https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, December 26, 2020

Formation of CPI in 1925

 



Thus Spoke the Documents

                                          Formation of CPI in 1925

Documents of the History of CPI vol 2 1923-1925 edited by Com G Adhikari   pph 1974

pages 591 592 :

The First Indian communist Conference ( dec 26-28, 1925 Kanpur) was convened by Satyabhakta, a member of national revolutionary (terrorist) group in UP. He invited all the communist groups then functioning in India.

The conference became the instrument of bringing together all the genuine communist groups in the country, thus creating the first central committee of the CPI and framing its first constitution.

Pages  606-609 : As per S V Ghate reports

Satyabhakta objected to the name of CPI. The resoultions committee consisted of Satyabhakta, Joglekar, Bagerhatta, S Hassan, Ghate and Krishnaswamy of madras. As president M Singaravelu  chettiar, two joint secretaries Bagehatta and myself( Ghate) and an executive committee were elected. Muzaffar Ahmad was in the EC. Within 4 days satyabhkta announced formation of National communist party and left. When he was approached to handover the minutes and documents of the conference, he refused to pass them on since he had established his own party

It is significant to note that Muzaffar Ahmad recognised the significance of the first Communist conference in Kanpur in his articles of 1958 and 1963. Muzafar also reporting that Satyabhakta left the place with his papers and files. But after the split in his Myself and the CPI he wrote about that conference an entirely childish affair- he was for that Tashkent date.

The central secretariat met on 19th Aug 1959 having Ajoy Ghosh, BTR, P C joshi, Basapunnaiah, Z A Ahmad, dange, A k Gopalan took unanimous decision about foundation date as 1925. On Aug 20 1959 the same was communicated to Indonesian Communist party and the letter was signed by Com B T Ranadive

" It was in dec 1925 that a meeting of representatives of the various groups of communists in the country held at Kanpur that the CPI was formed"

Page 629 :

True, the Kanpur Communist conference of 1925 did not have the features of a proper foundation congress of a communist party. But the creation of an all India nucleus of a central leadership at the conference and its continuity and the role thro succedding years in building the mass base for the CPI make the conference a turning point in the life of the party.

                                II

CPM Document : Documents of the Communist Movement In India  vol 1 1917-1928   NBA Calcutta  CPM publication

 

page 320 :  From the memoirs of com Muzafar Ahmad :

I received a letter from satyabhakta asking me to attend without fail a communist conference being held in Kanpur. He also sent  Rs 30 by money order.

Those whom I met in Kanpur were Shamsuddin Hassan of Lahore, S V Ghate, K N Joglekar and R S Nimbhkar of bombay, Janakiprasad Bagerhatta of Bikaner, Ayodhyaprasad of Jhansi and C Krishnaswami Ayengar of Madras. Ayodhyaprasad of Jhansi told me that Krishnaswami was the nephew of rajagopalachari, which was afterwards confirmed by Krishnaswami himself. Besides meeting Hasrat Mohani and singaravelu Chettiar, I met Arjunlal sethi and Kumarananda. I met another person old man radhamohan Gokulji..

I did not know any of them personally..It was Ghate whom I saw labour very hard, he did typing and other jobs. Joglekar and Nimbkar were members of AI Congress committee- janaki prasad also.

 

 

 

pages 321- 322 :

Satyabhakata wrote letters to Saklatvala, inviting him to be president of the Kanpur conference. Saklatvala, it is surprising, agreed...the news was circulated all over India. But Communist party Great Britain asked him not to be president of a conference of A CP of obscure origin. this proved to be a blessing; for it was singaravelu Chettiar who was then chosen as President, in respect of views, he was  a safe person for satyabhakta.

 The Conference was entirely a childish affair. All sorts of people- one could hardly follow who they were.. On Dec 26, 1925, when the conference was  in session, satyabhkta could not be traced anywhere. The man who was translating Singaravelu's speech was making repeated mistakes. Jalib, editor of Urudu daily hUMDUM got UP and translated

The Kanpur conference was held on a plot of land belonging to peasants on the other side of the road outside the Congress Nagar. Saklatvala sent a message but M N Roy not sent but wrote a letter to Ghate and Janakiprasad criticising the business.

