வங்கித் தோழர்கள் போராட்டம்
- ஆர்.பட்டாபிராமன்
வங்கிகள்
இணைப்பு யோசனை இருக்கிறதா என்கிற
கேள்வி மக்கள் அவையில் ஜூலை
8 2019ல் கேட்கப்பட்டதற்கு அரசு தந்த பதில்?
The
Banking Companies( Acquisitionand Transfer of Undertakings) Acts of 1970 and
1980 provide that the CentralGovernment,in consultation with the ReserveBank of
India
(RBI),
may make a scheme, inter alia, for the amalgamationof any nationalized bank
with anyother nationalised bank or any other banking institution. Various
committees, including Narasimhan Committee(1998) constituted by RBI, Leeladhar Committee(2008)
chaired by RBI Deputy Governor, and Nayak Committee (2014) constituted by RBI,
have recommended consolidation of Public Sector Banks(PSBs) given underlying benefits
/synergies. Taking note of this and potential benefits of consolidation, Government,
with a view to facilitate consolidation among PSBs to create strong and
competitive banks, serving as catalysts for growth, with improved risk profile of
the bank,approved an approval framework for proposals to amalgamate. PSBs
throughan AlternativeMechanism(AM).No proposalis presentlybefore the AM for its
consideration. நிதி அமைச்சகம்
சார்பில் இப்பதிலை தந்தவர் அமைச்சர்
அனுராக் தாக்கூர்.
இதில் கடைசிவரி அவ்வாறு எந்த முன்மொழிவும்
தற்போதைக்கு இல்லை என்பதே ஆகும். ஆனால் அடுத்த 50 நாட்களில் மரியாதைக்குரிய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் (ஆகஸ்ட் 30 2019ல்) 10 வங்கிகளை 4 வங்கிகளாக இணைக்கும் திட்டம் பற்றி
அறிவிக்கிறார். முதல்நாள் (ஆக 29) வங்கி சங்கங்கள் ஊதிய பேச்சுவார்த்தையில் கூட இது
குறித்து ஏதும் சொல்லப்படவில்லை. வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கலாமே?
வங்கி
ஊழியர்கள் போராட்டம்?
வங்கியின் பெரும் தொழிற்சங்கமான AIBEA - BEFI
உடன் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை
(Black badge, ஆர்ப்பாட்டம் தர்ணா) அறிவித்துள்ளது.
இரு தலைமையும் அக்டோபர் 22 அன்று வேலைநிறுத்தம் எனவும் அறிவித்துள்ளனர். வங்கி இணைப்பு சீரமைப்பு
கொள்கைகளை கைவிடுக, சர்வீஸ் கட்டணங்களை குறைத்திடு,
வாடிக்கையாளர் டெபாசிட்டுகளுக்கு வட்டிவீதத்தை அதிகப்படுத்து, வங்கி வேலைகள் மீது தாக்குதல்
தராதே- போதுமான ஆளெடுப்பு நடத்து போன்றவை கோரிக்கைகள்.
வங்கி அதிகாரிகள் சங்கங்கள்
AIBOC, AIBOA, INBOC, NOBO ஆகியவை பல்வேறுகட்ட போராட்ட அறிவிப்புகளுடன் செப் 26,
27 இருநாட்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. இணைப்பு கூடாது என்பதுடன் ஊதிய மாற்றம்,
பென்ஷன் அப்டேஷன், 5 நாட்கள் வாரம் போன்றவற்றையும் சேர்த்து வைத்துள்ளனர். BMS அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்த
அறிவிப்பை பிற அதிகாரி சங்கங்களுடன் சேர்ந்து செய்துள்ளது. BMS ஊழியர்
சங்கம் செப் 30 எனில் வேலை நிறுத்தம் செய்யத்தயார்
என்று தனது நிலைப்பாட்டை சொல்லியுள்ளது.
கோரிக்கைகளில் சில மாற்றங்கள்
இருப்பதால் 9 அமைப்புகள் ஒன்றுபட்டு UFBU சார்பில்
ஒரே நேரத்தில் வேலைநிறுத்தம் என்பது முடியாமல் போகியிருக்கிறது. செப் 19 CLC முன்னிலையில் அதிகாரிகள் சங்கங்கள் DFS, IBA பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
NPA
வாராக்கடன்கள் தள்ளுபடிகள்
விவரம்?
2008 ல் 5.80 லட்சம் கோடிக்கு
அட்வான்ஸ்களை வங்கிகள் கொடுத்திருந்தால் 2014ல் 21.70 லட்சம் கோடிக்கு கொடுத்தன. வாராக்கடன்
எனக் கணக்கிட்டால் மார்ச் 2015ல் 3.12 லட்சம் கோடி என்பது மார்ச் 2018ல் 10.21 லட்சம்
கோடியாக நிலுவையானது. இதை 2019 மார்ச்சில் 9.20 லட்சம் கோடியாக குறைக்க முடிந்துள்ளது.
