Skip to main content

South VS North

 

நீலகண்டன் எழுதிய South VS Northலிருந்து

டேட்டா அறிவியலாளர் எழுதிய தெற்கும் வடக்கும் புத்தகம் அதன் டேட்டா ஆய்வு என்ற நோக்கில் சமீபத்தில் பேசப்பட்ட புத்தகம். முன்னர் அதிலிருந்து சில அம்சங்களை முகநூலில் தந்திருந்தேன். இதை அடுத்த பகுதியாக தந்துள்ளேன்.

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் மாநில அளவில் சீராக இல்லை. மாறுபட்ட அளவில் நடந்து வருகிறது. இதனால் வறுமை பிரச்சனை மட்டுமல்ல அரசியல் அதிகாரம் என்கிற பிரச்சனையின் தன்மையும் அழுத்தமும் கூட மாறுபடுகிறது. தென் மாநிலங்களில் அம்மக்கள் கட்டுப்பாட்டுடன் மேற்கொண்ட குடும்பக்கட்டுப்பாடு என்பது  வேறு பகுதி மாநிலங்களில் காணப்படாததால், வருகிற 2026 தொகுதிகள் வரையறை என்பதும் பிரச்சனையாகலாம் என்கிற குரல் வலுவாக எழுந்து வருகிறது.

1971-2011 வரை மக்கள் தொகை பெருக்கம் எந்த சதவீத அளவில் நடந்துள்ளது என்பதை சென்சஸ் ரிஜிஸ்ட்ரார் தந்துள்ளார்.

ராஜஸ்தானில் பெருக்கம் 166 சதம், ஹரியானா 157, பீகார் 146, எம்பி 142, உபி 138, ஜார்கண்ட் 132, குஜராத் 126, உத்தராகண்ட் 125, மகராஷ்ட்ரா 123, சட்டிஷ்கர் 119, அஸ்ஸாம் 113, கர்நாடகா 109, மேவ 106, பஞ்சாப் 104, ஹிமாச்சல் 98, ஒரிஸ்ஸா 91, கோவா 83, தமிழ்நாடு 75, கேரளா 56

ராஜஸ்தான் 166 சதம் உயர்ந்தது என்றால் அதன் பொருளை நீலகண்டன்சவுத் வெர்சஸ் நார்த்” ஆசிரியர் சொல்கிறார். அங்கு 2.57 கோடி மக்கள் 2011ல் 6.86 கோடியாக உயர்ந்துள்ளனர். இரு மடங்கிற்கு மேலாக..

உபி எடுத்துக்கொண்டால் 80 எம்பிக்கள். 2011ல் மக்கள் தொகை 20.3 கோடி. சராசரி எம்பி தொகுதிக்கு 25 லட்சம் மக்கள் எனலாம். தமிழ்நாட்டில் 2011ல் 7.2 கோடி மக்கள்- 39 தொகுதிகள். சராசரி பார்த்தால் 18லட்சம். இதை வைத்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ பங்கேற்பு உபி விட 30 சதம் அதிகம் எனச் சொல்லிவிடுகிறார்கள். அடுத்த கணக்கில் 2011-2026ல் உபி கூடுதலாக 6.2 கோடி வாக்களரை பெறலாம். இதனால் அங்கு 80 தொகுதிகளில் சராசரியாக பிரதிநிதித்துவம் 33.6 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி என்றாகும். தமிழ்நாட்டில் 2011-26ல் 1.5 கோடி வாக்காளர் கூடலாம். இதனால் பிரதிநிதித்துவம் 22 லட்சத்துக்கு ஒரு எம்பி என்றாகும்.

யூனியன் அரசாங்கம் மொத்த வரிகளில் 2/3 மடங்கை பெறுகிறது. செலவில் 1/3 மடங்கை செய்கிறது என்கிறார் நீலகண்டன். Union Transfers as % of Gross tax Rev 2010-11 62.1% in UPA , in 2020-21 59.7 % in BJP rule.and this was the highest in BJP rule as per 15th FC figures. During UPA in 2013-14 it was 53.7 %.

cess plus surcharges collection for Union in 2011-12 was 10.4 of gross tax rev- this became 2019-20 into 20.2 %.-  மாநிலங்கள் இதைத்தான் மத்திய் அரசின் தனிக்கொள்ளை என்கின்றனர்.

