Righteous Republic அறிமுகம் அனன்யா வாஜ்பேய் எழுதிய Righteous Republic மனதை ரம்மியமாக அழைத்துச்செல்லும் உரையாடல் நிறைந்த புத்தகம் . Self sovereignty க்குமான உறவை அற்புதமாக நகர்த்தும் உரையாடல் . இந்தியாவிற்கான மரபு ஏதாவது இருக்கிறதா ? மேற்கிற்கு மரபு என கிரேக்க ரோம் குறித்து துவங்குவது போல் இதை எங்கிருந்து .. 5 ஆளுமைகளின் சில முக்கிய எழுத்துக்களிலிருந்து இந்தியா எப்படி தன்னை அறம் சார்ந்த விழுமியங்களுடன் தகவமைத்துக்கொள்ள போராடி வருகிறது என்கிற உரையாடலை அழகாக நகர்த்தும் புத்தகமிது . காந்தி , நேரு , தாகூர் , அம்பேத்கர் இவர்களுடன் தாகூரின் உறவினரான பெரும் ஓவியர் அபநிந்தரநாத்தையும் முன்வைத்து இந்த உரையாடல்களை அனன்யா கட்டியுள்ளார் . அவசரமின்றி நிதானமாக படிக்கும்போது ஏராள கேள்விகளும் திறப்புகளும் அவரவர் வாசிப்பு அனுபவத்தில் உருவாகலாம் . இந்தியாவிற்கான மரபு எது எனத்தேடிச் செல்லும்போது , அந்த மரபு விடுதலைப்போராட்டக்காலத்தில் எப்படிப்பட்ட மறுகட்டுமானமாக எழுந்திட முயற்சி மேற்கொள்ளப்பட்டது ...