கடந்த 14-19 ஆண்டுகளில் 6.19 லட்சம் கோடி write off
செய்யப்பட்டுள்ளது. வாராக்கடனில் 3.92 லட்சம் கோடியை 4 ஆண்டுகளில் வசூலிக்க
முடிந்துள்ளது.
வங்கிவாரியாக
Wilfuldefaulter பாக்கி விவரம்?
Wilfuldefaulters எவ்வளவு கோடியில் பாக்கி வைத்திருக்கிறார்கள் என்ற
கணக்கை நாடாளுமன்றம் 15-7-2019ல் தந்தது. விவரம் : அலகாபாத் வங்கிக்கு 4445 கோடி, ஆந்திராவங்கிக்கு
4733 கோடி, பரோடா வங்கியில் 9738 கோடி, பாங்க் ஆப் இந்தியா 9890 கோடி, மகாரஷ்டிரா வங்கி
1904 கோடி, கனரா வங்கி 4964 கோடி, செண்ட்ரல் வங்கி 6163 கோடி, கார்ப்பரேஷன் வங்கி
2803 கோடி, தேனா வங்கி 2171 கோடி, இந்தியன் வங்கி 1696 கோடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 5129 கோடி, ஓரியண்டல் வங்கி 5659 கோடி, பஞ்சாப்
சிந்து வங்கி 286 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி 25090 கோடி, ஸ்டேட் பாங் 46158 கோடி,
சிண்டிகேட் வங்கி 1282 கோடி, யூகோ வங்கி 4897கோடி, யூனியன் வங்கி 4695 கோடி, யுனைடெட்
வங்கி 1836 கோடி, விஜயா வங்கி 6144கோடி . அதாவது கடனை வாங்கிக்கொண்டு தெரிந்தே வேண்டுமென்றே
கட்டத்தவறியதால் அந்த வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைத்தான் இக்கோடிகள் பேசுகின்றன.
மோசடிகள்
எண்ணிக்கை விவரம்?
ரிசர்வ் வங்கிக்கு கிடைத்த மோசடி
எண்ணிக்கை குறித்த தகவல்படி லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்தவர்கள் 2014ன் போது 2630 பேர்கள்- தொகை 20005 கோடி. 15-16ல்
4693 cases 18698 கோடி. இது 17-18ல் 5904 cases 32361 கோடியாக உயர்ந்துள்ளது.. இது
2018-19ல் 739 பேர்களாகவும் 5149 கோடிக்குரிய மோசடியாகவும் நாடாளுமன்றத்தில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
துறைவாரியாக வாராக்கடன்கள் (எங்கிருந்து
வரவில்லை) எனப் பார்த்தால் விவசாயப் பகுதியில் 6 சதமாகவும், சிறு குறு தொழில் 15.6
சதம், வீட்டுக்கடன் 1.87 சதம், தொழிற்துறை 40.59 சதமாகவும், கல்விக்கடன் 1.87 சதம்,
ரியல் எஸ்டேட் வர்த்தகம் 35 சதமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. வாராக்கடனை அதிகமாக்குவது
தொழிற்துறை மற்றும் ரியல் எஸ்டேட் வர்த்தகம் என இதன் மூலம் தெரிகிறது.
வாராக்கடன்களில் 12 கணக்குகள்
1.75 லட்சம் கோடிக்கானவை NCLT யிடம் சென்றுள்ளன. 40 கார்ப்பரேட்டுகள் 3 லட்சம் கோடிக்கு கடன் பெற்று அதை வாராக்கடனாக்கியுள்ளனர்.
வங்கிகளின் stressed assets க்கு வாராக்கடன்களை அதிகமாக்கியதரற்கு பவர், டெலிகாம்,
ரியல் எஸ்டேட், ஸ்டீல், ஏவியேஷன், டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகள் முக்கிய காரணிகளாகவுள்ளன.
வங்கிகளில்
கோடிக்கணக்கில் நடைபெறும் மோசடிகளை தடுக்க நடவடிக்கை என்ன?
ரூ 50 கோடிக்கு மேல் வாராக் கடன்
என லிஸ்டில் வந்தால் அதை மோசடியாகவும் இருக்கலாம் என்கிற பார்வை கொண்டும் அலசுவது,
அவர்களது போட்டோக்களை வெளியிடுவது, பொருளாதார குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது என பட்டியலிடுகின்றனர்.
வாராக்கடன்களுக்கு
staff accountability என ஏதாவது இருக்கிறதா?
இந்த கேள்விக்கு
வாராக்கடன்களுக்கு பொறுப்பாக்கப்பட்ட வங்கிவாரியான
staff எண்ணிக்கையை நாடாளுமன்றத்தில் கொடுத்துள்ளனர். அலகாபாத் வங்கி 444, ஆந்திராவங்கிக்கு
1193 , பரோடா வங்கியில் 1318, பாங்க் ஆப் இந்தியா 1522, மகாரஷ்டிரா வங்கி 457, கனரா
வங்கி3298, செண்ட்ரல் வங்கி 6125, கார்ப்பரேஷன் வங்கி 4873, தேனா வங்கி 366, இந்தியன்
வங்கி 1480 , இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
1658, ஓரியண்டல் வங்கி 1017, பஞ்சாப் சிந்து வங்கி 417, பஞ்சாப் நேஷனல் வங்கி
4448, ஸ்டேட் பாங்க் 8035, சிண்டிகேட் வங்கி 1432, யூகோ வங்கி 410, யூனியன் வங்கி
813, யுனைடெட் வங்கி 508, விஜயா வங்கி 554.
வங்கி
கிளைகள் எவ்வளவு உள்ளன?
ஆர் பி அய் தகவலின்படி (மார்ச்
2019) 1,46,932 கிளைகள். இதில் 51653 ஊரக கிளைகள் (35.15 %). ஏற்கனவே கிராமப்புறங்களில் ஏ டி எம் வசதிகளின் போதாமை, மூடல்
குறித்து புகார்கள் பெருகிவருகின்றன. இணைப்பு எனில் இதில் எததனை கிளைகள் மூடப்படும்-
அதனால் சேவையில் எந்த அளவு பாதிப்பு வரும் என்பதை காலம்தான் பதிவு செய்யும்.
சேமிப்பு
கணக்கு கூடியிருக்கிறதா?
ஆர் பி அய் தகவலின்படி 2015ல் 88.39 கோடி என்பது
2018ல் 119.25 கோடியாகியுள்ளது.
வங்கி
டெபாசிட் வளர்ச்சி, நட்டம்?
வங்கிகளில் டெபாசிட் வட்டி குறைவு
காரணமாக வீழ்ந்துள்ளன. அலகாபாத்வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி பெரும் நட்டத்தை காட்டியுள்ளன.
ஓரியண்டல் வங்கி, கனரா, யூனியன் வங்கிகள் நெருக்கடியில் உள்ளன என IBA நாடாளுமன்ற
கமிட்டியில் சாட்சியம் சொல்லியுள்ளது. 30-9-17ன் படி வங்கி வியாபாரம் என்பது ஏறத்தாழ
1.99 கோடி கோடி. இதில் 70 சத வர்த்தகம் தேசியமய வங்கிகள் செய்கின்றன.
மனிதவள
பிரச்சனை?
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பெரும் உயர் அதிகாரிகளில்
பலர் ஓய்வுபெறுகின்றனர்.. ஆளெடுப்பு இன்மை வங்கிகளில் பெரும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது
என்பதை வீரப்பமொய்லி கமிட்டி பதிவு செய்துள்ளது. அதிகாரிகள் ஊழியர் விகிதம் பெருமளவு
குறைந்து சில இடங்களில் 1:1 எனக்கூட ஆகியிருக்கிறது. IBPS தகவலின்படி 33488 காலியிடங்கள் 2015ல் இருந்தது
. ஆனால் 2018-19ல் 7883 எனக் காட்டுகின்றனர். GMகளில் 95 சதம் DGMகளில் 75 சதம், AGMகளில் 58 சதம் 2020க்குள்
ஓய்வுபெற இருக்கின்றனர்.
வங்கிகள்
பிரச்சனை- வாராக்கடன்கள்- எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தரப்படுகிறதா?
அவ்வாறு ஓர் அறிக்கையை நாடாளுமன்ற மக்கள் அவையில்
2019 ஜனவரியில் வைத்தனர். வீரப்ப மொய்லி தலைமையிலான நிலைக்குழு அறிம்க்கையது. அதில்
பல விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பொறுப்பானவர்கள்
சொல்வதென்ன?
விடுதலைக்கு முன்னதான வங்கி சட்டம்
வங்கி கம்பெனிகள் குறித்த அதிகார எல்லையைத்தான் சொல்கின்றன. தேசிய வங்கிகள் கம்பெனிகள்
அல்ல. பாராளுமன்ற ஒப்புதலுடன் உருவாக்கப்பட்ட சட்ட வடிவ நிறுவனங்கள். எனவே அவைகளை ஒழுங்குப்படுத்த
தனக்கு போதிய அதிகாரமில்லை என்கிறது ரிசர்வ வங்கி. ரெகுலேட்டர் ஆர் பி அய்யிடம் அதிகாரம் இருப்பதால் 5 கோடிக்கு மேல் கடன் பெற்றவர்
பட்டியலைக்கூட அரசாங்கம் பெறுவதில், அவற்றை ஆய்விற்கு உட்டுத்துவதில் கஷ்டம் இருக்கிறது
என்கிறார்கள் Department of Financial services அரசு அதிகாரிகள்.
22-9-19
Comments
Post a Comment