Skip to main content

அக்டோபர் புரட்சிக்கு பின்னரான லெனின் ஆட்சிக்காலம்


           அக்டோபர் புரட்சிக்கு பின்னரான லெனின் ஆட்சிக்காலம்

                  புரட்சிக்கு பின்னர் லெனின் Lenin as Premier
               புரட்சிக்கு பின்னர் லெனின்  ( ஆட்சியும் மறைவும்)
                                               -ஆர்.பட்டாபிராமன்

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முற்போக்கு இயக்கங்களும் மார்க்சிய சிந்தனை கொண்டவர்களும் நடத்திவருகிறோம். அக்டோபர் புரட்சி அல்லது புதிய காலண்டர்படி நவம்பர் 1917 புரட்சி நடந்த சூழல் குறித்தும் 1905 முதல் 1917 வரை நடந்த எழுச்சிகர போராட்டங்கள், ருஷ்யாவில்  சோசலிச  புரட்சிகர சக்திகள் மூன்று பெரும்பிரிவுகளாக பிரிந்து செயலாற்றியமை குறித்தும் ஏராள புத்தகங்கள் ஆவணங்கள் வந்துள்ளன. மென்ஷ்விக், சோசலிச புரட்சிகர கட்சிகளைப்பற்றிய பல ருஷ்ய ஆவணங்கள் ஆங்கிலத்தில் கிடைக்கப்பெற்றால் மேலும் சரியான புரிதலை நாம் பெறமுடியும். அதிகாரபூர்வமான போல்ஷ்விக் ஆவணங்கள் , அவர்களை விமர்சிக்கும் ஆவணங்கள் கிடைக்கின்றன.
ருஷ்யாவில் 1905-1917 ஆண்டுகளில் முடியாட்சிக்கும் அதன் அதிகார எல்லைக்குட்பட்டு அரசியல் சட்டமுறைகளை உருவாக்கும் கான்ஸ்டிட்யூஷனிசம் நடைமுறை கோரிக்கைக்கும் இடையே ஆன போராட்டங்கள் நடந்தன. டூமா மற்றும் அதற்கான நடைமுறை போராட்டங்கள் வளர்ந்தகாலம் என குறிப்பிடலாம். இக்காலத்தில் அங்கு கட்சிகளாக இருவித புரட்சிகர சக்திகள் வளரத்துவங்கின. மார்க்சிய வழியில் நின்ற ருஷ்யன் சோசலிஸ்ட் டெமாக்ரடிக் கட்சி மற்றது விவசாயிகளை கிராமப்புற போராளிகளை நம்பி செயல்பட்ட சோசலிஸ்ட் புரட்சிகர கட்சி.  சோசலிச ஜனநாயக கட்சி 1903ல் போல்ஷ்விக், மென்ஷ்விக் பிரிவுகளானது. பிளக்கானோவ், ஆக்சல்ராட், வெராசசூலிச் போன்ற மூத்த தலைமுறை மார்க்சியவாதிகளுடன் லெனின், மார்டோவ், பொட்ரெசாவ் போன்ற இளம் தலைமுறையினர் 1900ல் இணைந்தனர். அறுவரும் இணைந்து இஸ்க்ரா பத்ரிக்கை கொணர்ந்தனர். ருஷ்ய சமுக ஜனநாயக கட்சியை உருவாக்கி அதன் முதல் காங்கிரசை பிரஸ்ஸல்ஸில் நடத்தி லண்டனில் வாழத்துவங்கினர். ஆர் எஸ் டி பி ல் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 1903 முதல் மென்ஷ்விக்- போல்ஷ்விக் என செயல்படத்துவங்கினர்.
1905 எழுச்சியால் உருவான டூமா எனும் நாடாளுமன்றத்தில்  கான்ஸ்டிட்யூஷனல் டெமாக்ரட் என்கிற காடட் கட்சி பலம் பெற்றது. ஆனாலும் ஜாரால் அது கலைக்கப்பட்டது. மூன்றாவது டூமா மட்டுமே அதில் பிற்போகு சக்திகள் நிரம்பி இருந்த காரணத்தால் 5 ஆண்டுகள் நிலைத்தது.  அக்டோபரிஸ்ட் எனப்படும் வலதுசாரி கட்சியினர் வலுவாக இருந்தனர். அதில்  Guchkov, Stolypin  போன்ற திறமையாளர்கள் இருந்தனர். நிலப்பிரச்சனை, விவசாய பிரச்சனையில் ஸ்டோலிபின் கவனம் செலுத்தக்கூடியவராக இருந்தார். ஆனால் அவர் 1912ல் கொல்லப்பட்டார். 1914-17 களில் ஜார் அரசு யுத்தங்களில் சிக்கி தனது பொருளாதார பின்னடைவை கண்டது. ஜாரின் ஆட்சி பலவீனமானநிலையில் 1917 பிப்ரவரி புரட்சியால் தூக்கி எறியப்பட்டது. நான்காவது டூமா சார்ந்த லிபரல்கள், சோசியல் டெமாக்ரட் கெரன்ஸ்கி தற்காலிக அரசை அமைத்தனர். அரசிற்கு வெளியே  தொழிலாளர்-ராணுவவீரர்கள் சோவியத் என்பது பெட்ரோகிராட் போன்ற பகுதிகளில் வலுவாக செல்வாக்குடன் இருந்தது. அவர்களில் பலர் மார்க்சிய தாகம் நிறைந்தவர்களாக இருந்தனர். நகர்புறங்களில் மென்ஷ்விக்குகள் கையிலும், கிராமப்புறங்களில் புரட்சிகர சோசலிஸ்ட்கள் செல்வாக்கிலும் சோவியத்துகள் இருந்தன.
 போல்ஷ்விக் பிரிவிற்கு லெனின் தலைமை தாங்கினார். 1914 முதலாம் உலக யுத்த நேரத்தில் ஏகாதிபத்திய யுத்தம் சிவில் யுத்தமாக நாடுகளில் எதிரொலிகட்டும் என்றார் லெனின். 1917 பிப்ரவரி புரட்சியில் ஜார் வீழ்த்தப்பட்டு கெரன்ஸ்கி தலைமையில் அரசாங்கம் அமைந்தது. அதனால் போர்க்கால நெருக்கடிகளை சமாளிக்க இயலவில்லை. போல்ஷ்விக்குகளின் அக்டோபர் புரட்சி சாத்தியமானது.
 1917 மே மாதம் ருஷ்யாவில் சுதந்திரமாக நடந்த கட்சி காங்கிரசில் போல்ஷ்விக்குகள் மூன்று முழக்கங்களை அனுசரித்தால் ஆட்சிக்கு வந்துவிடமுடியும் என்றார் லெனின். அமைதி, விவசாயிக்கு நிலம், அனைத்து அதிகாரமும் சோவியத்திற்கு என்பது அம்முழக்கங்கள். நவம்பர் 7 1917 புரட்சிக்கு பின்னர் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனும் அரசு வடிவம் பற்றி விளக்கவேண்டியிருந்தது. லெனின் அதை  half state  என்பார். வலுவாக எழுந்துள்ள அரசு தன்னை தொடர்ந்து வாழவைத்துக்கொள்ளாது. பலவீனமாகி இற்றுப்போகும் என பேசினார்.  In the proletarian state the majority suppress the minority, and, being the majority, have no need to use for instruments organisations that are self- perpetuating and parasitic... organisations they use are democratically controlled, and they gradually disappear as the work of suppression is completed  என விளக்கப்பட்டது.லெனின் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது முதல் அவரின் மறைவுவரை ( 1917 நவம்பர்- 1924 ஜனவரி) முழுமையான 5 ஆண்டுகள் குறித்த சுருக்கமான பதிவாக இக்கட்டுரை  எழுதப்பட்டுள்ளது.
புரட்சியின் நாளன்று விடியற்காலை 3.30வரை லெனின் பெரும்பரபரப்புடன் காணப்பட்டார். ஒருவாரகாலமாகவே அவர் சரியாக உறங்கவில்லை. அவர் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்மோலியில் அன்று இரவு தங்கவேண்டாம் என முடிவெடுத்து தனது நெருங்கிய நண்பர்  Bonch Bruyevich  என்கிற போல்ஷ்விக் தலைவரும் வரலாற்றாசிரியருமான பெஸ்கி குடியிருப்பில்  தங்கினார். லெனின் சாப்பிட்டாரா என்பதைகூட உடன் இருந்தவர்கள் அறியமுடியவில்லை. அவ்வீட்டில் படுக்கை அவ்வளவு வசதியாக இல்லை. ஆனாலும் லெனின் சற்று ஓய்வெடுக்கவேண்டும் என பான்ச் தெரிவித்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட அறையில் புத்தகம், பேப்பர்கள், எழுதுகோல் வைக்கப்பட்டிருந்தன.
பான்ச் உறங்க சென்றநேரத்திலும் லெனின் அறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவர் தன் கைத்துப்பாக்கியை சரிபார்த்துக்கொண்டதை பான்ச்  பார்க்கிறார். திடிரென ஏதோ எழுதி எழுதி லெனின் சரி செய்கிறார். பின்னர் விளக்கு அணைத்து படுத்துக்கொண்டார். காலையில் யாரும் அவரை எழுப்பவேண்டாம் என நினைத்தனர். ஆனால் அவரோ புரட்சியின் முதல்நாள் வணக்கம் என்கிற சல்யூட்டுடன் வந்தார். துணைவியார் கிருப்ஸ்காயா அருகில் வந்தவுடன் தான் உடனடியாக மக்களுக்கு படிக்க இருக்கும்  நில  ஆணையை  Decree of Land படித்துக்காட்டினார். பான்ச்சிடம் நகல்கள் போட உத்தரவிட்டார். பான்ச் சந்தேகத்துடன் பார்த்தபோது விவசாயிகள் நிலம் பெறுவர். விவசாய புரட்சி நிறைவேறும் என்றார். பான்ச் இரத்தவெள்ளம் ஓடும் என்றார். விவசாயிகளிடம் செல்வாக்குடன் உள்ள  கட்சியான புரட்சிகர சோசலிஸ்ட்களுக்கு சாதகமாக மாறும் என்றார் பான்ச்
இருக்கட்டும் தோழா- சட்டரீதியான பாதுகாப்பை ஆட்சிப்பொறுப்பேற்கும் நாம்தான் தரமுடியும் என்பதை விவசாயிகள் உணர்வர் என்றார் லெனின். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மூலம் இந்த விவசாய புரட்சி நிறைவேறும் என்கிற அழுத்தமான நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். ஆணையின் நகல் 50 ஆயிரம் காப்பிகள் அடிக்கப்பட ஏற்பாடு நடந்தது. பல்வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டன. உரியவர்களுக்கு நிலம் கிடைத்துள்ளதா என்பதை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும் என்கிற நம்பிக்கையுடன் நம் தோழர்கள் இதை விளங்க செய்யவேண்டும் என்கிற செய்தி பரவியது.
