https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, September 27, 2019

Contractors and the Principal Employer both failed


Contractors and the Principal Employer both failed


When Contractors and the Principal Employer both failed to pay the wages to the laborers within the prescribed period what is the remedy? How to regulate the system if the system going to sustain in BSNL?
The Existing Provisions of 1970 Contract Labor Act are incorporated in the New code Bill namely ‘The Occupational safety, Health and Working Conditions code 2019 ( Bill No. 186 of 2019)”. The arrangement of clauses regarding contract Laborers is given in the Chapter 11 as special provisions in that code.
The other Code ‘The code on wages issued by Law Ministry on 8th Aug 2019’ also speaks of Contract laborers and Payment of wages
In the OSH Code 2019 the following are the provisions regarding the responsibility of payment of wages
55. (1) A contractor shall be responsible for payment of wages to each contract labour employed by him and such wages shall be paid before the expiry of such period as may be prescribed by the appropriate Government.
(2) Every contractor shall, make the disbursement of wages referred to in sub-section (1), through bank transfer or electronic mode and inform the principal employer electronically the amount so paid by such mode: Provided that where it is not practicable to disburse such payment otherwise than in cash, then, it shall be disbursed in the presence of a representative duly authorised by the principal employer and it shall be the duty of such representative to certify the amount so paid as wages in such manner as may be prescribed by the appropriate Government
(3) In case the contractor fails to make payment of wages referred to in sub-section (1), within the prescribed period or makes short payment, then, the principal employer shall be liable to make payment of the wages in full or the unpaid balance due, as the case may be, to the concerned contract labour employed by the contractor and recover the amount so paid from the contractor either by deduction from any amount payable to the contractor under any contract or as a debt payable by the contractor.
 (4) The appropriate Government, in the event the contractor does not pay the wages to the contract labour employed by him, shall pass the orders of making payment of such wages from the amount deposited by such contractor as security deposit under the licence issued by the licensing officer to the contractor, in the manner as prescribed by the appropriate Government
Our Case In BSNL
In the BSNL the question is who is the Principal employer- GM of respective SSAs or CGM or CMD?
As PER THE EXISTING ACT or as per the proposed CODE 2019
A contractor shall be responsible for payment of wages to each contract labour employed by him.
If the Contractor fails to pay wages as per agreed tender conditions within the prescribed period , the Principal Employer is liable to make the payment (the wages) directly  to the laborers  as the establishment is having the copy of muster roll.
What is the prescribed period?  As per the Payment of wages Act it is before the expiry of 7thday / 10th day.
In BSNL every contractor is failing every month to make payment before these dates. The Principal employer is also failing every month and not making payment directly to the laborers as per the GOI act.
 If GM is the Principal Employer, he has to seek fund by bringing the failure of Contractors to the notice of His Higher-ups like CGM/CMD in order to make payment directly to the laborers as per the directions of the Act?
What is the practice going on?
Contractors of BSNL   are giving claim bills without taking any responsibility of payment and waiting for fund from BSNL. In turn BSNL SSAs are issuing pay orders without checking the responsibility of Contractors regarding payment and dues like PF etc. CGM office is projecting fund in the appropriate head. ND CO is failing to clear funds stating the financial crisis. MOC in parliament is reporting that in BSNL priority is for Employees payment and for statutory dues.  Settlement of Contractors Bills is secondary only.
If that fellow contractor failed, why the BSNL management is sending money to his account as per his claim bill after some months? Who can instruct that ‘Gentleman’ to spend the money deposited in his account as per his claim to pay the labors. Whether PF office is accepting his delayed PF remittance?. After money deposited how can you tally in what way he spends money?
Whether payment due to labour is statutory in nature or not as per the acts?
The settlement to contractor’s bills may not be statutory as MOC recorded. ‘When contractor failing his responsibility to pay it then the principal employer is liable to pay it’ means what.. Is it not statutory? The failure of awareness of the provisions of the act and the absence of moral compass right from the contractors to concerned authorities are the causes of severity of the issue
Whether the LEO/RLC is monitoring?
The Enforcement Officers like LEO/RLC is failing to inspect the BSNL offices and checking the records and taking appropriate actions, even after unions bringing the ordeal of CL  due to nonpayment months together
Why not CLMS in BSNL?
CLMS- Contract Labor Management system is a web based system designed by Coal ministry and followed by NLC. The software module is to digitize the work environment. The CLMS will provide all the details about the system like contractors, their licensing, labour, payment, work order details etc. Unfortunately the ministry framing the Digital communication policy and celebrating Digital India is not following and not directing BSNL and MTNL to create one such software like CLMS. Unfortunately this has not become the demand of any stakeholders.



