Skip to main content

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 5

5
அவர் 1943ல் கல்கத்தாவில் மதம் சமுக மறுகட்டுமானம் குறித்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். பகவத்கீதை விளக்கம் என நீண்ட புத்தகம் ஒன்றை எழுதினார். 1944 மே மாதம் அவர் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். சீனா  ஜப்பான் உறவுகள் மோசமாகி வான்வழி தாக்குதலை ஜப்பான் எந்நேரம் வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற சூழலில் அந்த அபாயகர பயணம் மேற்கொண்டார். அங்கு பல்கலைகழகங்களில் அவர் புத்த மதம் குறித்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். ஆகஸ்ட் 1942க்குப் பின்னர் இந்தியாவில் நடந்து வருபவை குறித்து அவர் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார். காந்தி பிப்ரவரி 1943ல் மேற்கொண்ட உண்ணாநோன்பில் இறந்து போனால் என்ன செய்வது குறித்து சர்ச்சில், ரூஸ்வெல்ட் சியாங்காய்ஷேக் கடித போக்குவரத்து நடத்தியுள்ளனர் என்பதை அங்கு அறிந்ததாக  அவர் இந்தியா வந்து காந்தியை சந்தித்தபோது தெரிவித்தார்.
காந்தி ஜின்னா பேச்சுவார்த்தை இரு நாடு கொள்கை என்பதற்காக காந்தி மீண்டும் பட்டினி கிடந்து தன்னை வருத்திக்கொள்ளக்கூடாது என ராதாகிருஷ்ணன் கருதினார்.  Suffering was the essence of service but not suffering which might incapcitate us from offering any service  என்றார். 1944ல் இந்தியாவிற்கான காண்ஸ்டிட்யூஷன் அரசியல் அமைப்பு சட்ட கமிட்டிக்கு நேரடியாக கட்சிப்பணிகளில் இல்லாத ராதாகிருஷ்ணன் வரவேண்டும் என சாப்ரு கருதினார். ஆனால் வேவல்  ’அவர் திறமைசாலி ஆனால் அகடமிக் ஆக இருப்பார்’ என கருதினார்.  சாப்ரு சொன்ன கமிட்டி இந்தியா ஒரே நாடு என்கிற அரசியல்வடிவத்தை முன்மொழிந்தது. சில இடங்களில் ராதாகிருஷ்ணனுக்கு வேறுபாடு இருந்தது. இணைந்த வாக்காளர் தொகுதி என்பதை முஸ்லீம்கள் ஏற்கவேண்டும் என அவர் கருதினார். அவருக்கு முஸ்லீம் லீக் குறித்து விமர்சன பார்வை இருந்தது. இந்த இடைவெளி இளைஞர்கள் இந்துயிசம் பேச கற்கவேண்டும் என அவரை சொல்லவைத்தது. ஜின்னாவும் ராதாகிருஷ்ணனை சந்தித்தபோது நீர் எனது முக்கிய விரோதி என்றார். குழப்பம் அடைந்து ராதாகிருஷ்ணன் பார்த்தபோது இந்துயிசத்திற்கு மரியாதை உண்டாக்கிவிட்டீர் என்றார் ஜின்னா.
வேவலுக்கு ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தை தொடர்ந்து ஜூன் 1945ல் சிம்லாவில் பிரதிநிதிகள் மாநாடு ஒன்றிற்கு அழைப்புவிடுவதாக வேவல் தெரிவித்தார். காந்தி, நேரு அதற்கு நேர்மறையான பதிலை நல்குவது நலம்பயக்கும் என்றார் ராதாகிருஷ்ணன். அதே நேரத்தில் சியாமாபிரசாத்முகர்ஜிக்கு அழைப்பு கொடுக்கப்படாமை குறித்து அவர் தனது வருத்தத்தை தெரிவித்தார். எப்போதும் எதிர்மறை நில எடுப்பதில் உடன்பாடில்லை அதே நேரத்தில் முட்டுக்கட்டைகளை அகற்றுவதில் கருத்தாக இருக்கவேண்டும் என காந்தி பதில் எழுதினார். ஜின்னாவிற்கு இடம் கொடுத்துவிடாமல் கூட்ட முடிவுகள் வரவேண்டும் என வேவலுக்கு ராதாகிருஷ்ணன் தெரிவித்த செய்தி பயனளிக்கவில்லை. சிம்லா கூடலும் தோல்வியானது .  very soon we will be in a position to rule and no one can rule well who does not know how to obey  என்ற பதிவை செய்தார் ராதாகிருஷ்ணன்.