இதனிடையில் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட கெரன்ஸ்கி தனது படையுடன் போரிடலாம் என்கிற செய்தி வந்துகொண்டிருக்கிறது. அதை எதிர்கொள்வது குறித்து நெருங்கிய சகாக்களுடன் லெனின் விவாதம் மேற்கொள்கிறார்.
ஸ்மான்லியில் லெனின்  ஆற்றிய உரையை ஜான் ரீடு கேட்கிறார். தனது உரையில் சமாதானம்- அமைதி- யுத்தத்தை முடிவிற்கு கொணர்தல் போன்ற அம்சங்களை லெனின் வலியுறுத்தினார். பிரிட்டிஷ் தொழிலாளர் வரலாற்று பூர்வமாக சார்ட்டிஸ்ட் காலம் துவங்கி போராடி வருவதை பாராட்டினார். பிரான்ஸ், ஜெர்மன் தொழிலாளர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மாலையில் நில ஆணை அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. லெனின் தனது உரையில் சகோதரத்துவம் என்கிற ருஷ்ய சொல்லை பயன்படுத்தினார்.
அரசாங்கப் பதவி தனக்கு ஏதும் வேண்டாம் என்றார் லெனின். கட்சியியின் மூலம் வழிகாட்டமுடியும் என்றார். ஆனால் அவரின் பிடிவாதம் சரியல்ல என கமிட்டியில் தோழர்கள் தெரிவித்தனர், பேசுவது எளிது. புரட்சிகர அரசாங்கத்தை நடத்துவது கடினம் என்கிற விமர்சனம் அவர்மீது வைக்கப்பட்டது. அதை லுனாசார்ஸ்கி செய்தார் . லெனின் தலைமை ஏற்க முன்வந்தார்.
2
அரசாங்கம்  அமைப்பது  பற்றிய விவாதம் வந்தது. அமைச்சர்கள் என்கிற பதம் வேண்டாம் என முடிவெடுத்தனர். டிராட்ஸ்கி கமிசார் என்றார். சுப்ரீம் கமிசார் என்றால் சுப்ரீம் மக்களிடமிருந்து அந்நியமாக்கும் எனவே வேண்டாம் என்றனர், இறுதியில் மக்கள் கமிசார் என்பதை லெனின் ஏற்றார். அரசாங்கத்தை எப்படி அழைப்பது என்கிற கேள்வி எழுந்தது.  The Soviet of People's Commissars   என அழைக்க முடிவெடுத்தனர். லெனின் பதவியை சோவியத் மக்கள் கமிசார்களின் தலைவர் என அழைக்கலாம் என்றனர். ருஷ்ய மொழியில்  Predsedatel Sovieta Narodnikh Kommissarov- President of Soviet People's Commissar  என்றனர். நீளமாக இருப்பதால் சுருக்கி  Predsovnarkom-   என்கிற புதிய சொல்லாட்சி உருவாகி மக்களிடம் செல்லத்துவங்கியது. சோவ்னர்கம் என்றால் அரசாங்கம் என அறியப்பட்டது. இலாகா பொறுப்புகள் மக்கள் கமிசார்களுக்கு பிரித்து ஒதுக்கப்பட்டன.
உள்துறை         : ஏ அய் ரைகாவ்
விவசாயம்        : வி பி மில்யுதின்
ராணுவம் மூவர் கமிட்டி: வி ஏ ஆண்டனோவ்-க்ரைலெங்கோ, பெடிபென்கோ
தொழிலாளர்             : சில்யாப்னிகோவ்
வர்த்த்கம் தொழில்       : வி பி நோகின்
கல்வி                   : ஏ வி லூனாசார்ஸ்கி
நிதி                     : ஸ்டெப்பனோவ்
வெளியுறவு              : ட்ராட்ஸ்கி
நீதி                     : ஜி அய் ஒப்பகோவ்
தபால் தந்தி             : என் பி அவிலார்
தேசிய இனம்            : ஸ்டாலின்அமைச்சரவை நவம்பர் 8 1917 இரவு பதவியேற்றது. டிராட்ஸ்கிக்கு லெனினுக்கு அடுத்ததான  செல்வாக்கு இருந்தது. ஆரம்பத்தில் கமிசார்களின் அறிவிப்பெல்லாம் அப்படியே அமுலாகும் என்று மக்கள் கமிசார்கள் நினத்தனர். ஆனால் உள்நாட்டில் நிலைமைகள் சீராக இல்லை என்பது உணரப்பட்டது. ரயில்லோடு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்தனர். தபால் தந்தியில் போராட்டம் எழுந்தது. ஆனால் அரசாங்க சார்பில் அவர்கள் உடன் வேலைக்கு திரும்பவேண்டும்- எதிர்புரட்சிக்கு உதவகூடாது என்கிற ஆணை பிறப்பிக்கப்பட்டது.
கெரன்ஸ்கியின் ஆபத்தை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் டிராட்ஸ்கி அழுத்தம் கொடுத்தார். லெனின் இது குறித்து விவாதித்தபோது ஆயுதங்கள் குறைவாக இருப்பதை அறிந்துகொண்டார். கெரன்ஸ்கி ஆதரவாளர்கள் மாஸ்கோ- பெட்ரோகிராட் ரயில்பாதையை துண்டித்துவிட்டால் நிலைமை விபரீதமாகும் என்கிற அவசரம் உணரப்பட்டது. முழுமையாக ராணுவ விஷயங்களை தனது நேரடி கட்டுக்குள் லெனின் கொணர்ந்தார். புரட்சிக்கு பின்னரான ஒரே வாரத்தில் உலக நாடுகள்- பத்திரிகைகள் லெனின் ட்ராட்ஸ்கி என்கிற இரு பெயர்களையும் உச்சரிக்க துவங்கின. கெரன்ஸ்கி பின்னடைவு என்கிற செய்தி போல்ஷ்விக் தலைவர்களை உற்சாகப்படுத்தியது.
அரசாங்கத்திலிருந்து அனைத்தையும் கட்டுப்படுத்துவது பெரும் சிக்கலான பணி என்பது உணரப்பட்டது. பலநேரங்களில் அடக்குமுறைகள் மூலம்தாம் நிலைமைகளை கட்டுக்குள் கொணரமுடிந்தது.
மாக்சிம் கார்க்கி போன்றவர் லெனினை கடுமையாக தாக்கி பேசத்துவங்கினார். புரட்சிக்கு பின்னர் இரண்டே வாரங்களில் தனது விமர்சனத்தை அவர்   Novoya Zhizn  பத்திரிகையில் எழுதினார்.  அவர் எழுத்தின் ஆங்கில வடிவம் சுருக்கி இங்கு தரப்படுகிறது
Blind Fanatics and unscrupulous adventurers are rushing headlong toward social revolution. That is to say the road to anarchy and ruin of proletariat and of the revolution. Following this road Lenin and his cohorts think it is permissible to commit all crimes, massacres in Petrograd, devastation in Moscow, suppression of free speech, senseless arrests…I hope the common sense of the workers and the realization of their historical mission will open their eyes to the impossibility of fulfilling the promises made by Lenin and to his extent of his madness and anarchic tendencies, which follow the line of Bakunin and Nechayev.
The working classes cannot fail to realise that Lenin is experimenting with their blood and trying to strain the revolutionary mood of the proletariat to the limit to see what the outcome will be….. one must imagine that Lenin is all powerful magician, but a deliberate juggler who has no feeling either for the lives or for the honor of the proletariat ..
புரட்சியின் பெயரால் லெனின் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றமுடியும் என நம்பி  இரத்த ஆறு ஓடவேண்டாம். பகுனின் வழியிலான அராஜகம்தான் நடக்கிறது. சுதந்திர பேச்சுரிமைக்கு தடை, கண்மூடித்தனமான கைதுகள், படுகொலைகள் என கார்க்கியின் விமர்சனம் சென்றது. இப்படி கார்க்கி எழுதுவதை பார்த்த மேற்குலகம் அவரை ரஷ்யாவின் மனசாட்சி என்றழைத்தது. லெனினும் டிராட்ஸ்கியும் தங்களை நெப்போலியனாக கருதிக்கொண்டு சர்வாதிகாரம் செய்து வருகின்றனர் என்பது அன்று கார்க்கியின் விமர்சனமாக இருந்தது. லெனின் மக்களுடன் ஒருபோதும் வாழாதவர் என்பதால் அவர் உளவியல் இவ்வாறு இருக்கிறது எனவும் கார்க்கி எழுதினார்.
சோவியத் கமிசார்கள் ஆட்சியில் ராணுவ ரேங்க்முறை ரத்து என சொல்லப்பட்டது. சல்யூட் ஆர்டெர்லி முறைகள் ரத்தாயின. கர்னல் ரேமண்ட் ராபின்ஸ் என்பாரிடம் லெனின் தன் சந்தேகத்தை சொல்கிறார். ஒருவேளை எங்கள் ஆட்சி வீழ்ந்தாலும் எங்களது சமுக கட்டுப்பாட்டு முறைதான் நீடிக்கும். எங்களது புரட்சி பழமையான அனைத்தையும் துடைத்தெறிந்துவிடும் என்றார். அமெரிக்காவின் ஜனநாயக அரசையும் இம்முறை தூக்கி எறிந்துவிடுமா என கர்னல் கேட்கிறார். அது ஊழல் அரசு என்கிறார் லெனின். மக்கள் தேர்ந்தெடுக்கிறார்களே என வினவ- நீங்கள் பணம் என புரிந்துகொள்கிறீர்கள்- சிந்தனை ஊழல் என விளக்கம் அளிக்கிறார் லெனின். தாமஸ் ஜெபர்சன் காலத்து அரசாங்கமது- அதில் அறிவு நாணயமில்லை என்றார். நீங்கள் சிட்டிசன் என்பீர்கள்.  எங்கள் அரசாங்கம் தொழிலாளர் குடியரசு என விளக்கினார்.