                                     III

From Govt Document : Confidential     India and Communism

Compiled in the IB Home Dept GOI 1933- Reprinted 1935

Page 110-111

In July 1924 the Communist international decided to adopt Roy's suggestion that a new Indian communist Party should be formed as a branch of the CI. Three months later, a correspondent to a Calcutta newspaper announced that " In cawnpore Bolshevik Conspiracy case it has  been settled that to have faith in communism in itself is no offence. Thus the fear of the law against Communism has been removed", while another newspaper announced the open formation of an Indian Communist Party with branches at Madras, Bombay and Cawnpore, and added that an AI Communist conference will be held in three months time". This first conference of its kind was duly held in the last week of Dec 1925.

                               IV

Communism In India   by Gene Overstreet and   Marshall Windmiller

The perennial Press 1960

page 77

It was probably Muzaffar Ahmad who informed Roy of satyabhakta's plan to hold a communist conference in Cawnpore in dec 1925, concurrently with the annual session of the Indian national congress. In October Masses of India carried a despatch " It is premature to say what shape this Communist Party will ultimately assume and how far it is going to be communist in its program and actions"

When the conference convened on Dec 26 1925, S A dange and Shaukat Usmani were in jail. Muzaffar ahmad was released.

Page 78

The conference suffered an initial setback when the Congress ( INC)  refused permission to hold the meeting in the Pandal setup for the session of Congress. another location was found..

In their speeches both Mohani and Singaravelu made a particular point of emphasising that the party was not connected with the communist International CI. Our organisation is purely Indian said Mohani.

 Singarvelu was more specific: Indian communism  is not Bolshevism, for Bolshevism is a form of Communism which Russians have adopted in their country..

page 79

The party's executive committee met on dec 28 1925. Bergharhotta and Ghate were elected general secretaries and Ahmed and Iyenkar were appointed secretaries for their areas.

Roy had attacked Bhakta bitterly in Masses of India  and criticised the speeches of Mohani and singaravelu labeling them Childish.


Wednesday, December 23, 2020

National Farmers commission M S Swaminathan committee Report

 

National Farmers commission   M S Swaminathan committee Report

Serving Farmers and Saving Farming



First Report :   Wake Up call  245 pages  Dec 2004 

Second Report:     From Crisis to confidence 523 pages

In this second report we found paras regarding Agri marketing systems from the pages 396 to 445. Strengths and weakness of regulated market system were discussed in these pages.

Third report: Year of Agri Renewal    311 pages

In this report Research- Tech mission were discussed besides having one chapter about Indian Single Market  . This chapter was found  in pages 128-171 discussing liberalisation. Dr Manmohan singh as PM and Economist favoured  a common single market for agri products. His vision was to enable direct marketing between farmers and NGOs, Cooperatives and Private companies. ( page 129) ( PM speech at Agri summit 2005)

Fourth Report: Jai Kisan National Draft Policy 443 pages

The draft is to end the era of Farmers' suicide. In this report from pages 405 to 412  APMC act, Essential commodities act, Contract Farming act were discussed.

Regarding MSP we found this para :

 Many farmers are not satisfied with the level of Minimum Support Prices and believe that these have not kept pace with the increase in prices of inputs and the prices of other products. The Minimum Support Price [MSP] needs protection across different regions of the country.

In absence of procurement operations all over the country, the benefits of MSP are mainly limited to Punjab, Haryana, U.P. and to some extent A.P.

The prices of crops covered under the MSP remain below the MSP level in many parts of the country particularly after the harvest. Further, the prices of sensitive commodities [not covered by MSP] have to be watched particularly during glut period for quick intervention under an effective Market Intervention Scheme. (page 409 )

 

Fifth Report Vol 1: Towards Faster and More inclusive growth of Farmer's welfare  286 pages

In this report Shaping The Economic destiny of farmers were discussed from pages 229 to 264

We can see this finding :

The average monthly income per farmer household is Rs.2115 and does not cover the average per capita monthly consumption expenditure of Rs. 2770. Only households with landholding of 4 ha and above have a surplus of income over expenditure. (Page 230)

