https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, February 21, 2024

பிமல் ஜலான் பேசும் சீர்திருத்தங்கள்

 

                    பிமல் ஜலான் பேசும் சீர்திருத்தங்கள்

India Ahead 2025 and beyond பொருளாதார அறிஞர் பிமல் ஜலான் அவர்களால் எழுதப்பட்ட புத்தகம். 2018ல் வந்த நூல்.

அரசியல் சீர்திருத்தம், நாடாளுமன்றத்தின் வேற்றுமையில் ஒற்றுமை பண்பு, அரசியலில் கிரிமினல்களை ஒழித்தல், லஞ்ச ஊழல் பிரச்சனை, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல், நிர்வாக சீர்திருத்தம், 21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக்குதல், இந்தியா எனும் கனவு என பல்வேறு அத்தியாயங்களில் பிமல் ஜலான் தனது பார்வையை, தான் உணரும் தேவையை முன்வைத்துள்ளார்.

2018ல் எழுதப்பட்ட அடிப்படையில் அப்போது இந்தியா வர்த்தக சாதக சூழல் என்கிற குறியீட்டில் 130 ஆம் இடத்திலிருந்து 100 ஆம் இடத்திற்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவின் பொருளாதார வலிமை கூடக்கூட வறுமை ஒழிப்பு, கல்வியின்மை போக்குதல், நோய்க்கூறு தடுப்புகள் ஆகியவற்றில் இந்தியா பெருமளவு மாற்றங்களைப் பெறும் என்கிற நம்பிக்கையை ஜலான் சொல்கிறார்.

 இந்திய ஜனநாயகத்தை மேலும்  accountable பொறுப்புள்ள ஒன்றாக மாற்றவேண்டிய அதி அவசரத்தை ஜலான் முன்வைக்கிறார். இதற்கு மத்திய மாநில உறவுகளின் நிர்வாக உறவு மேம்பாட்டின் அவசியத்தை உணரச் சொல்கிறார்.

ராஜ்ய சபா உறுப்பினர்கள் மாநில மேம்பாட்டிற்கு நிற்கத்தக்க வகை சீர்திருத்தம் செய்யப்படவேண்டும். நாடாளுமன்ற நடைமுறைகள்மேலும் ஒழுங்கு சீருக்கு உள்ளாக்கப்படவேண்டும்.

நீதிமன்ற சீர்திருத்தங்கள் மீது உடனடி கவனம் தேவைப்படுகிறது.

அமைச்சர்களுக்கும் சிவில் அதிகாரப் பிரிவினருக்குமான வேலைப்பிரிவினை முறையாக்கப்பட்டு  சிவில் அதிகாரிகளை அதிகாரப்படுத்தலும் பொறுப்புக்குள்ளாக்குதலும் செய்யப்படவேண்டும்.

அதிகாரபரவலாக்கம் என்பதை நடைமுறையாக்கிட சில பொதுச்சேவைகள் தல ஆட்சியிடம் ஒப்படைக்கப்படவேண்டும். சமூகநல திட்டங்கள் அமுலாக்கத்தை ஒப்படைக்கவேண்டும். குறிப்பாக ஆரம்ப கல்வி, சுகாதார மருத்துவம் போன்றவற்றை தல ஆட்சியின் கீழ் கொணரலாம்.

 fragmentation of political parties ஒருவகை ஜனநாயக வெளிப்பாடாக தோன்றினாலும் பல சிறு கட்சி செயல்பாடுகள் பின்னடைவையும் தருகின்றன.  defection  என்பதில் இந்த அரசியல் கட்சி உடைவுகள் பெரும் பங்காற்றுகின்றன. இதனால் ஒருவகை coalition govt  என்கிற சோதனைகள் நடந்தேறினாலும் அவை நம்பிக்கையை உருவாக்கமால் போன அனுபவம் விஞ்சி நிற்கிறது.