ஜார்ஜ் சாலமன்  என்கிற லெனினது 25 ஆண்டுகால நண்பர் அவரை சந்தித்து தாங்கள் பேசுவது உடோபியா கனவா எனக்கேட்டார்.  Utopia on a colossal state ?   இல்லை என்றார் லெனின். சோசலிச அரசிற்கான பெரும் போராட்டம் என்றார் . அதற்கு அனைத்தையும் அழிக்கலாமா என சாலமன் வினவினார். தரைமட்டமாக்காவிட்டால் புதியனவற்றை எவ்வாறு கொணரமுடியும். அழுகிவிட்ட பூர்ஷ்வாமுறையைத்தானே அழிக்கிறோம் என்றார் லெனின்.பிராவ்தாவில் நவம்பர் 19 அன்று மக்களுக்கு வேண்டுகோள் என லெனின் செய்தி வெளியிட்டார். நீங்கள்தான் இப்போது ஆட்சியாளர்கள் என்பதை அறியுங்கள். சோவியத்தான் அரசாங்க அதிகார நிறுவனங்கள் என்றார். அடுத்து அரசியல் அசெம்பிளி என்கிற கோரிக்கைக்கு செவிசாய்க்கவேண்டிவந்தது. வாக்கு எனில் எவருக்கெல்லாம் என்பது விவாதமானது. சுதந்திரமான சட்டப்படியான தேர்தலுக்கு உறுதி அளிக்கப்படுவதாக அரசாங்க செய்தி வெளியானது. நவம்பர் 30 அன்று தேர்தல் முடிவுகள் வந்தன. வாக்காளர்கள் 4.17 கோடியில் புரட்சிகர சோசலிஸ்ட்கள் 2.08 கோடி, போல்ஷ்விக்குகள் 98 லட்சமும் பெற்றதாக தேர்தல் கமிஷன் சொல்லியது. நிலைமைகள் மோசமாயின.
 தேர்தல் கமிஷன் அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர். போல்ஷ்விக் கட்சியை சார்ந்தவர் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.  எதிர்புரட்சி சக்திகளை ஒடுக்குவது என்பதற்காக  Combating Counter Revoultion- Chrezvychainaya komissiya-  எனப்படும் செக்கா உருவாக்கப்பட்டது. ஜனவரி 18, 1918ல் அரசியல் சட்ட அசெம்பிளி கூடும் என்றனர். அசெம்பிளி சேர்மனுக்கு போல்ஷ்விக்குகள் எவரையும் நிறுத்தவில்லை. சோசலிச புரட்சி கட்சியின் Maria Spindonova  Victor Sernov  ஆகியோர் நின்றனர். புரட்சிகர வலதுசாரி பிரிவினராக கருதப்பட்ட விக்டருக்கு 237 வாக்குகளும் மரியாவிற்கு 151 வாக்குகளும் கிடைத்தன. புரட்சிகர சோசலிஸ்ட்கள் திட்டம், போல்ஷ்விக் திட்டம் இரண்டும் வாக்குக்கு விடப்பட்டதில் 237, 136 என முடிவுகள் வந்தன. போல்ஷ்விக்குகள் தாங்கள் அரசியல் அசெம்பிளியிலிருந்து வெளியேறுவது என முடிவெடுத்தனர்.  சோசலிஸ்ட் கட்சியினரும் மற்றவர்களும் ரஷ்யாவில் ரிபப்ளிக் அரசாங்கம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டனர். ஆனால் அனைவரும் உடனடியாக கலையவேண்டும் என்கிற உத்தரவு அவர்களுக்கு மக்கள் கமிசார்கள் சார்பில் பிறப்பிக்கப்பட்டது.
யுத்தமற்ற அமைதியான சூழலில்தான் மின்மயம், வங்கிகள் தேசியமயம், தொழில்வளர்ச்சி, கிராம கூட்டுறவுகள் மூலம் நாம் ருஷ்யாவை கட்டமைக்கமுடியும் என லெனின் பேசினார். புரட்சியை காப்பாற்ற ஜெர்மனியுடன் உடன்பாடு அவசியம் என டிராட்ஸ்கியை வற்புறுத்தினார். ஆனால் பெட்ரோகிராட் கட்சிகூட்டத்தில் அவரின் முன்மொழிவிற்கு 60 பேரில் 15 பேர் மட்டுமே உடன்பட்டனர். டிராட்ஸ்கி  No peace No war க்கு 16 வாக்குகள், புகாரினின் ஜெர்மனிக்கு எதிராக யுத்தம் என்பதற்கு 32 வாக்குகள் கிடைத்தன. மறுநாள் மத்திய கமிட்டியில் லெனின் பெரும்பான்மை பெற்றார். ரடேக் போன்றவர்கள் லெனினை சிறையில் தள்ளவேண்டும் என சத்தமிட்டனர். லெனின் நீங்கள்தான் உள்ளே போவீர்கள் என அமைதியாக தெரிவித்தார்.
3
1918-21 War Communism காலம் என்றழைக்கப்படுகிறது. 16 வயது முதல் 50 வயது உள்ள எவரும் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்படவேண்டும் என்கிற உத்தரவு அமுலானது.  Supreme Council of National Economy என பொருள்தரும் Vesenkha உருவாக்கப்பட்டது. ஒர்க்கர்ஸ் கவுன்சில் அதிகாரம் குறைக்கப்பட்டதாக புரட்சிகர சோசலிஸ்ட்கள் அதிலிருந்து வெளியேறினர். 1921-24 புதிய பொருளாதாரகொள்கை அமுல்படுத்தல் காலமாக இருந்தது.  சிறிய அளவில் கலப்பு பொருளாதார நடைமுறை உருவாக்கப்பட்டது. பயிர் உற்பத்தி பெருகியது. ஆனால்  Industrial prices- Agri prices வேறுபாடுகள் பலமடங்கு உயர்ந்தது. இது குறித்த பரிசீலனையை டிராட்ஸ்கி முன்வைத்தார்.  NEP என்பதை New Exploitation of Proletariat  என சிலர் விமர்சித்தனர்.  Shilapnikov, Kollantai போன்றசில தலைவர்களும் கருத்துவேறுபாடுகளை தெரிவித்தனர். சிலப்னிகோவ் மெட்டல் தொழிற்சங்க தலைவர். புரட்சிகாலத்தில் பெட்ரோகிரேடில் முக்கிய தலைவர். அவர் லெனின் அமைச்சரவையில் லேபர் கமிசார் ஆக இருந்தவர். Unionised Workers role in directing the economy- Right to participate என்கிற முழக்கங்களை வைத்தவர்.
பிரெஸ்ட் லிடோவ்ஸ்கி அமைதி உடன்பாட்டின் காரணமாக ருஷ்யா தனது நிலப்பரப்பிலிருந்து போலந்து, பின்லாந்த் பால்டிக் பகுதிகளை இழக்க நேர்ந்தது.1913ல் இருந்த உற்பத்தியளவைவிட 1921ல் தானிய உற்பத்தி, நிலக்கரி, இரும்பு, பெட்ரொல் எண்ணை உற்பத்தி 40 சதமாக விழந்தன.1918ல் தேவாலயங்கள் அரசு நிர்வாகம் தனித்தனி, ஆர் எஸ் டி எல் பி என்பது கம்யூனிஸ்ட் கட்சி என்கிற பெயர் மாற்றம், மாஸ்கோ தலைநகர் ஆதல், அரசு முதலாளித்துவம் என்பதை கொள்கையாக ஏற்பது போன்ற முடிவுகள் அமுலாக்கப்பட்டன. அரசாங்க முதலாளித்துவம் குறித்து லெனின் விளக்கம் தந்தார்.  State monopoly capitalism inevitably and unavoidably implies a step, or several steps towards socialism.... socialism is nothing but state capitalist monopoly which has been turned in the interest of the whole people and has therefore ceased to be capitalist economy 
பெட்ரோகிரேடிலிருந்து மாஸ்கோவை தலைநகராக்கி செயல்படுவது என்கிற முடிவு எடுக்கப்பட்டது. உடன் 24 மணிநேர பயணம் செய்து லெனின் மாஸ்கோ வந்தடைந்தார்.  அங்கு National Hotel என்பதில்தான் முதலில் தங்க ஏற்பாடு இருந்தது. புகழ்வாய்ந்த கிரெம்ளின் மாளிகை சரிபார்க்கப்பட்டு வந்தது. அவருக்கு அப்பெரிய அரண்மனை வாசத்தில் போய் தங்க பெரும் தயக்கம் இருந்தது. மகாபீட்டர் இளம்வயதில் வாழ்ந்த வீட்டின் பகுதியில் சில வாரங்கள் லெனின் தங்கினார். டிராட்ஸ்கி அருகாமையில் குடியேறினார். கிரெம்ளின் மாளிகை மணிகள் சர்வதேசகீதம் இசைக்க துவங்கின.
நாட்டில் லஞ்சம் ஊழல் எனில் 10 ஆண்டுகள் சிறை என்பதற்கு சட்டம் வேண்டும் என விழைந்தார் லெனின். புரட்சிக்கு விரோதமாக எழுதும் பத்திரிகைகள் தடை செய்யப்பட்டன. ஜார் குடும்பம் முழுமையாக சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதாக டிராட்ஸ்கிக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்கு எடுத்த முடிவு என டிராட்ஸ்கி கேட்டதாக ராபர்ட் பைன் சொல்கிறார். கிருப்ஸ்காயா குறிப்பிலும் அக்குடும்பம் ஜூலை16, 1918ல் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி நமக்கு கிடைக்கிறது..