Another intersting para in this 5th report is linking 6th CPC to take into consideration of  farmers income. The relevant para  is

“The other urgent task is to sensitise the policy maker on the ground realities of farm economics. We suggest that the Sixth Pay Commission may be requested to familiarize itself with the “net take home income” of farm men and women who constitute the genuine majority of our population. A comparative study of the positions of the salaried class and of the self-employed farmers working in sun and rain to feed the small elite salaried class, is in the broader interest of the Nation, particularly in the context of a commitment to inclusive growth. Understanding the economics of farming will help the Sixth Pay Commission to appreciate the social context in which the salaries and privileges of a small section of the population need to be fixed. ( page 240)

Regarding MSP:

MSP should be regarded as the bottom line for procurement both by Government and private traders. Purchase by Government should be MSP plus cost escalation since the announcement of MSP. This will be reflected in the prevailing market price. Government should procure the staple grains needed for PDS at the same price private traders are willing to pay to farmers. Thus the procurement price will be higher than the MSP and will reflect market conditions. The aim of Government purchase is to feed the PDS, while the goal of the private trade will obviously be for making a large profit when the prices go up a few months after harvest. Thus, Government purchases foodgrains for public good, while private traders purchase for commercial profit. By purchasing at prevailing market rate, Government ensures that both farm families and urban consumers get a fair deal. At the same time, opportunities for the private trade to buy and store large quantities of staple grains and sell them when the prices go up substantially can be curtailed. (Page 245)

 

The Minimum Support Price (MSP) should be atleast 50% more than the weighted average cost of production. The “net take home income” of farmers should be comparable to those of civil servants  ( page 246)

In today's farmers struggle the above recommendation finds its prime placing.  political parties and Kisan Organizations’ are fighting and standing for this recommendations.

Fifth and Final report Vol 2  190 pages  oct 4 2006

 Inclusive growth

In this report details of State level consultations were given

Punjab Consultation with the State Govt and  farmers oraganisations was held on 24th Aug 2006. The Broad opinion arrived during the consultation were  listed below.

Contract Farming not successful

Central subsidy to be enhanced

Industries should be set up near villages with 20 years tax holiday and 90 % local employment

Medi claim policy with 75 % subsidy to all farmers

Quality Electricity Supply

Gujarat type Cooperatives

AI award for Farmers

Punjab farmers should be invited for Pre Budget meeting with FM

Spurious Bt Cotton should be checked

Labour saving farm equipment as labour scarcity

All interest dues should be waived

Kisan credit card

MSP should be linked to wholesale price index. Procurement should be at market price higher than MSP and should be effected in Time.

Pay commission should decide and suggest the minimum pay for the farmers also

Farmer of Punjab could not transport surplus wheat outside due to stringent provisions in 9th Schedule of Essential Commodities Act. It had acted to the detriment of interest of the farmers in the past.

In contract farming detailed guidelines should be specified to protect interest of farmers. ( pages from 133- 142 )

 

விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் திரு எம் எஸ் சாமிநாதன் கமிட்டி அறிக்கை 6 பாகங்களாக ஏறத்தாழ 2000 பக்கங்கள் கொண்டதாக இருக்கிறது. அறிக்கை 2004-2006 காலங்களில் வெளிவந்து 2006 அக்டோபரில் இறுதியானது. இது குறித்து தொடர்ந்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் பெரும் போராட்டத்திலும் இவ்வறிக்கையின் தாக்கம் நிரம்பவே இருப்பதைக் காணமுடிகிறது.

இந்த 2000 பக்கங்கள் நிறைந்த அறிக்கை தமிழில் கிடைக்கிறதா- இருந்தால் அறிந்துகொள்ள விழைகிறேன்.

தமிழில் இல்லையெனில் பெரும் அரசியல் அமைப்புகளாக இருக்கும் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மதிமுக, நம் தமிழர், மய்யம், இடதுசாரிகள், வாழ்வுரிமை கட்சிகள்- மற்றும் வர்க்க அமைப்புகள், ஆர்வம் உள்ள தனிநபர்கள்  ஆளுக்கு கொஞ்ச பக்கங்கள் பொறுப்பெடுத்துக்கொண்டு 2000 பக்கங்களையும் இணையவெளியிலாவது கிடைக்க செய்யலாம். தேவைக்கேற்ப பிரிண்ட் போட்டுக்கொடுக்கலாம்.

