நீலகண்டன் எழுதிய South VS North லிருந்து டேட்டா அறிவியலாளர் எழுதிய தெற்கும் வடக்கும் புத்தகம் அதன் டேட்டா ஆய்வு என்ற நோக்கில் சமீபத்தில் பேசப்பட்ட புத்தகம். முன்னர் அதிலிருந்து சில அம்சங்களை முகநூலில் தந்திருந்தேன். இதை அடுத்த பகுதியாக தந்துள்ளேன். இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் மாநில அளவில் சீராக இல்லை . மாறுபட்ட அளவில் நடந்து வருகிறது . இதனால் வறுமை பிரச்சனை மட்டுமல்ல அரசியல் அதிகாரம் என்கிற பிரச்சனையின் தன்மையும் அழுத்தமும் கூட மாறுபடுகிறது . தென் மாநிலங்களில் அம்மக்கள் கட்டுப்பாட்டுடன் மேற்கொண்ட குடும்பக்கட்டுப்பாடு என்பது வேறு பகுதி மாநிலங்களில் காணப்படாததால் , வருகிற 2026 தொகுதிகள் வரையறை என்பதும் பிரச்சனையாகலாம் என்கிற குரல் வலுவாக எழுந்து வருகிறது . 1971-2011 வரை மக்கள் தொகை பெருக்கம் எந்த சதவீத அளவில் நடந்துள்ளது என்பதை சென்சஸ் ரிஜிஸ்ட்ரார் தந்துள்ளார் . ராஜஸ்தானில் பெருக்கம் 166 சதம் , ஹரியானா 157, பீகார் 146, எம்பி 142, உபி 138, ஜார்கண்ட் 132, குஜராத் 126, உத்தராகண்ட் 125, மகராஷ்ட்ரா 123, சட்...