Monday, September 23, 2019

வங்கித் தோழர்கள் போராட்டம்




                    வங்கித் தோழர்கள் போராட்டம்
-    ஆர்.பட்டாபிராமன்


வங்கிகள் இணைப்பு யோசனை இருக்கிறதா என்கிற கேள்வி மக்கள் அவையில் ஜூலை 8 2019ல் கேட்கப்பட்டதற்கு அரசு தந்த பதில்?
The Banking Companies( Acquisitionand Transfer of Undertakings) Acts of 1970 and 1980 provide that the CentralGovernment,in consultation with the ReserveBank of India  
(RBI), may make a scheme, inter alia, for the amalgamationof any nationalized bank with anyother nationalised bank or any other banking institution. Various committees, including Narasimhan Committee(1998) constituted by RBI, Leeladhar Committee(2008) chaired by RBI Deputy Governor, and Nayak Committee (2014) constituted by RBI, have recommended consolidation of Public Sector Banks(PSBs) given underlying benefits /synergies. Taking note of this and potential benefits of consolidation, Government, with a view to facilitate consolidation among PSBs to create strong and competitive banks, serving as catalysts for growth, with improved risk profile of the bank,approved an approval framework for proposals to amalgamate. PSBs throughan AlternativeMechanism(AM).No proposalis presentlybefore the AM for its consideration. நிதி அமைச்சகம் சார்பில் இப்பதிலை தந்தவர்  அமைச்சர் அனுராக் தாக்கூர்.
இதில் கடைசிவரி அவ்வாறு எந்த முன்மொழிவும் தற்போதைக்கு இல்லை என்பதே ஆகும். ஆனால் அடுத்த 50 நாட்களில் மரியாதைக்குரிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (ஆகஸ்ட் 30 2019ல்) 10 வங்கிகளை 4 வங்கிகளாக இணைக்கும் திட்டம் பற்றி அறிவிக்கிறார். முதல்நாள் (ஆக 29) வங்கி சங்கங்கள் ஊதிய பேச்சுவார்த்தையில் கூட இது குறித்து ஏதும் சொல்லப்படவில்லை. வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கலாமே?
வங்கி ஊழியர்கள் போராட்டம்?
வங்கியின் பெரும் தொழிற்சங்கமான  AIBEA - BEFI  உடன் இணைந்து பல்வேறு கட்ட  போராட்டங்களை (Black badge,  ஆர்ப்பாட்டம் தர்ணா) அறிவித்துள்ளது. இரு தலைமையும் அக்டோபர் 22 அன்று வேலைநிறுத்தம்  எனவும் அறிவித்துள்ளனர். வங்கி இணைப்பு சீரமைப்பு கொள்கைகளை கைவிடுக,  சர்வீஸ் கட்டணங்களை குறைத்திடு, வாடிக்கையாளர் டெபாசிட்டுகளுக்கு வட்டிவீதத்தை அதிகப்படுத்து, வங்கி வேலைகள் மீது தாக்குதல் தராதே- போதுமான ஆளெடுப்பு நடத்து  போன்றவை கோரிக்கைகள்.
வங்கி அதிகாரிகள் சங்கங்கள் AIBOC, AIBOA, INBOC, NOBO ஆகியவை பல்வேறுகட்ட போராட்ட அறிவிப்புகளுடன் செப் 26, 27 இருநாட்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. இணைப்பு கூடாது என்பதுடன் ஊதிய மாற்றம், பென்ஷன் அப்டேஷன், 5 நாட்கள் வாரம் போன்றவற்றையும் சேர்த்து வைத்துள்ளனர். BMS  அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பை பிற அதிகாரி சங்கங்களுடன் சேர்ந்து செய்துள்ளது. BMS ஊழியர் சங்கம் செப் 30 எனில்  வேலை நிறுத்தம் செய்யத்தயார் என்று தனது நிலைப்பாட்டை சொல்லியுள்ளது.
கோரிக்கைகளில் சில மாற்றங்கள் இருப்பதால் 9 அமைப்புகள் ஒன்றுபட்டு UFBU  சார்பில் ஒரே நேரத்தில் வேலைநிறுத்தம் என்பது முடியாமல் போகியிருக்கிறது.  செப் 19 CLC முன்னிலையில்  அதிகாரிகள் சங்கங்கள்  DFS, IBA பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
