https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, April 25, 2024

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும் உழைப்பாளர் சமூக உண்மைநிலையும், சாதியும்

 எஸ் ஜெயசீல ஸ்டீபன் எழுதியுள்ள தமிழ் மக்கள் வரலாறு seriesல் வந்துள்ள மற்றொரு புத்தகம்

‘தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும் உழைப்பாளர் சமூக உண்மைநிலையும், சாதியும் ( கி பி 600- 1565)’.
2004 ல் UGS நிதி உதவியுடன் செய்யப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகள் 4 இதில் இடம் பெற்றுள்ளன. Annual Epigraphy Reports மற்றும் தொல்லியல், கல்வெட்டு தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, பெறப்பட்டவை அடுக்கப்பட்டுள்ளன. அடுக்கப்படும் தகவல் வழி அக்கால தமிழ் சமுதாய மனிதர்கள் செய்த தொழில், குறிப்பிட்ட ஒருவர் வெவ்வேறு தொழில்களை செய்தல், தொழில் பிரிவினைகளை சாதியாக இறுக்கமாக்குதல்- பிறப்பு வழி மேல் கீழாக்குதல் போன்றவற்றை உணரவைக்க ஆசிரியர் ஸ்டீபன் முயற்சி செய்துள்ளார். ஆசிரியர் கண்டெடுக்கும் சில புள்ளிகள்..
பரிபாடல் ‘குலம் ‘ என 44 வகை தொழிற்பிரிவினரைக் காட்டுகிறது.
அகநானூறு 4 வகை தொழில்களைப் பேசுகிறது
கிமு 1500 வரை வர்ணம், தர்மம் கர்மா பற்றி சான்றுகள் காணப்படவில்லை.
சங்க கால கிபி 100-300 மக்கள் சிற்றூர்களில் வாழ்ந்துள்ளனர். மரபுவழி தமிழ் குடியிருப்புகளில் 12 தொழில் வகையினர் சொல்லப்பட்டுள்ளனர். சங்க காலத்திற்கு முன் தமிழகத்தில் மதம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.
சங்க கால ஆட்சிகளில் ஏற்பட்ட கோரமான போர்களால் ஏழ்மை ஏற்பட்டு பரவியிருந்தது.
சங்க காலத்திற்கு பிறகான காலத்தில் பசித்தோர்க்கு உணவு, பசிப்பிணி தீர்ப்பது, வீடற்றோர் உறைவிடம், ஊனமற்றோர்க்கு உதவி போற்றப்பட்டன.
தமிழ்ப் பேசும் பிராமணர்கள் அந்தணர், பார்ப்பனர், அறவோர், வேதியர் என குறிக்கப்பட்டுள்ளனர். நச்சினார்க்கினியர் அவர்களுக்கான ஆறு வகை கடமைகளைச் சொல்கிறார்.
செட்டி என்போர் தனிக் குழுக்களாக, வணிகர்களாக, செல்வந்தர்களாக இருந்துள்ளனர்.
சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் சூத்திரர் என்ற கருத்துப் பயன்படுத்தப்படவில்லை.
இறந்தவர் சவக்குழி பணிகளை புலையர்கள் செய்துள்ளனர். இவர்கள் தீண்டத்தாகாதவர் எனப் பேசப்பட்டுள்ளனர். (நடத்தப்பட்டதால் தான் பேசப்படுதல் வருகிறது என நாம் புரிந்துகொள்ளலாம்.)
சங்க கால சமூகத்தில் பெண்கள் சம நிலையை அனுபவித்தனர் என சொல்ல முடியவில்லை. சங்கம் மருவிய காலத்தில் நிலைமை மோசமானது. தமிழ் இலக்கியங்களில் கற்பு நாணம் இரண்டும் அடிப்படை பண்புகளாக பேசப்பட்டுள்ளன.
கணிகை நடனமங்கை. தனித் தெருக்களில் வசித்துள்ளனர். பதிலியர் என்பவர்கள் இசை ஒலி கொண்ட தனி வீதிகளில் இருந்துள்ளனர். பரத்தையர் தொடர்பு தீமை என்பது பேசப்பட்டுள்ளது.
சங்க காலம் முதல் வேளாளர் தனித்துவமாக, அதிகாரமிக்க சமூகக் குழுவாக இருந்தனர். கோயில்களுக்கு தானமளித்துள்ளனர்
மன்றாடியர்கள் இடையர் என்று ஆடு மேய்ப்பவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் கோன் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். கோயில்களுக்கு நெய் தானம் செய்துள்ளனர். தஞ்சை பெரிய கோயிலுக்கு நந்தா விளக்கு எரிக்க தானம் தந்துள்ளனர்.
சங்கரபாடியர் என்பார் எண்ணெய் உற்பத்தியாளர்கள். இவர்கள் பெரிய தொழிற்பிரிவாக மாறினர்.
பிராமணர்களுக்கு பிரம்மதேயம் நிலத்தானம் வழங்கப்பட்டுள்ளது. 8 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இதை வேளாளர் எதிர்த்துள்ளனர். சோழர்கள் காலத்தில் ஆரிய, மத்திய, கவுட தேசத்திலிருந்து பிராமண குடும்பங்கள் வந்துள்ள செய்திகள் இருக்கின்றன. கிபி 1053-56 ல் 730 குடும்பங்கள் குடியேற அரசு நெறிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. 13 ஆம் நூற்றாண்டில் கேரளாவிலிருந்து மலையன் என்ற பிராமணர் தஞ்சை வந்து வேதம் படித்த செய்தி இருக்கிறது. வைசிய பெண்களை மணந்து பிராமணர் நெசவுத் தொழில் செய்துள்ளனர். வேறு சாதி திருமணங்கள் பிராமணரிடையே அதிகம் நடந்துள்ளது. இதனால் பல்வேறு தொழில்களில் பிராமணர் ஈடுபடத் தொடங்கினர்.
கோயில் பணிகளில் கம்மாளர், சிற்பிகள், தச்சர், மட்பாண்டம் செய்வோருக்கான பங்கிருந்தது. உள்ளூர் தச்சர்கள் கிராமங்களை விட்டு வெளியேறக்கூடாது என்கிற கட்டுப்பாடு இருந்தது.
கைக்கோளர், சாலியர், தேவாங்கர் துணி உற்பத்தி தொழிலில் இருந்துள்ளனர். 13 ஆம் நூற்றாண்டில் உற்பத்தி தேவை அதிகரித்த நிலையில் பறையர் சமூகத்தினரும் துணி உற்பத்தி செய்துள்ளனர்.
சிதம்பரம் பகுதியில் கிபி 1036ல் கிடைத்த தகவலில் வேளாளர், நெசவாளர், சங்கரபாடியர் குடிகள் என குறிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் நிலப்பகுதியில் தொழிற்பிரிவுகள் சாதியை நோக்கி மாற்றமடைந்து, விரிவடைந்தது. இடைக்காலத்தில் வலங்கை, இடங்கை பிரிவுகளில் அவை அடைக்கப்பட்டதைக் காணமுடிகிறது. 10 ஆம் நூற்றாண்டில் ராஜராஜன் காலத்தில் வலங்கை பிரிவும், பின்னர் இடங்கைப் பிரிவும் உருவாயின.
பழங்காலத்தில் எந்தப் பிரிவினர் மீதும் தீண்டாமை ஒட்டியிருந்ததாக தெரியவில்லை. ராஜராஜன் கால கிபி 1014 கல்வெட்டில் தீண்டாச்சேரி சொல்லப்பட்டுள்ளது. பறையர் தீண்டாதோர் என அழைக்கப்படவில்லை. பறைச்சேரி தனியாக காட்டப்பட்டுள்ளது.
சக்கிலியர், வண்ணான், முடிதிருத்துவோர் பற்றி குறிப்புகள் உள்ளன.
அடியாள், உவச்ச அடிமை, அடிமை என சொத்துக்களுடன் மனிதர்களும் சேர்த்து விற்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு சாதிப் பிரிவினரும் தங்களுக்கென இலக்கியப் படைப்பை எழுதியிருப்பதைக் காணமுடிகிறது. சோழர்கள் காலத்திற்குப் பிறகு சாதி உறுதியானது . வலங்கை 98 - இடங்கை 98 பிரிவினர் மத்தியில் தீவிர சண்டைகள் இருந்தன. உட்சாதிகளின் தோற்றமும் உருவாகலானது.
ஸ்டீபன் தன் ஆய்வில் இப்படி ஒரு இடத்தில் வந்து நிற்கிறார்
“ தமிழ்ச் சமுதாயத்தில் எல்லா சாதியும், சமூகப் பண்புகளும், திடமாகவோ உறுதியாகவோ இல்லை. சமூகப் பிரிவுகளின் தொடர்புகள் மூலம் இதை புரிந்துகொள்ள முடியும்”
ஜெயசீல ஸ்டீபன் அவர்களின் நூலின் ஒரு பகுதியை மட்டுமே தொட்டுக்காட்டியுள்ளேன். பல்வேறு விவரங்களைக் கொண்டதாக இப்புத்தகம் நகர்கிறது.

