Caste Its Twentieth Century Avatar வெளிவந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. புகழ்வாய்ந்த எம் என் ஶ்ரீனிவாஸ் பலரின் கட்டுரைகளை தொகுத்து எடிட் செய்துள்ள பெங்குவின் வெளியீடு. 2016 அக்டோபரில் ஶ்ரீனிவாஸ் அறிமுகத்தையும், தமிழ்நாட்டில் பிற்பட்டோர் இயக்கம் என்கிற கட்டுரையையும் படித்து இப்புத்தகத்தை விட்டிருக்கிறேன்.
கண்ணில் பட்டதும் மீண்டும் முழு நூலையும் படிக்கவேண்டும் என்கிற நினைப்பு..காரியமாகவேண்டும். அறிமுகம் தவிர நூலில் 13 ஆய்வாளர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஶ்ரீனிவாஸ் சாதி குறித்து ஆண்களே எழுதிக்கொண்டிருக்கிற குறையைப் போக்க ஐராவதி கார்வே, பவுலின் கொலந்தா, பேரா லீலா போன்றவர்கள் எழுதவந்ததைச் சொல்லி ஆறுதல் அடைவார். இந்த நூலின் முதல் கட்டுரையாக பேரா லீலா ட்யூப் அவர்களின் சாதியும் பெண்களும் கட்டுரையை வைத்திருப்பார் ஶ்ரீனிவாஸ்.
லீலாவின் இந்த வரிகளை ஶ்ரீனிவாசும் மேற்கோள் காட்டியிருப்பார்
Caste is not dead. Gender is a live issue. The principles of caste inform the nature of sexual asymmetry Hindu society, and hierarchical of caste are articulated by gender.
Gender caste linkage குறித்து லீனா விரிவாக பேசியிருப்பார். லீனா சாதித்தன்மையின் மூன்று அடிப்படைக் கூறுகளாக பிறப்பு வழி தனித்தன்மை, மேல் கீழ் செங்குத்து ஸ்டேடஸ், ஒருவரை ஒருவர் சார்ந்த தொழில் பிரிவினை என்பதை முன்வைப்பார். இந்த தன்மைகள் தனிமனிதர் வழியாக அல்லாமல் units based on kinship வழி இயங்கு தன்மை கொண்டவை எனவும் வரையறுப்பார். Familial units kinship units .
குடும்ப பழக்கம் என்கிற கலாச்சார நடைமுறைகள் சடங்கு சம்பிரதாயங்கள் , உணவு பழக்கங்கள் - tastes ஒவ்வொருவருக்கும் கடத்தப்படுகின்றன. இங்கு பெண்களுக்கான பாத்திரம் பங்களிப்பு பற்றி லீனா ஆய்வு செல்கிறது. லீனா எழுதுகிறார்
The place of women as active agents and instructions in the arena of food and rituals also implies that women who command its repertoire of rules gain special respect and gives them a certain self identity and self esteem. For most women these practices are an important avenue of self expression and social recognition. They also act as a medium which helps women exercise power over the women and men within the family..
The processes within which women carve out a living space also reinforce caste and its boundaries.
ஒவ்வொரு குடும்ப நிகழ்ச்சியிலும் நடக்கும் விஷயத்தையே இங்கு லீனா காட்டி அதற்கு theoretical value வை சேர்க்கிறார்.
Marriage and sexual relations constitute a central arena in which caste impinges on women’s lives. பிறப்பு வழி சாதி என்பதில் ஆண் தன்மை என்கிற அம்சம் மேலோங்கி இருந்தாலும் தாயின் சாதி என்பது புறந்தள்ள முடியா பேச்சுப்பொருளாகவும் தொழிற்படுகிறது. லீனா இதை caste in fact functions as a principle of bilateral affiliation என எழுதுவார்.