தொடர்புடையவர்கள் தமிழில் படிக்கும்போது மேலும் புரிதல் கூடுதலாக வாய்ப்பு கிடைக்கும் எனபதே உளக்கிடக்கை.



22-12-2020

 

 

 

 

 

Thursday, December 10, 2020

மின்புத்தக ஆர்வலர்களுக்கு என் நன்றி

                                         மின்புத்தக ஆர்வலர்களுக்கு என் நன்றி

                                        25000  பதிவிறக்கங்களைத் தாண்டி.....

                                        freetamilebooks குழாமிற்கு எனது வணக்கம்

ஆதரித்து உற்சாகப்படுத்திய தோழமை நெஞ்சங்களுக்கும் புத்தக மதிப்பீடுகளை செய்திட்ட பெருந்தகைகளுக்கும் குறிப்பாக தோழர்கள் பாவண்ணன், பேரா சித்ரா, கவிஞர் யுகபாரதி,தோழர் கோபால், தோழர் ரகுபதி, தோழர் பால்சாமி, தோழர் ரவி, தோழர் செம்மல், காந்தி நிலைய தோழர் சரவணன்,தோழர் பாஸ்கர், ராமதுரை  ஆகியோருக்கும் நன்றி. பிரிண்ட் புத்தகங்களாக தங்கள் சொந்த செலவில் வாங்கி தங்கள் நண்பர்களுக்கு தந்த தோழர் எஸ் எஸ் ஜி, தோழர் ரகுபதி, தோழர் கவிஞர் யுகபாரதி  ஆகியவர்களுக்கு என் அன்பு.

முகநூலில் தங்களது மேலான தோழமை பார்வைகளைத்தரும்  நண்பர்களுக்கும் அவர்கள் காட்டும் அன்பிற்கும் நன்றி. freetamilebooks குழாமில் இளம் நண்பர்கள் லெனின்குரு, சீனிவாசன், ராஜேஸ்வரி, ஐஸ்வர்யாலெனின் போன்றவர்களின் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி. போற்றுதலுக்குரிய அவர்கள் பணி சிறக்கட்டும்.









 புத்தகங்களை கீழ்காணும் இணைப்பில் தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.
https://freetamilebooks.com/ebooks/gandhiyai_kandunarthal/

https://freetamilebooks.com/ebooks/hegal-and-more/

https://freetamilebooks.com/ebooks/the_legacy_of_nehru/

https://freetamilebooks.com/ebooks/ambedkar_and_commmunism/

https://freetamilebooks.com/ebooks/periyar_communism/


https://freetamilebooks.com/ebooks/naveena_sindhanaiyin_indhia_panmugangal/


https://freetamilebooks.com/ebooks/gita_multiple_echoes/

https://freetamilebooks.com/ebooks/poraligalin-sinthanigal/

https://freetamilebooks.com/ebooks/politics_of_maxim_gorky/

Sunday, December 6, 2020

அம்பேத்கரும் கம்யூனிசமும் மின் புத்தகம்

 

அம்பேத்கரும் கம்யூனிசமும்    மின் புத்தகம்

தரவிறக்கம் பெற விழைவோர் கீழ்கண்ட இணைப்பை சொடுக்கவும்.