 ஜி எஸ் டி நல்ல முன்முயற்சி என்கிறார் பிமல். மாநிலங்கள் திட்டம் கொடுத்து அதை மத்திய சர்க்கார் ஏற்பு கொடுப்பது என்பதற்கு பதிலாக the powers and responsibility for financing development programmes should be transferred to states  என்கிற முன்மொழிவை பிமல் செய்கிறார்.

 அடுத்து அவர் தரும் முக்கிய முன்மொழிவு

Just as the Finance Commission is constitutionally empowered to decide on the division of taxresources between the centre and the States, a similar federal commission should statutorily set up to decide on the devolution of all other forms of central assistance.

 UPSC நடைமுறை போலவே வங்கி, பொதுத்துறை, கல்வி, கலாச்சார இன்னும் பலவேறு நிறுவனங்களுக்கு  appointments  செய்திடும் முறை உருவாக்கப்படவேண்டும்.

 மிகுந்த துறை சார்ந்த தேர்ச்சி பெற்றவர்களை கேபினட்டிற்கு கொணர்வதில் உள்ள சிக்கலைப் போக்கிட , கேபினட் பதவிகளில் 25 சத அளவிற்கு இப்படிப்பட்ட தேர்ச்சி பெற்றவரை வெளியிலிருந்து அமர்த்துவது- அவர்கள் நாடாளுமன்ற துறை சார்ந்த நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் ஆனால் வாக்குரிமை கிடையாது என்ற  executive mix  ஒன்றை அமெரிக்க சாய்வில் பிமல் முன்வைக்கிறார்.

 

அடுத்து அவர் விவாதிப்பது  State funding for elections.  அதன் சாதக பாதக விவாதங்களை அவர் விவரிக்கிறார். 20 லட்சம் கோடி தேவைப்படலாம் என்கிற மதிப்பீட்டைத் தருகிறார். எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி எனத்தரப்படும் 3500 கோடியை நிறுத்திவிட்டு அதை தேர்தல் செலவு நிதி ஆக்கலாம் என்கிறார். 10-15 சதம் நாடாளுமன்ற இடங்களைப் பெறும் கட்சிகளை பெரிய கட்சிகள் என்றும், மற்றவை சிறு கட்சிகள் என வகைப்படுத்தி அதற்கேற்ற  state funding  ஈவைக் கொடுக்கலாம். எலக்டோரல் பாண்ட்ஸ் வந்தபோது அது மட்டும் போதாது என பிமல் எழுதியிருந்ததைக் காணலாம்.

 சபாநாயகர்களுக்கு அவையின் கண்ணியத்தை ஒழுங்கை காப்பதற்கான கூடுதல் அதிகாரம் என்பது பற்றி பிமல் பரிந்துரைக்கிறார். வாய்ஸ் ஓட் மூலம்  ஏற்பு முறை கூடவே கூடாது என்கிறார். நிலைக்குழுவிற்கு போகாமல் பட்ஜெட் மற்றும் நிதி மசோதா ஏற்கப்படக்கூடாதென்கிறார். அதை கட்டாயமாக்கும் நடைமுறை அவசியம்.

 இந்திய வளர்ச்சி எனச்சொல்லி செய்யப்படும் எதிலும் 25 கோடி மக்கள் மட்டுமே பயன் பெறுகிறார்கள். 100 கோடி மக்கள் விளிம்புநிலை வாழ்க்கையிலேயே தொடர்கிறார்கள்.

இதற்கு institutional initiative is required for enforcing ministerial responsibility for the efficient delivery of public services and anti poverty programmes. ஊழல் கிரிமினல் குற்றப்பின்னணி உடைய எவரும் அமைச்சராக அனுமதிக்கக்கூடாது. அனைத்திற்கும் மேலாக மிக முக்கியத் தேவையாக பிமல் சொல்வது  depoliticization of civil services. Their non accountability, corruption, ineptitude , non functional attitude  போக்கப்பட நடவடிக்கைகள் தேவை.  separation of powers between Ministers and Civil servants concerning postings, transfers and promotions  என்கிறார்.  Executive, legislature, Judiciary separation of powers  போல இதுவும் அவசியம் என்கிறார். சாத்தியமாகுமா என்கிற சந்தேகம் மட்டுமல்லாமல், ஜனநாயகத்திற்கு சாதகமாகுமா என்ற கேள்வியும் எழுகிறது.  Greater empowerment of Civil service and greater accountability  என்கிற முழக்கமாக அவரது பரிந்துரை செல்கிறது.

