2023க்கு வணக்கம்
கடந்து
போன 2023க்கு எனது வணக்கம். உடல் உபாதை மற்றும் மழை பாதிப்பு நாட்கள் நீங்கலாக மீதி
பெரு நாட்கள் உழைக்க அருள் கூர்ந்த ஆண்டாக அமைந்தது. முகநூலில் சில நாட்களைத் தவிர
தொடர்ந்து பதிவு இடமுடிந்தது. Pattabiwrites
வலைப்பூவில் 500 பக்க அளவில் எழுத முடிந்தது. பங்கேற்ற கூட்டங்கள் மிகக் குறைவு.
முறையாக மாதந்தோறும் என கணக்கிட்டு பார்த்தப்படி
117 புத்தகங்களை வாசிக்க 2023 நல்வாய்ப்பைத் தந்தது. ஆங்கில புத்தகங்கள் 50 ஆகவும்,தமிழ்
புத்தகங்கள் 67 ஆகவும் அமைந்தன. வெகுசில மறு வாசிப்புக்குள்ளானவை. நீள அகல உயர புத்தகங்களும்
ஏராளம். சிறு புத்தகங்களும் இதில் அடங்கும்.
புத்தகங்களுக்காக கொஞ்சம் ரூபாய் செலவிட முடிந்தது. அமேசான் அடிக்கடி வரலானது.
பல
தரப்பு வாதங்களை முன்வைக்கும், பல் ரசனை- பல இச புத்தகங்களை வாசித்திருப்பதை , இதைப்
பொருட்படுத்துபவர் உணரமுடியும். உலகின் பன்முகத்தை அதன் பல வாசங்களை இந்த புத்தகங்கள்
நல்கின. டெண்டுல்கரின் மகாத்மா 8 வால்யூம்களை முடிக்க முடிந்த என்னால், பியாரிலால்-
சுசிலாவின் 11 வால்யூம்களை முடிக்கமுடியாமல் 8 வது வால்யூமில் 2023 என்னை நிறுத்திவிட்டது.
எனது வாசிப்பு வேக போதாமையால் செய்யவியலாமல் போனது.
என்னைவிட
விரிவாக வீச்சாக படித்தவர் பலர் இருக்கக்கூடும். மிகச் சாதாரண எளிய நடுத்தர - சி செண்டர்
வாழ்க்கையிலிருந்த வந்த - தொழிற்சங்க பழக்கம் தவிர வேறு கல்வி வாசனை இல்லாத எளிய மனிதன்
என்ற வகையில் தீவிர வாசிப்பு பழக்கம் பற்றிப் பிடித்து அழைத்துச் சென்றதால் இந்த அளவாவது
செய்ய நேர்ந்தது. உலகின்/ இந்தியாவின் ரம்யம் மட்டுமல்ல அதன் விரிவும் ஆழமும் அகலமும்
பிரம்மாண்டத்தையும் உட்கார்ந்த இடத்திலிருந்து சற்றாவது உணர முடிந்தது. என்னுள் அவ்வப்போது
எழும் ego களுக்கு குட்டுகளும் விழுந்தன.
வாசித்தவைகளை
தந்துள்ளேன். அனைத்தையும் சிலராவது வாசித்திருக்கக்கூடும். வாசிக்காதவர் எப்போதாவது
வாசிக்கக்கூடும் என்ற வகையில் அவை உதவலாம். வாசிப்பும் எழுத்தும் உழைப்புதான் என ஏற்றால்,
2023ல் உழைத்திருக்கிறேன் எனச் சொல்லலாம்.
2023ல் படித்த ஆங்கில புத்தகங்கள்
1.
The Indian Constituent Assembly deliberations on democracy edited by Udit
Bhatia
2.
India Through the Ages A survey of the growth of Indian life and thought by Sir
Jadunath Sarkar Madras univ lectures 1928
3.
K M Munshi by v B Kulkarni
4.
Rajendra Prasad Autobiography
5.
DeenDayal Upadhyaya by Mahesh Sharma
6.
Real Marxist Tradition by John Monyleux
7.
Mahatma Life of MKG by D G Tendulkar vol 1
8.
Mahatma Life of MKG by DGT vol 2
9.
The Saffron Surge untold story of Rss leadership
10.
Marx’s Revenge the resurgence of Capitalism and The death of Statist Socialism
by Meghnad Desai
11.
Mao Zedong A biography by Jonathan Clements
12.
Mahatma Life Of MKG D G Tendulkar vol 3
13.
Ambedkar an intellectual biography by Vijay mankar
14.
75 years of Indian Economy by Sanjaya Baru
15.
Mahatma vol 4 by D G Tendulkar
16.
Mahatma vol 5 by D G Tendulkar
17.
Mahatma vol 6 by D G Tendulkar
18.
Karl Marx Greatness and Illusion by Gareth Jones
19.
Marx before Marxism David McClellan
20.
Interpreting The Dravidian Movement M S S Pandian
21.
Mahatma vol 7 by D G Tendulkar
22.
Mahatma Life of MK Gandhi by D G Tendulkar vol 8
23.
Indian Ideas of Freedom by Dennis Dalton
24.
Mahatma Gandhi vol 1 The Early Phase Pyarelal
25.
Dr Babasaheb Ambedkar Life and Mission by Dhananjay Keer
26.
Search for Truth Dr Radhakrishnan
27.
Mahatma Gandhi vol 2 The discovery of Satyagraha on the threshold Pyarelal
28.
Minoo Masani by S V Raju
29.
Bal Gangadhar Tilak by Manoj Kumar and Monika
30.
Periyar political Biography by Bala Jeyaraman
31.
Mahatma Gandhi vol 3 Pyarelal
32.
Marx’s Das Capital A Biography by Francis Wheen
33.
Reconstructing Lenin by Tamas Krausz
34.
Understanding Dravidian movement by prof Karthigesu Sivathamby
35.
Who wrote Bhagavad Gita by Meghnad Desai
36.
Mahatma Gandhi vol 4 Sushila Nayar
37.
Caste as social capital by prof R Vaidyanathan
38.
Mahatma India Awakened vol 5 by Sushila Nayar
39.
The political Career of E V Ramasami Naicker -viswanathan
40.
The Dravidian Movement in TN and its legacy Lectures by A N Sattanathan (
Rereading)
41.
Nehru’s India Essays edited by NayanTara Sahgal
42.
The Origins and Development of Hinduism by A L Basham
43.
Mahatma vol 6 salt satyagraha the
watershed- Shushila Nayar
44.
varna Jati caste by Rajiv Malhotra and Vijaya
45.
Buddhism The Marxist Approach
46.
Veer Savarkar by Dhananjay Keer
47.
Mahatma vol 7 by Shushila Nayar
48.
communism in Indian politics
49.
Milestones - Indirani Jagajivan Ram
50.
Hindus in Hindu Rashtra Anand Rangathan
2023ல் வாசித்த தமிழ் புத்தகங்கள்
1. ஜேபி எழுதிய மக்கள் சுயராஜ்யம் தஞ்சை சர்வோதயா
2. பார்ப்பனியத்தை விமர்சித்தல் by முரளி
3. சுப்பிரமண்ய சிவா கட்டுரைகள்
4. எஸ் ஸ்ரீநிவாச அய்யங்கார் பப்ளிகேஷன் டிவிஷன்
5. பரதகண்ட புராதனம் கால்டுவெல்
6. காமராஜர் ஓர் ஆய்வு வி கே நரசிம்மன்
7. காங்கிரஸ் மகாசபை வரலாறு பட்டாபி சீதாராமய்யா
8. டேவிட் ரியாஸ்னாவின் மார்க்ஸ் எங்கெல்ஸ்
9. இந்திய பெருமுதலாளி வர்க்கம் சுனிதிகுமார் கோஷ் (மறு வாசிப்பு)
10. கார்ல் மார்க்ஸ் - அ.மார்க்ஸ்
11. ஒளரங்கசீப் ஆட் ரே ட் ரஷ்கே தமிழில் ஜனனி ரமேஷ்
12. மார்க்சின் மூலதனம் - தமிழில் தியாகு வால்யூம் 1
13. வல்லபாய் பட்டேல் - ஐ ஜே பட்டேல்
14. தென்னிந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்புகள் எஸ் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்
15. திராவிட இயக்கம் - பேரா அன்பழகன்
16. ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை - நீலகண்டன்
17. கம்பரிடம் யான் கற்ற அரசியல் ம பொ சி
18. எனது நினைவுகள் கோவை அய்யாமுத்து
19. தெற்கிலிருந்து ஒரு சூரியன்
20. பெரியார் அம்பேத்கர் நட்புறவு ஒரு வரலாறு- கி வீரமணி
21. அடி - தி. ஜானகிராமன் நாவல்
22. மகாபாரதம் மாபெரும் விவாதம் - பழ கருப்பையா
23. புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி ( மறு வாசிப்பு)
24. தி மு க வரலாறு
25. இந்தியத் தாயின் பணிக்கு .. சுவாமி விவேகானந்தர்
26. மால்கம் எக்ஸ் - ரவிக்குமார்
27. தமிழர் பண்பாடு - வையாபுரிப்பிள்ளை
28. கலையும்
வாழ்வும் டால்ஸ்டாய் தமிழில் டி சி
ராமசாமி
29. கயிறு தகழி சிவசங்கரப்பிள்ளை
30. மறைமலை அடிகள் நாட்குறிப்புகள்
31. வைக்கம் காந்தி கட்டுரைகள் வேங்கடராஜு
32. புத்தரின் புனித வாக்கு பால் காரஸ்
33. ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு புலவர் கா.கோவிந்தன்
34. மறைமலையடிகள் வரலாறு புலவர் அரசு
35. அரிஜன அய்யங்கார் சம்பந்தம்
36. திலக மகரிஷி ஜீவிய வரலாறு வ உ சி
37. பிறப்பொக்கும் நாவல் கன்யூட் ராஜ்
38. பெரியாரின் இறுதி உரை
39. ஈரோட்டுப்பாதை
சரியா ஜீவா
40. வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் நெடுஞ்செழியன்
41. ஆரியமாயை அண்ணா
42. திராவிட மாயை ஒரு பார்வை vol 1 சுப்பு
43. திராவிட அரசியலின் எதிர்காலம் சுகுணா திவாகர்
44. புறநானூறு தமிழர் நாகரீகம் சாமி சிதம்பரனார்
45. மொழிஞாயிறு பாவாணர் பெருஞ்சித்திரனார்
46. ரிக் வேதகால ஆரியர்கள் ராகுல சாங்கிருத்தியாயன்
47. ஏழு நதிகளின் நாடு சஞ்சீவ் சன்யால்
48. திராவிட
மாயை பகுதி vol 2 சுப்பு
49. ராஜகோபாலாச்சாரி ஆர் கே மூர்த்தி (மறு வாசிப்பு)
50. திராவிட மாயை பகுதி வால்யூம் 3 சுப்பு
51. பெரியார்- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
52. பாலஸ்தீனம் - சாமிநாத சர்மா
53. முசோலினி - வெ சாமிநாத சர்மா
54. தமிழ்
இலக்கிய வரலாறு - தேவநேயப் பாவாணர்
55. குறளமுதம் தமிழ் வளர்ச்சித் துறை
56. சனாதன மறுப்பாளர் வள்ளலார்- ஜெயராமன்
57. திரும்பத் திரும்ப திராவிடம் பேசுவோம் - ப.திருமாவேலன்
58. நிலமெல்லாம் இரத்தம் - பா ராகவன்
59. ஜவஹர்லால் போராட்டக்காலச் சிந்தனைகள் அர்ஜூன் தேவ்
60. தலித்களுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி வெங்கடேசன்
61. இஸ்லாம் தத்துவம் - ராகுல்ஜி
62. பழந்தமிழர் அரசியல் - சாமி சிதம்பரனார்
63. ஆஷ் அடிச்சுவட்டில் ஆ இரா வேங்கடாசலபதி
64. இஸ்லாமின் வரலாற்றுப் பாத்திரம் - எம் என் ராய் (மறு வாசிப்பு)
65. இஸ்லாமும் ஜிகாத்தும் ஏ ஜி நூரணி
66. கைலாசபதி
இராம சுந்தரம்
67. மூலதனம் –
வால்யூம் 2 தமிழ் தியாகு
Comments
Post a Comment