NPA வாராக்கடன்கள் தள்ளுபடிகள் விவரம்?
2008 ல் 5.80 லட்சம் கோடிக்கு அட்வான்ஸ்களை வங்கிகள் கொடுத்திருந்தால் 2014ல் 21.70 லட்சம் கோடிக்கு கொடுத்தன. வாராக்கடன் எனக் கணக்கிட்டால் மார்ச் 2015ல் 3.12 லட்சம் கோடி என்பது மார்ச் 2018ல் 10.21 லட்சம் கோடியாக நிலுவையானது. இதை 2019 மார்ச்சில் 9.20 லட்சம் கோடியாக குறைக்க முடிந்துள்ளது. கடந்த 14-19  ஆண்டுகளில் 6.19 லட்சம் கோடி  write off  செய்யப்பட்டுள்ளது. வாராக்கடனில் 3.92 லட்சம் கோடியை 4 ஆண்டுகளில் வசூலிக்க முடிந்துள்ளது.
வங்கிவாரியாக Wilfuldefaulter  பாக்கி விவரம்?
Wilfuldefaulters  எவ்வளவு கோடியில் பாக்கி வைத்திருக்கிறார்கள் என்ற கணக்கை நாடாளுமன்றம் 15-7-2019ல் தந்தது. விவரம் : அலகாபாத் வங்கிக்கு 4445 கோடி, ஆந்திராவங்கிக்கு 4733 கோடி, பரோடா வங்கியில் 9738 கோடி, பாங்க் ஆப் இந்தியா 9890 கோடி, மகாரஷ்டிரா வங்கி 1904 கோடி, கனரா வங்கி 4964 கோடி, செண்ட்ரல் வங்கி 6163 கோடி, கார்ப்பரேஷன் வங்கி 2803 கோடி, தேனா வங்கி 2171 கோடி, இந்தியன் வங்கி 1696 கோடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  5129 கோடி, ஓரியண்டல் வங்கி 5659 கோடி, பஞ்சாப் சிந்து வங்கி 286 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி 25090 கோடி, ஸ்டேட் பாங் 46158 கோடி, சிண்டிகேட் வங்கி 1282 கோடி, யூகோ வங்கி 4897கோடி, யூனியன் வங்கி 4695 கோடி, யுனைடெட் வங்கி 1836 கோடி, விஜயா வங்கி 6144கோடி . அதாவது கடனை வாங்கிக்கொண்டு தெரிந்தே வேண்டுமென்றே கட்டத்தவறியதால் அந்த வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைத்தான் இக்கோடிகள் பேசுகின்றன.
மோசடிகள் எண்ணிக்கை விவரம்?
ரிசர்வ் வங்கிக்கு கிடைத்த மோசடி எண்ணிக்கை குறித்த தகவல்படி லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்தவர்கள்  2014ன் போது 2630 பேர்கள்- தொகை 20005 கோடி. 15-16ல் 4693  cases 18698  கோடி. இது 17-18ல் 5904  cases 32361 கோடியாக உயர்ந்துள்ளது.. இது 2018-19ல் 739 பேர்களாகவும் 5149 கோடிக்குரிய மோசடியாகவும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
துறைவாரியாக வாராக்கடன்கள் (எங்கிருந்து வரவில்லை) எனப் பார்த்தால் விவசாயப் பகுதியில் 6 சதமாகவும், சிறு குறு தொழில் 15.6 சதம், வீட்டுக்கடன் 1.87 சதம், தொழிற்துறை 40.59 சதமாகவும், கல்விக்கடன் 1.87 சதம், ரியல் எஸ்டேட் வர்த்தகம் 35 சதமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. வாராக்கடனை அதிகமாக்குவது தொழிற்துறை மற்றும் ரியல் எஸ்டேட் வர்த்தகம் என இதன் மூலம் தெரிகிறது.
வாராக்கடன்களில் 12 கணக்குகள் 1.75 லட்சம் கோடிக்கானவை  NCLT  யிடம் சென்றுள்ளன. 40 கார்ப்பரேட்டுகள்  3 லட்சம் கோடிக்கு கடன் பெற்று அதை வாராக்கடனாக்கியுள்ளனர். வங்கிகளின்  stressed assets க்கு  வாராக்கடன்களை அதிகமாக்கியதரற்கு பவர், டெலிகாம், ரியல் எஸ்டேட், ஸ்டீல், ஏவியேஷன், டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகள் முக்கிய காரணிகளாகவுள்ளன.
வங்கிகளில் கோடிக்கணக்கில் நடைபெறும் மோசடிகளை தடுக்க நடவடிக்கை என்ன?
ரூ 50 கோடிக்கு மேல் வாராக் கடன் என லிஸ்டில் வந்தால் அதை மோசடியாகவும் இருக்கலாம் என்கிற பார்வை கொண்டும் அலசுவது, அவர்களது போட்டோக்களை வெளியிடுவது, பொருளாதார குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது என பட்டியலிடுகின்றனர்.
