https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, September 7, 2017

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 4

4
1926ல் வரலாற்று அறிஞர் ஜாதுநாத் சர்க்கார் கல்கத்தா பல்கலை துணைவேந்தரானார். அங்கிருந்த பல பேராசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  பல்கலையில் மாணவர், ஆசிரியர் துணைவேந்தர் வேறுபாடு அதிகமானது. அமிர்தபசார் பத்ரிகை சற்று நடுநிலைல நின்றது. லோகல் வங்கப் பத்ரிக்கைகள் சர்க்காருக்கு ஆதரவாக நின்றன. ராதாகிருஷ்ணன் செனட் விவாதங்களில்  ஆசிரியர் மாணவர் நலனுக்காக நின்றார். சரோஜினி நாயுடு உரை ஆற்ற வந்த நேரத்தில் ஜாதுநாத் சர்க்கார் தலைமை தாங்க முடியாமல் ராதாகிருஷ்ணன் தலைமை ஏற்கும் நிலை ஏற்பட்டது. சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை சர்க்கார் போலிசார்கொண்டு தடியடி நடத்தி அப்புறப்படுத்தியது பிரச்சனையானது. ராதாகிருஷ்ணன் தலைமையில் விசாரனை நடந்தது. தடியடி அவசியமற்றது என தன் முடிவை அவர் அறிவித்தார்
1920களின் துவக்கத்தில் காந்தியைவிட தாகூர் மனதிற்கு நெருக்ககமாக உணர்ந்தார் ராதாகிருஷ்ணன். ஆனால் செளரி செளராவிற்கு பின்னர் அவரிடம் காந்தி பற்றிய மதிப்பீடுகள் உயர்ந்தன.. கல்கத்தா காங்கிரஸ் அமர்விற்கு வந்த நேரு ராதாகிருஷ்ணனை சென்று சந்தித்தார். நட்பு தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிட உதவியது.
Intuitive experience  என்பதில் அவருக்கு நம்பிக்கை இருந்தது.  Mere intuitions are blind while intellectual work by itself is empty  என்கிறார் கோபால். பெர்னார்ட் ஷா, எச் ஜி வெல்ஸ் போன்றவர் எழுத்துக்களில் அறிவுபூர்வ வாதங்கள் இருந்தாலும் அவை ஆன்மாவின் ஆழத்தை தொட்டு வசீகரிக்கவில்லை என்கிற கருத்து ராதாகிருஷ்ணனிடம் இருந்தது. அவருக்கு உள்ளுணர்வின் தரிசனம் முக்கியமாக பட்டது.  Poets and prophets do not go into committee’s என்கிற ஆழப்புரிதலை அவர் தந்தார்.
1926ல் அவரிடம் அறியவொணாவாத தாக்கம் அதிகம் தெரிந்தது என்கிறார்  கோபால். 1929ல் அவர்  God is organic with the world   என்கிற பதிலை அடைந்தார். முற்று முழுமையான சிஸ்டம் என்பது விரும்பத்தக்கதல்ல என்றார். முற்றிலுமாக தீர்ந்த பிரச்சனை என்பது பிரச்சனையாக இருக்காது என்றார். முழுமையாக புரியப்பட்டது கடவுளும் ஆகாது என்றார். அவரது  An idealist view of Life  1932ல் வெளியானது. அவர் Bergson  உடன் ஒப்பிடப்பட்டார் சாமுவேல் அலெக்ஸ், ரஸ்ஸல் ஆகியோரும் தங்கள் கமெண்ட்டுகளை தந்தனர். ஜோட் மேற்குலகிற்கு ராதாகிருஷ்ணன் தந்த பதிலடியாக பார்த்தார். இந்திய தனது சொந்த வீட்டை ஒழுங்குபடுத்தவும் இப்புத்தகம் துணைநிற்கும் எனப் பேசப்பட்டது.
1930களில் அய்ரோப்பிய அமெரிக்க அறிவு வட்டாரங்களில் cult figure என்ற அளவிற்கு  ராதாகிருஷ்ணன் உயர்ந்தார்.  He was lauded as one of the few builders of the rainbow bridge between age old wisdom of India and all the knowledge of the west.. 1930ல் அவர் லண்டனில் இந்திய மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்திய விடுதலை உலக அமைதி நல்லிணக்கத்திற்கே கூட அவசியமானது என பேசினார். தெளிவுள்ள பிரிட்டிஷ்காரர்கள் இதற்காக முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
1929-33 ஆண்டுகள் கடும் செலவும் மனவேதனையும் அவருக்கு உருவானது. மாடர்ன் ரிவ்யூ அவரது இந்திய தத்துவம் ஒரிஜினல் அல்லாமல் காப்பியடிக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனத்தை வைத்தது. ராதாகிருஷ்ணன் அவதூறு வழக்கு ஒன்றை அவர்கள் மீது தொடர்ந்தார். சுபாஷ் போஸ் சகோதரர் சரத் போஸ், சியாமா பிரசாத் போன்றவர்கள் அவருக்கு வாதாடினர். சில சமஸ்கிருத பண்டிதர்கள் ராதாகிருஷ்ணனுக்கு சாட்சியாக வந்தனர். எதிர் தரப்பினர் கோர்ட்டிற்கு வெளியே தீர்த்துக் கொள்ளும் வேண்டுகோளை ராதாகிருஷ்ணன் ஏற்றார்.
அவர் ஆந்திரா மாணவர்கள் மாநாடு, ஆந்திரா மகாசபை கூட்டங்களில் பங்கேற்றார். ஆந்திரா பல்கலைக்கழக துணைவேந்தராக செனட்டால் வெற்றியின் அடிப்படையில் தேர்வானார். 1931 மே மாதம் அவர் வைஸ் சான்சலர் பொறுப்பை ஏற்றார். மிக ஆரம்பநிலையில் இருந்த இளம் பல்கலையது. பின் நாட்களில் புகழ் பெற்ற ஹுமாயுன் கபிர், ஹிரன் முகர்ஜி, வி கே ஆர் வி ராவ் ஆகியோர் ராதாகிருஷ்ணனால் எடுக்கப்பட்ட இளம் ஆசிரியர்கள். சர் சி வி ராமன், விஸ்வேஸ்வரய்யா ஆகியோரையும் ராதாகிருஷ்ணன் பயன்படுத்தினார். ஹிட்லரால் விரட்டப்பட்ட பெர்லின் சார்ந்த லுத்விக் உல்ப், லாகூரிலிருந்து கணித மேதை   சாவ்லா, ராயல் சொசைட்டி பெலோ சேசாத்ரி போன்றவர்களை ராதாகிருஷ்ணன் அழைத்துவந்தார். இரண்டே ஆண்டுகளில் வால்டேர் பல்கலை பெரும் பெயர் பெறத்துவங்கியது. ராதாகிருஷ்ணன் மந்திரக்கோலால் கட்டிடங்கள் எழுந்துவிட்டன என்றார் ராமன்.

ஆக்ஸ்போர்டில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற தவிப்பில் அவர் செயல்பட்டார். மிக அற்புதமான நூல்நிலயம் உருவாக்கினார். அனைத்து மார்க்சிய புத்தகங்களையும் தயங்காமல் தருவித்தார். இதை ஹிரன் பதிவிட்டுள்ளார்.  ஆனால் ராதாகிருஷ்ணன் சென்ற பிறகு வந்த புதிய நிர்வாகம்  அரசாங்கத்திடம் அனைத்துவகை புரட்சிகர புத்தகங்களையும்  ஒப்படைத்துவிட்டது. காந்தியை அவர் உரையாற்ற அழைத்தார் அவரால் வரமுடியவில்லை. தாகூர் வந்து உரையாற்றினார். சாப்ரு, ஸ்ரீனிவாச சாஸ்த்ரி, அல்லாடி கிருஷ்ணசாமி அழைக்கப்பட்டனர்.
1934ல் தனது சேமிப்பிலிருந்து மைலாப்பூரில் அவர் பங்களா ஒன்றை வாங்கினார். கிரிஜா இல்லம் என பெயரிடப்பட்டது ஆக்ஸ்போர்ட் அவரை அழைத்தது. ஆனாலும் சென்னயில் இருந்து பணியாற்ற விழைந்தார். சென்னையில் பணியாற்ற வாய்ப்பில்லை என்கிற நிலையில் ஆக்ஸ்போர்ட் பணியை ஏற்பது என்ற இரட்டை மனநிலை அவரிடம் தொழிற்பட்டது.. லண்டனில் செயல்பட்ட ஐநா ஒத்துழைப்பு சர்வதேச லீகில் ஜகதீஷ் போஸ் காலம் முடிவடையும் நிலையில், அதன் உறுப்பினராகிட ராதாகிருஷ்ணன் தகுதியானவர் என்பதை ஸ்ரீனிவாச சாஸ்திரி பரிந்துரைத்தார்.  இர்வின் பிரபு சட்ட ஆலோசனைப்பெற்று அவரின் பெயரை பரிந்துரைக்க லண்டன் அவை ஏற்றுக்கொண்டது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பில் இருந்துகொண்டு  ஆங்காங்கே காணப்படும் இளைஞர்களின் எழுச்சிக்கு ஆதரவு தந்தும் அவை பரவலாக எழவில்லையே என்ற குறையுடனும் அவர் உரைகள் அமைந்தன. சட்டரீதியான சமுகத்தில் உரிய வகைப்பட்ட போராட்டங்களும் அதற்காக செய்யப்படும் தியாகங்களும் தான் விருப்பங்களை நிறைவேற்றும் என விடுதலை குறித்து உரையாற்றியும் வந்தார். வன்முறை மூலம் அமையும் சுய ஆட்சியை தான் ஏற்கப்போவதில்லை என காந்தி பேசியது உலகிற்கான உண்மை- நெறி என்ற ராதாகிருஷ்ணன், பிரிட்டிஷார் வெளியேறி இந்தியர்களின் சுய ஆட்சி உரிமையில் இணக்கத்துடன் நட்புடன் இருக்கலாம் என்றார். தீண்டாமையை அனுசரிக்கும் பொறுத்துக்கொள்ளும் சமுதாயம் நாகரீகமானது என அழைத்துக்கொள்ளமுடியாது. எந்த கல்விமுறை வகுப்புவாத எண்ணங்களை, சாதியபெருமிதத்தை போதிக்கிறதோ அதனால் வெற்றிபெற இயலாது . சமுகநீதி இல்லாமல் சமுகம் ஸ்திரத்தன்மையுடன் இருக்காது என்றார். காங்கிரசின் தலைவர்கள் குறிப்பாக நேரு சிறையில் இச்செய்திகளை பத்ரிக்கை வாயிலாக பார்த்து அவற்றை சேகரித்து வைத்தார். ராஜாஜி நெகிழ்வுடன் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினார்.
The International Committee for Intellectual Cooperation ல் 1931 முதல் தொடர்ந்து 8 ஆண்டுகள் அவர் பங்களிப்பு பாராட்டிற்குரியதாக போற்றப்பட்டது. அய்ன்ஸ்டின், மேடம் க்யூரி, வாலேரி, ஹுயுசிங்கா, முர்ரே போன்றவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். மாக்சிம் கார்க்கி அழைக்கப்படுவது அவசியம் என கூட்டங்களில் அவர் வற்புறுத்தினார். க்யூரி கேட்ட கீழ்த்தேச மக்கள் உண்மையில் மேற்குலக மக்களைவிட மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதற்கு ஆழமான விடையை காணவேண்டும் என்றார். 1936க்குப் பின்னர் அவர் ஆக்ஸ்போர்ட் பணி ஏற்று லண்டனில் குடும்பத்துடன் குடியேறினார். எட்வர்ட் தாம்சன் அவரின் ஆக்ஸ்போர்ட் உரைகள் உலக ஏற்பிற்குரியன என்றார். ஆகஸ்ட் 1937ல் அவர் புத்தர் குறித்த உரை ஒன்றிற்கு பிரிட்டிஷ் அகதமியால் அழைக்கப்பட்டார். டேவிட் ராஸ் தலைமையில் டி எஸ் எலியட் உட்பட பலர் வந்த அமர்வாக இருந்தது.

