My Book Fair பதிப்பாளர்கள் குறித்து எனக்கு எந்த அனுபவமும் இல்லை . பதிப்பாளர்கள் பற்றி சில எழுத்தாளர்கள் வருத்தப்பட்டவைகள் காதில் விழுந்துள்ளன . எழுத்தாளர் - பதிப்பாளர் உறவில் நேர்மை கண்ணியம் பேராசையின்மை சுரண்டலின்மை என்பதெல்லாம் காரணிகளாக அமைந்து உறவை பலப்படுத்தும் அல்லது பலவீனப்படுத்தும் . 1990 களில் மறைந்த தோழர் தேவபேரின்பன் போன்றவர்கள் ஊக்கப்படுத்தியதில் NCBH சார்பில் ரோசாலக்சம்பர்க் , மார்க்சிய தடங்கள் வெளிவந்தன . சிறு பிரசுரங்கங்கள் டெலிகாம் மற்றும் குப்தா குறித்த புத்தகங்கள் பதிப்பகம் எவரையும் நாடாமல் வந்தன . பதிப்பகத்தார் படிகளை அதிகம் ஏறிய அனுபவமில்லை . ஓரிருவரை ஒருமுறை சந்தித்திருப்பேன் . தொடர் முயற்சி என ஏதுமிருந்திருக்காது . தேடவேண்டும் என்ற தவிப்பால் அதில் கண்டடையும் புள்ளிகளை எழுத முயற்சிப்பது - இவர் இப்படி இதில் கருத்து வைத்திருந்தார் என்பதை பலமுனைகளில் தேடிக்கொணர்வது என்பது நடைபெறலானது . எதிலும் absoulte பக்தி - அதுதான் இறுதியானது என்பது என்னிடம் மெதுவாக கழன்று போகத்துவங்கியது . எனது