https://freetamilebooks.com/ebooks/ambedkar_and_commmunism/


முன்னீடு

அம்பேத்கரும் கம்யூனிசமும் என்கிற இந்த சிறிய வெளியீடு அம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றிற்காக எழுதிபார்க்கப்பட்ட பகுதிகளில் ஒன்று. அம்பேத்கர் இயக்கங்களுக்கும் மார்க்சிய இயக்கங்களுக்கும் கருத்து நிலைகளில் வேறுபாடுகள் அவ்வப்போது இருந்தாலும் சமூக மாற்றம் என்பதற்கான பல புள்ளிகளில் அவை சந்தித்து கரம்கோர்க்கவேண்டிய அவசியத்தில் இருக்கின்றன. உலக தொழிலாளிவர்க்க விடுதலையின் பெரும் ஆளுமையான மார்க்சை அந்த அந்தப்பகுதியில் அவர் சொன்ன சில முழக்கங்களை முன்வைத்து எடுத்துச் செல்வதா - இல்லையாயின் குறிப்பிட்ட சமூகத்தின் உச்சபிரச்னைகளை  முரண்பாடுகளை புரிந்து அவரை உள்வாங்கிக்கொள்வதா என்பது எல்லா நாடுகளின் விவாதப் பொருளாகவே இருக்கிறது. இதை மண்ணிற்கேற்ற மார்க்சிசம் எனவும் சுருக்கி புரியும் போக்கும்  இருக்கிறது.

குறிப்பிட்ட நாட்டின் பெரும் ஆளுமைகளாக உரு எடுப்பவர்கள் தங்கள் மக்களின் விடுதலைக்காக சொந்த நாட்டு அனுபவத்துடன் மார்க்சியத்தையும் எதிர்கொண்டு தங்கள் எதிர்வினைகளை தந்துள்ளனர். இவ்வரிசையில் இந்தியாவில் மார்க்சியத்தை எதிர்கொண்டவர்கள் எனும் ஆளுமைகளாக மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், இந்திய சோசலிஸ்ட்களான ஜேபி, லோகியா, ஆச்சார்யா நரேந்திரதேவ் ஆகியோர் முன்வரிசையில் வருகின்றனர். தமிழகத்தில் தந்தை பெரியார் வருகிறார். இவர்கள் மார்க்சியத்தின் நடைமுறைகளை இங்குள்ள அன்றைய இளம் கம்யூனிஸ்ட்கள் வாயிலாக அவர்களின் போதாமையுடன் பார்த்தனர்.

சோவியத் யூனியன் பெருமிதம் என்கிற  கட்டுமான ஒற்றைபரப்பை மட்டுமே தங்களுக்கான சிந்தனை தளமாக கொண்டு இளம் கம்யூனிஸ்ட்கள் செயல்படுவதை அவர்கள் கண்ணுற்றனர். மேற்கூறிய ஆளுமைகளுக்கு பிரிட்டிஷ்  மற்றும் அமெரிக்க தொடர்புகள் மற்றும் அவர்களின் சிந்தனா முறைகளும் பழக்கமாக இருந்தது. சிந்தனை பரப்பு என்பதில் அவர்கள் சோவியத்துடன் என்று தங்களை நிறுத்திக்கொள்ளவில்லை. புரட்சி குறித்தும், ஸ்டாலின் கால செயல்பாடுகள் குறித்தும் மேற்கத்திய தகவல்களை அவர்கள் ஏற்பவராகவும் இருந்தனர். ஜவஹர் இதில் சற்று மாறுபட்டவராக இருந்தாலும் அவரும் முழு ஏற்பை தரவில்லை.

தமிழகத்தில்  அறிஞர் சாமிநாத சர்மா போன்றவர்கள் இன்றும் நிலைத்து நிற்கும் கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை 1942லேயே முழுவடிவில் தரமுடிந்தது. சாமிநாத சர்மா அதற்கு சோவியத் வெளியீடுகளை அல்லது பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்களை கணக்கில் கொள்ளாமல் லண்டன் பாபியன் சோசலிஸ்ட்களின் வெளியீடான ஹரால்ட் லாஸ்கியின்  Essay on Marx  என்பதையும் 1939ல் வந்த இசையா பெர்லினின் புகழ்வாய்ந்த Karl Marx His Life and Environment  என்கிற ஆக்கத்தையும் அடிப்படையாக கொண்டே எழுதியுள்ளதை நாம் பார்க்கமுடியும். இப்புத்தகம் இன்றும் மார்க்சியர் பலரால் வாசிக்கப்பட்டு வரும் புத்தகமாகவும் இருக்கிறது.

புத்தர் குறித்து தான் ஏராளம் படித்தது போலவே மார்க்ஸ் குறித்தும் மற்ற எவரையும்விட அதிகமாக படித்ததாக அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். அவர் மார்க்சின் எந்த எந்த நூல்களை அல்லது மார்க்ஸ் குறித்து எழுதப்பட்ட நூல்களில் எவற்றையெல்லாம் படித்தார் என்பதை நம்மால் சரியாக தெரிந்துகொள்ளமுடியவில்லை.