அரசியல் சட்ட அசெம்பிளியில் Intolerence had been the greatest enemy of progress and true freedom was the development  of the tolerant attitude which saw fellow being the divine face  என்றார் ராதாகிருஷ்ணன். கிறிஸ்துவ மதமாற்றம் எனும் பிரச்சனையில் அதன்  Exclusive claims குறித்து அவருக்கு விமர்சன பார்வை இருந்தது.  The fact of Gandhi is a challenge to that claims  என்றார். இ பி தாம்சன் ராதாகிருஷ்ணனின் அதிரடியான எதிர்வினைகளை விமர்சித்தார். Religion, in the sense of knowledge of self and service to others, could alone destory mental facisim and group loyalities என்பார் ராதாகிருஷ்ணன்
1946ல் அவர் அமெரிக்காவில் சொற்பொழிவாற்றும்போது மனித இதயங்களுக்கு நேர்த்தியை தருதல் என்பதற்கான தேடல் இந்தியாவில் தொடர்ந்து இருக்கிறது என்றார். மனித உறவுகளில் மேம்பட்ட நடத்தைகளுக்கான தேடல் எங்களிடம். தேசங்களின் துயர்களுக்கு எங்கள் தத்துவம் இதமான குணமளிக்கும் என்றார். எந்த நவீன மனமும் மதம் என்பதை வறட்டுத்தனமாக ஏற்காது. மற்றவர்களின் வாழ்க்கையின் ஊடே என்பதை உணர்தலில் தான் ஒருவர் வாழ்வு பரிபூர்ணமாகிறது என்றார். UNESCO விற்காக 1945-52 ஆண்டுகளில் அவர் பெரும்பணி நல்கினார். அமர்வுகளில் அவர் இருப்பே தத்துவம் சூழலை தருகிறது என பிரதிநிதிகள் சொல்வதுண்டு. அதன் பொதுமாநாட்டு தலைமை அவருக்கு 1952ல் தரப்பட்டது.
விடுதலை அடைந்த நேரத்தில் அவருக்கும் மாளவியா மகன் கோவிந்திற்கும் ஏற்பட்ட கசப்புகள் ஆசாத், நேரு தலையிடாமை அவருக்கு சோர்வை தந்தது. அவர் அரசியல் சட்ட அசெம்பிளியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். அவரின் அற்புத திறமைகள் வீணாகிவிடக்கூடாது என நேரு கருதினார்.. சிலநேரங்களில் சியாமாபிராசாத் நெருக்கம், இந்து மத அமைப்புக்களை புகழ்ந்து பேசுதல் போன்றவை நேருவிற்கு சற்று பிரச்சனையாக இருந்தாலும் அவர் ராதாகிருஷ்ணன் பயன்படவேண்டும் என்றே கருதினார்.
இந்திய பல்கலைக்கழகங்கள் குறித்து அறிக்கை ஒன்றைத்தர நேரு கேட்டுக்கொண்டார். ஜாகீர் ஹுசைன், லட்சுமணசாமி முதலியார், மேகநாத்ஷா, ஆர்தர் மார்கன், ஜான் டைகரெட் போன்றவர்கள் அக்கமிஷன் உறுப்பினர்கள். ஜி டி எச் கோல் இருந்தால்கூட நல்லது என ராதாகிருஷ்ணன் விரும்பினார். ஆனால் அவரை டாக்டர் ஓய்வில் இருக்க வற்புறுத்தியதால் கோல் இடம்பெறவில்லை. அக்கமிஷன் பயிற்று மொழி இந்திய மொழிகளே என்றது. இந்திய மொழிகள் உயர்கல்விக்கேற்ப வளம்பெறும்வரை ஆங்கிலம் என்றனர். உயர்கல்வி சேர்க்கை மெரிட் அடிப்படையில் என்று சொன்னதை மெட்ராஸ் பல்கலை விமர்சித்தது .
