True Faces of Gandhi and Ambedkar by Sheshrao Chavan என்கிற புத்தகம் முதல் பதிப்பு 2016ல் வெளிவந்தது. நான் 2021 பதிப்பை படித்தேன். சென்னை அட்லாண்டிக்புக்ஸ் வெளியிட்டுள்ளனர். டெல்லி அட்லாண்டிக்கின் கிளையது. நீதிமான் சந்திரசேகர் தர்மாதிகாரி சிறிய முன்னுரை ஒன்றை தந்துள்ளார். புத்தகம் 11 சாப்டர்களாக அடுக்கப்பட்டுள்ளது.
காந்தியுடனான
அம்பேத்கர் சந்திப்பு, வட்டமேஜை மாநாடுகளில் இருவரும் முன்வைத்த கருத்துக்கள், அது தொடர்பான விவாதங்கள்,
கம்யூனல் அவார்ட் எனப்படும் ராம்சே
பிரதமர் வெளிவைத்த முடிவு- காந்தியின் உண்ணாநோன்பு
- அப்பட்டினிப்போர்
தொடர்பாக எழுந்த உரையாடல்கள், அம்பேத்கரின்
எதிர்வினைகள்- புனே உடன்பாடு போன்றவை விரிவாக இரு ஆளுமைகளின் எழுத்துக்களின் வழியாக
விவாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல்
சாதி மதம் சார்ந்த விவாதங்கள் காந்தி அம்பேத்கர் எழுத்துக்களின் வழியாக முன்வைக்கப்பட்டுள்ளன.
வர்ணாஸ்ரமம்- சாதி- இந்துமதம்- இந்துயிசம்
ஆகியன குறித்த இருவர் பார்வையும் அப்படியே அவர்கள் எழுத்துக்களை- பேச்சை முன்வைத்து
கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து மிக முக்கியமானதாக கோயில் நுழைவு என்பதில் இருவருக்கும்
இருந்த பார்வை அவர்களின் எழுத்துக்களின் வழியாகவே முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விவாதங்களில் இறுதியாக அவர்களின் எழுத்து வகைப்பட்டு
முன்வைக்கப்பட்ட ஒன்றாக ஹரிஜன் எனும் பதம் பற்றிய உரையாடலாக அமைந்துள்ளது.
இறுதி
11வது அத்தியாயத்தில்தான் நூலாசிரியர் இருவரின் தனிச்சிறப்புகள் அணுகுமுறை வேறுபாடுகள்
குறித்து பேசுகிறார். அந்த சாப்டர்தான் True Faces of Gandhi and Ambedkar என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. காந்தி-
அம்பேத்கர் குறித்த விவாதங்களில் ஒருவரை நிராகரித்து இன்னொருவரை ஏற்றும் தன்மை இருக்கும்.
ஒருவருக்கு ஒருவர் நிரப்பிகளாக இருக்கின்றனர் என்ற இணக்கப்படுத்தும் பார்வையும் இருக்கும்.
இதன் பொருள் அம்பேத்கர் காந்தி குறித்து எழுதிய விமர்சனங்களை மூடிவைப்பது என்பதாகாது.
அதேபோல் அம்பேத்கர் நிலைப்பாடுகளின் மீது காந்தி முன்வைத்த கருத்துக்களை சொல்லாமல்
விடுதலும் ஆகாது.
இந்த
புத்தகத்தில் ஆசிரியர் மேற்கூறிய பல்வேறு பொருள்களில் அவர்கள் என்ன எழுதிக்கொண்டார்கள்
என்பதை அப்படியே தந்துவிடுகிறார். அம்பேத்கர் தான் நியாயம் என நினைத்து போராடிய அம்சங்களில்
அவரின் அறிவுக்கூர்மையும், depressed
class க்கு இந்திய சமூகம் ஏற்படுத்திய
கொடுமை களைந்து உரிமைதனை நிலைநாட்ட உறுதியாக தன் கருத்துக்களை வைப்பதையும் படிக்கும்போது
உணரமுடியும். அதேபோல் காந்தியின் அமைதியான பிறரின் மரியாதையை குறைத்துவிடாமல் விரிவான
பரந்துபட்ட பல்திரள் மக்கள் அனுபவத்தில் இதயத்துடன் நெருக்கமாக உரையாட விழையும் தன்மையும்,
தானே முன்நின்று தான் பேசுவது படி நடந்துகாட்ட முயற்சிக்கும் கடமை உணர்வும் இருப்பதை
பார்க்கமுடியும்.
காந்தியின்
எழுத்துலகம்முழுமையும் குறித்தோ- அம்பேதகரின் எழுத்துலகம் முழுமையும் குறித்தோ இப்புத்தகம்
தனது உரையாடலை முன்வைக்கவில்லை. அவர்கள் இருவரும்
எப்புள்ளிகளில் முரண்பட்டு எப்படி விவாதங்களை நடத்திக்கொண்டனர் என்பதை அவர்கள் மொழியிலேயே
இப்புத்தகம் பேசியுள்ளது. காந்தியிடம் விவாதங்களில் வெறுப்பு என்பது வெளிப்படவில்லை.
தன்னை புரிந்துகொள்ளுங்கள் என்ற வேண்டுதல் இருந்திருக்கலாம். ஆனால் அம்பேத்கரிடம் காந்தி
குறித்த விவாதங்களில் வெறுப்பும் வெளியானது என்ற புள்ளியை இந்த ஆசிரியர் வந்தடையாமல்
இல்லை. அந்தப்பகுதியை மட்டும் இந்நூலாசிரியர் எழுதியதிலிருந்தே பதிவிட விரும்புகிறேன்.
“
I can only say that the
relations between Gandhi and Ambedkar were that of love and Hate. Gandhi loved
and respected and admired Ambedkar, whereas, Ambedkar missed no opportunity to criticize,
condemn, humiliate Gandhi during his life and even after his life. Gandhi
believed we can only win over the opponent by love never by hate..
Gandhi
meticulously followed Buddha’s message in respect of all including Ambedkar. Gandhi
believed that someday, he wold convert Ambedkar to love him. But it remained
his hope against hope. May be because of his sufferings as untouchable. In that
sense, it could be termed as natural reaction.
Buddha’s
message was For never in this world does
hatredcease by hatred – hatred ceases by love “
Comments
Post a Comment