வாழ்வு என்கிறான் ஆசை - முரண் என்கிறான் இசம்

 வாழ்வு என்கிறான் ஆசை - முரண் என்கிறான் இசம்

மனிதன் கற்கத் தகுந்தவனாக இருக்கிறான். கற்றவற்றை சோதித்துப் பார்த்து உயர விழைகிறான். அவனுக்கான ஏணிப்படிகளில் இறுதிப்படி கூட செல்கிறான். அதற்குப் பின்னால் என்ற கேள்விக்கும் உட்படுகிறான். புதிய உயரத்தை set செய்துகொள்கிறான்- ஆனால் போதவில்லை. வெறுமை என உணர்ந்து , அண்ணாந்து பார்ப்பதின் அவஸ்தையை உணர்கிறான்.
கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என அவனுக்கு சொல்லித்தரப்படுகிறது. ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது எனவும் எழுதப்பட்ட ஏடு அவன் முன் வீசப்படுகிறது. வெற்றியாளன் வெளியேறமாட்டான் என்கிற போர்டை அவன் கழுத்து அணிகிறது. துறத்தல் விடுபடல் ஆசை அறுத்தல் தானே ஆகச் சிறந்தது என எதிர் பேச்சு எழுகிறது. பட்ட பாட்டிற்கு என்ன என்கிறான் பலன். விளைவைப் பார்க்காதே என்கிறான் செயல். செயலற்று இரு என்கிறான் மந்திரம்.
மூளையிலிருந்து பேசாதே இதயத்திலிருந்து பேசு என அன்பு சொல்கிறான். பகுத்தறிந்து பார் என அறிவு பேசுகிறான். என் மூளையால் என்னை சிந்திக்க விடு என எதிர்ப்பாளன் திமிறுகிறான். ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்கிறான் தமிழ். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்கிறான் சமூகம். தனித்திரு விழித்திரு என்றான் கொரோனா.
அன்னதானம் அற்புதம் என்கிறான் நன்கொடை. அங்கும் உன் முகம்தான் தெரிகிறது என் முகம் எங்கே என்கிறான் பட்டினி.
கசிந்துருகு என்கிறான் இரக்கம். ஈவு காட்டாதே என்கிறான் நீதி.
நமோ மயம் என்கிறான் ஆதாயம். என் தலைவன் தான் எல்லாம் என்கிறான் கைத்தடி. மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்கிறான் குறள்.
என்னை நம்பி வா சொர்ர்க்கம் என்கிறான் ஏகாதிகாரம். சாம்ராஜ்யங்கள் சரிந்தது அறிவாய் என்கிறான் வரலாறு.
எல்லாம் அவன் செயல் என்கிறான் ஈசன். நான் பார்த்துக்கொள்கிறேன் விடு என்கிறான் நம்பிக்கையாளன்.
சம்பந்தமில்லாமல் பேசாதே பொருத்தமானதைச் சொல் என்கிறான் எதார்த்தம். பொன்னுலகம் காண்பிக்கிறேன் என்கிறான் உடோபியன். பெருங்கனவின் பூபாளம் என்கிறான் புரட்சி. புரட்சியின் வறட்சி என்கிறான் உடைமை.
உன் சைக்கிள் கதை எனக்கெதுக்கு என்றான் கார். காரும் மூப்பாகும் என்றான் உள்ளுணர்வு. வரும் போது வரட்டும் என்கிறான் இளமை.
அடுப்படியில்லா மாளிகை என்கிறாள் ஜுமோட்டா. கர்ப்பப்பை சுதந்திரம் என்கிறாள் சூல். மறுபடியும் பெண்ணா என்கிறான் ஆதிக்கம். சாதி இரண்டொழிய வேறில்லை என்றாள் பாட்டி. என் சாதி கொன்னுடுவேன் என்கிறான் ஆணவம்.
இல்லாதவனுக்கும் இசை என்கிறான் பொறம்போக்கு. சங்கீத கலாநிதி எதுக்கு என்கிறாள் கர்னாடிக்.
எல்லாம்தான் சொன்னீங்க என்ன பண்ணி கிழிச்சிங்க என்கிறான் கேள்வி. புனிதம் என எவனுமில்லை என்கிறான் குறை. நிறையை எடைபோடேன் என்கிறான் தர்மி.
அதையெல்லாம் செய்தேனே என்கிறான் நேற்று..அப்படியா அதெல்லாம் பழங்கதை என்கிறான் இன்று.
என்னைப்போல் அவனில்லை என்கிறான் சந்தேகி. அவனும் இருக்கட்டுமே என்கிறான் பன்முகம். வாழத்தெரியவில்லை என்கிறான் குழம்பி. வாழ்வா என்கிறான் மாயம்.
எல்லோரும் object என்கிறான் subject. நானே எல்லாம் என்கிறான் அரசு.

For Marx in Tamil

 Louis Althusser ( 1918-1990) எழுதிய For Marx , Lenin and Philosophy, Reading Capital போன்றவை  மார்க்சிய அறிவு வட்டாரத்தில் அவரின் முக்கிய ஆக்கங்களாகப் பார்க்கப்படுகின்றன.

இதில் அல்தூசரின் ‘மார்க்சிற்காக’ எனச் சொல்லப்படும் நூல் 1960களின் ஆரம்ப ஆண்டுகளில் எழுதப்பட்டு பிரஞ்சு மொழியில் வெளியானது. இந்த கட்டுரைகளின் ஆங்கில தொகுப்பு 1969ல் வெளியானது. அதை பென் ப்ருஸ்டர் மொழி பெயர்த்தார். ஆங்கில நூல் இணையத்தில் கிடைக்கிறது. 

மார்க்சிய ஆர்வலர், அமைப்பியல் ஆர்வலர்கள் சிலர் படித்திருக்கக்கூடும். இந்நூலை புகழ் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் பேரா பூர்ணசந்திரன் அவர்கள் தமிழில் தருவதில் பெரும் உழைப்பை நல்கியுள்ளார். தோழர் முத்துமோகன் பதிப்பாசிரியர் உழைப்பை நல்கியுள்ளார். சவாலான ஆக்கம். தமிழ் அறிவுலகிற்கு என் சி பி எச் கொடுத்திருக்கும் கொடையாக  பாவிக்கலாம்.  2021 ல் கொணர்ந்தனர். 

For Marx என்ற நூல் இப்போது மொழி பெயர்ப்பில் ‘மார்க்சுக்கு ஆதரவாக ‘ என்கிற தமிழ் நூலாக கிடைக்கிறது. இந்நூலை வாசிக்க பொறுமையும் நிதானமும் தேவைப்படலாம். உள்வாங்கிக்கொள்ள கவனம் தேவைப்படலாம்.  மொழிபெயர்ப்பாளர்க்கு சவாலாக இருந்திருக்கக்கூடும். பேரா பூர்ணசந்திரன் மிகுந்த அனுபவம் கொண்டவர் என்ற வகையில் இந்த சவாலை  சிரமம் அதிகமின்றி எதிர்கொண்டிருந்திருப்பார். இளம் மார்க்ஸ், இடை மார்க்ஸ், முதிர் மார்க்ஸ் இணக்கமா, அறிவு முறிவு பாய்ச்சலா / அறிவு உடைவு என்ற மய்யமான கேள்வி இதில் விவாதமாக்கப்பட்டிருக்கும்.

மனிதாபிமான கருத்தியல் தள மார்க்சா, முதிர்ந்த அறிவியல் தள மார்க்சா என்பது பேசப்பட்டிருக்கும்.  இதை மனிதவியல் தளம்- சமூகத் தளம் என முத்துமோகன் பேசுகிறார்.

மொழியாக்கம் அவ்வளவு எளிமையான ஒன்றல்ல எனக் கருதத்தக்க பல பத்திகள் இதில் இருக்கின்றன. 

இரண்டாவது அத்தியாயம் on the Young Marx . அதிலிருந்து சில வரிகளைத் தருகிறேன். அதற்கான  பூரண சந்திரனின் மொழிபெயர்ப்பையும் தந்துள்ளேன்

“ This is the location of the discussion: the young Marx. Really at stake in it : Marxism. The terms of the discussion: whether the young Marx was already and wholly Marx” 

மேற்குறித்த தமிழ் நூலில்

“ விவாதத்தின் அமைவுக்களம் இதுதான் : ‘ இளம் மார்க்ஸ்’ . உண்மையில் அதில் ஆபத்தில் இருப்பது : மார்க்சியம். விவாதத்தின் பொருள்: இளம் மார்க்ஸ் ஏற்கனவே, முழுமையான ( முதிர்ச்சி பெற்ற) மார்க்ஸாக இருந்தாரா என்பது.

ஆங்கிலத்தில் the young Marx என்பது quote க்குள் இல்லை. தமிழில் வந்துள்ளது.

“ very schematically, if they want to rescue Marx from the perils of his youth with which his opponents threaten them, they can either agree that the  young Marx is not Marx; or that the young Marx is Marx. These extreme theses may be nuanced; but their inspiration extends even to their nuances”  

தமிழில் பூரண சந்திரன்

“ மிகுந்த திட்டப்படியாக, அவரது எதிரிகள் அச்சுறுத்துகின்ற அவரது இளமையின் தவறுகளிலிருந்து அவர்கள் மார்க்ஸைக் காப்பாற்ற விரும்பினால், அவர்கள் இளம் மார்க்ஸ் மார்க்ஸே அல்ல என்றோ, இளம் மார்க்ஸ் மார்க்ஸ் தான் என்றோ இரண்டில் ஒன்றை ஒப்புக்கொள்ளலாம். இந்த எதிர்முனை முடிபுகள் சிக்கலானவை,  பலவித அர்த்தச் சாயைகள் கொண்டவை ஆகலாம்; ஆனால் அவற்றின் அகத்தெழுச்சி, அவற்றின் நுட்பங்களுக்கும் நீள்கிறது.”

இங்கு perils என்பது தவறுகள் என்றும், nuanced சிக்கலானவை பலவித அர்த்த சாயைகள் என்றும், nuances நுட்பங்கள் என்றும் செய்யப்பட்டுள்ளன. 

“ on the contrary, to think the unity of a determinate ideological unity( which presents itself explicitly or implicitly ‘lived ‘ as a whole or as an intention of ‘totalisation’) by means of the concept of it’s problematic is to allow the typical systemic structure unifying all the elements of the thought to be brought to light, and therefore to discover in this unity a determinate content which makes it possible both to conceive the meaning of the ‘ elements’ of the ideology concerned- and to relate this ideology to the problems left or posed to every thinker by the historical period in which he lives”

மொழிபெயர்ப்பாளர்

“ மாறாக, ஒரு நிர்ணயித்த கருத்தியல் ஒருமையின் ஒருமை அதன் பிரச்சினைத் தளத்தின் கருத்தாக்க வாயிலாகச் சிந்திப்பது ( அது வெளிப்படையாகத் தன்னை ஒரு முழுமையாகக் காட்டிக்கொள்கிறது, மேலும் வெளிப்படையாகவோ, உள்ளார்ந்தோ முழுமையாக்கத்தின் ஓர் உள் நோக்கமாக வாழப்படுகிறது) என்பது அதன் வகைமாதிரியான ஒழுங்கமைவுக் கட்டமைப்பை அச்சிந்தனையின் எல்லாக் கூறுகளையும்  ஒருமைப்படுத்தி வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதாகிறது. ஆகவே இந்த ஒருமையில் ஒரு நிர்ணயித்த உள்ளடக்கத்தைக் கண்டுபிடிப்பது, குறித்த கருத்தியலின் கூறுகளின் அர்த்தத்தைக் கருதுவதற்குச் சாத்தியமாகிறது.  அதே சமயம் இந்தக் கருத்தியலை ஒரு வரலாற்றுக் கட்டத்தில் வாழும் ஒவ்வொரு சிந்தனையாளருக்கும் முன்வைக்கப்படும் அல்லது விடப்படும் பிரச்சனைகளுடன் தொடர்புறுத்தவும் சாத்தியமாகிறது”

இது போல் நூல் விரிகிறது. அன்றாட வேலை அழுத்தங்களில் இருப்பவர்களுக்கு நேரம் கிடைக்காது. மார்க்சிய தத்துவ தேடலுக்கு என்று தனித்து  ஆர்வத்துடன் நேரம்  ஒதுக்குபவர்களுக்கான நூலாக இதைக் கொள்ளலாம். 

மொழி பெயர்ப்பு தேர்ச்சி குறித்து அதில் தோய்ந்த அறிஞர் பெருமக்கள் கருத்து கூறமுடியும்.


அல்தூசரின்  ‘மார்க்சுக்கு ஆதரவாக’ பூரணச்சந்திரன் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலில்  அத் 4 ‘ பிக்காலோ அரங்கு படித்துக்கொண்டிருந்தபோது, முப்பதாண்டுகளுக்கு முன்னரான நினைவுகள் ஓடின. அல்தூசர் பொருள்முதல்வாத நாடகக்குழு பற்றிய குறிப்புகள் - நாடகம் ஒன்றை விவரித்து  பெர்த்தோலஜி மற்றும் பிரக்ட் குறித்து இதில் விவாதித்திருப்பார்.

பிரக்ட் பற்றி வங்கித் தலைவர் தோழர் ரகுபதி பேசியதும்,  திருவாரூர் தெருக்களில் அவரது நாடகத்தை நிகழ்கலையாக - நிஜ நாடகங்களாக  மக்கள் கொஞ்சம் பேராவது கூடி பார்த்திருக்க நிகழ்த்தியதும்  நினைவு சுழலாக நிற்கிறது. தொலைபேசித் தோழர்கள், சமீபத்தில் மறைந்த தொழிற்சங்கத் தலைவர் கார்த்தி உட்பட பலரும் ரகுவுடன் நிகழ்கலைகளை, தப்பு பறைகளை முழங்கி வலம் வந்த நினைவுகளை அல்தூசர் கிளறிவிட்டார்.