கிரெம்ளினுக்கு இடம்பெயர்ந்த லெனின் வழக்கம்போல் தனது படிப்பறையில் 4 மணிநேரமாவது செலவிட்டார். சமையல் அறை சென்று கிருப்ஸ்காயாவுடன் உணவு எடுத்துக்கொள்வதை பழக்கமாக வைத்துக்கொண்டார். கடிதங்களுக்கு பதில் எழுதுவதற்கு, உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கினார். அவரது வரவேற்பறை ஆடம்பரம் ஏதுமின்றி எளிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. அவரது தொலைபேசிகள் அலறாமல் buzz ஒலி மட்டும் வருவதுபோல் வைக்கப்பட்டிருந்தன. மாஸ்கோவில் தொலைபேசிகள் சில மட்டுமே அவையும் சரிவர இயங்காத சூழல் அப்போது இருந்தது. ஆனால் லெனின் தொலைபேசிகள் முன்னுரிமையுடன் சரியாக பராமரிக்கப்பட்டன. அவரது நெறிப்படுத்தல்கள் பெரும்பாலும் தந்தி, தொலைபேசிவாயிலாக நடந்ததாக  ராபர்ட் பைன் சொல்கிறார். அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் நின்று போவதை பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதில்லை. தன் அறையில் கார்ல்மார்க்ஸ் படம் இருப்பதை அவர் விரும்பினார்.
உணவுத்துறை மக்கள் கமிசார் அதிக வேலைபளுவுடன் உணவு எடுத்துக்கொள்ளாமல்கூட வேலை செய்து மயக்கம்,அடைந்தார் என்கிற செய்தி லெனினுக்கு சென்றது. அவரிடம் பாக்டரி தொழிலாளர் அளவிற்காவது  உணவு எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற அறிவுரையை லெனின் வழங்கினார்  . எவராவது 15 மணிநேரம்- 18 மணிநேரம் வேலை செய்கிறார் என அறிந்தால் அவர்களிடம் நீங்கள் அரசாங்க சொத்து- விரயமாக்ககூடாது என கருணையுடன் அவர் கடிந்துகொண்டதாக பார்க்கமுடிகிறது. விவசாய பிரதிநிதிகள் தன்னை சந்திக்க வரும்போது எழுந்து நின்று அவர்களை அவர் வரவேற்பதை பழக்கமாக கொண்டார். அவர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு பெயர்சொல்லி அழைத்து நெருக்கம் உணர்த்துவார். அவர்கள் கிராம சோவியத் பற்றி புகார் எழுப்பினால் பொறுப்பாளர்களை திரும்ப அழைக்கும் உரிமையை பயன்படுத்துங்கள் என உற்சாகப்படுத்துவார்.
எச் ஜி வெல்ஸ் 1920ல் மாஸ்கோ வந்தார். In the Shadow of Russia  என அதை 1921ல் வெளியிட்டார். லெனினை சந்திக்க வைக்கமுடியும் என்கிற கார்க்கியுடனான தொலைபேசி உரையாடலை நம்பி அவர் ரஷ்யா வந்தார். ஆனால் லெனினை சந்திக்க அவ்வளவு சுலபமாக முடியவில்லை என எச் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்துவ ஆலயங்கள் திறந்தே இருந்ததையும் வாயிலில் பிச்சைக்காரர்கள் இருந்ததையும் அவர் பதிவிட்டுள்ளார். லெனினைப்பற்றி  a dreamer in the kremlin என அவர் எழுதியிருந்தார்.  He spoke excellent English  என்கிற பதிவையும் செய்துள்ளார். In the face of Gigantic difficulties they are trying to rebuild a new Russia among the ruins..என்று குறிப்பிட்டுள்ளார் வெல்ஸ் லெனின் அவரிடம் சிறுநகரங்கள் உருவாதல் பற்றி உரையாடியதாக தெரிகிறது. பத்து ஆண்டுகள் கழித்து வந்து பாருங்கள் எங்கள் வளர்ச்சி தெரியும் என்றார் லெனின். தன்னிடம் வந்து முறையிடும் தொழிலாளர் குறைகளை தீர்ப்பதில் அவர் முன்னுரிமை கொடுத்தார். சோவியத் அதிகாரிகள் குறித்து லெனினிடம் சென்று குறை சொல்லும் தொழிலாளர்களை சிறையில் அடைத்தபோது அவர்களை விடுவித்து அந்த அதிகாரிகளை அவர் சிறைக்கு அனுப்பியதாக அறிகிறோம். லெனின் அரசாங்க அதிகாரத்தை டெர்ரர் ஆக்கி வருகிறார் என்கிற விமர்சனம் அவர் காதுகளுக்கு எட்டாமல் இல்லை.
கிரெம்ளின்விட்டு அவர் அதிகம் வெளியே செல்லாதவராக இருந்தார். கமிட்டி கூட்டங்களில் பங்கேற்க அவர் தவறுவதில்லை. ஆனால் அபத்தமான விவாதங்களை சகித்துக்கொள்ளமுடியாமல் இருந்தார். அப்போது தனது கவனங்களை வேறுபக்கம் வைத்துக்கொண்டார் என ராபர்ட் பைன் எழுதுகிறார்.
 ஆகஸ்ட் 30, 1918 காலை 11 மணி அளவில் மோசஸ் உரிட்ஸ்கி என்கிற கமிசார் சுடப்பட்டார் என்கிற செய்தி பரவியது. சைக்கிளில் வந்த இளைஞன் சுட்டுவிட்டு சென்றான் என்பது செய்தி. மோசஸ் லெனின் பாராட்டிவந்த சிறந்த அமைப்பாளர்களில் ஒருவர். மென்ஸ்விக்குகளிடமிருந்து போல்ஷ்விக்காக மாறியவர். சுட்டவன் பிரெஸ்ட் லிட்டோவ்ஸ்க் அமைதி உடன்பாட்டிற்கு எதிராக பேசியவன். போல்ஷ்விக்குகளில் பலர் யூதர்கள் என்கிற விமர்சனத்தையும் அவன் வைத்திருந்தான். சகோதரி மற்றும் கிருப்ஸ்காயாவுடன் லெனின் இருந்தபோது அவருக்கு தகவல் தரப்பட்டது. அவர் வெளியில் வரவேண்டாம் என்கிற எச்சரிக்கையும் தரப்பட்டது. அவர் அலுவலக பணிகளை தொடர்ந்தார். தான் ஆற்றவேண்டிய  உரைகளை சரிசெய்து கொண்டிருந்தார்.
அன்று மாலையில் ஏற்றுக்கொண்ட கூட்டத்திற்கு சென்றார். எதிர்புரட்சி சக்திகள் மீது கவனமாக இருந்து ஒடுக்குவது பற்றி குறிப்பிட்டார். உழைப்பவர் முன்னேற்றம் என்கிற பிரச்சனை வாழ்வா சாவா என்பது என்றார். கூட்டத்தில்  பெண்கள் சிலர் சூழ்ந்துகொண்டு  கேள்விகளை அவரிடம் எழுப்பினர். திடிரென ஒருபெண் லெனினை சுட்டார். லெனின் கண்கள் திறந்த நிலையில் அந்த இளைஞர் பிடிபட்டாரா எனக்கேட்டார். அவருக்கு மூச்சுவாங்கிக்கொண்டிருந்தது. வீட்டிற்கு கொண்டுபோய் சிகிட்சை என்றார் லெனின். சட்டை முழுதும் இரத்தம் வழிந்திருந்தது. வீட்டில் மாடிக்கு தானே ஏறமுடியும் என்றார். அவரை படுக்கை அறைக்கு தூக்கி சென்றனர். சிறு காயத்துடன் தப்பிவிட்டதாக மரியாவிடம் அவரே தெரிவிக்கிறார். கிருப்ஸ்காயாவை அழைக்க கார் அனுப்பப்படுகிறது. செய்தி அறிந்த கிருப்ஸ்காய லெனின் உயிருடன் இருக்கிறாரா இல்லையா உண்மையை சொல்லுங்கள் என சோகமயமாகிறார். சிறு மருத்துவமனையாகிறது அந்த அறை.
கிருப்ஸ்காய வந்தவுடன் நீ களைப்பாக இருப்பாய் ஓய்வெடு என லெனின் கூறுகிறார். டாக்டர்களிடம் கிருப்ஸ்காய நிலைமைகளை கேட்டு அறிகிறார். இடது தோள்பட்டையில் குண்டுகள் பாய்ந்திருக்கலாம் என்றனர். இரவு 11 மணிக்கு லெனின் சுடப்பட்ட செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இதன் எதிரொலியாக எதிர்புரட்சியாளர்கள் பெட்ரோகிரேடில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட செய்தியும் வருகிறது. புரட்சிகர சோசலிஸ்ட்கள் பலர் கைது செய்யப்படுகின்றனர். ஆகஸ்ட் 4 பிராவ்தா செய்திதாள் தொழிலாளர்களே துப்பாக்கி ஏந்துங்கள் என்கிற அறைகூவலை தருகிறது. கடைசி முதலாளி இருக்கும்வரை போராடுங்கள் என அதில் வேண்டுகோள் விடப்படுகிறது.
அடுத்துவந்த 10 நாட்களில் லெனின் உடல்நிலை குறித்து 35 மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டன. லெனினை சுட்ட அப்பெண்ணின் பெயர்  Fanya Kaplan. 28 வயதே நிரம்பியவர்.  புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்ந்தவள். My name is Fanya Kaplan. Today I shot at Lenin. I did it on my own. I will not say whom I obtained my revolver. I will give no details. I had resolved to kill Lenin long ago. I consider him a traitor to the Revolution. I was exiled to Akatoi for participating in an assassination attempt against a Tsarist official in Kiev. I spent eleven years at hard labour. After the Revolution I was freed. I favoured the Constituent Assembly and am still for it ..லெனின் என்னைப்பொறுத்தவரை துரோகி ஆகையால் கொல்ல முற்பட்டேன் என்கிற பதிலை அப்பெண்மணி தந்தார்.