வாராக்கடன்களுக்கு staff accountability  என ஏதாவது இருக்கிறதா?
 இந்த  கேள்விக்கு வாராக்கடன்களுக்கு  பொறுப்பாக்கப்பட்ட வங்கிவாரியான staff எண்ணிக்கையை நாடாளுமன்றத்தில் கொடுத்துள்ளனர். அலகாபாத் வங்கி 444, ஆந்திராவங்கிக்கு 1193 , பரோடா வங்கியில் 1318, பாங்க் ஆப் இந்தியா 1522, மகாரஷ்டிரா வங்கி 457, கனரா வங்கி3298, செண்ட்ரல் வங்கி 6125, கார்ப்பரேஷன் வங்கி 4873, தேனா வங்கி 366, இந்தியன் வங்கி 1480 , இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  1658, ஓரியண்டல் வங்கி 1017, பஞ்சாப் சிந்து வங்கி 417, பஞ்சாப் நேஷனல் வங்கி 4448, ஸ்டேட் பாங்க் 8035, சிண்டிகேட் வங்கி 1432, யூகோ வங்கி 410, யூனியன் வங்கி 813, யுனைடெட் வங்கி 508, விஜயா வங்கி 554.
வங்கி கிளைகள் எவ்வளவு உள்ளன?
ஆர் பி அய் தகவலின்படி (மார்ச் 2019) 1,46,932 கிளைகள். இதில் 51653 ஊரக கிளைகள் (35.15 %). ஏற்கனவே  கிராமப்புறங்களில் ஏ டி எம் வசதிகளின் போதாமை, மூடல் குறித்து புகார்கள் பெருகிவருகின்றன. இணைப்பு எனில் இதில் எததனை கிளைகள் மூடப்படும்- அதனால் சேவையில் எந்த அளவு பாதிப்பு வரும் என்பதை காலம்தான் பதிவு செய்யும்.
சேமிப்பு கணக்கு கூடியிருக்கிறதா?
 ஆர் பி அய் தகவலின்படி 2015ல் 88.39 கோடி என்பது 2018ல் 119.25 கோடியாகியுள்ளது.
வங்கி டெபாசிட் வளர்ச்சி, நட்டம்?
வங்கிகளில் டெபாசிட் வட்டி குறைவு காரணமாக வீழ்ந்துள்ளன. அலகாபாத்வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி பெரும் நட்டத்தை காட்டியுள்ளன. ஓரியண்டல் வங்கி, கனரா, யூனியன் வங்கிகள் நெருக்கடியில் உள்ளன என  IBA  நாடாளுமன்ற கமிட்டியில் சாட்சியம் சொல்லியுள்ளது. 30-9-17ன் படி வங்கி வியாபாரம் என்பது ஏறத்தாழ 1.99 கோடி கோடி. இதில் 70 சத வர்த்தகம் தேசியமய வங்கிகள் செய்கின்றன.
மனிதவள பிரச்சனை?
 அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பெரும் உயர் அதிகாரிகளில் பலர் ஓய்வுபெறுகின்றனர்.. ஆளெடுப்பு இன்மை வங்கிகளில் பெரும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது என்பதை வீரப்பமொய்லி கமிட்டி பதிவு செய்துள்ளது. அதிகாரிகள் ஊழியர் விகிதம் பெருமளவு குறைந்து சில இடங்களில் 1:1 எனக்கூட ஆகியிருக்கிறது. IBPS  தகவலின்படி 33488 காலியிடங்கள் 2015ல் இருந்தது . ஆனால் 2018-19ல் 7883 எனக் காட்டுகின்றனர். GMகளில் 95 சதம்  DGMகளில் 75 சதம், AGMகளில் 58 சதம் 2020க்குள் ஓய்வுபெற இருக்கின்றனர்.
வங்கிகள் பிரச்சனை- வாராக்கடன்கள்- எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தரப்படுகிறதா?
 அவ்வாறு ஓர் அறிக்கையை நாடாளுமன்ற மக்கள் அவையில் 2019 ஜனவரியில் வைத்தனர். வீரப்ப மொய்லி தலைமையிலான நிலைக்குழு அறிம்க்கையது. அதில் பல விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பொறுப்பானவர்கள் சொல்வதென்ன?
விடுதலைக்கு முன்னதான வங்கி சட்டம் வங்கி கம்பெனிகள் குறித்த அதிகார எல்லையைத்தான் சொல்கின்றன. தேசிய வங்கிகள் கம்பெனிகள் அல்ல. பாராளுமன்ற ஒப்புதலுடன் உருவாக்கப்பட்ட சட்ட வடிவ நிறுவனங்கள். எனவே அவைகளை ஒழுங்குப்படுத்த தனக்கு போதிய அதிகாரமில்லை என்கிறது ரிசர்வ வங்கி.  ரெகுலேட்டர் ஆர் பி அய்யிடம்  அதிகாரம் இருப்பதால் 5 கோடிக்கு மேல் கடன் பெற்றவர் பட்டியலைக்கூட அரசாங்கம் பெறுவதில், அவற்றை ஆய்விற்கு உட்டுத்துவதில் கஷ்டம் இருக்கிறது என்கிறார்கள் Department of Financial services அரசு அதிகாரிகள்.
 22-9-19