திருச்சி கூட்டம் ஒன்றில் staging Change என்கிற புத்தகம் குறித்து  பேசிவிட்டு , நாடகம் முடித்த தோழர்களுடன் கீழ் இறங்கி வந்தபோது, எங்களைப் போலவே  இளம் வயதில் இருந்த   அன்றைய தொலைபேசி ஊழியர் - இன்றைய பேரா ராஜன் குறை அவர்கள் அப்புத்தகம் குறித்து, நிகழ்கலை குறித்து என்னுடன் பேசினார்  என்று நினைவுச் சொல்கிறது. 

சரி நினைவிலிருந்து விடுபட்டு , அல்தூசர் இந்த   அத்தியாயத்தில்  பேசும் சில வரிகளை  தந்துள்ளேன். பூரண சந்திரன் நன்றாக மொழியாக்கம் செய்து உதவியுள்ளார். இனி  அல்தூசர் வரிகள்.. என் வசதிக்கேற்ப..

“ ஒன்றுபடுதலில் பார்வையாளர்கள் கதாநாயகனின் விதியோடு சேர்ந்து தொங்குகிறார்கள்.. கதாநாயகன் இல்லை என்றால் ஒன்றுபடுதல் இல்லை . கதாநாயகனை ஒடுக்குதல், பிரக்டின் பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்துடன்- வெகுமக்கள் தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள், கதாநாயகர்கள் அல்ல- தொடர்புபடுத்தப்படுகிறது” 

“ கதாநாயகனின் காலத்தன்மைதான் முழுமையான காலத்தன்மை. பிற எல்லாம் அதற்குக் கீழ்பட்டவை. அவனது எதிரிகளும் அவனது சமத்திற்கு ஆக்கப்படுகிறார்கள். அவனது எதிரிகளாக இருக்கவேண்டும் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். அவனது காலத்தை அவனது லயத்தை அவர்கள் வாழ்ந்தார்கள், அவனை சார்ந்திருந்தார்கள். அவர்கள் வெறும் சார்பினராகத்தான் இருந்தார்கள்.”

“ எதிரி உண்மையிலேயே அவனது எதிரிதான். மோதலில் கதாநாயகன் எதிரிக்கு சொந்தமானவன். எதிரியும் கதாநாயகனுக்கு சொந்தமானவன். எதிரி, நாயகனின் இரட்டை, அவனின் பிரதிபலிப்பு. அவனது மறுதலை, அவனது இரவு, அவனது சபலம் . அவனது சொந்த நனவிலி அவனுக்கு எதிராக திரும்பிய நிலை…”

“ பிரக்ட் நாடகங்களில் நாயகர்களை இல்லாமல் செய்துவிட்டதால் நாயகர்கள் மறைந்துவிடவில்லை. …நாடகம் அவர்களை சாத்தியமற்றவர்களாக்குகிறது. அவர்களையும் அவர்களின் பிரக்ஞையையும் அதன் போலி தர்க்கத்தையும் அழிக்கிறது…கடவுளும் இல்லை சீசரும் இல்லை…. பார்வையாளர் நாடகத்தின் உயரிய நடுவராக இருக்க முடியாது. நாடகமும் தனது சொந்தக் கதைக்குள் இறுதித் தீர்ப்பை உள்ளடக்க இயலாது “

“ நாம் முதலில் ஒரு நிறுவனத்தால், நிகழ்த்தலினால் இணைக்கப்படுகிறோம்… நமது  ஒப்புதலின்றி நம்மை ஆட்சி செய்கின்ற அதே தொன்மங்கள், அதே கருப்பொருள்கள்..    இன்னும் அதே ரொட்டிகளை உண்கிறோம். அதே கோபங்கள், கலகங்கள், அதே பைத்தியக்காரத்தனம்…எந்த வரலாற்றினாலும் நகர்த்தப்படாத ஒரு காலத்தின் முன் அதே விழுந்து  கும்பிடுதலும் இருக்கவே செய்கிறது.”

“ அதே தூசி நம் கண்களில், அதே மண் நம் வாய்களில். நமக்கும் அதே விடியலும் இரவும் தான்..அதே வரலாற்றைத்தான் பகிர்ந்துகொள்கிறோம். நமது நனவிலிகள்….”

இப்போது இந்தியாவில் நடக்க இருப்பது தேர்தல் - நாடகமல்ல என மனம் நம்பட்டும்



சில நேரங்களில் , ஓ இந்த புத்தகம் தமிழில் வந்துவிட்டதா என ஆசை பொங்க வாங்கி படிக்க ஆரம்பிக்கும் போது சற்று ஏமாற்றம் கிடைக்கும் அனுபவம் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்பட்டிருக்கலாம்.

வலுவான சிக்கலான கோட்பாட்டு புத்தகங்களில் மட்டுமல்ல, சில எளிய புத்தக மொழிபெயர்ப்புகளிலும் கூட இந்த அனுபவங்கள் ஒருவருக்கு கிடைத்திருக்கக்கூடும்.   

அட போங்கப்பா ஆங்கிலத்திலேயே மல்லுக்கு நின்றிருக்கலாம் என்ற எண்ணத்தை லூகாக்ஸ் புத்தகம் ஒன்றும் அல்தூசர் புத்தகம் ஒன்றும் எனக்கு கொடுத்தன.

அல்தூசரின் for Marx யை தொட்டும் விட்டும் நிறுத்தாமல், ஆங்கிலத்திலேயே படித்திருந்தால் கொஞ்சம் அஜீரணம் குறைவாக ஒருவேளை இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது. எனது படிப்பு குடலின் சக்தி அவ்வளவு தானோ..கஷ்டப்பட்டு அரைக்கப்பார்த்தும் கவளங்கள் அரைபடாமல் போனது.

“மார்க்சுக்கு ஆதரவாக “ - மொழி பெயர்ப்பாளர் என்ன செய்வார்..அவர் உழைப்பைத்தான் கொடுக்க முடியும். பிராக்கட்டு பாராக்களைக் கூட அட்சரம்  அட்சரமாக மொழி பெயர்த்து தான் தரவியலும். எனக்கு செரிக்கனுமே.. என் படிப்பு குடலுக்கு என்ன பிரச்சனையோ..

ஒரே அஜீரணம்…

முடிஞ்சால் படிங்க  , யார் கண்டா- உங்களுக்கு செரிமான சக்தி கூடுதலா இருக்கலாம்



Organisation

 எந்த ஓர் அமைப்பிலும் விமர்சகர்கள் இருப்பர். அவர்கள் இருவகையாக தொழிற்படுவர். அமைப்பின் தலைமை வைத்திருக்கக்கூடிய கருத்துக்கள் மற்றும் எடுக்கக்கூடிய முடிவுகள் குறித்து அவர்களிடம் விமர்சன பார்வையிருக்கும்.

ஒருவகையினர் passive critics ஆக இருப்பர். பிரச்சனையின் வேறு ஒரு பக்கத்தை, தலைமை பார்க்க விரும்பாத கோணத்தை- தாங்கள் மிக முக்கியமான ஒன்று எனக் கருதும் பக்கத்தை முன் வைக்கிறவர்கள். இவர்களுக்கு அந்த அமைப்பில் position power என்பது நோக்கமாக இருக்காது. தன் கருத்து பெரும்பான்மையினரிடம் செல்லாது என அறிந்தும் , சொல்வது தேவை, அவசியம் எனக் கருதி தன் பார்வையை வைத்து வருபவர்கள். Convert செய்யமுயலுமா எனப்பார்ப்பவர்கள். Destroying organisation or replacing the leadership or downgrading their image என்பதை ‘அஜண்டா’ வில் இவர்கள் வைத்துக்கொள்வதில்லை. அவர்களின் ‘லிமிட்டேஷன்’ உணர்ந்து தான் அறிந்த அளவில் சொல்லிவிட்டு obscure - ஆக ஒதுங்கிவிடுவர். இப்படிப்பட்ட விமர்சகர்கள் அமைப்பின் உள்ளும் , வெளியிலும் கூட இருப்பர். இருக்கின்ற தலைமையின் ஆற்றலை இவர்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை. மாற்றம் வந்தால் அதற்கான over claim இவர்களிடம் இருக்காது.
மற்றொருவகை விமர்சகர்கள் active role ல் இருப்பர். உள்ளும் வெளியிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கலாம். இவர்கள் தலைமைக்கு மாற்றான கருத்தை உணர்ந்தால் அதை வலிமையாக எடுத்துச் செல்ல விழைபவர்கள். தலைமையின் தவற்றை சுட்டிக்காட்டுவது என்பதுடன் அவர்களால் நிற்கவியலாது. அம்பலப்படுத்துவது என்பது அப்புறப்படுத்திடவே என்ற கண்கொண்டு கடும் பிரயத்தனங்களை செய்பவர்கள். கருத்தில் மாற்றம் கொணரமுடியாவிட்டாலும், தலைமை மாற்றத்தை நிகழ்ச்சி நிரலில் ஏற்றிக்கொள்பவர்களாக இவர்கள் செயலாற்றுவர். இவர்களிடம் கோபம் ஆக்ரோஷம் குடியேறும். தீவிர எதிர்வினைக்குரிய மொழியாடல் இருக்கும். இவர்கள் தலைவர்கள் போலவே வெளிச்ச வளாகத்தில் இருக்க முயற்சிப்பர். சிறு மாற்றம் வந்தாலும், தங்களால் தான் என்கிற over claim இவர்களிடம் இருக்கும். இப்படிப்பட்ட activists தீவிரம் அதிகமாகும் போது அமைப்பு சிக்கல் அதிகமாகலாம். அரவணைத்துப் போகும் ஜனநாயக முறைகளை மதிக்கத் தெரிந்த Matured Leadership இல்லாவிடில் அமைப்பு உடைவுகளை காணும். இரு அமைப்பு , இருவேறு தலைமை எனப் பிரிந்து ஒன்றின்மேல் ஒன்றின் தாக்குதல் சில காலம் நீடிக்க வேண்டிய நிலை உருவாகலாம்.
வாழ்க்கை எவரையும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி செயல்பட விடுவதில்லை. சூழலின் தாக்கம் பொறுத்து, ஒன்று அவரிடம் ஏற்படுத்தும் influence பொறுத்து தான் ஒருவர் வினையாற்றலும் அமைகிறது. வாழ்வை விமர்சனங்கள் செய்தே கடந்து போகிறவர்களும் உண்டு. விமர்சனங்களை பெரும்பாலும் தாங்கியே கடந்து போகிறவர்களும் உண்டு. விமர்சனம் என்கிற ஒன்றை பெரும்பாலும் செய்திடாமல் , எதிர்பார்ப்பு அல்லது ஏமாற்றம் என்பதை மட்டுமே அடைந்து , எவரோ ஒருவரை நம்பியே வாழ்க்கையை கடத்தியவர்களும் இருப்பர்.
பலருக்கு எவராவது ஒருவர் ஹீரோவாக திசை காட்டவேண்டும். சிலருக்கு தானே ஹீரோவாக திசையாக இருக்க வேண்டும். எங்கும் என் திசை - வேறு திசை ஏன் என்கிற உச்சத்தில் ஒருஹீரோ மாபெரும் வில்லனாக உருமாற்றம் பெறுகிறான். வீடு அமைப்பு நாடு எங்கும் இது பொருந்தும்.
இந்தியாவில் ஹீரோ கொடூர வில்லனாகும் உருமாற்றம் நடந்து வருகிறது என்றே தோன்றுகிறது. புதிய ஹீரோ எவரோ யாரோ .. மக்கள் வதம் எப்படி அமையுமோ …

தேவுடு நரசிம்ம சாஸ்திரி

 தேவுடு நரசிம்ம சாஸ்திரி அவர்கள் எழுதிய கன்னட நாவல் மகாபிராமணன் . இறையடியான் மொழிபெயர்ப்பில், சாகித்ய அகாதமி தமிழில் 2012ல் கொணர்ந்த நாவல்.