1917 பிப்ரவரி புரட்சிக்கு பின்னர் பொது மன்னிப்பில் வெளியே வந்த பெண் கப்லான். ஜாரின் சிறைக்கொடுமையில் தன் கண்பார்வையை இழந்த பெண்.  இரவு 10 மணிக்கு இருட்டில் கண்பார்வை குறைந்த ஒருவர் மூன்று முறை எப்படி குறிபார்த்து சுட்டிருக்கமுடியும் என்ற கேள்வியும் எழுந்ததை பார்க்கமுடிகிறது. அப்பெண்ணின் பின்மண்டையில் சுடப்பட்டு செப்டம்பர் 3 1918ல் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
செபடம்பர் முதல்வாரத்தில் லெனின் ஆபத்திலிருந்து மீண்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாக்சிம் கார்க்கி செய்தி அறிந்து மிகவும் மனம் வருத்தப்பட்டு லெனினை சந்திக்கிறார். அறிவுஜீவிகளுக்கு எதிராக லெனின் அதிகம் பேசவேண்டாம் என்கிற வேண்டுகோளை முன்வைக்கிறார். அவர்கள் அவசியம் என ஏற்பதாக லெனின் சொல்கிறார். ஆனால் அவர்கள் போல்ஷ்விக்குகளை புரிந்துகொள்ளாமல் இருப்பது சரியல்ல என்கிற கருத்தையும் லெனின் எடுத்து உரைக்கிறார்.
லெனின் மலைகள் சார்ந்த கோர்கி பகுதிக்கு ஓய்விற்காக அனுப்பப்படுகிறார். அங்கு ஓய்வின்போது ஓடுகாலி காட்ஸ்கி  என்பதை எழுதுகிறார். தனது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் பூர்ஷ்வா ஜனநாயகத்தைவிட பன்மடங்கு மேலானது- தூய ஜனநாயகம் என்றார். லெனினுக்கு பணிவிடை செய்ததில் கிருப்ஸ்காயா சுகவீனமுற்றார். இதய நோயால் பாதிக்கப்பட்டதால் அவர் குழந்தைகள் சூழ்ந்த பகுதிக்கு இருமாத ஓய்விற்கு அனுப்பப்படுகிறார். ஜனவரி 19 1919ல் கிருப்ஸ்காயாவை பார்க்க தனது சகோதரியுடன் லெனின் காரில் சென்றபோது வழிப்பறி கும்பல் ஒன்றால் அவர் தடுக்கப்படுகிறார். லெனின் தலையில் துப்பாக்கி வைத்து அவர்கள் மிரட்டினர். மரியாவோ லெனினை உங்களுக்கு தெரியவில்லையா என கத்தினார். அப்பகுதி சோவியத் தலைவர்கள் வந்து லெனினை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து கொள்ளையர் தடுப்பு சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. அக்கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
வெளிநாட்டு பத்திரிகையாளர் சிலர் ருஷ்யாவில் பட்டினியும் மின்வெட்டும் கொடுமையாக இருப்பதாக 1919ல் எழுதினர். மக்கள் டைபஸ் நோய்க்கு ஆளானதாகவும் மருந்து தட்டுப்பாடு இருப்பதாகவும் எழுதினர். பெட்ரோகிராடில் ஆலைத்தொழிலாளர்கள் அரசியல் முழக்கங்களுடன் தெரு இறங்கினர். லெனின் வீழட்டும்- ஜார் மீளட்டும் என்கிற பிற்போக்கு முழக்கம் அங்கு எதிரொலித்தது.
\லெனினை சந்தித்த ஆங்கில எழுத்தாளரிடம் இங்கிலாந்தும் புரட்சியை விரைவில் காணும் என்றார் லெனின். மின்மயம் என்பதில் லெனின் அதிக கவனம் செலுத்தினார். ஊரக மாவட்டங்களில் ஓராண்டில் மின்விளக்குகள் என்கிற திட்டம் உருவானது. அனைத்து கிராமங்களிலும் இரு ஆண்டுகளில் மின்சாரம் பார்த்துவிடலாம் என்றனர். சோவியத்துடன் மின்மயம் என்பது சோசலிசம் என சொல்லப்பட்டது. 8வது காங்கிரஸ் கூட்டத்தில் மிக குறைந்த மின் ஒளியில் மின்சார திட்டத்தை லெனின் அறிவித்தார்.
மூன்றாவது அகிலத்தின் அவசியம் உணரப்பட்டு 1919 மார்ச்சில் துவக்க மாநாடு கூட்டப்பட்டது. அதன் முதல் செயலராக  Angelica Ballabenoff  ஆக்கப்படுகிறார். ஏஞ்சலிகா பின்னாட்களில் போல்ஷ்விக் விமர்சகராகவும் இத்தாலியில் அவந்தி பத்திரிகையாளராகவும் மாறினார். அகிலத்தின் கூட்டத்திற்கு 35 பிரதிநிதிகள் வந்தனர். லெனின்,டிராட்ஸ்கி காம்னேவ், ஜினோவீவ், புகாரின் பங்கேற்றனர். உலக கம்யூனிஸ்ட் புரட்சி வந்தே தீரும் என லெனின் உரையாற்றினார்.
கிரான்ஸ்டாட்டில் 16000 மாலுமிகள் கூடி ரகசிய வாக்கெடுப்பு மூலம் அரசாங்கம் என்கிற கோரிக்கையை வைத்தனர். கலகம் செய்ய முயற்சித்தனர். லெனினின் அரசாங்கம் தொழிலாளர்- விவசாயிகளின் பிரதிநிதியல்ல என்றனர். அரசின் பிரதிநிதி பங்கேற்ற கூட்டத்தில் இப்படிப்பட்ட தீர்மானம் எழுந்தது. கலகம் என்பதை உணர்ந்த சோவியத் அரசாங்கம் அதை சமாளிப்பதற்கு தேவையான முழு அதிகாரத்தை டிராட்ஸ்கிக்கு வழங்கியது.
கச்சாப் பொருட்கள் தட்டுப்பாட்டால் சில ஆலைகள் மூடப்பட்டன. பஞ்சத்திற்கான நிவாரணங்களை செய்திட அமெரிக்கா முன்வந்தபோதும் அதை ஏற்கவேண்டாம் என்று முடிவெடுத்தனர். உலக நாடுகளுக்கு பொது வேண்டுகோள் மட்டுமே விடப்பட்டது. கிறிஸ்துவ தேவாலயங்கள் நிவாரணவேலைகளில் ஈடுபடலாம் என விதிகள் தளர்த்தப்பட்டன. ஆனால் மாக்சிம் கார்க்கி அமெரிக்கா, அய்ரோப்பாவின் நல்உள்ளங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அரசாங்க அலுவலர்களுக்கும் மக்களுக்குமான நெருக்கத்தை லெனின் வற்புறுத்தினார். மக்கள் அலுவலகங்களுக்கு வந்து குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள அனுமதிக்கவேண்டும் என்றார். பார்வையாளர் பதிவேடு வைக்கப்படவேண்டும் என்றார்.உடல்நிலை பாதிக்கப்பட்டதால் லெனின் மீண்டும் கோர்கி சென்று ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டார். மாலடோவிற்கு அவர் எழுதிய கடிதத்தில் கூட்டங்களில் பங்கேற்கமுடியாத நிலை தொடர்ந்து ஏற்பட்டுவிடுமோ என தன் அச்சத்தை வெளிப்படுத்தினார். 1922ல் நிர்வாக மெத்தனம் குறித்து தோழர்களை அவர் கடிந்து கொண்டார். நாம் கம்யூனிஸ்ட் ப்யூரோகிரட்ஸ் ஆகிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையை தந்தார். ஸ்டேட் பாங்க் பற்றி பூஜ்யம் என்கிற மதிப்பீட்டை தந்தார். அவர் 1922 கட்சி காங்கிரசில் poverty of not only materials but culture  என்பதற்கு அழுத்தம் கொடுத்து உரையாற்றினார். வெறும் உத்தரவு போட்டு அதை பிரச்சாரம் செய்த காலம் முடிவிற்கு வருகிறது. இனி நடைமுறைவேலையில் கூடுதல் கவனக்குவிப்பு என்றார். மென்ஷ்விக்குகள், சோசலிச புரட்சிகரவாதிகள் எனும் போர்வையில் எதிர்புரட்சியாளராக செயல்படுபவரை நாம் சுட்டு வீழ்த்தவேண்டும் என்றார்.
நமது சோசலிச சோதனையும் முதல் நீராவி இன்ஜின் சோதனை போன்றதே. குறைகளை சரி செய்து முன்னேறுவோம் என்பது அவர் அறிவுரையாக இருந்தது. நவீன கண்டுப்பிடிப்புகளில் மிக மேலான ஒன்றை நாம் உருவாக்கியுள்ளோம். பாட்டாளிகளின் அரசு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து செயல்படுவோம் என்றார் லெனின். ஏப்ரல் 3, 1922 அன்று காங்கிரசில் தோழர் ஸ்டாலின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஸ்டாலின், ட்ராட்ஸ்கி சமநிலையை சரி செய்திட மக்கள் கமிசாரின் துணை சேர்மனாக டிராட்ஸ்கியை நியமிக்கலாம் என்கிற லெனின் யோசனையை டிராட்ஸ்கி ஏற்கவில்லை.