Tuesday, September 17, 2019

Revival and restructuring of BSNL


Revival and restructuring of BSNL

( Govt has issued specific guidelines for Revival /Restructuring /closure of PSus. The Guidelines may expect certain sacrifices from the stake holders . Govt cannot avoid its own guidelines in the name of objection of one of its prime limbs viz MOF (if at all anything so). MOF / DOE may have rights to question about the DOT’s Proposals and may direct to follow PIB/ EFC Mechanism (Public Investment Board/ Expenditure Finance Committee). It is a specified task given to the concerned Ministry to act as per the Govt Guidelines to decide the process of Revival/ Restructuring of the given PSU. The process may be delayed but cannot be kept in cold storage for long. Infusion of equity is found normally as the mechanism for revival. In the case of ITI Ltd financial assistance  were also given as aid. But the process was very long drawn. In the case of Air India it took 10 years to get the announced equity infusion.
 In the case of BSNL/MTNL, if any road map is already drawn, it is better to segregate the plans by not treating both the PSUs in similar footing. Each Psu  may need a specific mechanism as per its required strategic, business and financial positions.
Our Business area is pan india . We came with Govt retirement Rules FR 56 a  ( 60 years) to BSNL - but MTNL got it vide DPE orders where powers are there  for the  cabinet to reduce to 58 years. MTNL is a disinvested company. MTNL already experienced VRS, in our case no such experience. MTNL Net worth is negative, but BSNL is still having positive net worth and we are incipient sick only. MTNL’s debt servicing finance consumes 63 % of rev. MTNL has already floated bonds with Govt Guarantee.  As on date, Merger plan is not contemplated and so different road map is better as done for different PSUs.)
                                                                                                                  (RP 17-9-19)


“Guidelines for “Streamlining the mechanism for revival and restructuring of sick/ incipient sick and weak Central Public Sector Enterprises: General principles and mechanism of restructuring”


Some Salient Points
3. Primary responsibility for supervision of a CPSE for its efficient functioning lies in the administrative ministry and final view for restructuring and revival of sick and incipient sick CPSEs or taking appropriate measures for CPSEs showing early indications of weakness has to be taken by them with approval of the competent authority after inter - ministerial consultation and concurrence of the Ministry of Finance through PIB/ EFC mechanism as may be required. It is in the public interest to make this process, time bound, comprehensive, performance driven and efficient so that such decisions are taken and implemented in a time bound manner to minimise further losses
4.2.2 Incipient sick CPSEs: A CPSE would be considered incipient sick if it meets one of the following criteria:
a. If its net worth is less than 50% of its paid-up capital in any financial year.
b. If it had incurred losses consecutively for three years
4.4 The administrative ministry will take the following action:
(b) The administrative ministry shall initiate the process for preparation of restructuring/ revival plan, which may include disinvestment or privatisation or closure options, for sick/ incipient sick CPSEs based on the classification as given above within 6 months from the closure of the financial year or within one month from finalisation of Annual Accounts, whichever is earlier.
(c) Restructuring and revival plan for the sick and incipient sick CPSEs shall be prepared within nine months of the closure of the financial year.
(d) External expert agency which has experience and expertise of the business environment, operational issues, technology option and financial viability of the sector in which such CPSE is functioning may be engaged by the government and shall function under the supervision of the administrative ministry for preparation of the future road map.
4.5.1 Perspective of Relevance and Functioning:
a) Background and purpose of the formation of the CPSE.
b) Economic and regulatory environment along with their impact on the growth of the company
c) Liberalisation and its impact on its business operation
d) Ability of the CPSE in adapting new business strategies, technology to regain and sustain its economic viability.
e) Efforts and special interventions made for its revival or avert early sickness and its impact on the health of the CPSE
4.5.2 Strategic Plan for Restructuring/Revival:
(a) The concerned administrative ministry/department should clearly bring out the national and strategic interest served by the CPSEs in the light of the sectoral business environment, domestic as well as global.
4.5.3 Business Plan for Restructuring/ Revival Plan:
A. High Priority or Priority CPSE.
a) For high priority CPSEs, the business plan has to be made keeping in mind the strategic national interest and economically viable business opportunities.
b) For strategic business model, requirement for Government policy convergence should be clearly spelt out to meet the economic viability of such enterprises
4.5.4 Operational Restructuring:
a) Keeping in mind the business plan, the required human resource needs are to be assessed and rationalised.
c) Options for adopting requisite technology and up-gradation of the same as per requirement through various management options including JV, disinvestment or privatisation to be factored into the operational restructuring plan.
d) The options of merger or de-merger of various operations in line with the proposed business plan to ensure continuous procurement of new technology and its up-gradation
4.5.5 Financial Restructuring Plan:
a) For high priority and priority CPSEs, a comprehensive financial restructuring plan should be drawn comprising various methods of financing with minimum and unavoidable viability gap funding in the strategic national/defence interest.
Limited private investment through disinvestment within permissible limits may also be considered under financial plan.
4.6 Mechanism and Methodology to be followed for restructuring/revival/closing of sick CPSEs
(d) Implementation plan with specified time line for various stages should be objective, quantifiable and supported with the monitoring mechanism.