கெளசிகன் என்கிற சத்திரிய பேரரசன் தன் தவ வலிமையால் விஸ்வாமித்திரராகி வசிட்டரையும் விஞ்சப் போராடி மகாபிராமணனாகிறார் என்கிற கதையாடலை ஆங்காங்கே சில தெறிப்புகளுடன் தேவுடு நரசிம்மர் நகர்த்துகிறார். தமிழில் வந்து ஒரு மாமங்கம் ஆகிவிட்டது.
ரொம்ப raw ஆக வளர்ந்த என் மனம் எப்போதாவது நாவல் பக்கம் எட்டிப்பார்க்கும்.
தேவுடு எழுத்திலிருந்து
பிராணன் சொன்னான் - இதோ இவனே வாயுதேவன்! உடல் முழுவதுமாக பரவி அதனைத் தரித்துக்கொண்டுள்ள திரிவிக்கிரம வடிவினன். இவன் இருப்பதால்தான் உடலில் வெப்பம் இருக்கிறது. இவன் எந்தப் பகுதியை விட்டு நீங்கினாலும் அங்கே குளிர்ந்து அனைத்து செயற்பாடுகளும் சூன்யமாகிவிடும்.
இவன் அபான தேவன். உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் பணி இவனுடையது.இவன் செயலை ஒரு வினாடி நிறுத்திவிட்டால் எமதேவன் எடுத்துச் சென்றுவிடுவான்.
நான் மத்யமன். அபானம் அனைத்தும் என்னுடையது. நீ மூச்சு வாங்கி விடும்போது மூச்சாக இருப்பது அபான தேவனுடையது. உயிரை உள்ளே இழுப்பது நான். யோகத்தின் மூலமாக என்னை ஆராதனை செய்து சஞ்சலமுடைய என்னை அமைதிப்படுத்தின் மனபலம், புத்திபலம், உடல்பலம் அதிகரிக்கும். நான் சினந்தால் நோய்.
இவன் உதான தேவன். உன்னுடலில் நடந்து வரும் ஒலியின் வேலைகள் அனைத்தும் அவனுடையது. அவனே உனக்கு ஜெகநாத தேவனின் தேர். எங்களின் இன்ப துன்பங்களை எடுத்துரைப்பவன் இவனே. இவன் இல்லையெனில் காது செவிடாகும். புலன்கள் ஆற்றல் இழக்கும்.
இவன் சமான தேவன். எல்லோரையும் விட சிறியவனாயினும், வாமனைப் போல ஒளிமயமானவன். வெளியிலிருந்து வரும் எதுவும் பகையாகாமல் அனைத்தையும் செரித்துக் கொண்டு, அவற்றை உணவு இரசமாக்கி, உடலில் எதுஎது யாருக்கு வேண்டுமோ அதனையே கொடுப்பவன். அனைவரையும் காப்பாற்றி நிலையாக இருப்பவன்.
ஐவரையும் சொந்தமாக்கிக்கொண்டு உடலில் எப்போதும் ஓய்வின்றி நடந்து வரும் படைப்பின் சுருதி லயத்தின் செயல் அனைத்தும் நம்முடையதென தெரிந்து செய்வதே பஞ்சாக்னி..
தேவரீர் (என்றான் விஸ்வாமித்திரன்) இந்த பஞ்ச பூதங்கள் அனைத்தும் என்னுடலில் நடைபெறுமாறு ஆசிர்வதிக்கணும்…

தேர்தல் திருவிழா

 Theory of Justice - தேர்தல் திருவிழா

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கை -மானிபெஸ்டோவை வெளியிட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் தத்துவத்தில் புகழ் வாய்ந்த ஆக்கமாக ஜான் ரால்ஸ் அவர்களின் The Theory of Justice வெளியானது. நியாய கோட்பாட்டின் வழியிலான அரசியல், பகிர்வு நியாய வெளியின் விஸ்தரிப்பு என்பதை ரால்ஸ் மட்டுமல்ல அமர்த்யா சென், ழான் டிரீஸ் உள்ளிட்ட பலர் தொடர்ந்து பேசி வந்தனர்.
காங்கிரஸ் இந்த நியாயம் பேசும் பத்திரம் மூலம் தனது வாக்குறுதிகளை தந்துள்ளது. சிலர் கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ போல் உள்ளது என்றும், திராவிட மாடல் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் விவரித்து வருகின்றனர். பாஜகவும் தனது அறிக்கையை விரைவில் வெளியிடலாம். வெளியிட்ட பின்னர் பார்க்கலாம்.
சில கட்சிகள் மட்டுமே தங்களால் அறுதி பெரும்பான்மையை பெறமுடியும் எனப் பேசிவருகின்றனர். தேசிய அளவில் பாஜக அப்படி முன்வைப்புகளை செய்து வருகிறது. மாநில அளவில் திமுக, திரிணமுல் அதனை செய்து வருகின்றனர். தேசிய அளவில் தங்களால் அறுதி பெரும்பான்மையை பெறமுடியும் என்ற உரிமை கோரலை காங்கிரஸ் வைக்காவிட்டாலும், இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெறும் என்கிற கோரலை முன்வைத்து வருகின்றனர்.
நாடாளுமன்ற இடங்களில் பாதிக்கு மேல் ஒருவேளை பாஜகவால் வரமுடியாமல் போனால், அவர்கள் single largest majority party என்கிற வகையில் ஆட்சி அமைக்க உரிமை கோருவர். ஒருவேளை இந்தியா கூட்டணி ( தனியாக ஜனதா கட்சி போல ஒரே கட்சியாக அமைத்துக்கொள்ளாவிட்டாலும்) ‘கூட்டணி சர்க்கார் ‘ அமைக்க பெரும்பான்மை எண்ணிக்கையை காட்டி உரிமை கோருவர். அப்போது குடியரசு தலைவர் செய்யப்போவது என்பது விவாதமாகலாம்.
தேர்தல் , மக்கள் வாக்களிப்பு என்பது துல்லியமான எல்லாகணிப்புகளையும் விஞ்சக் கூடியதாகவே இருக்கும். தலைவர்களும் அவர்களது கட்சிகளும் எண்ணுவது போல வாழ்வு அமையவும் கூடும் . ஆட்சி அதிகாரம் பெறவும் கூடும். சிலநேரம் அவர்கள் நம்பிக்கைக்கு பெருத்த அடி விழுவது போலவும் முடிவுகள் அமையலாம்.
தேர்தல் கூட்டங்களை வைத்தெல்லாம் வாக்காளர் மனதை கணிக்க முடியாது. கட்சி உறுப்பினர்கள் கூட சில நேரங்களில் வாக்காளர் மனநிலைக்கு போய்விடுவர். காசு பணம் விளையாடவே செய்யும். அதை கொடுப்பவர்களிடம் மனசாட்சி என்றெல்லாம் பேசுவது எடுபடாமல் போகும். அது பகிரங்கமாகவும் , முடியாவிட்டால் மிக இரகசியமாகவும் தொழிற்படும். வாங்குகிறவர்களிடம் மனசாட்சி பேச்செல்லாம் எடுபடாமல் போகிறது. அது உரிமை போல் பார்க்கப்படுகிறது.
தோற்கடிக்கப்பட முடியாதவர் என எவரும் மக்களிடம் சவால் விட முடியாது என்பதே அனுபவமாக இருக்கிறது. உலகம் இந்த 18 வது தேர்தலையும் மிக கவனத்துடன் பார்த்து வருகிறது. இந்திய ஜனநாயகத்தின் நடனம் நளினமாக இருக்குமா, பேய்க்கூத்தாகிவிடுமா என்பதை அரசியல் வல்லுநர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.
கடைசி மனிதனுக்கும் வாய்ப்பும் வாழ்க்கையும் என்பதை நோக்கிய பயணமா- சிலருக்கான புல்லட் ரயில் விரைவு வளர்ச்சியா என்பது கடந்த பல தேர்தல்களைப் போல பேசு பொருளாகி , தேர்தலுக்கு பின்னால் தேய்ந்து ஓய்ந்து போவதை பார்க்கமுடிகிறது. இங்கு அரசியலே trickle down theory க்கு தன்னை ஒப்படைத்துக்கொண்டே பயணிக்கிறது. Evolution என்பதை புரிந்துகொள்ளலாம். வளர்ச்சி என்றாலே கூடுதல் marginalisation என்பதானால் எப்படி அது ‘சப்கா விகாஸ் ‘ ஆகும்…
75 ஆண்டு இந்திய தேர்தல்களும் அதன் பயணத்தையும் ஒன்றுமேயில்லை எனச் சொல்ல முடியாது என்றாலும், இந்தியா British Raj to Billionaire Raj பாட்டையில் செல்கிறதே…எந்த தேர்தல் இதை மனம் கொள்ளும்..
இந்திய சராசரி கூலி அரை ரூபாய் இருந்த போது வைஸ்ராய்க்கு ரூ 750 சம்பளமா என காந்தி கேட்ட கேள்விக்கு பதில் காணப்படாத தேர்தல்களாக 17 கடந்துவிட்டன. 18 வது தேர்தலும் அதே பழகிய பாதையில்தான் செல்ல விரும்புகிறது. வேட்பாளர் சொத்து பத்து விவரங்களும், கிரிமினல் பின்புலங்களும் வழக்கம் போல ADR போன்ற அமைப்புகளால் திரட்டி தரப்படும் . அது சிலரிடம் விவாதப் பொருளாக நடந்து, பின்னர் ஏதுமே நடைபெறாதது போல் கடந்து போகும்.
திரு மோடி அவர்கள் தொடர்ந்து பேச ஆர்வத்துடன் இருக்கலாம். Tired ஆகாமல் பயணித்துக் கூட பேசலாம். கேட்கிறவர் எனக்கு tired ஆகிறது என தேர்தலில் சொல்ல விரும்பி விட்டால் நிலைமையில் சற்று மாறுதல் வரலாம். பிளவு சத்தம் மட்டுப்படலாம்.
ஆனால் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இது ideological war என சொல்லப்படுகிறது. கம்யூனிஸ்ட்கள் நாடாளுமன்றத்தில் போதிய இடங்களை பெறமுடியாமல் இருந்த நிலையிலும் , நாட்டின் அனைத்து கட்சிகளையும் அவர்கள் சோசலிசம் என பேச வைத்தனர். மே தினம் கொண்டாட வைத்தனர். பகத்சிங் இன்குலாப் என முழங்க வைத்தனர்.
இன்று வலது அரசியல் தன் முழக்கங்களை ஆழமாக்கியுள்ளது. அதன் செல்வாக்கு சாயல்களை பல்வேறு கட்சிகளிடம் படர வைத்துள்ளது. தாமும் சிவ பக்தர், இந்துக்களுக்கு நாங்கள் விரோதியா என்கிற defence யை செய்ய வைத்துள்ளது. குங்கும விபூதியுடன் வருகிற அரசியல்வாதிகளை அதிகப்படுத்தியுள்ளது. மைனாரிட்டிகளை போட்டு ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்கிற விவாதங்களை கட்சிகளிடம் உருவாக்கியுள்ளது. வலதின் ideologyக்கு வாய்ப்பு கொடுக்காத தொலைக்காட்சி விவாதங்கள் அநேகமாக திராவிட மாடல் தமிழ்நாட்டில் கூட இல்லை. அவர்களை தவிர்க்க விரும்பவில்லையா- தவிர்க்க முடியாதவர்களாகியுள்ளனரா ?அவர்களின் Ideological roots என்பது நடந்தேற ஆரம்பித்துள்ளது.
இந்தத் தேர்தல் அதை arrest செய்து stagnate ஆக்குமா என்கிற பதிலைத் தேடுகிறது.