லெனின் தலைவலியால் அவதிப்படுவதைக் கண்ட மருத்துவக்குழு அவரின் தோள்பட்டையில் பாய்ந்த குண்டை எடுத்துவிடலாம் என்கிற முடிவிற்கு வந்தனர். இதற்கான அறுவை சிகிட்சை ஏப்ரல் 23 1922ல் நடந்தது. ஆனால் சில நாட்களில் அவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. வலப்பக்கம் தாக்கப்பட்டிருந்தது. மூளைப்பாதிப்புக்கு அவர் உள்ளாகலாம் என டாக்டர்கள் அஞ்சினர். அவருக்கு  first stroke  ஏற்பட்டதையும் கண்டறிந்தனர். பக்கவாதமா உண்மையை சொல்லுங்கள் என லெனின் வினவினார். இனி என்னால் பயன் ஏதுமில்லையா என வருத்தமுற்றார். கட்டாய ஓய்வு மூலம் சரி செய்துவிடலாம் என் டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
4
லெனினை உறவுக்காரர்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.  பத்திரிகைகள் கூட படிப்பதற்கு தரக்கூடாது என்கிற அறிவுரை தரப்பட்டிருந்தது. ஸ்டாலின் பார்க்கவந்தார். எனக்கு நியூஸ்பேப்பர்கூட இவர்கள் தரமறுக்கிறார்கள் என அப்பாவியாக லெனின் கூறினார். அவருக்கு பேச்சு தெளிவாக வரவில்லை. அதற்கு பயிற்சி என முடிவெடுத்தனர். சற்று உடல்நலம் தேறியபின் முன்புபோல் மணிக்கணக்கில் அவர் வேலை செய்வதற்கு அனுமதி இல்லை என்றனர். உரையாற்றினால் 15 நிமிடம் மட்டுமே என  அறிவுறுத்தப்பட்டது. ஆனால் முதலில் 5 மணிநேரம் என உழைக்க ஆரம்பித்த லெனின் 10 மணிநேரம்வரை செயல்படலாகினார். 1922 அக்டோபரில் அவர் மாஸ்கோ திரும்பினார்.
லெனின் உடல்நிலை கருதி இரவு வெகுநேர கண்விழிப்பு கூட்டங்கள் இல்லை என முடிவானது. விரைவில் முடித்துக்கொள்ளத்துவங்கினர். அனைத்து ருஷ்ய மத்திய கமிட்டி கூட்டத்தில் அவர் அக்டோபர் 31ல் பங்கேற்றபோது நியுயார்க் டைம்ஸ் செய்தியாளர் உலகம் தங்களை சிறந்த மனிதராக கொண்டாடத்துவங்கிவிட்டது என்றார்.  I am not a great man  என அவரிடம் பணிவாக சொல்லி லெனின் நகர்ந்தார். 15 நிமிடங்கள் மட்டும் உரையாற்ற அனுமதிக்கப்பட்டார். ஆனால் அடுத்து நடந்த மூன்றாம் அகில கூட்டத்தில் பங்கேற்றபோது ஜெர்மன் மொழியில் அவர் ஒருமணிநேரம் உரையாற்ற தயங்கவில்லை. அவ்வுரையில்  Soviets had not come into power as result of overwhelming popular enthusiasm for Bolshevism, but came to power because the enemy lost its head  என்ற உணர்த்தலை அங்குள்ளவர்களுக்கு செய்தார். அவரின் இந்த வெளிப்படை பேச்சு அனுபவ வெளிப்பாடாக வந்தது. விவசாயிகள் பிரச்சனை, நிலம் கட்டுப்பாடு, அரசாங்க முதலாளித்துவம் பற்றி அவர் பேசினார். அந்நிய வர்த்தகத்தில் அரசு ஏகபோகம் என்பதில் புகாரின் கருத்துவேறுபட்டார். ஆனால் சோவியத் அரசு இயங்க அம்முறை அவசியம் என லெனின் சொல்லிவிட்டார்.
லெனின் தன் உடல்நிலை பலவீனப்பட்டுவருவதை உணர்ந்து தன் வேலைகள் சிலவற்றை ரைகாவ், காம்னேவ் போன்றவர்களிடம் ஒப்படைத்தார். 1922 நவம்பரில் அவர் எவ்வேலையிலும் ஈடுபடாமல் ஓய்வெடுக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டார்.  அவருக்கு டிசம்பர் 16 1922ல் மீண்டும்  second stroke  ஏற்பட்டது. மருத்துவர் அறிவுரை புறக்கணிக்கப்பட்டு அவர் வேலையில் ஈடுபடுவதால் பலவீனமடைகிறார் என்பதை டாகட்ர்கள் எடுத்துரைத்தனர். நான் எப்படி பயன்படாதவனாக இருந்துகொண்டிருப்பது என்பது லெனின் வாதமாக இருந்தது. டாக்டர்கள் முழுகண்காணிப்பில் கட்டாய ஓய்வு அவசியமாக்கப்பட்டது. 
லெனின் தனது உதவியாளர்களை அழைத்து சில முக்கிய வழிகாட்டல்களை, உத்தரவுகளை விடாமல் வழங்கத்துவங்கினார். அவர் ஒத்துழைக்காத நோயாளி என்பதாக பெயரெடுத்தார். தினம் இரண்டுமணிநேரமாவது படிப்பேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.. டிசம்பர் 23 அன்று திடிரென யோசித்துவிட்டு தனி செயலர் மரியா வோலோடிசேவாவை அழைத்தார். மத்திய கமிட்டி புனரமைப்பு என்பது குறித்து வழிகாட்டல்களை தந்தார். திட்டக்குழு பற்றியும் வழிகாட்டல் இருந்தது. சிறு மனமாச்சர்யங்களை பெரிதாக்கவேண்டாம் என உயர் கமிட்டி தோழர்களுக்கு அறிவுரை தந்தார். டாக்டர்கள் ஓய்வெடுக்க வற்புறுத்தியதால் மறுநாள் அழைத்து 10 நிமிடங்கள் டிக்டேட் செய்தார். ஸ்டாலின், டிராட்ஸ்கி ஆளுமைகள் குறித்த தனது பார்வையை அவர் தந்தார்.
Comrade Stalin, having become  General Secretary has concentrated immeasurable powers in his hands, I am not sure that he always knows how to use that powers with sufficient caution. On the other hand com Trotsky as was proved by his struggle against the CC in connection with the question people’s commissar of Railroads , is distinguished not only by his exceptional abilities- personally  to be sure he is perhaps the most able man in the present CC- but also by his self assurance and excessive enthusiasm for the purley administrative aspect of his work. These two qualities of the two eminent comrades of the CC lead to a spilit, if our party does not take steps to prevent it….  இருபெரும் ஆளுமைகளின் மத்தியில் நிலவும் வேறுபாடுகளை களையாவிட்டால் கட்சி உடையும் என்கிற எச்சரிக்கையை லெனின் தந்தார்.

பொலிட்ப்யூரோ கூட்டம் 1922 டிசம்பர் 24 அன்று கூடியது. டாக்டர்கள் மேற்பார்வையில் லெனின் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். அதில் ஏற்பட்ட அனுபவத்தில் டிசம்பர் 29 அன்று தனி செயலரை அழைத்து நமது கருவி பயனற்று போகிறது என்றார். மத்திய கமிட்டியில் நேரடி தொழிலாளர் பிரதிநிதிகள் 100 பேராவது இடம் பெறவேண்டும் என பேசினார்-  not mere armed Marxist intellectuals  என்றார். மீண்டும் டிசம்பர் 30 அன்று ஸ்டாலின் உட்பட மத்திய கமிட்டி உறுப்பினர்கள் பெயர் சொல்லி விமர்சித்தார். கலாச்சார கல்வித்துறையின் செயல்பாட்டில் அதிருப்தியை தெரிவித்தார். தனது நாட்குறிப்பிற்காக டிக்டேட் செய்தபோது  the entire people should go for the entire period of cultural development  என சொன்னார். 
1923 ஜனவரி 4 அன்று தனது மற்றொரு செயலர் லிட்யாவை அழைத்து  Stalin is too coarse, and this fault, though tolerable in dealing amongst us communists, becomes unbearable in a General secretary. Therefore I propose to the comrades to find someway of removing Stalin from his position and approving someone.. more tolerant, loyal, polite and consideration to his comrades, less capricious..  என குறிப்பை எழுத சொன்னார். இவ்விஷயத்தை சிறிய விஷயமாக மத்திய கமிட்டி உறுப்பினர்கள் கருதவேண்டாம். டிராட்ஸ்கி ஸ்டாலின் வேறுபாட்டால் கட்சி பிளவுறாமல் காக்கவேண்டும் என்றார்.
முன்னதாக 1922 டிசம்பரில்  கிருப்ஸ்காயாவிடம் ஸ்டாலின் தொலைபேசி உரையாடல் ஒன்றில் கடுமையாக பேசியிருந்தார். தேவையில்லாமல் அரசியல் தெரியாமல் லெனினிடம் சொல்வதை தவிர்க்கவேண்டும் என எச்சரித்திருந்தார். அவர் மிரட்டல் தொனியில் பேசியதில் வருத்தம் அடைந்த கிருப்ஸ்காயா காம்னேவிடம் ஸ்டாலின் உரையாடல் பற்றி தெரிவித்தார். ஸ்டாலினைவிட லெனின் மீதும் சோவியத் அரசியல் மீதும் தனக்குள்ள கரிசனம் குறைவானதல்ல என்றார் கிருப்ஸ்காயா. பின்னர் இவ்விஷயம் லெனினுக்கு தெரியவந்தது. கடும் கோபமடைந்த லெனின் ஸ்டாலின் உடனடியாக மன்னிப்பு கோரவேண்டும்- இல்லையேல் லெனினுடன் உறவுகளை துண்டித்துகொள்ளலாம் என தெரிவித்தார். 
ஸ்டாலின் தன்னை வலுப்படுத்திக்கொள்ள ஜினொவீவின் பெட்ரோகிராட் செல்வாக்கும், காம்னேவின் மாஸ்கோ செல்வாக்கும் அவசியம் எனக் கருதி மூவர் இணைந்து பணி செய்வது என்ற முடிவை ஏற்க செய்திருந்தார். ஜனவரி 25 1923ல் பிராவ்தாவில் லெனின் எழுதிய கட்சிகாங்கிரசிற்கு சில முன்மொழிவுகள் கட்டுரை வெளியானது ஸ்டாலின் பற்றி ஏதும் அவர் தெரிவிக்கவில்லை. அடுத்து  Better Fewer  but Better என்பதை எழுதினார். அரசாங்க இயந்திரம் முற்றிலுமாக சரி செய்யப்படவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். ஸ்டாலின் இக்கட்டுரையை அச்சிற்கு அனுப்பவேண்டாம் என தெரிவித்தார். அதைபோட்டு ஒருகாப்பியை மட்டும் அடித்து லெனினுக்கு அனுப்பிவிடலாம் என குபிஷேவ் எனும் தோழர் தெரிவித்தார். ஆனால் டிராட்ஸ்கி பிடிவாதத்தால் அவர்கள் வெளியிட நேர்ந்தது. மார்ச் 4 அன்று அக்கட்டுரை முதல் பக்கத்திலேயே வெளியானது.