சாதி எல்லை காப்பு boundary maintenance என்கிற ritual purity சடங்காசார தூய்மை- எங்கள் பழக்க வழக்கம் என்கிற விட்டுக்கொடுக்காமை நீடிப்பதைக் காண்கிறோம். இது அம்பேத்கர் பேசிய பிராம்மணர்களிடமிருந்து சாதி படிநிலைகள் பார்த்து ஒழுகுதல் முறையால் வந்திருந்தாலும், அனைத்து சாதிப் பிரிவினர் குடும்ப குல வழக்க சடங்கு ஆசாரங்களாக தொடர்வதைக் காண்கிறோம்.
திருமணம் என்பதுடன் எதுவும் முடிவதில்லை. அங்கு துவக்கி வைக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது. Women need to be and their sexuality contained at all times thro social control, idealisation of women’s role and thro emphasis on female modesty. The importance of the purity of caste affects a woman in all life stages என்பதை பார்க்கச் சொல்கிறார் லீனா.
பெண் தூய்மை என்பதில் எல்லா சாதி எல்லைகளும் காப்பிட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை லீனா ஆய்வு புலப்படுத்தும். Restrained and controlled sexuality is a prerequisite for socially sanctioned motherhood என்கிற மிக முக்கிய புள்ளியை தொட்டுக்காட்டுகிறார் லீனா. அப்படி அப்பெண் அந்த சாதி குடும்பத்தில் நுழைந்து முழு உறுப்பினர் ஆக்கப்படும் ஏற்கப்படும் தொடர் நிகழ்வுகள் காலந்தோறும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.
இந்நூலில் பல ஆய்வுத்தாள்கள் இடம் பெற்றுள்ளன. விருப்பமுள்ளவர் விருப்பமான ஆய்வைத்தாளைக்கூட தனியாக வாசிக்க முடியும்.
The political Economy of caste
Caste and Hinduism
Caste in rural India
BC movement in TN
BC and social change in UP and Bihar
Buddhism a case study of village Mahars
The judicial view of OBC
Job reservation and efficiency
Mandal
Muslims social stratification
Caste amongst Christians
நூலின் கட்டுரைகள் தலைப்பை பார்க்கையில் தன்னளவில் முழுமையாக சாதி குறித்து சித்திரம் ஒன்றை - அதன் இருப்பை அதே நேரத்தில் அது பெற்று வரும் mobility குறித்தும் இந்நூல் பேசுவதாக சொல்லலாம். எவரும் சாதி குறித்த முழுமையை தந்துவிடமுடியாது. ஆங்காங்கே கிடைக்கும் perceptions உரிமைகோரல்களை மேலேறுதல் என்கிற தவிப்பின் போராட்டங்களை உணர்த்துதல் என்கிற அளவில் அவற்றை நாம் புரிந்துகொள்ளமுடியும்.
சாதியும் தன்னளவில் அப்படியே தேங்கி நின்றுவிடவில்லை. ஆங்காங்கே சலனங்கள் அசைவுகள் தென்படாமல் இல்லை. தன் இறுக்கத்தை பொதுவெளிகளில் குறைத்துக்கொண்டும், உள்ளிடங்களில் அதன் இருப்பை வைத்துக்கொண்டும் சாதி சமூகம் சடங்குகளின் வழி வாழ்ந்துகொண்டு இருக்கிறது. பொது வெளி மதிப்புகள் கூடி , உள்ளிட ஆசாரங்கள் மதிப்பிழத்தல் என்கிற காலவெளியில் அதன் வீச்சு இற்றுப்போகலாம். குடும்ப உடைவுகள் சமூக மீறல்கள் என்கிற போராட்டங்கள் வலுப்பெறும்போது
மீத மிச்ச எச்ச சாயல்கள் என அது ஓயலாம். அடையாளப் போராட்டங்கள் எவ்வழியில் சமூகத்தை அழைத்துப் போகுமோ ..ஊகிக்கமுடியவில்லை.
Comments
Post a Comment