Righteous Republic அறிமுகம்
அனன்யா வாஜ்பேய் எழுதிய Righteous Republic மனதை ரம்மியமாக அழைத்துச்செல்லும் உரையாடல் நிறைந்த புத்தகம். Self sovereigntyக்குமான உறவை அற்புதமாக நகர்த்தும் உரையாடல்.
இந்தியாவிற்கான மரபு ஏதாவது இருக்கிறதா ? மேற்கிற்கு மரபு என கிரேக்க ரோம் குறித்து துவங்குவது போல் இதை எங்கிருந்து.. 5 ஆளுமைகளின் சில முக்கிய எழுத்துக்களிலிருந்து இந்தியா எப்படி தன்னை அறம் சார்ந்த விழுமியங்களுடன் தகவமைத்துக்கொள்ள போராடி வருகிறது என்கிற உரையாடலை அழகாக நகர்த்தும் புத்தகமிது. காந்தி, நேரு, தாகூர், அம்பேத்கர் இவர்களுடன் தாகூரின் உறவினரான பெரும் ஓவியர் அபநிந்தரநாத்தையும் முன்வைத்து இந்த உரையாடல்களை அனன்யா கட்டியுள்ளார்.
அவசரமின்றி நிதானமாக படிக்கும்போது ஏராள கேள்விகளும் திறப்புகளும் அவரவர் வாசிப்பு அனுபவத்தில் உருவாகலாம். இந்தியாவிற்கான மரபு எது எனத்தேடிச் செல்லும்போது, அந்த மரபு விடுதலைப்போராட்டக்காலத்தில் எப்படிப்பட்ட மறுகட்டுமானமாக எழுந்திட முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதையும் இந்த புத்தகம் தர முயற்சிக்கிறது. கீழ்கண்ட பாரா இதை உணர்த்தலாம்.
The tradition, of moral and political reflection broadly construed, has, in effect, been reconstituted. It is a remarkable new tradition that India produces because while India is in the process of becoming a modern democracy, her founders reject the violence of the nation state form ( Gandhi), reject nationalism as an ideology ( Tagore) , transforming a non modern and sectarian history into an enabling precursor for secular democratic modernity ( Nehru), and shift the bases of human happiness from the pursuit of individual interest to the alleviation of social suffering ( Ambedkar)
இன்னொரு பாரா அவர்கள் நோக்கமும் வேலையும் என்னவாக எதை நோக்கி இருந்தன எனக்காட்டும்.
It should be clarified that the founders were not nostalgic revivalists. They did not waste time extolling the glories and virtues of the religion, culture, or philosophy of pre modern India, because their concern was with the present and the future, not with the past as such
அனன்யா சொல்கிறார் தான் சொல்லும் கதை எப்படி இந்தியா தன் சுயத்தை இந்த founders தணியா தாகத்தால் பார்த்துக்கொள்ள விழைந்தது..அதாவது find her way back to self recognition, self possession, self mastery and self realisation..
சிந்தனைக்கு மிக இதமான நம்மை மிக நிதானப்படுத்தி அழைத்துச் செல்லும் புத்தகமாக எனக்கு தோன்றுகிறது. தமிழில் வந்துள்ளதா தெரியவில்லை..
அனன்யா தனது புத்தகத்தில் காந்தி, தாகூர், நேரு, அம்பேத்கர், அபநிந்திரநாத் குறித்த essays வழியாக இந்தியர் தனது சுயத்தை இறையாண்மையை எப்படி காணமுயற்சித்தனர்- இணக்கப்படுத்த முயற்சித்தனர் என எழுதியிருப்பார்.
நேருவிற்கு அசோக சாம்ராஜ்யம் மீது அளவற்ற மதிப்பு இருந்ததை அவரது Discovery of India , Glimpses of world History மூலம் அறிந்துகொள்ளலாம். விடுதலை இந்தியா ஏற்றுக்கொள்ளப்போகும் தேசியக்கொடியை அரசியல் நிர்ணய சபையில் அசைத்து அறிமுகப்படுத்தி அவர் ஆற்றிய ஜூலை 1947 உரையிலும் அசோகர் குறித்த அவரது புகழாரங்களைக் கேட்கிறோம்.
அனன்யா தனது Righteous Republic ல் Dharma the self’s aspiration and Artha the self’s purpose என்று நேரு குறித்த நீள் essay ஒன்றை எழுதியிருக்கிறார். நேரு எழுதிய அசோகர் குறித்தவற்றை பல இடங்களில் அவர் மேற்கோள்களாக தந்திருப்பார். காந்தி தன்னை ராமனாக கிருஷ்ணனாக நினைத்துக்கொள்ளவில்லை. அம்பேத்கரும் தன்னை புத்தராக நினைத்துக்கொள்ளவில்லை. ஆனால் நேருவிடம் தன்னை அசோகராக பாவித்துக்கொண்ட உளவியல் இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற முடிவிற்கு அனன்யா வருகிறார்.