இந்திய சமூகம் குறித்தும் சாதி குறித்தும் அவர் ஏராளம் எழுதியுள்ளார். செவ்வியல்தரம் வாய்ந்த ஆக்கங்களாக பலவற்றை நாம் பார்க்கமுடியும். மனித உறவுகள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில்தான் அது அரசியலானாலும், சமூகமானாலும் மற்றும் மதமானாலும், பொருளாதாரமானாலும் இருக்கவேண்டும் என்பதைத்தான் அவர் வாழ்நாள் முழுதும் வற்புறுத்திவந்தார். மனிதனின்டிக்னிட்டி என்பதற்கு அவர் முன்னுரிமை கொடுத்தார். அன்றாட அரசியல் நிகழ்வுகள், தொழிற்சங்கம், பிரிட்டிஷாருடன் உறவு, காங்கிரஸ் காந்தியுடனான உறவு, இந்து மதம் சாதி படிநிலைகள் போன்ற பல்வேறு அம்சங்களில் அவர் தனது கருத்துக்களை சொல்லவேண்டியிருந்தது. தனது அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக மேற்கூறிய சக்திகளுடன் உறவையும் மோதலையும்  அவர் கைக்கொள்ள நேர்ந்தது. இதன் ஒரு பகுதியாக அவரின் மார்க்சியம் குறித்த கம்யூனிஸ்ட்கள் குறித்த கருத்துக்களை நாம் புரிந்துகொள்ளமுடியும்.

இந்திய சமூகத்தை புரிந்துகொள்வதற்கான் விமர்சனகுறிப்புகளாக அம்பேத்கர் அவர்கள் கம்யூனிஸ்ட்கள் மீது வைத்த விமர்சனங்களை புரிந்துகொள்ளலாம் என்றால் வர்க்கப் போராட்டம் அதில் அம்பேத்கரின் நடைமுறைகள்- விடுதலைப் போராட்டம் அதில் அம்பேத்கரின் நடைமுறைகள் குறித்த விமர்சனங்களாக கம்யூனிஸ்ட்களின் எதிர்வினையை புரிந்துகொள்ளலாம்..

இந்த சிறு வெளியீட்டில் அம்பேத்கர் இந்தியாவில் கம்யூனிசம் என்பதை எழுத ஆரம்பித்து அப்படியே நின்று போன சிறு ஆக்கங்கள் குறித்தும், அதனை தனிப்புத்தகமாக்கி அதற்கு ஆனந்த டெல்டும்டே எழுதிய முன்னுரையும் , சாதியை ஒழிக்க எனும் அம்பேத்கர் ஆக்கத்தில் அம்பேத்கர் கம்யூனிஸ்ட்களை குறித்து முன்வைத்த விமர்சனங்களும், அம்பேத்கர் பல்வேறு கூட்டங்களில் எத்தகைய (புத்தரா கார்ல் மார்க்சா உள்ளிட்டு) கருத்துக்களை வெளியிட்டு வந்தார்  என்பதை தொகுத்த அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தமிழ் வால்யூம் 37ம் (ஆங்கிலம் 17  பகுதி 3) விவாதிக்கப்பட்டுள்ளனஅம்பேத்கர்  குறித்து உயர் மதிப்பீடுகளுடன் கூடிய W N குபர் ஆய்வுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பேத்கர் கம்யூனிசம் குறித்து பேசிய அனைத்துமோ, கம்யூனிஸ்ட்கள் அம்பேத்கர் குறித்து முன்வைத்த அனைத்துமோ இவ்வாக்கத்தில் முழுமையாக இடம்பெற்றுள்ளது என ஏதும் சொல்லமுடியாது. ஆனால் ஓரளவிற்கு விவாத பரப்பை அறிமுகப்படுத்த  முயற்சிக்கப்பட்டுள்ளது எனச் சொல்லமுடியும்.

 

2-12-2020                                                                           - ஆர். பட்டாபிராமன்