சோவியத்திற்கான (அம்பாசிடர்) தூதர் என்பதில் விஜயலஷ்மி பண்டிட் தன்னால் இந்திய சோவியத் நட்புறவை பலப்படுத்த முடியவில்லை என தெரிவித்தவுடன் ராஜாஜி தனது மருமகன் காந்தியின் புதல்வர் தேவதாஸ் காந்திக்கு தூதர் வாய்ப்பு கிடைத்தால் பரவாயில்லை எனக் கருதினார். பொருத்தமானவராக இருக்கமாட்டார் என விஜயலஷ்மி நேருவிடம் தெரிவித்ததால் ராதாகிருஷ்ணன் என நேருவிற்கு மனதில் பட்டது. உலகம் அறிந்த நேரடி அரசியலில் இல்லாத அதே நேரத்தில் தேச உணர்வு நிறைந்த வெளிப்படையாக கருத்தை சொல்லி உணரவைக்கும் ஆற்றல் நிறைந்த ராதாகிருஷ்ணன் மாஸ்கோ செல்வது நல்லது என நேரு கருதினார்.

ராதாகிருஷ்ணன் முதலில் ஏற்க மறுத்தார். நேரு வற்புறுத்தலால் அனைத்து தத்துவவாதிகளும் ஏதாவொரு குகைக்கு போகவேண்டும்- நான் மாஸ்கோ குகை போகிறேன் என ஏற்றார். முதல்முறையாக கல்விச்சூழல் என்பதிலிருந்து பெரும் பொதுவெளிக்கு அவர் செல்கிறார். ஜூலை 1949ல் அவருக்கு நியமன உத்தரவு வெளியானது. சரத்போஸ், கோல்வால்கர், ஹிரன்முகர்ஜி என பல்வேறு தரப்பினரும் இதை பாராட்டினர். 1927ல் சோவியத் 10 ஆண்டுகள் கொண்டாட்டத்திற்கு ராதாகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார். மோதிலால், நேருதான் சென்றனர். சோவியத் பற்றி அறிந்துகொள்வதும் இந்திய கொள்கைகளை நயமாக உணர்த்துவதும் என்கிற கடமைகளை அவர் உணர்ந்தார். அவர் போகின்றபோதே முரண்பாட்டிற்குரிய புத்தகமான  The God That Failed    படித்துக்கொண்டிருந்ததை சில பத்ரிக்கைகள் வெளியிட்டன.
அவர் மார்க்சியத்தின் ஏற்கத்தகுந்த அம்சங்கள், விலக்க வேண்டிய அம்சங்கள் குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார்.  sympatthy with Marxism as an instrument for social revoultion- unacceptability of its philosophy on life, atheism, disgard of its sacredness of personality  என்பதை அவர் தன் உரைகளில் வெளிப்படுத்தியிருந்தார். அரசியல் மோதல்களில் தீர்வு என்பது அதிகாரம் என்பதை மையமாக வைத்தும்  knockout blow வகையாகவும் இருப்பதை அவர் ஏற்கவில்லை. எதிராளியுடன் உரையாடல் மூலம் ’Knowledge solution’ என்பது உகந்தது என்பார். அதில் ஜனநாயக தன்மைகள் இருக்கும் என்கிற கருத்து அவரிடம் இருந்தது.  In his years during as ambassador, he reasserted his views in democracy, aversion of suppressing dissent, dislike of one party rule, insistence on conformity to the party line என பதிவு செய்கிறார் கோபால்.
அமெரிக்க சோவியத் உறவுகள் மேபடுத்தக்கூடியவையே- ஸ்டாலின் முயற்சிகளை ஒதுக்கிவிடமுடியாது எனவும் அவர் கருதினார். இரு நாட்டு முறைகளிலும் குறைகள் இல்லாமல் இல்லை என்பார். நேருவின் அமெரிக்க விஜயம், மேற்கு நாடுகள் பக்கம் இந்தியாவா என்கிற கேள்விகளை எழுப்பியபோது இந்தியா சுயமான கொள்கைகளை கடைபிடிக்கும் நாடு என தெளிவுபடுத்தினார். சோசலிச பொருளாதாரம் என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என்றாலும் மார்க்சிய- லென்னியம் என்பதை ஏற்கவில்லை என விளக்கினார். இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் வன்முறைகள் காரணமாக கைசெய்யப்படுகின்றனர். அவர்களின் ஐடியாலஜிக்காக அல்ல என்றார். சோவியத் அதிகாரிகள் நம்பிக்கை குறைவுடனேயே அவரை அணுகினர். ராதாகிருஷ்ணனுடன்  சமுகத் தொடர்புகளை அவர்கள் வளர்த்துக்கொள்ளவில்லை.  I do not dislike Moscow as I like to be left alone and here I am left alone   என சிலேடையாக ராதாகிருஷ்ணன் பதில் உரைத்தார்.
