https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, April 25, 2023

post 2017 BSNL Pensioners

 2017க்கு பின்னர் பி எஸ் என் எல்  பொதுத்துறையில் 37 ஏ வழியில் ஓய்வு பெறக்கூடியவர்களுக்காக பல விஷயங்களை நான் முன்னரே  எழுதியுள்ளேன். இந்த வரிசையில் 6 அசோசியேஷன்கள் வெளியிட்ட 7வது மத்திய ஊதியக்குழு பிட்மெண்ட்  ஏன் சாத்தியமாகாது என்பதை சில கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்கள் மூலம் விளக்கியிருந்தேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அதில் இருக்கும் வரலாற்றுப் பகுதியை விட்டுவிட்டு, மிக முக்கியமான கேள்விப்பகுதியை மட்டும் இங்கு தமிழில் தர முயற்சித்துள்ளேன். ஆங்கிலத்தை வாசிக்க முடியாத தோழர்களுக்கு சற்று விவரத்தை இது தரக்கூடும்.


1. பி எஸ் என் எல் பொதுத்துறைக்கு அரசாங்க பென்ஷனுடன் உள் நுழைந்தவர்க்கு பென்ஷன் ரிவிஷனுக்கு என ஏதாவது வழிகாட்டல் அல்லது விதிகள் இருக்கின்றனவா?


அப்படி ஏதும் இதுவரை இல்லை.


2. 2017க்கு முந்தி ஓய்வு பெற்றவரின் பென்ஷன் ரிவிஷன் 2017க்கு பின்னர் பெற்றவர்க்கு என்ன தாக்கத்தை தரும் என்பதை பார்க்காமல் புறக்கணிக்கமுடியுமா?


முடியாது. குறிப்பிட்ட 1-1-2017 அன்று என தேதியை வைத்துக்கொண்டு பரஸ்பரத் தொடர்பு கொண்ட 37 ஏ கிளாஸ் வகைப்பட்ட பி எஸ் என் எல் ஓய்வூதியர்களை பிரிக்க முடியாது.


3. 2017க்கு முந்தியவர்க்கு பென்ஷன் ரிவிஷன் 1-1-2017 முதல் என்றால், 2017க்கு பிந்தியவர்க்கு தரவேண்டிய பலனுக்கு வேறு ஒரு தேதி என ஒத்திப்போடமுடியுமா?


முடியாது. இரு சாராருக்கும் ஒரே தேதியான 1-1-2017 முதல்தான் பலனைத் தரமுடியும்.


4. 2017க்கு பிந்தியவர் அந்த 1-1-2017 அன்று ஊழியர் தானே- அப்போது பென்ஷன் திருத்தம் என்பது பொருந்துமா?


2017க்கு பிந்திய அனைவரும் அந்த 1-1-2017ல் ஊழியர்களாக இருப்பர். எனவே அந்த தேதியில் அவர்களுக்கு  Pay  என்கிற ஊதியத்தில் மாற்றம் கொண்டுவந்துதான் அவர்களுக்கான பலனைத் தரமுடியும்.  இரண்டாவது ஊதியக் கமிட்டி  PRC  அடிப்படையில் இவர்கள் பென்ஷன் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதை 1-1-2017 அன்று ஊதிய மாற்றம் செய்து அவர்கள் ஓய்வு பெறும்போது நிர்ணயிக்கப்பட்ட பென்ஷனை மாற்றி உயர்த்தி தரவேண்டும்.


5. 2017க்கு பிந்தியவர் 7 வது மத்திய ஊதியக்குழு அடிப்படையில் பிட்மெண்ட் பெற முடியாதா?


ஆமாம் - முடியாது. அவர்கள் 1-1-2017ல் ஊழியர்கள்- அவர்கள் பொதுத்துறை ஊதிய நிலையில் இருப்பர். அதை அடுத்த மூன்றாவது ஊதியக்கமிட்டி ஊதிய நிலையில் வைத்து தான் அவர்களுக்கான புதிய ஊதியத்தை அதன் மூலம் புதிய பென்ஷனை தரமுடியும்.


