படியாவது ’தனியார் பயணிகள் இரயில்
போக்குவரத்தை’ ஏப்ரல் 2023ல் துவங்கிவிடவேண்டும் என
தெரிவித்துள்ளார். தனியார்களின் பங்கேற்பு மொத்த மெயில் சர்வீசில்
5 சதம் தான்- அதாவது 2800 மெயில்களில்
151 என்பது 5.1 சதம் தான் என்கிறார்.
துவக்கம் 5 சதமாக இருக்கலாம். 2030ல்
என்னவாகும்- 2040ல் அரசு தனியார்
இரயில்கள் வீதம் தலைகீழாக 5 : 95 என மாறிவிடுமே என்பதை
தனியார்
நுழைவை அனுமதித்த பிற துறை அனுபவங்கள் மூலம்
நாம் உணரமுடியும்.
சேர்மன்
சொல்லும் கணக்கு பாசஞ்சர் டிராபிக்
வால்யூம் 5 மடங்காக கூடிவிடும்- ஆபத்தில்லை
என்பதாக இருக்கிறது. இப்படித்தான் டெலிகாமிலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்கள்.
ஆண்டுதோறும்
5 கோடி பயணிகள் முன்பதிவு செய்து
அவர்களுக்கு இடம் கொடுக்க முடியாமல்
போகிறது. demand
supply gap ஏற்படுகிறது.
எனவே அரசாங்கம் சப்ளையை அதிகமாக்க தனியார்
நுழைவை அனுமதிப்பதாகவும் our aim is to providing confirmed
tickets to each and every passenger என்கிற
நோக்க விளக்கமும் தரப்பட்டுள்ளது.
ppp public private
partnership - DBFO Design Build
FinanceOperate மாடல் என
எவ்வளவு அலங்காரமான சொற்களால் விவரித்தாலும் மக்களுக்கு இன்று கிடைக்கும் இந்திய
ரயில்வே சேவையைப்போல அனைவருக்குமானதாக இருக்குமா இல்லை எனில் உயர்தட்டினருக்கு
மட்டுமானம் தனி class traffic ஆக மாறுமா என்பது
கேள்வியாகிறது.
இரயிவேயில்
உள்ள இரு முக்கிய AIRF NFIR தொழிற்சங்கங்களும்
இத்திட்டம் எதிர்த்து குரல்கொடுத்து வருகின்றன. அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும்
எதிர்ப்பை தெரிவித்துள்ளன. 2023ல் இத்திட்டம்
வருமா இல்லை - டெண்டர் குளறுபடிகளில்
தாவாக்களை சந்தித்து தடுமாறுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
தரை
போக்குவரத்து, வான்போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தனியார் நுழைவு அனுபவங்களையும்
டெலிகாமில் ஏற்பட்டுள்ள அனுபவங்களையும் கணக்கில் கொள்ளாமல் இரயில்வேயில் தனியார் அனுமதி என்பது
விடுதலைக்கால கனவுகள் கலைப்பாகவே அமையும்
என கருத வேண்டியுள்ளது.
12-7-2020
Indian telecom is far better consumer oriented due to privatisation but worst dalalism and corruption is our way of life. We are capable of corrupting working nature, organisation,ideology,and all best into worst
ReplyDelete