அசோகரிடம் இருந்ததாக 7 பண்புகளை குணச்செயல்களை அனன்யா பட்டியலிட்டு, அவை நேருவை கவ்விப் பிடித்திருக்கலாம் என்கிறார்.
கலிங்க வெற்றி அவர் மனதை மாற்றியது. போரை கைவிட்டு non violence பாதையில் அவர் செல்லத்துவங்கியது
புத்தமதம் சாராத குறிப்பாக ஆஜீவகர்களை காப்பாற்றியது.
தம்மா தர்மத்தை காக்கும் ஆட்சியாளராக இருந்தது
உலகின் பிற பகுதிகளுக்கு நல்லெண்ண தூதுவர்களை அனுப்பி புத்தம் பரவச்செய்தது. (நேரு அசோகர் ஆட்சியை not mere national state but international என்பார்)
நாட்டின் கட்டுமான பணிகளை நிறுவன வழியில் அமுலாக்கியது. சாலை, மரம் நடுதல், மருத்துவமனை, சத்திரங்கள், கால்நடை மிருகங்கள் பாதுகாப்பு, பொது உணவு கூடங்கள் - மேற்கூறிய நலத்திட்டங்கள் அமுலாவதைக் கண்காணிக்க தர்ம மகாமாத்ரா எனும் அதிகாரிகள் நியமனம்
மக்கள் மீதான பரிவு, தந்தை மனோபாவம்..எனவே தேவனம்பிரியா, பிரியதர்சி என புகழ்பெறுதல்
இறையாண்மை குறித்த விழிப்புணர்வு கல்வெட்டுகள் rock pillar edicts
அனன்யா அடுத்து நேரு எப்படி தன்னை சர்வதேசியவாதியாக உணர்ந்தார் என்பதைச் சொல்வார். அவர் எழுதுவார்
a leader who wanted to follow Ashokan ideals of welfare, friendship, pacifism, trust, and compassion for the citizens of his country as well as for other countries but who faced the world more strife than reconciliation. .He named his only child Indira after Aśoka’s title Priyadarshini literally, beloved of the gods and pleasing to the eye
அனன்யா அந்த essayல் வேறு ஒரு பாராவையும் தருவார்.
If the post Aśoka’s Mauryans are Buddhist, the Gupta are Hindus, the Mughals are Muslims and the British are Christians, so much the better as the diverse predecessors of secular India
தேசியக்கொடியில் அசோக சக்கரம், அரசாங்க இலச்சினையில் சாரநாத் சிங்கங்கள், முண்டக உபநிஷத்தின் சத்யவமே ஜெயதே உருவாக்கப்பட்டதில் நேருவிற்கு பிரதான பங்கும் அவரை முழுமையாக ஆதரித்து நின்ற பங்கை இராதாகிருஷ்ணனுக்கும் அனன்யா தருகிறார். இந்த புத்த அடையாளங்களை ஏற்கச் செய்ததில் அம்பேத்கருக்கு பங்கிருந்ததா என சரியாக தெரிந்துகொள்ளமுடியவில்லை எனவும் சொல்கிறார். வேறு சரித்திர ஆசிரியர்களிடமோ, தொல்பொருள் ஆய்வாளர்களிடமோ கலந்து பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்பதையும் அறியமுடியவில்லை என்பார் அனன்யா.
மரபு என ஒன்றைக்காட்டாமல் கதையாடல்கள் இருப்பதில்லை. நிலவும் மரபு தன்னை எங்கே வைக்கிறது என்பதில் முரண் ஏற்பட்டு அந்த சுயம் தன்னை உணரும்போது அது அந்த மரபை கேள்விக்கு உள்ளாக்கி, இப்படித்தான் முன்னொரு காலத்தில் என் மரபும் எனக்கான இடமும் இருந்தது என புதிய அல்லது எதிர் கதையாடலை வைக்கிறது. இதை அம்பேத்கரும் செய்ததைப் பார்க்கிறோம்.
புத்த மரபு ஒன்று இருந்தது. அவை எதிர்த்த பிராம்மண கலகத்தில் ஒடுக்கப்பட்டவர் தலித்களாக மாற்றப்பட்டனர். எனவே தன் பூர்வீக மரபிற்கு திரும்பி தங்களை reclaim செய்தல் என்ற தீர்வை வைத்து தான் அவர் பல்லாயிரக்கணக்கானவர்களுடன் புத்த மதம் நவயானா மாறினார்.
அனன்யா இப்படி எழுதியிருப்பார்
Ambedkar did not want to leave the tradition but wanted to enter into it..in other words Ambedkar sought thro conversion to Buddhism to reclaim a space, a role and a voice for Hinduism’s original adverbial conversation partner
Comments
Post a Comment