Sunday, September 15, 2019

புதிய மின்புத்தகம் காந்தியை கண்டுணர்தல்

தோழர் பட்டாபியின் புதிய மின் புத்தகம்  ’காந்தியை கண்டுணர்தல்’
நேரமும் விருப்பவும் உள்ளவர்கள்  கீழ்கண்ட இணைப்பில் பெறமுடியும்.

https://ia801508.us.archive.org/23/items/gandhibook_201909/Gandhi%20Book.pdf
முன்னுரையும் உள்ளடக்கமும் இங்கு தரப்பட்டுள்ளன.

காந்தியை கண்டுணர்தல்
                                      முன்னுரை
காந்தி காலம் கடந்தவரா- அவரது நடைமுறைகளும் சிந்தனைகளும் இன்றுள்ள உலகிற்கு பொருத்தமற்றவையா எனத் தேடுவதற்காக காந்தி ஆக்கங்களிலும் அவர் குறித்த எழுத்துக்களிலும் பயணிக்க ஆரம்பித்தேன். காந்தி மிகப் பொருத்தமானவர்- என்னால் ஒருக்கணம் கூட அவர் போல் நிற்க முடியவில்லை என்பதை உணரத்துவங்கினேன். காந்தியை கண்டுணர்தல் எனத்துவங்கி என் அகங்காரத்தை- உண்மை புறக்கணிப்புகளை- பல தருணங்களில் பிசிரற்ற மானுடநேயம் தொலைத்ததை என்னால் கண்டுணரமுடிந்தது. இக்கட்டுரைகளை எழுதிப்பார்த்ததில் எனது குணப்போதாமைகளின் நீள் சுவர்களை காணமுடிந்தது. எனது அதைரியத்தை கண்டறிய முடிந்தது. பேச்சுக்கும் செயலுக்கும் இடையே எப்போதும் நீளும் இடைவெளியை குறைக்க முடியாமையை உணரமுடிந்தது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பதில் படுதோல்வி அடைந்துள்ளதை உரக்கச் சொல்லும் தைரியத்தால் ஆகப் போவது ஏதுமில்லை.
இங்கு இடம்பெற்றுள்ள கட்டுரைகள் எனது இணையதளத்தில் கடந்த  சில மாத இடைவெளிகளில் வெளிவந்தவைகள்தான். கட்டுரைகளை தொகுத்தால் எனக்கு மட்டுமில்லாமல் வேறு எவருக்கும் கூட சற்று உதவியாக இருக்குமே என்கிற ஆசை உந்துதலால்  ’காந்தியை கண்டுணர்தல்’ புத்தக வடிவமாக வருகிறது. மேலும் காந்தியின் 150 ஆண்டுகள் என்கிற சூழலும் இந்த ஆர்வத்திற்கு காரணமாயிற்று.
வாழ்க்கை என்பது கடமைக்கான காலம் என்பதை தானே வாழ்ந்துகாட்டி தன் வாழ்நாட்களில் உணர்த்தியும் சென்றவர் காந்தி. தன்னை உணரச்செய்திடும், தன்னை பிரதிபலிக்கும் , தன்னை மாற்றத்திற்குள்ளாக்கும்  தொடர் நிகழ்வாக காந்தி அரசியலை உணர்ந்தார். சுயத்தை தேடும் மனிதன் ஒருவரின் நன்னெறியின் வெளிப்பாடாக  அரசியலை அவர் புரிந்துகொண்டார் .
புரட்சியின் மதிப்பைவிட மதிப்புகளின் புரட்சியை அவர் வலியுறுத்தினார். நன்னெறிக்கான புரட்சி அவசியம். உண்மையைத் தேடல் என்பது அதிகார ஆசையில்லாத நிலையில்தான் சாத்தியமாகும். கடமையை அனைவரும் செய்வோமானால் உரிமைகள் வசப்படும் என்கிற வரிகளை இக்கட்டுரைகளில் நாம் காணமுடியும்.
அகிம்சை உலகாளும் எனில் பெண்வழி உய்வாகவே அது உலகில் மலரும் என்றவர் காந்திஜி. உள்ளத்தை ஆட்கொள்ளும் அபூர்வ ஆற்றல் பெண்களைப்போல் ஆண்களுக்கு வருவதில்லை என்பதும் அவரது மதிப்பீடு. மனைவி தோழியாதல் வேண்டும். அவள் காண்ட்ராக்ட் அடிமையல்ல என அனுபவ வழியே அறிந்து சொன்னவர் காந்தி.
அறிவெனில் அது ஆங்கிலம் என  கருதிக்கொள்ளும் நோய் குறித்தும் பேசியவர் காந்தி. பெற்றோரிடமிருந்து பெறவேண்டியவை சொத்தைவிட நன்னடத்தை நற்குணங்கள்தான் என்பதை  சமூகம் கற்கவேண்டுமே என  செயல்பட்டவர் காந்தி.
விடுதலைக்கு பின்னர் பெரும் விஷயங்களில் மட்டுமே கவனம் குவிந்துவிடும்-  சிறு விஷயங்கள் (little things ) உதாசீனமாக்கப்பட்டுவிடும் என்கிற கவலை அவருக்கு இருந்தது. நமது கிராமங்கள் சிறு விஷயங்களை நம்பியே இருக்கின்றன என அவர் கருதினார். மக்களுக்கு தங்களிடம் உள்ள ஆதாரங்களை எவ்வாறு கையாள்வது எனத்தெரிந்தால் போதும் பட்டினி என்பதற்கான அவசியம் இருக்காது  என தன் இறுதி நாளில் அவர் தனது செய்தியை தந்தார்.
அனைத்து மதங்களும் அன்பையும் அருளையுமே போதிக்கின்றன என்பதை அடிப்படையாக எடுத்துக்கொண்டுவிட்டால் என் மதம் மட்டுமே புனிதமானது என்பதோ என் மத அபிமானத்தால் பிற மதங்கள் மீதான வெறுப்பு என்பதோ எழாது . காந்தியின் மதம் குறித்த புரிதலில் நாம் இதை சரியாக உணரமுடியும்.

