2017க்கு பின்னர் பி எஸ் என் எல் பொதுத்துறையில் 37 ஏ வழியில் ஓய்வு பெறக்கூடியவர்களுக்காக பல விஷயங்களை நான் முன்னரே எழுதியுள்ளேன். இந்த வரிசையில் 6 அசோசியேஷன்கள் வெளியிட்ட 7வது மத்திய ஊதியக்குழு பிட்மெண்ட் ஏன் சாத்தியமாகாது என்பதை சில கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்கள் மூலம் விளக்கியிருந்தேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அதில் இருக்கும் வரலாற்றுப் பகுதியை விட்டுவிட்டு, மிக முக்கியமான கேள்விப்பகுதியை மட்டும் இங்கு தமிழில் தர முயற்சித்துள்ளேன். ஆங்கிலத்தை வாசிக்க முடியாத தோழர்களுக்கு சற்று விவரத்தை இது தரக்கூடும். 1. பி எஸ் என் எல் பொதுத்துறைக்கு அரசாங்க பென்ஷனுடன் உள் நுழைந்தவர்க்கு பென்ஷன் ரிவிஷனுக்கு என ஏதாவது வழிகாட்டல் அல்லது விதிகள் இருக்கின்றனவா? அப்படி ஏதும் இதுவரை இல்லை. 2. 2017க்கு முந்தி ஓய்வு பெற்றவரின் பென்ஷன் ரிவிஷன் 2017க்கு பின்னர் பெற்றவர்க்கு என்ன தாக்கத்தை தரும் என்பதை பார்க்காமல் புறக்கணிக்கமுடியுமா? முடியாது. குறிப்பிட்ட 1-1-2017 அன்று என தேதியை வைத்துக்கொண்டு பரஸ்பரத் தொடர்பு கொண்ட 37 ஏ கிளாஸ் வகைப்பட்ட பி எஸ் என் எல் ஓய்வூதியர்களை பிரிக்க முடியாது. 3. 2017க்கு முந்தி