ஜார்ஜியா விவகாரங்களை ஸ்டாலினிடம் விட்டுவிடாமல் ஜினோவீவ் எடுத்து பார்க்கட்டும் என்ற அறிவுரையை  லெனின் தந்தார். கிருப்ஸ்காயா விவகாரம், ஜார்ஜியா குறித்த லெனின் அறிவுரை படுத்தபடுக்கையாக இருந்த டிராட்ஸ்கிக்கு தொலைபேசிமூலம் தெரிவிக்கப்பட்டடது. ஸ்டாலினுக்கு லெனின் எச்சரித்து எழுதிய கடிதம் தனி செயலர் மூலம் ஸ்டாலினிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. மார்ச் 7, 8 நாட்களில் லெனின் உடல்நிலை குறித்து விசாரித்து செல்ல காம்னேவ் வந்து சென்றார். தான் ஸ்டாலின் மற்றும் Ordjonikidze, Dzerzhinsky  ஆகிய தோழர்கள் மீது கடும் வருத்ததில் இருப்பதாக தெரிவித்த கடித நகல் காம்னேவ், டிராட்ஸ்கிக்கு போடப்பட்டது.
கட்சிக்காங்கிரசில் லெனின் ஸ்டாலினை கடுமையாக தாக்குவார் என்கிற செய்தியை அவரது செயலர் லிட்யா பரப்பினார். டிராட்ஸ்கியை சந்தித்துவந்த லிட்யா அவர் தனியாக ஸ்டாலினுடன் மோத தயங்குகிறார் என்கிற செய்தியை லெனினிடம் தெரிவித்தார். ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மன்னிப்பு கடிதம் அனுப்பிவிடத்தயார் என்கிற முடிவிற்கு ஸ்டாலின் வருகிறார்.
லெனினுக்கு 1923 மார்ச் 9 அன்று மூன்றாவது Stroke  ஏற்பட்டது. பக்கவாத தாக்குதல் இடது பக்கமும் ஏற்பட்டது. மருத்துவர்கள் போராடி ஜூலையில்  மெதுவாக நடக்கக்கூடிய அளவிற்கு அவரை குணப்படுத்தினர். இடப்பக்கம் செயல்பாட்டிற்கு வந்தது. கிருப்ஸ்காயா அவருக்கு பேச்சுபயிற்சி கொடுத்துவந்தார். கம்பு ஊன்றி வலக்காலை சற்று இழுத்து நடக்குமளவு அவர் குணமடைந்தார். யார் வருகிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மெதுவாக அவரால் புரிந்து கொள்ளமுடிந்தது. மிகவும் மென்மையான பெரிதும் ஒத்துழைக்கும் நோயாளியாக தற்போது லெனின் இருக்கிறார் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதிகாரபூர்வ மருத்துவ அறிக்கையை மாலடோவ் வெளியிட்டு அவர் குணமடைந்ததை தெரிவித்தார்.
லெனின் பேசுவதற்காக கடுமையாக தன்னை வருத்திக்கொண்டதாக அறியமுடிகிறது. கிருப்ஸ்காயவை விட்டு படிக்க சொல்லி கேட்டுவந்தார் லெனின். மாக்சிம் கார்க்கியின் சுயசரிதையை அவர் படிக்க கேட்டார்.  லெனினை சந்திக்க வந்த தொழிலாளர் குழுவினருக்கு அனுமதி தரசொன்னார், அவர்கள் லெனின் கையை தொட்டு முத்தமிட்டனர். சிலர் கண்களில் ஒற்றிக்கொண்டனர். ஜனவரி 1924ல் கோர்க்கி கிராம குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மரம் வளர்த்து கொண்டாட்டங்களை செய்தார் கிருப்ஸ்காயா. அங்கு வாழ்ந்த விவசாயிகளும் குழந்தைகளும் பங்கேற்றனர். சில குழந்தைகள் லெனின் அருகில் போய் அமர்ந்து வாஞ்சையுடன் அவரை பார்த்தன. ஜீனோவீவ், காம்னேவ், புகாரின் வந்து பார்த்தபோது அவர்கள் கைகளை குலுக்கி வந்தனம் செய்தார் லெனின். ஏதும் அவரால் பேச இயலவில்லை. கிருப்ஸ்காயாவுடன் அளவளாவி விட்டு தோழர்கள் சென்றனர்.

ஜனவரி 1924ல் சோகம் நிறைந்த தனிமையில் வாழும் மனிதனின் இருட்கதையாக கருதப்பட்ட ஜாக்லண்டன் எழுதிய  Love of Life யை அவர் படிக்க சொல்லி கேட்டார். அவனின் விடாமுயற்சி என்கிற செய்தி அதில் இல்லாமல் இல்லை. கட்சி காங்கிரஸ் கூட்டம் ஜனவரியில் நடந்தபோது அக்கூட்டம் லெனின், டிராட்ஸ்கி பங்கேற்பில்லாமல் நடந்தது. ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் நிலைமைகளை கொணர்ந்தார். டிராட்ஸ்கியின் தவறுகளை விமர்சித்து பேசினார். ரடேக் போன்றவர்கள் பேசியதை பொருட்படுத்தவேண்டாம் என்றார். ஆனால் லெனின் குறித்து உயர்வாக பேசினார். பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் லெனின் போன்ற ஒருவர் தோன்றமுடியும் என்றார். ஜனவரி மூன்றாம் வாரத்தில் ஸ்டாலின் தலைமை என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றானது.
5
ஜனவரி 21,1924 அன்று லெனின் உடல்நிலை மோசமானது. அன்று காலை வைக்கப்பட்ட தேநீரைக் கூட அவர் எடுத்துக்கொள்ளவில்லை. மதிய உணவு மிகக்குறைவாக எடுத்துக்கொண்டார். மாலை 6 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் முயற்சி பலனளிக்கவில்லை. மாலை 6.50க்கு அவர் மறைந்தார். ருஷ்யா மரபின்படி நீண்ட மேஜையின் மீது அவரது உடல் வைக்கப்பட்டது. செய்தி அறிந்த பலர் கூடினர். மாஸ்கோவிலிருந்து ஜீனோவீவ், ஸ்டாலின், காம்னேவ், புகாரின் உள்ளிட்ட மத்திய கமிட்டி உறுப்பினர்கள் கோர்க்கி விரைந்தனர்.
ஜனவரி 22 காலை 11 மணி அளவில் உடல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 12 மருத்துவர்கள் சோதனை முடித்து கூட்டறிக்கை வெளியிட்டனர்.  Autopsy செய்திட  கால தாமதம் ஏன் என்கிற விமர்சனங்கள் மெல்லிய குரலில் எழாமல் இல்லை. கிரெம்ளின் ஒப்புதல் பெற்றவுடன் தாங்கள் பணியில் தாமதம் ஏதுமில்லாமல் ஈடுபட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டிராட்ஸ்கிக்கு லெனின் மறைவு தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. அவர் செய்தி அறிந்து கிளம்பும்போது அவசரமான அறிக்கை ஒன்றை இரங்கல் செய்தியாக தந்தார்.
அன்று கடுங்குளிர் நிலவியது. மைனஸ் 20 டிகிரி. ஏராள மக்கள் குளிரை பொருட்படுத்தாமல் வந்து அவதிக்கு உள்ளாகினர். மாயாகொவ்ஸ்கி  we are burying the most earthy of all the men who ever walked the earth…This man is more human than any of us  என்கிற கவிதாஞ்சலி தந்தார். சோவியத்துக்களின் காங்கிரஸ் ஜனவரி 26 1924ல் கூடி அஞ்சலி செய்தது. கிருப்ஸ்காயா, ஸ்டாலின், ஜினோவீவ்,காலினின் பூத்தூவினர். கிருப்ஸ்காயா தனது உரையில் ’’லெனின் இதயம் தொழிலாளர்களுக்காகவே வாழ்ந்தது. புத்தகங்கள் படித்தல் மூலம் அவர் மார்க்சிடம் செல்லவில்லை. எதிர்ப்படும் மக்கள் பிரச்சனைகளின் தீர்விற்காக அவர் மார்க்சிடம் சென்றார். விடையும் கொணர்ந்தார். அவர் தொழிலாளர்களிடம் மார்க்சியத்தை கொண்டுசென்றபோது கர்வம் நிறைந்த பேராசிரியரைப்போல நடந்துகொள்ளவில்லை. தோழனாக நெருங்கினார். கற்றுக்கொடுக்க மட்டும் என அவர் தன்னை நினைத்துக்கொள்ளவில்லை. காதுகளை அகலத்திறந்து கேட்கும் பயிற்சி கொண்டிருந்தார். ஆலையைப்பற்றி மட்டுமில்லாமல் அவர்கள் கிராம வாழ்நிலையையும் அவர் கேட்டறிந்தார். லெனின் அவர்களை உணர்ந்தார். வெற்றி பெறமுடிந்தது  என்கிற ஆழமான பதிவை செய்தார்.
லெனினிடமிருந்து நாம் கற்றுக்கொண்டுள்ளோம். பணிகளை தொடர்வோம் என ஸ்டாலின் உரை அமைந்தது. பெட்ரோகிராட் இனி லெனின்கிராட் என பெயர்பெறும் என அறிவித்தனர். அவரது உடல் பதப்படுத்தப்பட்டு மக்கள் பார்வைக்கு நிரந்தரமாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்கிற முடிவையும் எடுத்தனர். கிருப்ஸ்காயா இதில் ஏற்பில்லை என்றார். லெனின் தன்னை கடவுளாக்க விரும்பியதில்லை என்றார்.