Marx for Today. Marcella Musto

 இடது இலக்கியங்கள் பலவற்றை ஆகார் -Aakar வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒரு நூல்தான் Marx for Today. Marcella Musto எடிட் செய்த தொகுப்பு. நூல் 2008 ல் வந்திருந்தாலும், ஆகார் வழி இந்திய பதிப்பு 2018ல் வந்தது.

2010ல் மார்க்சை மீள் வாசிப்பு செய்வது என்பது முதல் பகுதி. அதில் 8 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கெவின் ஆண்டர்சன், பரேஷ், லெபோவிட்ஸ், காம்னியல், மஸ்டோ, டெரல் கார்வர், விக்டர் வாலிஸ், ரிக் உல்ப் போன்ற அறிஞர் பெருமக்கள் தங்கள் ஆய்வுக்கோணத்தை தந்துள்ளனர்.
இரண்டாம் பகுதி இன்று உலகம் மார்க்சை எப்படி வரவேற்கிறது என்பதை பேசும் பகுதி. இதில் 10 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவில், பிரேசிலில், ஆங்கில மொழிப் பகுதிகளில், பிரான்சில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, சீனா, தென்கொரியா, ஜப்பானில் மார்க்சியம் எப்படியான வரவேற்பை பெறுகிறது என கட்டுரையாளர்கள் தங்கள் உள்வாங்குதலை சொல்கிறார்கள். சொப்ரினா, பொய்ட்டோ- எட்வர்டோ, பிளேக்லெட்ஜ், ஹாப், ரகோனா, ஒயிட்டினென், ஹு, ஜெயாங், உசிதா போன்றவர் எழுதியுள்ளனர்.
இந்தியர் எவரும் இப்பகுதியில் எழுதவில்லை. முதல் பகுதியில் பரேஷ் சட்டோ கட்டுரை ஒன்றே ஒன்று உள்ளது. அவரும் கனடா பல்கலையாளர். இந்தியாவில் மார்க்சிய அனுபவங்கள் குறித்து- சோவியத் வழி பெறப்பட்ட மார்க்சிய புரிதல்- அதிலிருந்து விடுபடல் குறித்து மஸ்டோ ஏன் எவரிடமிருந்தும் கட்டுரை ஒன்றை வாங்கவில்லை என எனக்குத் தெரியவில்லை. அப்படி ஒரு இந்திய மார்க்சிய அறிஞர் எவரின் கட்டுரையாவது இடம் பெற்றிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது.
இதில் இடம் பெற்றுள்ள பல கட்டுரையாளர்கள் பெயர்கள் இங்குள்ள இடதுசாரிகளுக்கு அறிமுகமாக வாய்ப்பு குறைவு எனப்படுகிறது. கெவின், மஸ்டோ, டெரல்கார்வார் போன்றவர்களின் மார்க்ஸ் குறித்த எழுத்துக்கள் சிறிய அளவாவது போயிருக்கலாம்.
20 ஆம் நூற்றாண்டில் சோவியத் சோதனை அக்டோபர் புரட்சியை அடுத்து நடந்தேறியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சோவியத் கட்சி பார்வையாகவே மார்க்சியம் கடத்தப்பட்டது. அக்கட்சித் தலைமை, அறிஞர்கள் எழுத்துக்களின் மார்க்சிய புரிதல், எப்படி அவர்கள் மார்க்ஸ் பேசியதிலிருந்து மாற்றிப் பேசினார்கள் போன்ற சில அசெளகரிய அம்சங்களை இந்நூலில் கட்டுரை ஆசிரியர்கள் விவாதித்துள்ளனர்.
மஸ்டோ தனது அறிமுகத்தில் நன்றாகவே குறிப்பிடுகிறார்..
Yet there has always been a return to Marx- a new need develops to refer his work- whether the critique of political economy, the formulations on alienation, political polemics- it has continued to exercise an irresistible fascination to both followers and opponents
டெரிடா சொல்லியதை மஸ்டோ காட்டுகிறார்
It will always be a mistake not to read and reread and discuss Marx.
மார்க்ஸ் வாசிப்பு என்பதும் கூட ஒரு பழக்கம்தான். சமூக மாற்றம் என்கிற சிந்தனைக்கு, மனிதன் விழையும் நல்லெண்ண சமூகத்திற்கான , முன்கூட்டியே திட்டமிடக் கோரும் கோட்பாடு. செயலுக்கான document .
மனித வாழ்க்கையின் பாதைக்கு என எவரும் இறுதி ஆவணத்தை தரமுடியாது என்கிற limitation உடன் , மார்க்ஸ் வாசிப்புக்களை துணைக்கு வைத்துக்கொள்ள முடியும். இயற்கை- உழைப்பு - உற்பத்தி - நுகர்வில் கண்ணியமான மானுட வாழ்க்கை என்ற கனவை மனித குலத்திற்கு நெருக்கமாக்கியவர் மார்க்ஸ். இங்கு தான் மார்க்ஸ்- காந்தி என்கிற மாபுருஷர்களின் சந்திப்பு புள்ளியைக் காணமுடியும்.
மஸ்டோ தொகுப்பு நல்லதோர் முயற்சி

periyar

 தி இந்து குழுமம் தமிழ் திசையின் அடுத்த வெளியீடு வந்துள்ளது. பெரியார் குறித்த கட்டுரைத் தொகுப்பாக ‘ என்றும் தமிழர் தலைவர்’ எனக் கொணர்ந்துள்ளனர். ஜனவரி 2024 ல் வந்த இந்நூலில் 151 தலைப்புகளில், சிறிதும் பெரிதுமாக பெரியார் விதந்து பேசப்பட்டுள்ளார். பெரியார் குறித்த கவிதைகளும் இதில் அடக்கம்.