6.  DOT  இந்த 2017க்கு பிந்தியவர்களுக்கு என்ன சொல்கிறது? ஊதிய மாற்றம் இல்லாமல் எப்படி செய்வதாகச் சொல்கிறது?


ஊதிய மாற்றம் வந்து அத்துடன் பென்ஷன் ரிவிஷன் வந்திருந்தால் பிரச்னை இருந்திருக்காது. டி ஒ டி ஊதிய மாற்றமில்லாமலேயே பென்ஷன் ரிவிஷன் என ஏற்றுள்ளது. அதற்கு அது வசதியாகவும் இருக்கிறது. 1-1-2017ல் அந்த ஊழியர்  இருக்கும் அடிப்படை ஊதியத்தில் கிராக்கிப்படி 119.5 சதம் இணைத்து   ஜீரோ சதம் பிட்மெண்ட் என டி ஓ டி சொன்னது. அனைவரும் அதை ஏற்காத நிலையில் 5 சதமோ 10 சதமோ எதை நிதி அமைச்சகம் ஏற்கிறதோ அதை காபினட் ஒப்புதல் பெற்று அவர்கள் தரலாம். இந்த 1-1-2017ல் புதிதாக நிர்ணயிக்கப்படும் ஊதியமும்  3வது ஊதியக் கமிட்டி ஊதிய நிலையும் நோஷனலாக அந்த ஊழியர் ஓய்வு பெரும் வரை வந்து அதில் அவர் பென்ஷன் நிர்ணயிக்கப்படும். அவர் பென்ஷனராக ஆகும் காலத்தில் பி எஸ் என் எல் தந்துகொண்டிருக்கும் இரண்டாவது ஊதியக் கமிட்டி ஊதியம்- ஊதிய நிலையில்-  last pay drawnல் நிர்ணயிக்காமல் புதிய நோஷனல் ஊதியத்தில் அவர் பென்ஷன் நிர்ணயமாகும் . முன்பு அவ்வாறு நிர்ணயித்து இருந்தால் புதிய ஊதியப்படி அது மாற்றி உயர்த்தப்படும்.


7. இதனால் 2017க்கு பிந்தியவர்க்கு நட்டம் உண்டாகுமா?


அசோசியேஷன் கேட்டது தான் நட்டத்தை தரும். டி ஓ டி சரியான முறையைத்தான் தந்துள்ளது இதனால் அந்த ஊழியர்கள் தங்கள் புது ஊதியத்தில் இன்க்ரிமெண்ட்களைப் பெற்று கூடுதல் பென்ஷன் பலனைப் பெறுவர்.


8. ஊதிய மாற்றமில்லாமல் இப்படி நோஷனாலாக பென்ஷன் நிர்ணயிப்பதால் பாதிப்பு உண்டா?


ஊதிய மாற்றம் வந்திருந்தால் 1-1-2017ல் பெற்ற பலனை அவர்கள் பெற்றிருப்பர். அரசாங்கம் அப்பலன்களுக்கு  actual date  அமுலாக்க தேதி கொடுப்பதிலிருந்து கிடைத்திருக்கும். இப்போது பி எஸ் என் எல் இவர்கள் ஓய்வு பெறும்வரை, ஊதிய மாற்றம் இன்மையால், எந்த புதிய ஊதியத்தையோ புதிய ஊதிய நிலையயோ தரவேண்டியிருக்காது. ஓய்வு பெற்ற மறுநாளில் நோஷனல் பலன்கள் - 1-1-17லிருந்து கிடைக்கப்பெற்ற பலன்கள் பென்ஷன் நிர்ணயத்தில்தான் தன் வெளிச்சத்தைக் காணும். அதுவரை அது உறங்கும். டி ஓ டி ஆல் உறைய வைக்கப்பட்டிருக்கும்.


உதாரணமாக ஒருவர் 2016 டிசம்பரில் ஓய்வு பெறுகிறார் என்றால், அவர் ஒரு நாள் கூட இந்த 10 ஆண்டில் புதிய ஊதிய பலன்களை பெற்றிருக்க மாட்டார். 10 ஆண்டுகள் கழித்து ஓய்வு பெறும் 1-1-2027ல் தான் அவருக்கான பலன்கள் பென்ஷன் நிர்ணயம் மூலம் வெளிச்சமாகும். இது மிக அநீதியாகும். இந்த அநீதி ஊதிய மாற்றம் இல்லாமல் பென்ஷன் மாற்றம் என வருவதால் உருவாக்கப்படும் அநீதி.


 போஸ்ட் 2017 தோழர்களும் புதிய வகைப்பட்ட பென்ஷன் நிர்ணய பலனை அடையவேண்டும் என்பதற்கு டி ஒ டி கண்டெடுத்த  possible shortest route  தான் இந்த நோஷனல் பென்ஷன் நிர்ணயம் என்பதாகும். இதற்கும் 37 ஏ வில் திருத்தம் வேண்டும். 


எனவே  போஸ்ட் 2017 தோழர்களிடம் சரியான புரிதல் இருந்தால், நிரந்தர தீர்வு என்ற பெயரில் 7வது மத்திய ஊதியக்குழு பிட்மெண்ட் கதையாடலை எவரும் இன்றுள்ள சூழலில் நடத்த முடியாது. போஸ்ட் 2017 தோழர்கள் அமைதியாக, அல்லது நமக்கென்ன என அறியாமையில் உழன்றால் தொடர்ந்து அந்த பேச்சு ஊர்வலம் வரும்.


25-4-2023  13 hrs   ஆர். பட்டாபிராமன்

No comments:

Post a Comment