நினைவு மண்டபங்கள் வேண்டாம். வெளிப்பகட்டு மரியாதைகள் பயனற்றவை. அவர் பெயரை ஊர்கள் இடங்களுக்கு சூட்டாதீர். அவர் பெயரால் கொண்டாட்டங்களை ஆடம்பரமாக நடத்தாதீர். லெனின் தன் வாழ்நாள் முழுதும் இது போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை . பதிலாக முதியோர் இல்லங்களை துவங்கி பராமரிப்பீர். குழந்தை காப்பகங்கள், பள்ளிகள், நூலகங்கள் துவங்கி பராமரிப்பீர். அநாதை குழந்தைகளை கைவிடாதீர். மருத்துவமனைகள் அவசியம் என்கிற வேண்டுகோளை கிருப்ஸ்காயா பிராவ்தாவில் விடுத்தார். 
ஜனவரி 27 அன்று தொழிலாளர் கூடத்திலிருந்து அவரது உடலை ஜீனோவீவ், ஸ்டாலின் மற்றவர்கள் செஞ்சதுக்கம் சுமந்து சென்றனர். மாலை 4 மணிக்கு மூன்று நிமிடம் நாட்டின் அனைத்துவேலைகளும் நிறுத்தப்பட்டு அஞ்சலி செய்யப்பட்டது. டாக்டர்கள் செய்த எம்பால்மிங் ஆயிரம் வருடங்கள் நிலைக்கும் என பலரும் பேசினர். அவரது மூளை தனியே எடுக்கப்பட்டு Soviet Brain instituteல் வைத்ததாக ராபர்ட் பைன் குறிப்பிடுகிறார். 1926ல் மீண்டும்  Embalming Process  நடந்ததாக அறிகிறோம். இரண்டாம் உலகப்போர் நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் உடல் அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் பதட்டங்கள் தணிந்தபின் மீண்டும் செஞ்சதுக்கம் கொணரப்பட்டதாகவும் அறியமுடிகிறது.
லெனினின் பயன்படுத்திவந்த பொருட்களை நினைவில்கொள்ளும் வகையில் மியூசியம் ஒன்று உருவாக்கப்பட்டது.
Lenin imagined himself the servant of an infallible doctrine which he alone could interpret; and so could afford to be always modest and yet alwys right  என்கிற மதிப்பீட்டை ஜான் பிளமெனடாஸ் தருகிறார். போல்ஷ்விக்குகள் வருவதற்கு முன்பாகவே சோவியத்துகள் உருப்பெற்று வலுப்பெறத்துவங்கின. Having made themselves as rulers of Russia, they had perforce rule, as soon as their power was challenged, they defended it as best they could  என ஜான் போன்றவர்கள் குறிப்பிடுகின்றனர்.
லெனின் பதவிக்கு வந்த இரண்டாண்டு கழிந்தபின்னரும் அவரைப்பற்றிய பல்வேறு கட்டுக்கதைகளை மேற்கு பத்திரிகை உலகம் பரப்பியதை ரைம்ஸ் வில்லியம்ஸ் சொல்கிறார். அமெரிக்க சோசலிஸ்ட்டான ரைம்ஸ் லெனின் தங்கியிருந்த நேஷனல் ஹோட்டலில் இருந்து லெனினுடன் உரையாடியவர். ஜார் ராணுவத்தின் 15 லட்சம் வீரர்களை முழுமையாக அவர் விஷமிட்டு கொன்றார் என்ற கதை பரப்பப்பட்டது இருபதுமுறையாவது லெனின் சுடப்பட்டார் என்கிற செய்தியை பரப்பினர். கட்சித்தலைமையே அவரை விலங்கிட்டு அடைத்துவைத்துள்ளது என்கிற செய்தியும் வெளியிடப்பட்டது. தினம் அவருக்கு பழங்களுக்காக 2000 ரூபிள் செலவு செய்யப்படுவதாக செய்தியை உலாவவிட்டனர்.. பிரிமியர் லெனின் என சொல்லாமல் கொடுங்கோலன் லெனின் என உள்நாட்டில் பேசியவர் உளர். சோசலிஸ்ட் வலதுசாரிகள் ஜார் நிக்கோலஸ் போய் புதிய ஜாராக நிக்கோலய் லெனின் என கேலி பேசினர்.
 ஒருமுறை லெனினை பார்க்கவந்த பாக்டரி தொழிலாளர்கள் எங்கள் ஆலையை தேசியமயமாக்க உத்தரவு தாருங்கள் என்றனர். லெனின் உடனே செய்துவிடலாம் என சொல்லி சில கேள்விகளை முன்வைத்தார். அங்கு வரவு செலவு என்ன- கணக்குகளை யார் பார்த்துள்ளீர்கள்- பாக்டரிக்கு வேண்டிய கச்சா பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என தெரியுமா? சரி உங்கள் பொருட்கள் எங்கே விற்பனைக்கு அனுப்பபடுகிறது என கேட்டார். அவர்கள் தெரியவில்லை என்றனர். பாக்டரி சென்று சில முக்கிய அம்சங்களை கற்று ஏற்று நடத்த தயார்நிலையில் வந்து சொல்லுங்கள் செய்துவிடலாம் என்றார் என்கிற பதிவை ரைம்ஸ் வில்லியம்ஸ் தருகிறார்.
 நூற்றுக்கணக்கான கடிதங்களுக்கு அவரே கைப்பட பதில் எழுதுவார், 18 மணிநேரம் கூட அவர் உழைக்க அஞ்சவில்லை. கிருப்ஸ்காயா தேநீர் குடித்துவிட்டு செயலாற்றுங்கள் என்பார். என் ரேஷன் முடிந்துவிட்டதா என லெனின் கேட்கும் பழக்கம் வைத்திருந்தார். நமது வீரர்கள் இரும்பு கட்டிலில்தானே உறங்குகிறார்கள்- நமக்கும் அது போதும் என அவர்கள் உறங்கினர். நாட்டில் அதிக பட்ச சம்பளம் மாதம் 600 ரூபிளை தாண்டக்கூடாது என சோவியத் சர்க்காரில் முடிவெடுத்தனர். பிரிமியர் லெனினுக்கு 200 டாலருக்கு குறைவான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. சோவியத் பொருளாதாரத்தை வலுப்படுத்த டெக்னிகல் நிபுணத்துவம் அமெரிக்கா இங்கிலாந்திலிருந்து தேவை என்பதை லெனின் ஏற்றார். The reports from the Great Moscow Economic Council in June 1919 show Lenin with Chicherin battling for the plociy of economic alliance with America.. என ரைம்ஸ் சொல்கிறார்.
 அமெரிக்க ரெட் கிராஸ் சொசைட்டியின் ரேமண்ட் ராபின்ஸ்  ஜெர்மனியுடன் அமைதி உடன்பாட்டை லெனின் எவ்வாறு மற்றவர்க்கு விளக்கினார் என்பதை பதிவு செய்துள்ளார். ஆமாம் வெட்கம்கெட்ட முறையில் அமைதி உடன்பாடு. நான் சரண்டர் ஆனதாக கருதுகிறீர்கள். ஜாரின் ராணுவம் போரிடமுடியாமல் களைத்துப்போனது. நீங்கள் புரட்சிக்காக போராடியவர்கள். இப்பொழுதே நீங்கள் போர்முனைக்கு செல்லலாம். அங்கு உயிரை மாய்த்துக்கொள்ளலாம். புரட்சியின் லட்சியங்களை அமுல்படுத்த நீங்கள் தேவை. என் புரட்சிகர சகோதரர்கள் இப்படி யுத்தத்தில் மடிவதை என்னால் ஏற்கமுடியாது. போவதாக இருந்தால் சொல்லுங்கள். நான் பதவி விலகிவிடுகிறேன். ஜெர்மன் எதிர்த்து போராட நீங்கள் செல்லுங்கள் என்றவுடன் ’தோழர் லெனின் என்கிற முழக்கம் எழுந்ததாக அவரின் பதிவு செல்கிறது.
மாஸ்கோவில் தொழில் நடத்திய அமெரிக்கன் ஒருமுறை ராபின்ஸ் இடம் வந்து தன் கஷ்டத்தை வெளிப்படுத்தினார். ஏன் வேலை நடக்கவில்லையா என கேட்க , இல்லை அவர்கள் ஜார் காலத்தை விட 20 சதம் கூடுதலாக உற்பத்தி செய்கிறார்கள்.. ஆனால் தொழிலாளர் கட்டுப்பாட்டில் எல்லாம் என சொல்லி நிர்வாகமுறையை எடுத்துக்கொள்கிறார்கள். பிரச்சனை லெனினிடம் ராபின்ஸ் மூலம் சென்றது.  Workers control of office in the American Firm  இனி இருக்காது என்கிற உத்தரவை தந்துவிடுவதாக லெனின் அவர்களிடம் தெரிவித்தார். நியுயார்க்டம்ஸ் செப்டம்பர் 2 1918ல் எழுதியது. உலகபோர் அறிமுகப்படுத்திய முக்கிய மனிதர்களில் லெனினும் ஒருவர். அதற்கு  முன்பு அவரை யாரும் அறியோம். அவர் ஜெர்மனியின் கைக்கூலி என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை.
லெனின் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் செல்வாக்கு மிக்க தலைவராக போராடுபவர்களின் ஆதர்சன நாயகனாக ஏற்கப்பட்டார். மார்க்சிசம்- லெனினிசம் என்கிற அளவிற்கு மார்க்சியம் பின்னொட்டு கண்டது. சோவியத் வீழ்ச்சிக்கு பின்னர் சோவியத் மாடெல் தோற்றுள்ளதே தவிர சோசலிசம் தோற்கவில்லை- மார்க்சியம் வெல்லும் என்கிற நம்பிக்கையுடன் மார்க்சிய இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. தற்போது லெனினிசம் என்பதை நீக்கிக்கொண்டாலும் லெனின் குறித்த பெருமிதங்கள் அவரின் முக்கிய ஆக்கங்கள் பற்றிய விவாதங்கள் தொடரவே செய்கின்றன.

1. The Govt of Soviet Samurel Harper
2. German Communism and Russian Communism- John Plamenataz
3. Lenin The Man and His work- Albert Rhys Williams
4. The Life and Death of Lenin  Robert Payne

5. . In the Shadow of Russia     H G Wells
 


Comments

  1. Very good collection. But I doubt whether CPI and CPM will accept this as correct.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு