Skip to main content

Posts

Showing posts from January, 2024

2023க்கு வணக்கம்

  2023க்கு வணக்கம் கடந்து போன 2023க்கு எனது வணக்கம். உடல் உபாதை மற்றும் மழை பாதிப்பு நாட்கள் நீங்கலாக மீதி பெரு நாட்கள் உழைக்க அருள் கூர்ந்த ஆண்டாக அமைந்தது. முகநூலில் சில நாட்களைத் தவிர தொடர்ந்து பதிவு இடமுடிந்தது. Pattabiwrites   வலைப்பூவில் 500 பக்க அளவில் எழுத முடிந்தது. பங்கேற்ற கூட்டங்கள் மிகக் குறைவு. முறையாக மாதந்தோறும் என கணக்கிட்டு   பார்த்தப்படி 117 புத்தகங்களை வாசிக்க 2023 நல்வாய்ப்பைத் தந்தது. ஆங்கில புத்தகங்கள் 50 ஆகவும்,தமிழ் புத்தகங்கள் 67 ஆகவும் அமைந்தன. வெகுசில மறு வாசிப்புக்குள்ளானவை. நீள அகல உயர புத்தகங்களும் ஏராளம். சிறு   புத்தகங்களும் இதில் அடங்கும். புத்தகங்களுக்காக கொஞ்சம் ரூபாய் செலவிட முடிந்தது. அமேசான் அடிக்கடி வரலானது.   பல தரப்பு வாதங்களை முன்வைக்கும், பல் ரசனை- பல இச புத்தகங்களை வாசித்திருப்பதை , இதைப் பொருட்படுத்துபவர் உணரமுடியும். உலகின் பன்முகத்தை அதன் பல வாசங்களை இந்த புத்தகங்கள் நல்கின. டெண்டுல்கரின் மகாத்மா 8 வால்யூம்களை முடிக்க முடிந்த என்னால், பியாரிலால்- சுசிலாவின் 11 வால்யூம்களை முடிக்கமுடியாமல் 8 வது வால்யூமில் 2023 என்னை நிறுத்திவிட்டது.