Fiscal empowerment  செய்யப்படவேண்டுமானால்  altering pattern of expenditure away from salaries and loss making commercial enterprises and allocating resources for development of infra and socially productive sectors  எனப் பரிந்துரைக்கிறார்.  சம்பள செலவு வீக்கம், பொதுத்துறை நட்ட செலவு மீது போர் என அவர் பேசுவதை பார்க்கமுடிகிறது.

 

நாடாளுமன்ற நடைமுறையை மேம்படுத்த இப்படி ஒரு பரிந்துரையையும் பிமல் வைக்கிறார்.

Those parties which join a pre election or post election coalition should not be able to defect without having to seek re election. auch an amendment in anti defection law will help in strengthening collective responsibility of the cabinet .

 2014ல் வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 100 பேர் மீது கிரிமினல் வழக்கு இருந்ததை பிமல் சொல்கிறார். அசெம்பிளி தேர்தல்களிலும் இது அதிகமாகியே வருவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் மீதான் வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை வலியுறுத்துகிறார்.

 Transparency International- Global Corruption Barometer  படி 100 என குறியீடு இருந்தால் அது சுத்தமான தூய்மை கொண்ட நிர்வாகம் எனப் பொருள். ஜீரோ என்றால்  total corrupt  எனப் பொருள். 2016ல் வந்தபடி இந்தியா 40 என்கிற குறியீட்டைப் பெற்றது.  corruption high  என்றுதான் பொருள்.

 2023க்கு போய் பார்த்ததில் இந்தியா 39 குறியீட்டைப் பெற்று சரிந்துள்ளது. எந்த நாடும் 100 என்கிற தூய்மைப் புள்ளியைத் தொடவில்லை. டென்மார்க் 90 தொட்டு இலஞ்சமில்லா தூய்மைக்கு நெருங்கியுள்ளது. பின்லாந்த், நியிசிலாந்த், சிங்கப்பூர் போன்றவை 80 யைத்தாண்டி தூய்மை நோக்கி பயணிப்பதைக் காணமுடிகிறது.

பிமல்  corruption multiplier  நிலவுவதைச் சொல்கிறார்.  there is corruption multiplier which occurs of a wrong choice of public projects, loss of tax revenues, low quality of goods and services by corrupt procedures- frequent breakdown of equipments. political corruption  தாண்டவத்தை பிமல் சொல்கிறார்.

 ஊழல் லஞ்சத் தடுப்பு உடனடியாக கவனம் பெறக்கூடிய ஒன்றாக பாவிக்கப்பட அவர் வேண்டுகிறார்.

The supply side of corruption can be checked if there is substantial reduction in the size and functions of Govt- penalties like dismissal  போன்றவற்றை அவர் முன்மொழிகிறார். அரசியல் ஊழல் தடுப்பிற்கு அமைச்சரின் அளப்பரிய அதிகாரங்களை பறிக்கவேண்டும் என்கிறார்.

 மக்கள் வாழ்க்கைத்தரம் என்பதில் உணவு பாதுகாப்பு, உடல் ஆரோக்கிய மேம்பாடு, கல்வி வசதிகள், வேலைவாய்ப்புகள் என்பன பரிசீலிக்கப்படவேண்டியவை. இந்தியா இதில் போகவேண்டிய தூரம் மிக அதிகமாக இருக்கிறது.

Slower pace of reform based on consensus- durable to democracy  என்பதையும் கவனப்படுத்துகிறார் பிமல்.

No comments:

Post a Comment