இதற்கு முன்னர் இம்மாதிரி தொகுப்புகளாக வந்த அண்ணா, கலைஞர், ராஜாஜி போன்றவைகளின் வடிவ உள்ளடக்க பத்திரிகையாளர் பாங்கிலான சோதனைகள் இப்பெரியார் நூலிலும் செய்யப்பட்டுள்ளன . 860 பக்கங்களுக்கான நூல். ஆசிரியர் அசோகன் உள்ளிட்ட, தமிழ் இந்து இளம் குழுவினர் நன்றாக உழைத்து இத்தொகுப்பைக் கொணர்ந்துள்ளனர். தமிழ் அரசியல் உலகிற்கு நல்ல தொண்டாக எண்ணி அவர்களை நாம் பாராட்டலாம்.
15 பெருந்தலைப்புகளில் பெரியார் குறித்த கவிதைகள், கட்டுரைகள் என 151 உபதலைப்புகளில் நூலை அடுக்கியுள்ளனர். பெரியார்பாதை, பெரியார் யார், பெரியார் இன்று, ஆய்வுலகப்பார்வை (யில்) , பெரியார் விரிவும் ஆழமும், அரசியலும் போராட்டங்களும், பெண்ணுரிமைக் குரல், சாதி மத எதிர்ப்பு, மொழி கலை ஊடகம், பெரியாரின் உலகம், உடன் நின்ற உறவுகள், பெரியாரும் ஆளுமைகளும், பெரியாரின் அடிச்சுவட்டில், சுயமரியாதைக் குடும்பங்கள், சுயமரியாதை சமதர்மம் என 15 பகுதிகளாக இந்த 151 தலைப்புகள் அடக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு பகுதியுமே தனித்த புத்தகத்திற்கான தன்மையுடையனத்தான். சில தலைப்புகளில் தனித்த புத்தகங்கள் வந்துள்ளன.
முதல் பகுதியிலேயே ஆசிரியர் வீரமணி மற்றும் தொல் திருமா அவர்களின் விரிவான , ஆழமான பேட்டி இடம் பெற்றுள்ளது. கலைஞர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் எழுத்துக்களும் இடம் பெறுள்ளன. இரண்டாம் பகுதியில் தோழர் எஸ் வி ராஜதுரை, ஏ எஸ் பன்னீர்செல்வன், ப திருமாவேலன், அரசு, செந்தலை கவுதமன், கலி பூங்குன்றன் உள்ளிட்டவர் பார்வை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நான்காம் பகுதியில் சுனில் கில்நானி, கார்த்திக் ராம் மனோகரன், கோராவின் பேரன் விகாஸ், அவினாஷ் பாட்டில் போன்றவர் இடம் பெற்றுள்ளனர். எழுதியவர் அனைவரின் பெயரையும் இங்கு குறிப்பிடவில்லை. பிற பகுதிகளிலும் ஏராள ஆளுமைகள், அறிஞர் பெருமக்கள், களப்போராளிகள் என பலர் எழுதியுள்ளனர்.
சிலரின் எழுத்துக்களிலிருந்து சில வரிகளாவது தரவேண்டும் எனத்தோன்றுகிறது.
ஆசிரியர் வீரமணி அவர்கள் தன் பேட்டியில் பெரியாரை உலகமயமாக்கவேண்டும், உலகம் பெரியார்மயமாக வேண்டியதின் அவசியத்தைச் சொல்கிறார்.
பெரியாருடைய தத்துவம் ஒரு சமூக விஞ்ஞானம்
பெரியார் அடிப்படையில் ஒரு மனிதநேயர். அவருக்கு முதலிலடிப்படையானது மனிதம், மனிதத் தன்மை, மனித ஒருமைப்பாடு. அவரின் கொள்கையை உற்று நோக்கினால் அவை மனிதம், சமதர்மம் என அமையும்.
என்னை இன்னொருவர் தாழ்த்தும்போது, கேவலப்படுத்தும்போது எதிர்ப்பதற்கு பெயர்தான் சுயமரியாதை. பெரியார் எந்த இடத்திலும் பொதுவெளிப் பண்பாட்டை விட்டுக்கொடுக்கவில்லை. ஒருபோதும் வன்முறையைக் கையாண்டதில்லை.
பெரியார் ஒருவர் தான் ‘நான் சொன்னாலும் நம்பாதே ‘ என்று அறிவுக்கு சுதந்திரம் கொடுத்த தலைவர். ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு ‘ என்றவர்.
சாதியை ஒழிப்பது என்பதிலே அவர் முழு வெற்றி பெறவில்லை. உடனே இடித்துவிடுவதற்கு அது கட்டிடம் அல்ல. அது மனதில் இருக்கக்கூடியது.
தொல் திருமா அவர்களின் பேட்டி
பெரியார் கடவுள் மறுப்பாளர் அல்லது பார்ப்பன எதிர்ப்பாளராக மட்டுமின்றி, சமத்துவ புரட்சியாளர் என்றே நான் நம்பினேன்.
சாதி ஒழிய வேண்டும், பெண் விடுதலை, சமூக நீதி வழியில் சமத்துவம்- இதுதான் பெரியாரின் உண்மையான நோக்கம்.
அவர் பார்ப்பனர்களை பார்ப்பனியத்தை மய்யப்படுத்தி பேசினாரே தவிர, அது சமூகத்துக்கு எதிரான துவேஷம் கிடையாது.
இந்து நம்பிக்கை வேறு. சனாதனம் வேறு. பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடு நிலையானது என்பது சனாதனம்.
அம்பேத்கர் மதமாற்றத்தை ஒரு உத்தியாகக் கண்டார். பெரியார் அத்கு தேவையில்லை- உள்ளேயிருந்து சண்டை போடுவேன் என்றார். இருவருக்கும் சமத்துவம் தான் இலக்கு. இருவரையும் சமமாக பார்க்கிறேன்.
அம்பேத்கரிய இயக்கம் என்ற வகையில் விடுதலை சிறுத்தைகள்தான் பெரியாரையும் முன்னிறுத்தி பேசிவரும் ஒரே கட்சி.
எனக்கு எப்போதெல்லாம் சோர்வு வருகிறதோ அப்போதெல்லாம், பெரியாரையும் அம்பேத்கரையும் எண்ணிப்பார்ப்பேன்.
பெரியாரிடம் உள்ள சகிப்புத்தன்மை, இடைவிடாத போராட்டம், கொள்கையில் உறுதிப்பாடு எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்ப்பனர்கள் அதிகமாக ஏமாற்றி பிழைப்பது சூத்திரர்களிடம்தான் நிகழ்கிறது என்றுதான் அவர்களை பெரியார் திரட்டினார். பெரியாரை பிற்படுத்தப்பட்ட நலன்களுக்காகவே செயல்பட்டவர் என்றோ, தலித் மக்களுக்கு எதிரானவர் என்றோ முத்திரை குத்துவது முற்றிலும் தவறான பார்வை.
திராவிடம் என்ற சொல்லைக் காப்பாற்றினால்தான் ஆரிய எதிர்ப்பு என்பதையும் தக்க வைக்க முடியும். திராவிடம் இல்லை என்றாகிவிட்டால், ஆரியம் இல்லையென்றாகிவிடும். எல்லோரும் இந்து என்றாகிவிடும். இந்து என்றாகிவிட்டால் பார்ப்பனர்களுக்கு பெரிய பாதுகாப்பு.
பெரியார் சிந்தனைகள் நூறாண்டுகாலமாக தமிழ் மண்ணில் நிலைப்பெற்றிருக்கின்றன. உழைப்பு பயன் தந்திருக்கிறது.
தோழர் எஸ் வி ராஜதுரை அவர்களின் கட்டுரை இனவாதியா பெரியார்? என்பதான விவாதமாக உள்ளது.
நெல்லூர் மாநாட்டில் பார்ப்பனரை உறுப்பினராக ஆக்கமுடியாது என பெரியார் முடிவெடுத்தார்.
நமது கொள்கைக்கும் நன்மைக்கும் விரோதமில்லா பார்ப்பனர்களுடன் அரசியல் நன்மையான காரியங்களில் ஒத்துழைக்க, ஒத்துழைப்பை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்றார் பெரியார்.
1939ல் எந்த பார்ப்பனரிடமும் தனிப்பட்ட விரோதமோ பகைமையோ கிடையாது. மனிதத் தன்மையுடன் தான் எல்லா பார்ப்பனர்களிடமும் பழகி வருகிறேன் என்றார்.
பார்ப்பனியத்தை அடியோடு ஒழிப்பது என்பது முக்கிய முதன்மையான காரியம். அரசியல் வாழ்வில் மனித தர்மம் தவிர வேறு எந்த தர்மமும் புகுத்தப்படக்கூடாது என்பதுதான் என் ஆசை எனப் பேசினார்.
1962ல் பெரியார் பேசினார் “பார்ப்பனத் தோழர்களே நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்ல..சமுதாயத்துறையில் பார்ப்பனர் அனுஷ்டிக்கின்ற உயர்வு, அவர்கள் அனுபவிக்கின்ற அளவுக்கு மேற்பட்ட விகிதம் ஆகியவற்றில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. பார்ப்பனர்களிடத்தில் மட்டுமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலும் நான் வெறுப்பு கொள்கிறேன். ..மக்கள் யாவரும் ஒரு தாய் பிள்ளைகள் ,தாயின் செல்வத்திற்கு உரிமை உடையவர்கள் என்று கருதுவாராயின் சமுதாய போராட்டமும் வெறுப்பும் ஏற்படவாய்ப்பே இருக்காது.
பத்திரிகையாளர் ஏ எஸ் பன்னீர்செல்வன் பெரியார் முழுமையான தமிழ் தேசியத்தின் அடையாளம் என்பதை விவாதித்துள்ளார். அதேபோல் ப திருமாவேலன் இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் எனக் கேட்டு தன் பார்வையை சொல்லியுள்ளார்.
மேற்கூறிய சில செய்திகள் இந்நூலின் முதல் 110 பக்கங்களில் இடம் பெற்றவை. நூல் 860 பக்கங்களுக்கானது..
மேலும் வாய்ய்புள்ளபோது பார்க்கலாம்
15-4-2024

An Intellectual Biography of B R Ambedkar- The Evolution of Pragmatism in India

 பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு என் அன்பை மரியாதையை தரும் வகையில் Scott R Stroud அவர்கள் எழுதிய 

An Intellectual Biography of  B R Ambedkar-  The  Evolution of Pragmatism in India என்கிற நூலை படிக்க ஆரம்பித்தேன்.

இந்நூல் இந்தியாவில் ஹார்ப்பர்காலின்ஸ் நிறுவனத்தால் 2023 ல் கொணரப்பட்ட நூல். ஸ்காட் ஸ்டிரவுட் அவர்கள்  டெக்ஸாஸ் பேராசிரியர், தத்துவ அறிஞர். அமெரிக்க நடைமுறைவாதத்தின் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருபவர். அம்பேத்கர் கொலம்பியாவில் படித்தபோது அவர் மிகவும் மதித்து நேசித்த ஜான் டுயி அவர்களின் pragmatism அம்பேத்கர் அவர்களிடம் எந்த அளவில் தாக்கத்தை உருவாக்கியது என்பது குறித்த ஆய்வை ஸ்காட் தந்துள்ளார்.

ராமச்சந்திர குஹா, மார்த்தா நுஸ்பாம், அனுபமா ராவ் , சுகாதியோ போன்றவர்கள் இந்நூலினை பாராட்டியுள்ளனர்.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு குடியரசாதல், அம்பேத்கரின் மகத்தான பங்களிப்பு, சட்ட அமைச்சராக செயலாற்றுதல் போன்ற புகழ் பெற்ற பின்னணியில் - 1952ல் தான் பயின்ற பல்கலைக்கு , பல நண்பர்களையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அம்பேத்கர் செல்கிறார். எப்படியும் தான் நேசித்த பேரா ஜான் டூயியை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது.  புழுதிபுயலால் அம்பேத்கர்  செல்லவிருந்த விமானப் பயணம் தாமதமாகி, அவரால் டூயியை பார்க்க முடியாமல் போனது. அம்பேத்கர் சென்றடைந்த ஜூன் 3 க்கு முன்னர் ஜூன் 1 அன்றே ஜான் டூயி காலமாகிவிட்டார். இந்த பெருத்த ஏமாற்றத்தை வருத்தத்தை அம்பேத்கர் தன் துணைவியார் சவீதாவிற்கு கடிதம் மூலம் வெளிப்படுத்தினார்.

“ I am sorry. I owe all my intellectual life to him. He was an wonderful man  என்று தன் முழு அறிவாளுமைக்கும் டூயிக்கு கடன் பட்டதை அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருப்பார்.

ஜான் டூயின் செல்வாக்கு அம்பேத்கரிடம் இந்த நடைமுறைவாதம் என்கிற அம்சத்தில் தொழிற்பட்டது குறித்து எலியனார் ஜெல்லியட், டெல்தும்ப்டே, காதம் , மீரா நந்தா போன்ற ஆய்வாளர்கள் பேசியுள்ளனர். அதை முழு ஆய்வாக கொணரும் நோக்கில், ஜான் டூயி குறித்த ஆய்வுகளில் ஈடுபட்ட ஸ்காட் , இந்நூலை ஜான் டூயி அம்பேத்கர்  intellectual connection  என்கிற வகையில் ஆய்வு செய்திட முற்பட்டுள்ளார். 

இந்நூலின் ஆய்விற்கு இந்த கேள்விகளை ஸ்காட் மனம் கொண்டுள்ளார்.

What did Ambedkar hear and read from Dewey? 

How is this reflected, changed or resisted across his body of work?

How did it influence his methods of argument? And

How might  it have informed his novel idea of social democracy and the sort of oppression- and other democracies ought to resist?

முன்னதாக அம்பேத்கர் குறித்து எழுதிய தனஞ்செய் கீர், கெய்ல் ஓம்வெத், எலியனார் , கிறிஸ்தோபர் ஜாபரிலே, அனுபமா ராவ் போன்ற பல ஆய்வாளர்களையும் குறிப்பிட்டு ஸ்காட் தன் ஆய்வை நகர்த்தியுள்ளார். அவரின் இந்தப் பிரதி எப்படி கட்டப்பட்டுள்ளது என்பதை  படிக்க படிக்க பார்க்கலாம் என நினைக்கிறேன்.

மேலும் பார்ப்போம்


ஸ்காட் ஸ்ட் ரவுட் அவர்களின் அம்பேத்கர் புத்தகமான The Evolution of Pragmatism in India- the intellectual bio of Ambedkar குறித்து முன்னர் ஒரு பதிவை தந்திருந்தேன். சற்று கடினமான புத்தகம்தான். டூயி, ரஸ்ஸல் தத்துவப் போக்குகளின் ஊடாக அம்பேத்கர் பிரதிகளை பின்னி வைக்கக்கூடிய வகையில் ஸ்காட் இந்த பனுவலை உருவாக்கியுள்ளார்.

கொலம்பியா பல்கலை அமெரிக்க கற்றலில் பேரா ஜான் டூயி  செல்வாக்கிற்கு அம்பேத்கர் எப்படி கட்டுண்டார். ரஸ்ஸல் அவர்களின் மறுகட்டுமான கோட்பாடுகள் என்கிற புத்தகத்தின் தாக்கம் எவ்வாறு அம்பேத்கரிடம் தொழிற்பட்டது என்பதை  முதல் நூறு பக்கங்களில் ஸ்காட் தெளிவு படுத்துகிறார்.