 ஸ்டாலின் முன்னர் இருந்த விஜயலஷ்மி பண்டிட்டை சந்திக்கவில்லை. ராதாகிருஷ்ணன் சந்திக்க விருப்பம் தெரிவித்த உடனேயே அழைப்பு வந்தது. ஜனவரி 14 1950 இரவு நேரம் ஒதுக்கப்பட்டது. படுத்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கும் தூதர் ஒருவரை சந்திக்க இருக்கிறேன் என ஸ்டாலின் சொன்னதாக தெரிகிறது. அரைமணிநேர சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சோவியத்துடன் இந்தியா நல்லுறவை உருவாக்கிக்கொள்ள விழைகிறது என தெரிவித்தார். பதட்ட தணிவை உருவாக்க முயற்சிகளை ஸ்டாலின் எடுக்க வேண்டினார். இருபக்கமும் செய்ய வேண்டிய ஒன்று அது என ஸ்டாலின் பதில் தந்தார். ஆமாம் சண்டைக்கு இருபக்கம் தேவைதான் -முதலில் ஒருவர் நிறுத்தலாமே என சற்றுக் கூடுதலாக ராதாகிருஷ்ணன் தெரிவித்ததை ஸ்டாலின் மறுத்து ஏதும் சொல்லவில்லை. ஸ்டாலின் இந்தியா மொழிப்பிரச்சனைகள் எப்படி உள்ளது என கேட்டு தெரிந்துகொள்ள முயன்றார். இந்த மனிதன் இதயத்திலிருந்து வெளிப்படையாக பேசுகிறார் என ஸ்டாலின் தெரிவித்தாக அறியமுடிகிறது. அவர் அமைதி என பேசும்போது உண்மை தெரிகிறது என்றாராம். உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் குறிப்பாக ஸ்டாலின், நேரு, மாவோ, சர்ச்சில் சந்தித்து பேசவேண்டும் என்கிற விழைவை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் அமெரிக்க அரசாங்கங்கள் ஸ்டாலினின் அமைதி குறித்த அக்கரையையோ, சர்வதேச கம்யூனிச இயக்கம் அடைந்துவரும் பலவீனத்தையோ சரியாக கணிக்கவில்லை என்பதை ராதாகிருஷ்ணன் சர்ச்சிலிடம் எடுத்துரைத்தார். ஸ்டாலின் உடல்நிலை பலவீனப்பட்டுவரும் சூழலில் ஸ்டாலினுக்கு பின்னர் சர்வதேச இயக்கம் உடையலாம்- சீனா வெளியேறலாம்- டிட்டோவிசம் செல்வாக்கு பெறலாம் என்பதை சோவியத் தலைமை உணர்ந்துள்ளது என்றார் ராதாகிருஷ்ணன். 1950 கொரிய போரின்போது ஐநா செக்யூரிட்டி கவுன்சில் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா நின்றதில் சோவியத் அதிருப்தி அடைந்தது. நேரு ராதாகிருஷ்ணன் மூலம் சோவியத் தலையிட்டு சுமுகத்தீர்வை உருவாக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். சீனாவை அனுமதித்து செக்யூரிட்டி கவுன்சிலுக்கு மீண்டும் சோவியத்தை கொணர்வது என்கிற ராதாகிருஷ்ணன் முன்மொழிவை நேரு ஏற்று  கடிதம் எழுதினார்.
பிற சிஸ்டங்களைப்போலவே சோவியத்திலும் நிறைகுறைகள் இருப்பதை அவர் கண்ணுற்றார். சோவியத் நல்லுறவு என்பதையும் கம்யூனிஸ்ட் ஐடியாலஜி ஏற்பது என்பதையும் வேறுவேறாக உலகம் புரிந்துகொள்ளவேண்டும் என விரும்பினார். கம்யூனிச உலகமும் அல்லாத உலகமும் ஒன்றுடன் ஒன்று இசைவுபட்டு சில விட்டுக்கொடுப்புகள் மூலம் இணக்கமாக செயல்பட்டு போர்களை தவிர்க்கமுடியும். உலக அமைதிக்கு நிற்கமுடியும் என கருதினார் ராதாகிருஷ்ணன். ஸ்டாலின் வெளிப்படையாக  coexistence- non interference  என்பதை அறிவிப்பது நலம் பயக்கும் என சோவியத் ஆதிகாரிகளிடம் ஆலோசனையாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்..