காந்தியின் 70வது வயதினை ஒட்டி மிகச்சிறந்த உலக சிந்தனையாளர்களிடமிருந்து கட்டுரைகளை பெற்று வெளியிட ராதாகிருஷ்ணன் விழைந்தார். உரிய நடவடிகைக்களில் ஈடுபட்டார். பெர்னாட் ஷா, ரஸ்ஸல், ஆந்த்ரே ஜீட் தயங்கினர். கீன்ஸ் கூட கமெண்ட் கொடுத்துவிட்டு எழுதவில்லை. ஏறத்தாழ 60 கட்டுரைகளை பலரிடமிருந்து ராதாகிருஷ்ணன் பெற்றதாக கோபால் சொல்கிறார். அக்கட்டுரை தொகுப்பின் அரசியல் முக்கியத்துவம் பெரிய அளவில் உணரப்பட்டது. பொதுமேடை ஒன்றில் காந்தி பங்கேற்புடன் அப்புத்தகம் வெளியிடப்படலாம் என்பதை காந்தி விரும்பவில்லை. என்னை புகழ்ந்த இசைகளை நான் கேட்க முடியாது என்றார் அவர். புத்தகம் வெளியிடப்பட்டு அவருக்கு பின்னர் தனியாக அனுப்பி வைக்கப்பட்டது.
1939 ல் இரண்டாம் உலக யுத்தம் துவங்கியவுடனேயே, யுத்தம் என்பதால் அல்ல ’சரியானது என்பதால்’ இந்தியாவிற்கு சுயாட்சி அறிவிப்பை பிரிட்டன் செய்திடவேண்டும் என ராதாகிருஷ்ணன் பேசினார். அறிக்கையும் கொடுத்தார்.  ஆட்சியாளர் லின்லித்  இரட்டை ஆட்சி முறைதனை காந்தி ஏற்க வேண்டும் என கருதினார். ராதாகிருஷ்ணனும் வெளிநாட்டு உறவுகள்,பாதுகாப்பு தவிர மற்றவை இந்தியர்  அதிகார வசம் - அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையான விடுதலை என்ற கருத்திற்கு வந்தார். காந்தியை வலியுறுத்தவும் செய்தார்.
லின்லித்தை அதிகம் நம்பிய ராதாகிருஷ்ணன் பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாத குறிப்பில் சுய ஆட்சி அறிகுறி ஏதும் இல்லாமை கண்டு ஏமாந்தார். நேரு கைது செய்யப்பட்டார். பிரிட்டனின் பிடிவாதத்தை ஏற்பதற்கில்லை என்றார் காந்தி. ராதாகிருஷ்ணன் கடிதம் கேலிக்குரியதாக லின்லித்தால் பார்க்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் அரசியல் உரையை தவிர்த்தால் மட்டுமே அவரது லாகூர் கூட்டத்திற்கு அனுமதி என அரசாங்கம் கடுமையான நிலை எடுத்தது. அவர் ஏற்க மறுத்தார். கூட்டம் வேறு பகுதிக்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டது. 1941ல் அவர் உலக நாகரீகத்தின் போதாமைகளால் ஏற்பட்ட யுத்தங்களை சாடி உரைநிகழ்த்தினார்.
மதன்மாளவியா பனாரஸ் பல்கலைக்கு ராதாகிருஷ்ணன் வந்து பணியாற்ற வேண்டினார். கலிபோர்னியாவில் பணியாற்றலாம் என்கிற விழைவு 1939ல் ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்டது. காந்திக்கும் அவர் இந்தியாவில் பணியாற்றவேண்டும் என்கிற கருத்து இருந்தது. கல்கத்தா மற்றும் பனாரஸ் இரு இடங்களில் பணியாற்றும் சூழலை அவர் ஏற்றார். இறுதியாக 1941ல் கல்கத்தாவை முழுமையாக விடுத்து பனாரஸ் துணைவேந்தர் ஆனார். அங்கு இஸ்லாம் இருக்கை ஒன்றை நிசாம் அவர்களிடம் நன்கொடை பெற்று அமைத்தார்.  மாணவியர் வேதம் கற்க அனுமதி தந்தார். ஞாயிறுதோறும் கீதை, வேத உரைகள் நிகழ்த்தப்பட்டன. குறுகிய பார்வையிலிருந்து மாறுபட்டு தத்துவ நோக்கில் அவை செய்யப்பட்டதாக கோபால் குறிப்பிடுகிறார். அப்பல்கலைகழகத்தின் வெள்ளிவிழாவிற்கு வைஸ்ராய், கவர்னரை அழைக்காமல் காந்தியை 1942 ஜனவரியில் அழைத்தார்.  1942 ஆகஸ்டில் வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள் வெடித்தன. நேரு, காந்தி கைது செய்யப்பட்டனர்.

காந்தியை விடுவிப்பது அமைதிக்குரிய வழி என ராதாகிருஷ்ணன் கூறியதை வைஸ்ராய் ஏற்கவில்லை. அவர் பனாரஸ் பல்கலைக்கு வன்முறை பரவாமல் இருந்திட ஒருமாதம் விடுமுறையை அறிவித்தார்.. வாயிலுக்கு வந்த போலிசார் உள்நுழையாமல் பேசி அனுப்பினார். அரசாங்கம் ராணுவத்தை அனுப்பியது. அங்கு பசு மாமிசம் உண்ணப்படுகிறது என்ற செய்தி பரவியதால் பலகலைகழகத்தை கசாப்புகடையாக்காதே என மாளவியா உண்ணாநோன்பு துவங்கினார். நிலைமைகளை கட்டுக்குள் வைக்க காந்தியால்தான் முடியும் என வைஸ்ராய்க்கு ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதினார். நிலைமைகள் மோசமாவதால் தான் ராஜினாமா செய்துவிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார். கல்லூரியில் அரசியல் நிகழ்வுகளுக்கு இடம் இருக்காது என உறுதிமொழியை கட்டாயப்படுத்தியது அரசாங்கம். ராதாகிருஷ்ணன் தொடர் முயற்சியால் அக்டோபர் இறுதியில் பனாரஸ் மீண்டும் திறக்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் இந்தியாவில் காணப்படும் மோசமான  சூழலுக்காக வின்ஸ்டன் சர்ச்சிலை விமர்சித்தார்.

No comments:

Post a Comment