மூன்றாவது chapter Reconstructive Rhetoric, Appropriation and the strategic Use of Reference என்கிற தலைப்பில் ஸ்காட் விவாதிக்கிறார்.  எந்த அமைப்பையும் சாராமல், தன் அறிவு பின்புலத்தில் நின்று, தானும் தன்னைப்போன்ற தன் மக்களும் சமூக விலக்கல்  மற்றும் தீண்டாமை கொடுமைகளுக்கு உள்ளாவதை மாற்றி புதியவகை ஜனநாயக கட்டுமானத்தை செய்வதற்கான வழிவகைகள் குறித்து தீவிர தேடுதலில் இறங்குகிறார் அம்பேத்கர்.

அவருக்கு நல்வாய்ப்பாக, மாண்டேகு- செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களின் பொருட்டு அமைக்கப்பட்ட சவுத்பாரோ கமிஷன் அமைகிறது. தனி மனிதராக அதன் முன் அவர் அளித்த சாட்சியத்தின் பிரதியை இந்தப் பகுதியில் எடுத்துக்கொண்டு ஸ்காட் ஆராய்கிறார். மதுலிமாயி கூட சிறிய அளவில், ஆனால் சற்று விமர்சன கண்ணோட்டத்தில் அம்பேத்கர் சாட்சியம் பற்றி எழுதியிருக்கிறார்.

டூயி அவர்களின் Democracy and Education என்பதை அம்பேத்கர் நன்கு உள்வாங்கி அதன் கருத்தாக்கங்களை, இந்திய சூழல், மாற்றப்படவேண்டிய தன்மைகளுடன் அவர் எடுத்தாள்கிறார். இதை appropriation and strategic use of reference என்கிற வகையில் ஸ்காட் தனது நூலில் சுட்டிக்காட்டுகிறார். மாதிரிக்கான டூயி text , அம்பேத்கர் சாட்சிய வரிகளை நாம் ஸ்காட்டிலிருந்து எடுத்துக்காட்டலாம்.

முதலில் அம்பேத்கர் சாட்சியமாக 1919ல் முன்வைத்த வாதத்திலிருந்து ஒரு பாரா

Men live in a community by virtue of the things they have in common. What they must have in common in order to form a community are aims, beliefs, aspirations, knowledge, a common understanding or to use the language of Sociologists ,  they must be like minded.  But how do they come to have these things in common or how do they become like minded? Certainly not by sharing with another, as one would do in the case of piece of cake. To cultivate an attitude similar to others or to be like minded with others to be in communication with them or to participate in their activity. Persons do not become like minded by merely living in physical proximity, any more than they cease to be like minded being distant from each other.

அடுத்து ஸ்காட் காட்டுகிற டூயி அவர்களின் வரிகளை பார்க்கலாம். 1916ல் எழுதப்பட்டவை.

Men live in a community in virtue of the things which they have in common , and communication is the way in which they become to possess things in common. What they must have in common in order to form community or society are aims, beliefs, aspirations, knowledge- a common understanding- like minded ness as the sociologists say…

Such things cannot be passed physically from one to another, like bricks, they cannot be shared as persons would share a pie by dividing it into physical pieces. The communication which ensures participation in a common understanding is one which secures similar emotional and intellectual dispositions, like ways of responding to expectations and requirements.

அம்பேத்கர் இதில் கருத்தாக்கமாகவும் , நேரடியாக சிலவரிகளையும் எடுத்தாண்டிருப்பார்.  Emotional and intellectual dispositions என்பதை attitude என தன் பிரதியில் கொண்டுவந்திருப்பார் என ஸ்காட் சுட்டிக்காட்டுகிறார்.

டெல்தும்ப்டே அவர்களுக்கு வந்த அதே கேள்வி அம்பேத்கரும் கம்யூனிசமும் என்ற நூலை உருவாக்கும்போது எனக்கும் ஏற்பட்டது. இந்தியாவில் அப்போது இருந்த பல மார்க்சியர்களைவிட பல நூல்களை தான் படித்துள்ளதாக அம்பேத்கர் தெரிவித்திருந்தார். அவர் எந்த நூல்களை படித்து உள்வாங்கினார்..மார்க்சை அணுகினார் என என்னால் அறிந்துகொள்ளமுடியவில்லை. சோவியத் பிரதிகள் அல்லாமல் வேறு எந்த பிரதிகள் என்பதை எந்த் ஆய்வாளராவது சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.

இன்றும் புகழ் வாய்ந்த சாமிநாத சர்மாவின் கார்ல் மார்க்ஸ் நூல் அளவிற்கான தமிழ் நூல் ஏதும் வரவில்லை என்கிற எண்ணம் எனக்கும் உண்டு. ஐசையா பெர்லின், ஹரால்ட் லாஸ்கி என்கிற ஆளுமைகளின் இரு புத்தகத்தின் சாரத்தைத்தான் சாமிநாத சர்மா பிழிந்து தந்துள்ளார் என்பதை பெர்லின், லாஸ்கி படித்த பின்னர் உணரமுடிந்தது. 1939ல் வெளியான பெர்லின் புத்தக தாக்கம் சாமிநாத சர்மாவை 1942 லேயே அருமையான அறிமுக புத்தகத்தைக் கொணர வைத்தது. நேரடி மார்க்சியர்கள் அனைவரும் சோவியத் இலக்கியங்களை நம்பி மட்டுமே இருந்தபோது, சர்மா இங்கிலாந்தின் பிரதியை முழுமையாக உள்வாங்கி அற்புத நூலை தந்து சென்றார்.

எந்த நூலை அல்லது நூற்களை நாம் ref ஆக எடுத்து உள்வாங்கி நமதான கருத்தாக மேம்படுத்தி அல்லது அப்படியே வெளிப்படுத்துகிறோம் என்பதை  தன்னை தேர்ந்தெடுத்து வாசிக்க வருபவர்க்கு சொல்லவேண்டிய நெறி அவசியமான ஒன்றாக எனக்குப் படுகிறது .

ஸ்காட் போன்ற ஆய்வாளர்கள் பெருகும் போது, எவருக்கு எவரிடமிருந்த தாக்கத்தில் அவருக்கான appropriations- rhetoric அமைகின்றன என தேர்ந்த வாசகனுக்கு புலப்படும். இந்த வகையில் அம்பேத்கர் அறிவார்ந்த பயணத்திற்கான துணைகள் குறித்து இந்நூல் ஓரளவு பேசியுள்ளதை வரவேற்று வாசிக்கலாம்.


ராஜாஜியை வாசிக்கலாம்..

 ராஜாஜியை வாசிக்கலாம்..

வரலாற்று மாணவர் என்ற வகையில் ஒருவருக்கு எப்போதும் வாசிப்பு நேர்மை தேவைப்படும். தனக்கு உவப்பான விஷயங்களை கொண்டாடுவது- உவப்பில்லாத அம்சத்தை கண்ணை மூடிக்கொண்டு காணாததுபோல் நகர்ந்துவிடுவது அல்லது அதை மறைத்துவிடுவது என்பது வரலாற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டியவர் செய்யத்தகாத செயலாகும். வரலாற்றில் இடம் பிடித்த ஒருவர் குறித்த பல பக்கங்களை பார்க்கும்போதுதான் சற்று balanced மதிப்பீட்டிற்கு ஒருவரால் விருப்பு- வெறுப்பை குறைத்துக்கொண்டு வரமுடியும். எழுதுவது என்பது வெறும் Hagiography புனிதர்களின் திருச்செயல்களாக மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்பது முக்கியமானது. அதேபோல அவர்களின் தவறுகள் குறித்த வெறும் குற்றப்பத்திரிகைகளாகவும் அவை சுருக்கப்படக்கூடாது. critical appraisal- appreciation என்கிற பழக்கம் பொதுப்பழக்கமானால் சமூகம் நின்று நிதானமாக செயல்பட அப்போக்கு உதவிசெய்யும். ராஜாஜி குறித்த வாசிப்பும் அப்படித்தான் இருக்கவேண்டும்.
ராஜாஜி குறித்து அவரது பேரன் ராஜ்மோகன்காந்தி உடபட பலர் எழுதியுள்ளனர். ஆயினும் காந்தி, நேரு, அம்பேத்கர்,பெரியார் போல ராஜாஜியின் அரசியல் பொருளாதார சமூக சிந்தனைகள் ஏன் தொகுக்கப்பட்டு விவாத வெளியை போதுமான அளவு எடுத்துக்கொள்ளவில்லை என்கிற கேள்வி கூட ஏன் எழவில்லை? சிந்தித்தால் கிடைக்கும் பதில் அவருக்கான தனித்த தொண்டர்படை- பக்திகுழாம்- அமைப்பு இந்தியாவில், தமிழகத்தில் இல்லை என்பதாக அமையலாம்.
ராஜாஜி என்றால் மூதறிஞர் என்ற அடைமொழி- அரசியல் வித்தகர் என்ற பார்வை இருக்கலாம். அவரின் இராமாயணம்- மகாபாரதம் ஓரளவிற்கு வாசிக்கப்பட்டிருக்கலாம். அவர் அறிவை- சிந்தனைப்போக்கை- அரசியலை எப்படி எக்கருத்துக்களால் புரிந்துகொள்ளலாம் என்கிற விவாதம் இந்திய தமிழ் சூழலில் இல்லாதது போலவே இருக்கிறது.
தமிழகத்தில் ராஜாஜி என்றால் இந்தி திணிப்பை செய்து எதிர்ப்பை சம்பாதித்தவர்- குலக்கல்வி திட்டம் கொணர்ந்து கடும் விமர்சனங்களை பெற்றவர், சத்தியமூர்த்தி- காமராஜர்க்கு எதிராக கோஷ்டி கட்டியவர் என்பதே பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டிருக்கும். பெரியார் அவரை வாழ்நாள் முழுதும் எதிர்த்தாலும் முக்கிய தருணங்களில் அவரது ஆலோசனையை பெற்றார்அண்ணாவின் திமுக ஆட்சிக்கு வர முக்கிய காரணியாக இருந்தவர் என்பது கூட பெரும்பேசுபொருளாக இருந்திருக்காது.
தேசிய அளவில் காந்தியின் சீடர்- சம்பந்தி- அவரின் மனசாட்சி, வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகி, 1942 போராட்டத்திற்கு எதிராக இருந்தவர், பாகிஸ்தான் உருவாவதை ஆதரித்தவர், கவர்னர் ஜெனரல், நேருவை- காங்கிரசை எதிர்த்து படுபிற்போக்கான சுதந்திரா எனும் பணக்காரர்களின் கட்சியை துவங்கியவர் என்கிற செய்திகளில் அவர் நிறைந்துவிடுவார்.
ராஜாஜி விஞ்ஞானத்தை நேசித்தவர்- சிந்தித்தவர்- எழுதியவர் என்பது கூட இங்கு செய்தியாகவே இருக்கும். அவர் அறநூல்கள் குறித்து பொழிப்புரை தந்தவர். திருக்குறள், பஜகோவிந்தம் ,கீதை, உபநிடதங்களின் சாரம் என்பவற்றையும் எழுதியவர். இந்து வாழ்க்கைமுறை எனும் புத்தகம் எழுதியவர். கம்பனின் இராமாயணம் குறித்து வானொலியில் ஆங்கில உரை தந்தவர்.
புனே கம்யூனல் அவார்ட் உடன்பாட்டின்போது அம்பேத்கரும் ராஜாஜியும்தான் பேனாவை மாற்றிக்கொண்டார்கள் . அம்பேத்கர் எழுதிய What Congress and Gandhi have Done to the Untouchables என்பது பெரிதாக பேசப்பட்டுள்ளதுபோல ராஜாஜி அதற்கு பதிலாக Ambdkar Refuted என சிறு வெளியீட்டை எழுதியுள்ளார் (சந்தானம் அவர்களும் ஒன்று எழுதியுள்ளார்) என்பது கூட பொதுவெளியில் சேர்ந்து சொல்லப்படாத அறிவுச்சூழல் இருப்பதைப் பார்க்கிறோம்.
சத்யமேவ ஜெயதே என்கிற ஆங்கில தொகுப்பு - இரண்டு 1956-61வரையிலான அவரது சுயராஜ்ய இதழ் கட்டுரைகளைக் கொண்ட விரிவான 1200 பக்க அளவிலானவை. Dear Reader 1961-1972 காலத்தில் அவர் எழுதியவை- 350 பக்கங்களை கொண்டிருக்கும். Rajaji Reader 250 பக்க தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இவற்றில் அவரின் அரசியல் பொருளாதார தத்துவ சிந்தனைகள் இருப்பதைக் காணமுடியும். தமிழில் சிறு வெளியீடுகளாக அவரின் மணிவாசகம், ஆத்ம சிந்தனை, ராஜாஜி கட்டுரைகள், அச்சமில்லை, கெமிஸ்ட்ரி குறித்து திண்ணை ரசாயனம், தாவரங்களின் இல்லறம் போன்றவை இருப்பதைக் காணமுடியும்.
ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்ட நெறிகள், அரசியல் நடைமுறைகள், அரசு அதன் தன்மை, தேசிய பொருளாதாரம்- திட்டமிடுதல் மற்றும் அதன் பிரச்னைகள், கைத்தொழில்- கூட்டுறவு- ஆலைத்தொழில், மீன்பிடித்தொழில் என பல்வேறு தொழில்கள் குறித்து, வெளிநாட்டு உறவுகள், வகுப்புவாதம் எனும் நோய், நிலப்பிரச்னை, மொழி பிரச்னை , கம்யூனிசம், காந்தியும் கம்யூனிசமும், கட்சிகளும் நன்கொடைகளும், கட்சிக்குள் சுதந்திரம் என்பதாவது, சுதந்திரத்தின் சாரம், காந்தி வழியிலா காங்கிரஸ், சொத்தும் சுதந்திரமும், மய்யப்படுத்தல், யார் பிற்போக்காளர், நேருவின் மரபு, இந்திய தத்துவமும் நவீன உலகும், சமயம்- அறிவியல்- தத்துவம், பத்திரிகைகளின் பொறுப்பு, சைவம்- வைஷ்ணவம், தமிழ் எழுத்துக்கள் - கலைச்சொற்கள், தமிழ் இசை, உணவு போன்ற பல்வேறு அம்சங்களை அவர் விரிவாக விவாதித்திருக்கிறார். வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்ததென்ன என்கிற சிறு கட்டுரையைக்கூட அவர் எழுதியுள்ளார். Indian Communism என்கிற சிறு வெளியீட்டில் அவர் இந்திய கம்யூனிஸ்ட்களுடன் கடும் விமர்சன உரையாடலை நடத்தியுள்ளார். லெனினை மதுவிலக்கில் அவரது ஆணைகளை மேற்கோள் காட்டி உரையாடுகிறார்.
ராஜாஜி வாசிப்பு அவரின் 70 ஆண்டுகால பொதுவாழ்க்கை மட்டுமல்ல. அவை விடுதலை இந்தியாவின் கட்டுமான விவாதமும் கூட.