 நீலகண்டன் மாநிலங்களிலிருந்து பெறுவது தருவது குறித்த 15வது நிதிக்குழு அட்டவணைகளை தந்துள்ளார். கேரளாவிற்கு தரப்படும் விகிதம் 12வது நிதிக்குழுவில் 2.67 சதம் எனில் 15 வது குழுவில் 1.93 ஆனது. கேரளா அலகேஷனில் 27.7 சத வீழ்ச்சி என்பதால் அவ்வரசாங்கம் போராடி வருகிறது. தமிழகத்திற்கு இந்த நட்டம் 23.1 சதம் என்பதால் இங்கும் போர்க்குரல் எழுகிறது. அடுத்த நிலைகளில் பாதிக்கப்பட்டவை கர்நாடகாவும் ஆந்திரமும். சாதகம் அடைந்த மாநிலங்களாக பஞ்சாப், மபி, மேவ ராஜஸ்தான் சொல்லலாம்.  உபி, குஜராத், பீகார் எல்லாம் கூட சற்று குறைந்த அளவில் வீழ்ச்சியைக் கண்டன.

Imperfect UNion என்பதை நேர் செய்வதெப்படி என நீலகண்டன் விவாதிக்கிறார். From the majoritarian chaos to maximal decentralisation  என தன் ஆலோசனையை முன்வைக்கிறார்.  First Past the PostGood for Horses , bad for democracy  என்கிறார். 2014 தேர்தலில் 31 சத வாக்குகளில் 282 இடங்களை பாஜக பெற்றால், 19 சத வாக்குகளைப் பெற்ற காங்கிரசால் 8 சத இடங்களைத்தான் பிடிக்க முடிந்தது.

 நாம் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர் நாம் விழையும் பாலிசிக்கு வாக்களிப்பார் என்பதிலும் ஏமாற்றம் நிலவுகிறது. மக்கள் வேட்பாளரை தேர்தெடுக்க வாய்ப்பு கிடைக்கிறது. வேட்பாளரை கட்சி தேர்ந்தெடுப்பதால், அவர் கட்சியின் முடிவை நாடாளுமன்றத்தில் அமுல்படுத்த வேண்டியுள்ளது. அவர்களுக்கு கட்சி வழியாகத்தான் career incentives  கிடைக்கிறது. கட்சியில் ஒருவரின் வளர்ச்சிக்கான CR- Monitoring  கட்சித் தலைமையால் நடத்தப்படுகிறது. Political parties control the career ladder  என நீலகண்டன் இங்கு சொல்கிறார்.

அரசாங்கத்தின் , ஆட்சியின் , கட்சியின் stability  என்பதோ inversely related to which power is centralised. அதிக அதிகாரத்துவ மத்தியம் என்பதுடன் நிலைத்தன்மை கட்டிப்போடப்படுகிறது. அங்கு multiple points of veto power என்பது ஏற்கப்படுவதில்லை.

This system  risks tyranny by investing extraordinary powers in the hands of individual leaders and party bosses, in effect making most of the elected MP powerless..Representative models allow a gradual accrual of power in the hands of Executive  என்று நீலகண்டன் தன் பார்வையை முன்வைக்கிறார்.

இந்த ஜனநாயக முறையின் வேறு ஒரு விளைவையும் நாம் கண்டு வருகிறோம். personality cult  வளர்த்தெடுக்கப்படுகிறது. இது great man politics- king philosopher  வகைப்பட்டதாக மாற்றப்படுகிறது. மாநிலங்களிலும் political Entrpeneurs- business enterprises போல கட்சிகள் உருவாகிவிடுகின்றன.

 நீலகண்டன் தன் தீர்வாக Gamified Direct Democracy  என்பதை முன்வைக்கிறார். பிரதிநிதிகளை அனுப்பி சட்டம் இயற்றுதல் என்றில்லாமல், சட்டங்கள் அமுலாக நேரடி வாக்குமுறை- அச்சட்டங்களுக்கான வாக்குமுறை என்கிறார்.  Localised My society  முறை என்பதன் விரிவாக்கம் என்கிறார். இப்போதைக்கு ஆர்வம் உள்ளவர் இந்த புத்தகத்தைப் படிக்கலாம். அவர் சொல்லும் இந்திய சோதனை இன்றைக்கு கனவு நிலையில் தான் இருக்கமுடியும்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா