பிபின் சந்திர பால் இந்திய விடுதலைக்கால புரட்சிகர கருத்துக்களின் தந்தையாக கருதபட்டவர். லால்-பால்-பால் என லாலாஜி, திலகருடன் இணையாக பார்க்கப்பட்டவர். காந்திக்கு முந்திய தலைமுறை. அவரின் எழுத்துக்கள் எனக்கு பல ஆச்சரியமூட்டும் விஷயங்களை கொடுத்தன. அவரைப்பற்றி சிறிய அளவாவது எழுத எண்ணம் எழுந்துள்ளது. அவரின் Soul Of India வை முன்பே அறிமுகப்படுத்தியிருந்தேன். இவ்வாரம் அவரின் இரு முக்கிய புத்தகங்களை படிக்க வாய்ப்பு கிடைத்தது. The New Economic Menance to India என்ற புத்தகம் இந்தியாவின் வளங்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொள்ளை அடிப்பதை குறித்து விவரிக்கிறது. அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற கருத்தாக்கம், தொழிலாளிவர்க்கம் இந்தியாவில் அணிசேரவேண்டும், பிரிட்டிஷ் சோசலிசம் தாக்கம் போன்ற நிலைகளுக்கு மிக அருகாமையில் வருகிறார். அடுத்த புத்தகம் An Introduction to Hinduism- Comparative study of Religion என்கிற மதம் பற்றிய அறிவியல்- தத்துவ ஆய்வு. இதில் அவர் ஹெகல் முறையை எடுத்துக்கொள்கிறார். 19110க்கு முன்னர் இந்திய தலைவர் ஒருவர் ஹெகல் சிந்தனையுடன் தொடர்பில் இருந்தது எனக்கு ஆச்சரியமூட்டியது. காண்