அபேதவாதம் பற்றி ராஜாஜி சிறைக்கைதிகளிடம் பேசியதை தமிழில் 1935ல் புத்தகமாக கொணர்ந்தார்கள். முந்திய ஆண்டில்தான் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை ஜெயபிரகாஷ், நரேந்திரதேவா, சம்பூர்ணானந்த் போன்றவர்கள் துவங்கியிருந்த சூழல். அவர்களை காந்தி வரவேற்றிருந்தாலும் அவர்களது வேலைத்திட்டம் குறித்து காந்தி தன் விமர்சனப் பார்வையை தந்திருந்தார். அதை கணக்கில் கொண்டு ராஜாஜி உரையாற்றியது போல் உரையை படிக்கும்போது உணரமுடிகிறது. ராஜாஜியின் அபேதவாதம் புத்தகத்தை சுதந்திர சங்கு வெளியிட்டுள்ளது. தி ஜ ர அவர்கள் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது.

அபேதவாதம் அல்லது பொதுவுடைமை வாழ்க்கை..ராஜாஜி எழுதியதிலிருந்து சில வரிகள்
பொதுவுடைமை என்பது சமத்துவத் தொழில் பிரிவினை- தனி மனிதர்களுக்குச் சொத்துரிமை கிடையாது..உலகத்தில் நடைபெறவேண்டிய சகல உழைப்பையும் உலக மனிதர்கள் யாவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுவார்கள். எல்லா மனிதர்களும் தங்கள் தேவைக்கு வேண்டிய பொருள்களை எடுத்துக்கொண்டு தன் சக்திக்கியன்ற வேலையைச் செய்வார்கள். பொதுவுடைமை ராஜ்யத்தில் இது என் வீடு, என் பணம், என் மகன்/மகள்/பேரனுக்குப் போய்ச் சேரும் என்றெல்லாம் சொல்லக்கூடிய சாமான்கள் இருக்கமாட்டா. ..தனி மனிதனுக்கு சொத்தே இல்லாத உலகத்தை உருவகம் செய்து பார்க்க இயலாமற் நமக்குப் போகிறது..
தண்ணீர் விஷயத்தில் நதியும் ஏரியும் யாவருக்கும் உபயோகமாகின்றன- பொதுவாக நிர்வகிக்கப்படுகின்றன. தபால் போக்குவரத்து ஊழியம் சமூகம் பூராவுக்கும் பொதுவாய் நடைபெறுகிறது. ஒவ்வொரு மனிதனிடமும் கடிதம் போய்ச் சேருகிறது. இவ்வேலையை ஜனசமூகம் சேர்ந்து செய்யவில்லையா. இதே மாதிரியே சகலமான செளந்தரியக் காட்சிகளையும் எல்லோரும் ஐக்கியமாய் அனுபவித்து இன்புறும் வண்ணம் பொதுவில் நிர்வகிக்க முடியும்- அது சாத்தியமேயாகும்.
பொதுவுடைமை ராஜ்யத்தில் ஒவ்வொருவனும் தன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் சொத்தை தேசத்தின் தர்மகர்த்தாபோல் பரிபாலனம் செய்வான். தன் சொத்தென்று நினைத்து நடத்த மாட்டான்..
சகல சொத்தையும் தேசம் முழுவதற்கும் சொந்தமாக அதாவது பொதுவுடைமையாகச் செய்து விடுவதால் சொத்து அழிவடைந்து நாசமாய்ப் போய்விடாது.
பலாத்காரம் என்பது பொதுவுடைமைத் தத்துவத்தில் ஒரு முக்கிய அம்சமல்ல. ருஷ்யாவில் பலாத்காரத்தை உபயோகித்தார்கள்; அது ஒரு வழி. ஜனங்களில் மிகப்பெரும்பான்மையானவர் நம் கட்சியில் இருப்பார்களானால் நாம் பலாத்காரத்தை உபயோகிக்க வேண்டிய அவசியம் நேராது. சொத்து விஷயத்தில் மகாத்மா காந்திக்கும் பொதுவுடைமைவாதியைப் போலவே அபிப்பிராயங்கள்். ஆனால் பலாத்காரம் உபயோகிப்பதை அவர் வெறுக்கிறார்.
பொதுவுடைமைத் தத்துவம் ஈஸ்வரனின் கருணையில் நம்பிக்கை கொண்டது..தனிமனிதர்களுக்கு சொத்துரிமை இருந்தால்தான் உலகம் நடக்கும் என்றும் பொதுவுடைமை சரிப்பட்டு வராது என்றும் சொல்லுபவன் கடவுளிடமே நம்பிக்கையில்லாதவன்..எல்லாரும் சுகமாய் வாழ்வதற்கு இந்த உலகம் போதாது என்றும் சிலரே இதில் சந்தோஷமாய் வாழமுடியும் என்றும் நினைப்பவன் அவன். அது நாஸ்திகம்.
பொதுவுடைமை ராஜ்யத்தை உடனே ஸ்தாபித்துவிட முடியாது; சிறுக சிறுகத்தான் ஸ்தாபிக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு தொழிலையும் பொதுவுக்கு மாற்றி வந்தால் கடைசியில் சகல தொழிலுமே பொதுநிர்வாகத்தின் கீழ் வந்துவிடும்.
எந்தக் காரியம் அவசியமாகவும் கஷ்டமானதாயுமிருக்கிறதோ அந்தக் காரியமெல்லாம் எந்தக் காலத்திலும் கெளரவிக்கப்படும். தற்போது அசாத்தியமாய் இருப்பவை பொதுவுடைமை ராஜ்யத்தில் சாத்தியமாகிவிடும். இந்த வேலையை இந்த பிறப்பினர் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டார்கள். பிளஷவுட் கக்கூஸ் ஓர் ஏழையின் வீட்டில்கூட ஏற்பட்டுவிடும்.
பொதுவுடைமை வரும்வரை நீங்கள் காத்திருக்கவேண்டியதில்லை. தற்போதைய வாழ்க்கை முறைையில் கூட தோட்டிகள் இல்லை- தத்தம் வேலையை நீங்களே செய்துகொள்ளவேண்டியதாய்த்தான் நேரப்போகிறது..அதற்கென்று தனி ஜாதி இருக்கப்போவதில்லை. பொதுவுடைமை வாழ்க்கைக்கு முதற்படி மனிதன் வாழ்க்கையிலே மிக அவசியமான தோட்டி வேலைதான். இதை நீங்கள் கவனிக்காவிட்டால் ஒரு ராஜங்கத்தை உங்களால் நடத்த முடியாது.
பொதுவுடைமை ராஜ்யத்தில் உடல்நோய் மாத்திரமல்ல, மனநோய்களைப் பற்றியும் கவனிக்கப்படும். சிடுமூஞ்சித்தனம், எப்ப பார்த்தாலும் குறை சொல்வது, அடிப்பதில் ஆசை கொண்டவன் போன்ற துர்க்குணங்கள் படைத்த மனிதர்களுக்கு இல்வாழ்க்கை தகுதியில்லை என்றே முடிவு செய்யப்படும்.
போல்ஷ்விசமும் பொதுவுடைமையும் ஒரே விஷயம் போல இவ்விஷயங்களை நான் சொல்லியுள்ளேன். நான் சொன்னது பலாத்காரத்தின் மூலம் ஸ்தாபிக்கும் பொதுவுடைமை ராஜ்யத்தைப் பற்றியல்ல. கல்வி, அமைதியான சீர்திருத்தம் மூலம் ஸ்தாபிக்கும் பொதுவுடைமை ராஜ்யத்தைப் பற்றியே..பலாத்காரத்தை உபயோகித்தால் லட்சியம் தள்ளிப்போய்த் தாமதமே ஏற்படும் என்று தான் தோன்றுகிறது”
May be an image of 1 person and eyeglasses
All reactions:
Saravanan Subramanian, Arjunan Arjunan and 11 others