 தொழிலாளர் அரசியல்வாதிகளின் செஸ் ஆட்டக் காய்களாகிவிடக்கூடாது என எச்சரித்தவர் காந்தி. வேலைநிறுத்தம் ஒன்றை காந்தியடிகள் எவ்வாறு நடத்திக்காட்டினார் என்ற ஆர்வத்தில் அகமதாபாத் பஞ்சாலை வேலைநிறுத்தம் குறித்த கட்டுரை இடம் பெற்றுள்ளது. 40 ஆண்டுகள் தொழிற்சங்க பணியாளன் என்ற வகையில் பங்கேற்ற போராட்டங்களில் நான் இவ்வாறு பொறுப்பாக நடந்து கொண்டேனா என்கிற விமர்சனபூர்வ கேள்வி என்னுள் எழுந்தது. அப்போராட்டத்தின் நூற்றாண்டு தருணத்தில் இக்கட்டுரை எழுதப்பட்டது.

சாதி குறித்த காந்தியின் புரிதல் மற்றும் வெளிப்படுத்தல்கள் எப்படி சாதி ஒழியட்டும் என்பதாக பயணித்தது என்பதை பேசும் கட்டுரையும் இங்கு இடம் பெற்றுள்ளது. காந்தியின் சாதி குறித்த தொகுப்புகள் முன்னரே சில வந்திருந்தாலும் நிஷிகாந்த் கோல்கேவின் சாதிக்கு எதிரான காந்தி முக்கியமாக எனக்குப்படுகிறது. அப்புத்தகம் குறித்த அறிமுகவுரை தர காந்தி கல்வி நிறுவன நண்பர்கள் வாய்ப்பளித்தனர்.  அவர்களுக்கு எனது நன்றி.

அம்பேத்கர் காந்தி இருவரும் தீண்டாமை ஒழிப்பு என்ற ஒரே இலக்கை அடைய வெவ்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டவர்கள் என்றாலும் அவர்கள் பகைப்புலனில் வைத்து பார்க்கப்படவேண்டியவர்களா இணக்கப்படுத்திக் கொள்ளப்படவேண்டியவர்களா என்கிற விவாதம் பெருமளவில் நடந்து வருகிறது. இதுகுறித்த கட்டுரை ஒன்றும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

காந்தியும் பெண்களும் கட்டுரை புதிய செய்தி எதையும் தராது எனினும் சுருக்கமான பார்வை ஒன்றை வாசகர்களுக்கு நல்கும் என நம்புகிறேன். காந்தி - பகத்சிங் சர்ச்சை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. பகத்சிங்கை காந்தி காவு கொடுத்தாரா எனும் கட்டுரை இது குறித்து விரிவாகப் பேசுகிறது.

 இத்தொகுப்பில் உள்ள முக்கிய கட்டுரை மறுப்பின் மெய்யியல். ரமீன் ஜெகன்பெக்லூ எனும் இரானியர் காந்தி குறித்து புத்தகங்கள் எழுதி வருபவர். அவரின் கீழ்ப்படியாமை – மறுப்பு மற்றும் காந்தி அதை செயல்படுத்தியது குறித்து காந்தி கல்வி நிலையத்தில் உரையாற்ற வாய்பு கிடைத்தது. அக்கட்டுரை இன்றுள்ள அரசியல் சூழலில் ஒருவருக்கு தேவைப்படும் மறுப்பிற்கான தைரியத்திற்கு மேலும் பலம்கூட்டும்.

இத்தொகுப்பிலுள்ள ஆறுகட்டுரைகளை மார்க்சியர் காந்தியர் உரையாடலாக எடுத்துக்கொள்ளலாம். மார்க்சியம் - கம்யூனிசம் குறித்த காந்தி மற்றும் காந்தியர் பார்வையும், காந்தி - காந்தியம் குறித்த மார்க்சியர் பார்வையும் இக்கட்டுரைகளில் பரக்கப் பேசப்பட்டுள்ளன. இவ்விவாதங்களில் நிர்மல் குமார் போஸ் மற்றும் பன்னலால் தாஸ் குப்தா ஆளுமை மிக்கவர்கள். அவர்கள் எழுத்துக்களை இடம் பெற செய்யாமல் தவறியுள்ளேன்.

இறுதி இரு கட்டுரைகள் விடுதலை நெருக்கத்தில் நிலவிய சூழலையும்  காந்தியின் மனப்போராட்டத்தையும் ஒரளவு வெளிப்படுத்துகின்றன. ஆகஸ்டு 1947ல் எப்படி எங்கே  தன் போராட்டத்தை அவர் நடத்திகொண்டிருந்தார் என ஒரு கட்டுரை பேசினால், அவரின்  இறுதி வாழ்நாள் எவ்வாறு பெரும்பணிகளின் ஊடாக கடமைகளால் மட்டுமே கடந்தது என மற்றொரு கட்டுரை பேசுகிறது. இருந்தபோதும், சுடப்பட்டு மரணிக்கும் தருணத்திலும், மறைந்த பின்னரும் அவர் மகாத்மாவாகவே  உணரப்பட்டார்.

காந்தி பேசாப் பொருளில்லை. அவரைப் பேச பேச அவர் பெருகிக் கொண்டேயிருக்கிறார்.


8-9-19                                                         ஆர். பட்டாபிராமன்


காந்தியை கண்டுணர்தல்

(கட்டுரைத் தொகுப்பு)

                                        உள்ளடக்கம்

1. மதச்சார்பின்மை காந்தியின் புரிதல்
2.  காந்தியின் கீதை        
3. சாதிக்கு எதிராக காந்தி   
4 . அம்பேத்கர் காந்தி இணக்கம்
5 . பகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி?
6.  காந்தியடிகள் வழிகாட்டிய வேலைநிறுத்தம்
7. பெண்கள் குறித்து காந்தியடிகள்
8. காந்தியும் மார்க்சும்
9.  மஷ்ருவாலா பார்வையில் காந்தியும் மார்க்சும்
10. லோகியா பார்வையில் காந்தியும் மார்க்சும் 
11. ஹிரன் முகர்ஜியின் காந்தி   
12. தோழர் இ எம் எஸ் பார்வையில் காந்தியும் அவரது இசமும்
13. எம் என் ராயின் காந்தி
14. மறுப்பு  மற்றும் ஒத்துழையாமையின்  மெய்யியல்
15. ஆகஸ்ட் 1947- கவலை தோய்ந்த காந்தி
16. மகாத்மா காந்திஜியின் இறுதிநாள்