1951ல் ஐநா செக்யூரிட்டி கவுன்சிலில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்காவும் பிரிட்டனும் எடுத்தபோது சோவியத் தனது ரத்து அதிகாரத்தை பிரயோகிக்கவேண்டும் என ராதாகிருஷ்ணன் வேண்டினார். ஆனால் சோவியத் பிரதிநிதி அமைதிகாத்தார் என்பது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. பின்னர் 1952 ஜனவரி அமர்வில் சோவியத் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. ரத்து அதிகாரத்தையும் இந்தியாவிற்காக பயன்படுத்தியது. நேருவிடம் இதற்கு பெரிய வரவேற்பு இல்லை என்கிறார் கோபால். அதை மேற்கு நாடுகள் போலவே சோவியத் தலையீடு என அவர் எடுத்துக்கொண்டார்.
1950 ஜனவரியில் ராஜேந்திரபிரசாத் குடியரசு தலைவர் பொறுப்பில் அமர்ந்தார். 1952 தேர்தலுக்கு பின்னர் குடியரசுத்தலைவர் துணைத்தலைவர் தேர்ந்தெடுத்தல் என்கிற ஆலோசனையின்போது ராஜேந்திரபிரசாத்திற்கு பதில் ராதாகிருஷ்ணன் என்கிற கருத்தை நேரு வைத்திருந்தார். மார்ச் 1952ல் ராஜேந்திர பிரசாத் இல்லையெனில் என் பெயரை பரிந்துரைக்கலாம் என்கிற ஒப்புதலை ராதாகிருஷ்ணன் கடிதம் மூலம் நேருவிற்கு தந்திருந்தார். பிரசாத் தான் தொடர விரும்பியதால் அவர் குடியரசுத்தலைவர் பொறுப்பிற்கும், துணைத்தலைவராக இராதாகிருஷ்ணன் என்கிற சமரசத்தை நேரு உருவாக்கினார். பட்டாபிசீதாராமையா, பி ஜி கேர் போன்றவர்கள் துணைத்தலைவர் ஆகிட விரும்பினர். ராஜாஜி மாவ்லங்கர் சபாநாயகர் என்றார்.  மெளலானா ஆசாத் ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் பங்கு குறைவு என்பதால் பிரசாத் என்பதில் உடன்பாடு கொண்டிருந்தார். நேரு ஏன் ராதாகிருஷ்ணனை இப்படி கொண்டாடுகிறார் என்ற கேள்வி ஆசாத்திடம் இருந்தாலும்  துணைத்தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டி ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினார்.


இதற்கு முன்னர் எவருக்கும் அளித்திராத அளவில் ராதாகிருஷ்ணனுக்கு சோவியத் பாராட்டு  விழா எடுத்தது.  The ambassador loves our people but hates our Govt  என சோவியத் வெளியுறவு அமைச்சர்  Vyshinsky தெரிவித்தார். ஸ்டாலினிடம் ராதாகிருஷ்ணன் விடைபெறும்போது உலக அமைதிக்கு தாங்கள் பங்களிக்க வேண்டும் என்றார். கிறிஸ்துவின் வாசகம்   What shall it avail man if he gain the whole world and lose his own soul  என்றார். ஸ்டாலின் நெகிழ்ந்து கைகுலுக்கி  I too was in a theological seminary for some time and miracles may happen  என்கிற நம்பிக்கையை உணர்த்தினார் என்கிற பதிவை கோபால் தந்துள்ளார்.  ஸ்டாலின் பாவ்லோவிடம்  He is the only man who treats me not as a monster but as a human being  என்று ராதாகிருஷ்ணன் பற்றி குறிப்பிட்டதாகவும் கோபால் எழுதுகிறார். இராதாகிருஷ்ணனின் சோவியத் தூதர் காலம் அவர் விடைப்பெற்ற பின்னரும் அடுத்து வந்த அதிகாரிகளுக்கு நல்ல டிவிடண்ட் பெற உதவியாக இருந்தது என்கிற கருத்தும் இந்திய வெளியுறவுத்துறையில் இருந்தது.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு