அக்டோபர் புரட்சிக்கு பின்னரான லெனின் ஆட்சிக்காலம் புரட்சிக்கு பின்னர் லெனின் Lenin as Premier புரட்சிக்கு பின்னர் லெனின் ( ஆட்சியும் மறைவும்) -ஆர்.பட்டாபிராமன் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முற்போக்கு இயக்கங்களும் மார்க்சிய சிந்தனை கொண்டவர்களும் நடத்திவருகிறோம். அக்டோபர் புரட்சி அல்லது புதிய காலண்டர்படி நவம்பர் 1917 புரட்சி நடந்த சூழல் குறித்தும் 1905 முதல் 1917 வரை நடந்த எழுச்சிகர போராட்டங்கள், ருஷ்யாவில் சோசலிச புரட்சிகர சக்திகள் மூன்று பெரும்பிரிவுகளாக பிரிந்து செயலாற்றியமை குறித்தும் ஏராள புத்தகங்கள் ஆவணங்கள் வந்துள்ளன. மென்ஷ்விக், சோசலிச புரட்சிகர கட்சிகளைப்பற்றிய பல ருஷ்ய ஆவணங்கள் ஆங்கிலத்தில் கிடைக்கப்பெற்றால் மேலும் சரியான புரிதலை நாம் பெறமுடியும். அதிகாரபூர்வமான போல்ஷ்விக் ஆவணங்கள் , அவர்களை விமர்சிக்கும் ஆவணங்கள் கிடைக்கின்றன. ருஷ்யாவில் 1905-1917 ஆண்டுகளில் முடியாட்சிக்கும் அதன் அதிகார எல்லைக்குட்பட்டு அரசியல் சட்டமுறைகளை உருவாக்கும் கான்ஸ்டிட்யூஷ