Skip to main content

Posts

Showing posts from October, 2018

எம் என் ராயின் காந்தி

                          எம் என் ராயின் காந்தி        -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு பெற்றவர் . கம்யூனிசம் , தேசவிடுதலை இயக்கம் , மானுட இயம் என பயணித்தவர் . லெனின் , ஸ்டாலின் உள்ளிட்ட சோவியத் தலைவர்கள் ஜெர்மன் மற்றும் சீனத்தலைவர்களுடன் உயர் மட்டத்தில் பணியாற்றியவர் . திறந்த மனதுடன் புதியன கண்டு அஞ்சாமல் பரிசீலித்து கருத்தை மாற்றிக்கொள்ள தயங்காதவர் . தீரா தாகம் கொண்ட வாழ்க்கைப்பாதைக்கு சொந்தக்காரர் . ராய் தனது 14 வயதிலேயே வங்க புரட்சிகர தொடர்புகள் கிடைக்கப்பெற்றவர் . ஆயுதம் வாங்க எனக்கிளம்பி பர்மா , இந்தோனேஷியா , சீனா , ஜப்பான் நாடுகளில் பயணித்து அமெரிக்கா சென்றடைந்தார் . அங்கிருந்து மெக்சிகோ சென்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக வாய்ப்பு பெற்றார். சோவியத் தொடர்புகளால் மாஸ்கோ சென்றார் .   சோவியத் , ஜெர்மன் , சீன கம்யூனிஸ்ட் இயக்கங்களுடனும் , இரண்டாவது அகிலத்திலும் பெற்ற பயிற்சிகள் மூலம் உச்சம் சென்று பின்னர் வீழ்ச்சி அடைந்தவர் ராய்.   தாய்நாட்டிற்கு 16 ஆண்டுகள் கழிந்து 19